• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ரித்தி

There are no threads in this forum.

Latest profile posts

#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 28
உமா அங்கே கழற்றிப்போடப்பட்டிருந்த செருப்பைக் கண்டதும் கோபம் தாளாமல் அதைக் கையில் எடுத்தார்.
ஆவேசமாக மூர்த்தியை நெருங்கியவர் மாறி மாறி அவரது கன்னத்தில் மொத்த கோபத்தையும் காட்டி செருப்பால் அடிக்கத் துவங்கினார்.
‘ஷப் ஷப்’பென செருப்பால் அடித்தவரின் கை தனியே கழண்டுவிடுவது போல வலித்தது என்றால் அடி வாங்கிய மூர்த்திக்கு எப்படி வலித்திருக்கும்?
அடித்து கை ஓய்ந்த பிறகு செருப்பைத் தரையில் வீசிய உமா “இனிமே உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லய்யா… நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்ல” என்று கத்த
“வாயை மூடுடி… என் தயவுல தான இத்தனை நாள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த… அப்பிடி என்ன நான் பண்ணிட்டேன்? ஏதோ சபலத்துல கொஞ்சம் தடுமாறிட்டேன்… நான் ஆம்பளைடி… அப்பிடி இப்பிடி தான் இருப்பேன்… என்னை நம்பி வந்த நீ இதை அட்ஜஸ்ட் பண்ணணும்… இல்லனா நீயும் உன் பிள்ளையும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நடுத்தெருவுல தான் நிக்கணும்” என்றார் மூர்த்தி கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல்.
உமாவுக்கு வந்த ஆத்திரத்தை மறைக்காமல் வார்த்தையில் காட்டினார்.
“சீ! உன்னை மாதிரி பொண்டாட்டிக்கு உண்மையா இருக்க முடியாதவன் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நான் இருப்பேன்னு நினைச்சியா? எந்தக் காலத்துல நீ வாழுற? இந்தக் காலத்துல எந்தப் பொண்ணும் ஆடம்பர வாழ்க்கைக்காக புருசனோட ஒழுக்கக்கேட்டை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகமாட்டா… நான் ஏன்யா உன் கேவலமான குணத்தை அட்ஜஸ்ட் பண்ணணும்? நீ வக்கிரம் பிடிச்சவன் மட்டுமில்ல, மனோவியாதி உள்ளவன்… உன்னைச் சட்டம் சும்மாவிடாது… நீயாச்சு உன் பணமும் பவுசுமாச்சு… இதை நீயே வச்சு அழு… இத்தனை நாள் என் புருசனோட அன்பு உண்மையானதுனு கண்மூடித்தனமா நம்புனதால இங்க இருந்தேன்… எப்ப நீ இவ்ளோ கேவலமானவன்னு தெரிஞ்சுதோ அப்பவே உனக்கும் எனக்குமான உறவை மானசீகமா முறிச்சிட்டேன்”
மூர்த்தியிடம் ஆவேசமாகப் பேசிவிட்டு ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டு சமாதானபுர வீட்டிலிருந்து கிளம்பியவர் தந்தையிடம் அனைத்தையும் கூறிவிட்டு அறையில் வந்து அமர்ந்ததோடு சரி, பின்னர் யாரிடமும் பேசவில்லை.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-28.5469/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 27
சரபேஸ்வரன் அலுவலக உடையை மாற்றிவிட்டு வந்தவன் “நைட் டின்னருக்கு என்ன கவி?” என்று கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.
“உப்புமா”
அந்தப் பதிலில் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.
“சேமியா உப்புமாவா? ரவா உப்புமாவா?”
சங்கவி அவனது கேள்விக்குப் பதில் சொல்லாது புருவத்தை உயர்த்தவும் காரணத்தைக் கூறினான் சரபேஸ்வரன்.
“எனக்கு உப்புமா சுத்தமா பிடிக்காது... கல்யாணத்துக்கு முன்னாடி எங்கம்மா எனக்குப் பிடிக்காதுனு உப்புமா செய்யவே மாட்டாங்க தெரியுமா? சேமியா உப்புமா கூடப் பரவால்ல... ரவா உப்புமா இஸ் ஈக்வல் டு ஆலகால விசம்”
“குடும்பஸ்தன் ஆனதுக்குக் கிடைக்குற முதல் ரிவார்ட் இந்த உப்புமா தான்... இனிமே நான் வெண்ணி போட்டுக் குடுத்தாலும் அதைப் பாயாசம்னு நினைச்சுக் கண்ணை மூடிக் குடிச்சுட்டுப் பாராட்டப் பழகிக்கோங்க”
சங்கவிக்கு இருந்த அலுப்பில் அவள் பொறுமையாகப் பதில் சொன்னதே பெரிது!
சரபேஸ்வரனுக்கும் வேலைப்பளு அதிகமே! என்ன செய்யலாமென யோசித்தவன் திடுதிடுப்பென “கிளம்பு கவி” என்கவும் சங்கவி திகைத்தாள்.
“எங்க?”
“லாங் ட்ரைவ் போயிட்டு வருவோம்”
“இப்பவா? இப்பிடியேவா?”
சங்கவி தன்னையும் அவனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டாள்.
டீசர்ட்டும் பளாசோவும் அணிந்து க்ளட்சில் அடக்கிய கூந்தல் அலங்காரம் அவளுடையது. முட்டி வரை ஷார்ட்சும் டீசர்ட்டும் சரபேஸ்வரனின் உடை. இதோடா ‘லாங் ட்ரைவ்’ போக முடியும் என்பது அவளது கேள்வி.
