அன்பின் முகவரி யாரோ? 19 | Ezhilanbu Novels/Nandhavanam

அன்பின் முகவரி யாரோ? 19

ரித்தி

✍️
Writer
அத்தியாயம் 19


"நடந்த எல்லாத்துக்கும் சாரி மாமா. நான் நிறைய தப்பு பண்ணிருக்கேன் பட் என்னால இப்ப உங்ககிட்ட தெளிவா சொல்ல முடியல". என்று ஆனந்த் ராஜ்குமார் முகம் பார்க்க, மேலே சொல் என்பது போல பார்த்து கொண்டிருந்தார்.


"இப்போது தான் என்னோட தப்பை நான் உணர்ந்தேன். அதற்கான மன்னிப்பை ரிதுகிட்ட கேட்க கூட எனக்கு தகுதி இருக்கானு தெரியல. ஆனாலும் கேட்டுட்டே தான் இருப்பேன். ஏன்னா என்ன ஆனாலும் ரிது இல்லாமல் என்னால வாழ முடியாது மாமா" என கூறி அவரை பார்க்க அவர் முகத்தில் ஏகத்திற்கும் ஆச்சர்யம் கலந்த யோசனை.


"தம்பி நீங்கள் இப்போது சொல்றது எனக்கு புரியுது தான். ஆனால்..." என்று இழுத்தவர் பின் அவரே கூறினார்.


"நீங்க அன்னைக்கு குடிச்சுட்டு வந்து... அது தான் எனக்கு நெருடலா இருக்கு பா. நான் அன்னைக்கு உங்களை பார்த்தேன்" என்றதும் குற்ற உணர்ச்சியில் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை ஆனந்திற்கு.


"ரிதுவிற்கு குடிக்குறவங்கள கண்டாலே சுத்தமா ஆகாது. அது தான் உங்களுக்குள்ள பிரச்சனையா இல்லை வேறேதுமா எனக்கு தெரியல. ஆனால் அப்ப இருந்தே எனக்கு பயமா இருக்கு தம்பி. ஒருவேளை உங்க அப்பா உங்களுக்கு புடிக்காம என்னை காப்பாத்தனு.." என்று கூற வந்தவர் முடிக்கும் முன் இடையிட்டான் ஆனந்த்.


அவர் மனதை உணர்ந்தவன் முகத்தில் சிறு புன்னகை வந்தது.


"மாமா உங்ககிட்ட ரெண்டு சீக்ரெட் சொல்ல போறேன். பர்ஸ்ட் ஒன் நான் குடிகாரன் இல்லை. இதை நீங்கள் எப்பவும் நம்பலாம். நான் குடிக்கறவனே இல்லை மாமா. ப்ச் அன்னைக்கு நான் பண்ணது தப்பு தான். ஆனால் இனிமேல் இந்த ஜென்மத்தில் குடிக்க மாட்டேன் மாமா. ப்ராமிஸ்" என்றவன் தொடர்ந்தான்.


"செகன்ட் ஒன் ஐ லவ் ரிது" என்று புன்னகை மாறாமல் கனவுலகில் சஞ்சரித்து கொண்டே கூற ராஜ்குமார் தான் ஆச்சர்யப்பட்டு போனார்.


சிறிது நேரத்தில் நினைவுலகு வந்தவன் திரும்பி அவரை பார்க்க அவர் இன்னும் அதே ஆச்சர்ய பாவத்துடன் ஆனந்த்தை பார்த்து கொண்டிருந்தார்.


சிரிப்புடனே தொடர்ந்தான் "சாரி மாமா இப்போது உங்ககிட்ட என்னால டீடெயில்லா சொல்ல முடியாது. முதல்ல உங்க பொண்ணுகிட்ட தான் சொல்லணும். அப்புறம் உங்களுக்கு சொல்றேன். பட் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். ரிது தான் என்னோட லைஃப். அவளை பார்த்த செகண்ட்ல இருந்து அவளை விரும்புகிறேன். அவளை என்னைக்கும் விட்டுட என்னால முடியாது" என்று தெளிவாக கூற ராஜ்குமார்க்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.


அனைத்தயும் கூறியவன் மனதில் சிறு நிம்மதி பரவ வெளியே செல்ல வேண்டியிருப்பதாக சொல்லி விடைபெற்றான்.


மாடிக்கு சென்றவன் ராஜ்குமார் அறைக்கு சென்றதை பார்த்து கொண்டு தான் இருந்தார் சுகன்யா.


என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்க வெளியே வந்தவன் முகத்தில் இருந்த புன்னகை அவருக்கு குழப்பத்தை கொடுத்தது.


'அம்மா இங்கே குத்துகல்லாட்டம் இருக்கேன். என்கிட்டே பேச முடியல. மாமனார்கிட்ட மட்டும் சிரிச்சு பேசிட்டு வரான்' என அவன் மேல் இருந்த கோபத்தில் மனதில் கடிந்து கொண்டார்.


இரண்டு நாட்களாக பேசாமல் இருக்கும் தன்னிடம் ஏதும் பேசாமல் சுத்தி கொண்டிருக்கிறான் என்கிற கோபம் தான்.


அவனே பேசுவான் ரிதுவிடம் நடந்து கொண்ட முறைக்கு கொஞ்சமாவது காரணம் கூறுவான் என எதிர்பார்த்திருந்தார்.


அவன் மாமனாரிடம் மட்டும் பேசிவிட்டு அவன் அறைக்கு செல்ல மனதுக்குள் குமுறிக் கொண்டார்.


நேரே தன்னறைக்கு சென்றவன் அறையை சுற்றி பார்க்க ரிது அங்கில்லை என்றதும் ஏனோ மனதில் மீண்டும் பாரம் வந்து சேர்ந்து கொண்டது.


எதுக்காக கிட்ட வந்தாளோ?
எத தேடி விட்டு போனாளோ?
விழுந்தாலும்...
நா ஒடஞ்சே போயிருந்தாலும்...
உன் நினைவிருந்தாலே போதும்..
நிமிர்ந்திடுவேனே நானும்!


அட காதல் என்பது மாய வலை,
சிக்காமல் போனவன் யாரும் இல்லை,
சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை...


என்னை மாற்றும் காதலே!
உன்னை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே...குளித்து தயாராகி கீழே வந்தவன் சோஃபாவில் அமர்ந்திருந்த அம்மா அருகில் அமர்ந்தான்.


அதற்காகவே காத்திருந்தார் போன்று முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து கொண்டார் சுகன்யா.


"அம்மா, தலை வலிக்குது மா! ஸ்ட்ராங்கா ஒரு காஃபி தாங்களேன்" என்றவன் மேல் கோபம் இருந்தாலும் அவன் கொஞ்சலாக கேட்டதை மறுக்க முடியாமல் கிட்சேன் உள்ளே சென்றார்.


அவன் பேசியது உள்ளே சமையல் செய்து கொண்டிருந்த ரிதுவின் காதுகளிலும் விழுந்தது. பாலை அடுப்பில் வைத்துவிட்டு காய்களை வெட்ட ஆரம்பித்தாள்.


சுகன்யா சென்றதும் பாலை அவரிடம் ஒப்படைத்து விட்டு தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.


காபி குடித்து முடித்து அவன் பேசுவான் என சுகன்யா எதிர்பார்க்க அவன் டிவியில் மூழ்கினான்.


அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவரே பேசினார்.


"நைட் ஏன்டா வீட்டுக்கு வரல".


அதற்காகவே காத்திருந்த ஆனந்த் அவரிடம் திரும்பினான் சிரித்தவாறே.


"சுரேஷ் வந்திருக்கான் மா".


அவன் முகத்தை கேள்வியாய் நோக்க, ஏதும் சொல்லாமல் கிளம்பினான்.


"சாப்பிடலையா"


"சுரேஷ் கூட வெளில போறேன். அங்கேயே சாப்பிட்டுக்கிறேன். கிளம்புறேன் மா" என்று கிளம்பியும் விட்டான்.


'ரிதுவை இவன் தேடவே இல்லையே? இவனை என்ன செய்வது' என அவர் யோசித்து கொண்டிருக்க, 'அவளை பார்த்ததே போதும்' என ஆனந்த் நினைத்தான்.


அவன் காபி கேட்டதே ரிதுவை பார்க்க தானே! சுகன்யா காபி எடுக்க சென்றதும் அவன் கிட்சன் வாசல் வரை சென்று அவளை பார்த்து கொண்டிருந்தான். பின் மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.