ஆனால் சரபேஸ்வரனோ அவளைக் கையோடு இழுத்துச் சென்று பைக்கில் அமரச் சொல்லிவிட்டான்.
“நாம எங்க தான் போறோம்?”
“போரூர் டோல்கேட் வரைக்கும் போயிட்டு வருவோம்”
“எதே? இதைத் தான் லாங் ட்ரைனு சொன்னிங்களா?”
கடுப்போடு பைக்கின் சைலன்சரை உதைத்தாள் சங்கவி. அது சற்று சூடாக இருக்கவும் “ஐயோம்மா” எனக் காலை உதறியவளைப் பார்த்துப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டான் சரபேஸ்வரன்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-27.5463/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 26
மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றங்களை மூர்த்தி கவனிக்காமல் இல்லை. அவர் அவ்வபோது பிறந்தகத்துக்குச் சென்று வருவது மூர்த்திக்கு நன்றாகவே தெரியும்.
தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் செல்லும் மனைவியிடம் கண்டிப்பு காட்டப்போய், அவள் தனது நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?
எனவே எதுவும் தெரியாதவரைப் போல காட்டிக்கொண்டார் மூர்த்தி.
இருப்பினும் அவ்வபோது கண்டிப்பான கணவன் போல நடந்து கொள்ள தவறமாட்டார்.
இப்போது மனைவி அவளது தம்பியின் எண்ணுக்கு அழைத்ததையும் ஏமாற்றத்துடன் நிற்பதையும் ஓரக்கண்ணால் கவனித்தபடி பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் அந்த மனிதர்.
“ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்க உமா?”
கணவரின் கேள்வியில் சுயம் தெளிந்து “என்ன கேட்டிங்க?” என்றார் உமா.
“நான் கேட்டது கூட உன் காதுல விழாதளவுக்கு என்ன சிந்தனை? உன் பிறந்தவீட்டை பத்தி யோசிக்கிறியா?”
“ஐயோ இல்லங்க”
உமாவின் பதற்றத்தைக் கண்டு கர்வம் கொண்டவர் “அவங்களைப் பத்தி யோசிக்காம இருக்குறது உனக்கும் உன் மகனுக்கும் நல்லது… உன் தம்பி பொண்டாட்டி என் டியூசன் சென்டர்ல சேர வந்த பொண்ணு ஃபேமிலி கிட்ட என்னைப் பத்தி கண்டதையும் சொல்லி என் பேரை எப்ப ரிப்பேர் ஆக்குனாளோ அப்பவே அவங்களுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு… அவளால என் கிட்ட படிக்கிற பசங்க என்னை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நைட் ஸ்டடிக்கு டியூசன் சென்டர்ல இருக்குறதுக்கு சின்னப்பொண்ணுங்களோட ஃபேமிலி யோசிக்கிறாங்க… சொத்து பத்து, ஸ்கூல் வருமானத்தை விட டியூசன் சென்டர் வருமானம் தான் நம்மளை சொசைட்டில கௌரவமா வாழ வச்சிட்டிருக்குங்கிறதை மறந்துடாத… அதுக்குக் கொள்ளி வைக்கப் பாத்தவ இருக்குற வீட்டை பத்தி இனிமே நீ யோசிக்கக்கூடாது… இந்த வாரம் என் டியூசன் சென்டர் பிள்ளைங்களை மாமல்லபுரம் டூர் கூட்டிட்டுப் போறேன்… உன் மகனும் வருவேன்னு அடம்பிடிப்பான்… அவனைக் கண்ட்ரோல் பண்ணி வீட்டுல உக்காந்து படிக்கச் சொல்லு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் உமாவின் மனம் சோர்ந்து போனது.
சோர்ந்த மனம் சங்கவி என்ற ஒருத்தியைத் தம்பி காதலிக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென யோசித்தது.

http://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-26.5454/

#நித்யாமாரியப்பன்
#ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
"அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
"நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
“கவி…”
“நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

#நித்யாமாரியப்பன்
ஹாய் ப்ரண்ட்ஸ்...
Ezhilanbu Tamil Novels வெப்சைட்க்கு Google Play Store App இருப்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். சமீபமாக ஆப் சரியாக வொர்க் ஆகவில்லை என புகார் வந்தது. அதை இப்போது சரி செய்து அப்டேட் செய்திருக்கிறோம்.

ஏற்கெனவே ஆப் வைத்திருப்பவர்கள் ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்‌.

இதுவரை ஆப் பயன்படுத்தாதவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

ஆப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். சைட்டில் உள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகப் படிக்கலாம். நம் தளத்தில் வரும் கதைகளின் லிங்க் மிஸ் ஆகிவிட்டது என்ற கவலை இல்லாமல் ஆப்பில் நீங்கள் சுலபமாக படித்துக் கொள்ளலாம்.

உபயோகித்துப் பாருங்கள்.
நன்றி🙂

New Episodes Thread

Top Bottom