சுரேஷ் வீட்டிற்கு வந்த ஆனந்த் சுரேஷ் கிளம்பிக் கொண்டிருக்க ஒரு மேகசின் எடுத்து கொண்டு ஹாலில் அமர்ந்தான்.


இருவருக்கும் காபி கலந்து ஆனந்த் அருகில் வைத்து விட்டு உள்ளே சென்றான் சுரேஷ்.


சிறிது நேரத்தில் ஆனந்த் அருகில் இருந்த டேபிளில் சுரேஷ் மொபைல் மணி அடித்தது.


எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே...என பாடிக் கொண்டிருக்க, டீ-ஷர்ட்டை தலைக்குள் நுழைத்து கொண்டே வேகமாக ஓடி வந்தான் சுரேஷ்.


அது ப்ரெத்யேகமாக தன்னவளுக்கு மட்டும் வைத்திருக்கும் பாடல் ஆகிற்றே!


அருகில் இருந்த மொபைலை கையில் எடுத்த ஆனந்த் தற்செயலாக அதை பார்க்க, "ஜோ" என ஆங்கிலத்தில் இருந்தது.


தெரிந்தவர் யாரேனும் இருக்கும் எனும் முக பாவனையில் வெளியே வந்த சுரேஷ் கையில் போனை கொடுத்தான்.


போனை கையில் வாங்கிய சுரேஷ் அவனை பார்க்க ஆனந்த் மேகசின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தான்.


"உஃப்" எனக் காற்றை ஊதித் தள்ளி போனை அட்டன் செய்தவாறு அறைக்குள் சென்றான்.


"ஏன்டீ படுத்துற? நானே பன்றேன்னு சொன்னேன்ல!" (நம்ம சுரேஷ் தானுங்கோ) மெதுவாய் பேசிக் கொண்டிருந்தான்.


.........


"ஓஹ், ஹ்ம்ம் சரி பார்த்துபோ" என்று விட்டு கட் செய்ய போக அந்த பக்கம் கேட்ட கேள்வியில் சலிப்பானது.


"ஏன்டி கேட்க மாட்ட! உன்னை கல்யாணம் பண்றதுக்கு முன்ன நான் ஏழெட்டு கல்யாணம் செய்து வைக்கணும் போல" என பெரு மூச்சு விட்டான்.


தொடர்ந்தவன் "உன் அண்ணாத்த பரவாயில்லை. உன் உடன் பிறவா சகோதரனுக்கு தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு" எனும்போது தனக்கு கொடுத்த காஃபியை எடுத்து கொண்டு பால்கனி கதவை திறந்த ஆனந்த் காதுகளில் அந்த வார்த்தை விழுந்தது.


யாரோ என நினைத்து ஆனந்த் பால்கனி உள்ளே செல்ல முயல அடுத்த வார்த்தை அவனை தடுத்தது.


"பேபிமா எனக்கு ஒரு ஐடியா! நீ ஏன் உன் பிரண்ட் ரிதுகிட்ட பேசி பார்க்க கூடாது. நானும் நெக்ஸ்ட் ஸ்டெப் வைக்க யூஸ்ஃபுல்லா இருக்கும்ல".


பேபிமா என்ற வார்த்தையில் ஷாக் ஆன ஆனந்த் அடுத்து ரிது பெயர் கேட்டதும் குழம்பினான். அதற்குமேல் அங்கு நிற்காமல் சென்று விட்டான்.


"ஹ்ம்ம் ஒகே டா அப்புறம் பேசலாம். ஆனந்த் வெயிட் பன்றான்" என வைத்து விட்டான் சுரேஷ்.


பேபிமா என்ற சுரேஷின் அழைப்பில் முதலில் ஆனந்த்துக்கு அதிர்ச்சி அதிசயம் எல்லாம் 'சுரேஷ் லவ் பன்றானா?' என்பது தான்.


'நீயும் விக்ரமும் என்ன கபடியா விளையாடுனீங்க? நீங்க லவ் பண்லாம் அவன் பண்ண கூடாதா?' மீண்டும் மனசாட்சியே கேள்வி கேட்க அமைதியானான்.


ஏற்கனவே ரிது விஷயத்தில் தவறாக நடந்து கொண்டதால் இனி எதையும் தானே யூகிக்க கூடாது என நினைத்தான்.


ஆனாலும் முதலில் சுரேஷ் கூறிய உன் அண்ணாத்த என்றதும், 'உன் பிரண்ட் ரிது' என்றதும் இவனை யோசிக்க வைத்தது.


மொபைலில் ஜோ என்று தானே இருந்தது. ஒருவேளை அது ஜோதியாக இருக்குமோ என அவனுக்குள் குழம்பி கொண்டவன், அப்ப சுரேஷ் ஜோதியை விரும்புகிறானா என அதிர்ந்தான்.


சுரேஷ் பற்றி எந்த பயமும் இல்லை. அவனை போல ஒரு நல்லவன் கிடைப்பது கஷ்டம் தான்.


ஆனால் விக்ரம் என்ன நினைப்பான்? சுரேஷை தவறாக நினைத்து விட்டால்? என பலவாறு குழம்ப, ஒருவாறு தன்னை தேத்தி கொண்டவன் நாமாக இதில் தலையிட வேண்டாம் என முடிவெடுத்துக் கொண்டான்.


மேலும் இனியும் தன்னால் எங்கும் எந்த குழப்பமும் வந்து யார் வாழ்வும் கெட தான் காரணமாய் இருக்க கூடாது என நினைத்த பின் தான் சாதாரணமாகவே இருக்க முடிந்தது.


சுரேஷும் தன் காதலை மறைக்க வேண்டும் என்று எல்லாம் எண்ணவில்லை. அவனுக்குள் ஏதோ ஒன்று தடுக்கிறது.


நண்பனாகவே இருந்தாலும் பெற்றோர் யாரும் இல்லாமல் அனாதையாய் நிற்பவன் நான் என்ற எண்ணமே அவனை சொல்ல விடாமல் தடுக்கிறது.


என்ன நடந்தாலும் ஜோ மட்டும் போதும். அவள் இல்லாமல் நான் இல்லை என எப்போதும் போல நினைத்து புன்னகையுடன் ஆனந்த் அருகே வந்தான் சுரேஷ்.


காதல் தொடரும்..
 

Rajam

Well-known member
Member
ரிது , அம்மா கிட்ட பேசாமல் வந்துட்டானே.
இவன் தவறை எல்லாம் நண்பர்கள்
தான் களைய வேண்டி இருக்கு.
அப்போ விக்ரம்.
இப்போ சுரேஷ்.
 
சுரேஷ் பாவம்... லவ் பண்றப்போ இனிமேல் அண்ணா இல்லாத பொண்ணுகளா அப்படியே இருந்தலும் அவங்க அண்ணாக்கு கல்யாணம் ஆயிருச்சானு எல்லாம் செக் பண்ணனும் போலயே...
செம சிஸ்.. சீக்கிரமா ரிது ஆனந்த்தை புருஞ்சுக்க வைங்க.. இப்போ ஆனந்தை பார்த்தாலும் பாவமா இருக்கு...
 

ரித்தி

✍️
Writer
ரிது , அம்மா கிட்ட பேசாமல் வந்துட்டானே.
இவன் தவறை எல்லாம் நண்பர்கள்
தான் களைய வேண்டி இருக்கு.
அப்போ விக்ரம்.
இப்போ சுரேஷ்.
இதே பொழப்பா போச்சு பிரண்டஸ்களுக்கு
 

ரித்தி

✍️
Writer
சுரேஷ் பாவம்... லவ் பண்றப்போ இனிமேல் அண்ணா இல்லாத பொண்ணுகளா அப்படியே இருந்தலும் அவங்க அண்ணாக்கு கல்யாணம் ஆயிருச்சானு எல்லாம் செக் பண்ணனும் போலயே...
செம சிஸ்.. சீக்கிரமா ரிது ஆனந்த்தை புருஞ்சுக்க வைங்க.. இப்போ ஆனந்தை பார்த்தாலும் பாவமா இருக்கு...
இதை தான் அப்பவே சொன்னேன் ஆனந்த் பாவம் னு 🤣🤣.. ஓகே sis பண்ணிடுவோம் 🤩
 

Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom