• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,260

Profile posts Latest activity Postings About

  • #சுருதியோடுலயம்சேரவே எபி 5
    வித்யூத் விஸ்மயாவைக் கிண்டலாய் பார்த்தபடியே “நாங்களும் சஜனோட மேரேஜுக்குத் தான் போறோம் செலிப்ரிட்டி போட்டோகிராஃபர் மேடம்” என்கவும் அவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

    “அச்சோ!”

    ஒரு கண்ணை மூடி ஒற்றைக்கரத்தால் மற்றொரு கண்ணால் அவனைப் பார்த்தவள் ‘இவன் என்று தெரியாமல் நேற்று அவ்வளவு பில்டப்பாக பேசிவிட்டோமே’ என நாணவும் விஷாகா அவளது கையைப் பிடித்து தங்களது இருக்கைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கவும் சரியாக இருந்தது.

    “எவ்ளோ க்யூட்டா இருக்கு இந்தப் பொண்ணோட வெக்கம்?” என்ற வித்யூத்தின் ரசனை விஷாகாவின் இச்செயலால் ப்ரேக் போட்டது போல நின்றது.

    விஸ்மயா அவசரமாக அவளது கையை உதறியவள் “சார் உங்களை நேர்ல மீட் பண்ணுனா இதை கேக்கணும்னு நினைச்சேன்… ஃபிலிம் ஃபேர் அவார்ட் போட்டோஷூட் அன்னைக்கு நான் போட்டுட்டு வந்த ப்ரேஸ்லெட் காணாம போயிடுச்சு... அது விபூவோடது… இவ அன்னைக்கு என்னலாம் சொல்லி திட்டுனா தெரியுமா?” என்று அப்பாவியாய் கூற வித்யூத் “அப்பிடியா? த்சூ த்சூ! தொலைஞ்சிடுச்சா? ஐயோ பாவம் நீங்க” என்றான் ஒன்றும் அறியாதவனைப் போல.

    விபின் மீண்டும் நண்பனின் நடிப்பு திறமையைப் பார்த்து ‘அடேய் போதும்டா, இங்க என்ன ஆஸ்காரும் கோல்டன் க்ளோபுமா குடுக்குறாங்க?’ என்று மைண்ட்வாய்சில் கடுப்புற்றான்.

    “ரொம்ப பாவம் சார்… எங்க மூனு பேர்ல நான் ஒருத்தி தான் அப்பாவி”

    இப்போது விபாஷினியும் விஷாகாவும் அதிர்ந்தனர்.

    “நீ ஒன்னும் அப்பாவி கிடையாது… அடப்பாவினு சொல்லுற மாதிரி எல்லா காரியத்தையும் பண்ணுறவ”

    விஷாகா துடுக்காகப் பேசி மானத்தை வாங்கவும் விஸ்மயா அவசரமாக அவளது வாயைப் பொத்தினாள்.

    “சஜன் சாரோட மேரேஜ்ல என் அக்கா தான் வெட்டிங் ப்ளானர்… எல்லாம் நல்லபடியா முடியணுமேங்கிற டென்சன்ல உளறுறா” என்றாள் விஸ்மயா.

    மேலும் விஷாகா ஏதும் பேசும் முன்னர் சுதாரித்தவள் “குமரகம் லேக் ரிசார்ட்ல மீட் பண்ணுவோம் சார்… பை” என்று இருவரிடமிருந்தும் அவசரமாக விடைபெற்று தமக்கை மற்றும் தங்கையை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.

    அவள் அங்கிருந்து போனதும் மழையடித்து ஓய்ந்தது போல இருந்தது.

    “ஏன்டா அந்தப் பொண்ணு கிட்ட ஒன்னும் தெரியாதது மாதிரி நடிச்ச?”

    நண்பனிடம் கேட்டான் விபின்.

    “எல்லாத்தையும் ஓப்பனா சொன்னா என்ன கிக் இருக்கு விபூ? ஒன் வீக் அவ என் கண் பார்வைல தானே இருக்கப்போறா… மெதுவா சொல்லிக்கலாம்… பை த வே, ஷீ இஸ் குயிட் இன்ட்ரஸ்டிங்”

    “எதே? பேச ஆரம்பிச்சா சைனா வால் மாதிரி நிறுத்தாம பேசுது… அந்தப் பொண்ணு உனக்கு இன்ட்ரெஸ்டிங்கா? டேய் உன்னை மாதிரி பசங்க இருக்குறதால தான்டா ஹாசினி டைப் பொண்ணுங்களை தான் பசங்களுக்குப் பிடிக்குதுங்கிற தப்பான கருத்து சொசைட்டில உலா வருது… பொண்ணுனா அவ கூட வந்தாளே அவளோட அக்கா, அந்தப் பொண்ணு மாதிரி இருக்கணும்… ப்பா! என்னா ஃபயரு கண்ணுல!”

    விபின் விஷாகாவைப் பற்றி சொல்லி சிலாகிக்கவும் வித்யூத் நண்பனைக் கேலியாகப் பார்த்தான்.

    “எப்ப வெடிக்கும்னு தெரியாத புஸ்வாணம் மாதிரி புஸ்புஸுனு மூச்சு விட்டுட்டு நின்னா தான் சாருக்குப் பிடிக்கும் போல… எனக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்குற மத்தாப்பூ தான்பா பிடிக்கும்” என்றான் வித்யூத்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே epi 3
    “ஆர் யூ அன் இடியட்? நீ செஞ்ச தப்பால ஆக்டர் நிஷாந்தோட போட்டோஸ் மொத்தமா டெலீட் ஆகிடுச்சு… எப்ப பாத்தாலும் எனக்குச் சான்ஸ் குடுங்கனு கேப்பல்ல, ஏன் உனக்கு நான் சான்ஸ் குடுக்கலனு இப்ப புரியுதா? உன்னோட சைல்டிஷ் பிஹேவியர் புரொபஷனல் லைஃபுக்குக் கொஞ்சம் கூட செட் ஆகாது… இப்ப அதை நீ நிரூபிச்சிட்ட”

    விஸ்மயா கண்களில் அக்னி மூள, அங்கே ஒன்றும் அறியாதவளைப் போல நின்ற நிஷாவைப் பார்த்தாள்.

    “அவளை ஏன் முறைக்கிற? ஐ அம் பாயிண்டிங் அவுட் யுவர் ஃபால்ட் விஸ்மயா”

    “தட்ஸ் நாட் மை ஃபால்ட் சார்… என்னோட சிஸ்டமை யூஸ் பண்ணுன நிஷா செஞ்ச ஃபால்ட் அது… அவளால தான் ட்ரைவ் கரெப்ட் ஆகிடுச்சு… நியாயப்படி நீங்க அவளைத் தான் திட்டணும்… பட் அப்பிடி பண்ண மாட்டிங்க… அவ ஒன்னும் திறமைச்சாலியோ புத்திச்சாலியோ இல்ல… நீங்க சொன்னதுக்கு மண்டைய ஆட்டுற செம்மறியாடு… உங்களை மாதிரி டேலண்ட் ஆன ஆளுங்களுக்கு முட்டாள்களைத் தானே பிடிக்கும்… அதுலயும் இந்த முட்டாள் உங்களோட தூரத்து ரிலேசன் வேற”

    “மைண்ட் யுவர் வேர்ட்ஸ் விஸ்மயா”

    எட்வின் உறுமவும் போதும் நிறுத்துங்கள் என்பது போல கையுயர்த்தினாள் விஸ்மயா.

    “நீங்க எனக்குப் போட்டோகிராபி கத்து குடுத்த குரு… அந்த மரியாதை எப்பவும் என் மனசுல இருக்கணும்னு ஆசைப்படுறேன்… தயவுப்பண்ணி இவளோட சீப் பிஹேவியருக்குச் சப்போர்ட் செய்யுறேன்னு அதை அழிச்சிடாதிங்க எட்வின் சார்… நானே என் கை காசு போட்டு கரெப்ட் ஆன ட்ரைவ்ல இருந்த டேட்டாவ ரெகவர் பண்ணித் தர்றேன்”

    கடுமையான குரலில் கூறியவள் ட்ரைவை எடுத்து தனது ஷோல்டர் பேக்கில் போட்டுக்கொண்டாள்.

    “என்னோட ரெசிக்னேசன் லெட்டரை மெயில் பண்ணிடுறேன் சார்… இந்த மன்த் சேலரி எனக்கு வேண்டாம்… சப்போஸ் க்ரெடிட் ஆச்சுனா மொத்தத்தையும் கொண்டு வந்து உங்க முகத்துல எறிஞ்சிடுவேன்”

    விஸ்மயாவின் கோபத்தைக் கண்டு எட்வின் வாயடைத்துப் போய்விட்டார். தவறு செய்தால் ஒப்புக்கொள்வது அவளது குணம். இம்முறை இவ்வளவு பிடிவாதமாகக் கூறுகிறாள் என்றால் தவறு நிஷாவின் பெயரில் தான் இருக்கிறதோ என அவர் யோசித்த கணம் விஸ்மயா நிறுவனத்தின் தரிப்பிடத்தில் தனது ஸ்கூட்டியை உதைத்து கிளப்பிக்கொண்டிருந்தாள்.

    அவள் கிளம்புவதற்குள் ஜெகன் ஓடோடி வந்து ஸ்கூட்டி முன்னே நின்றான்.

    “வழிய விடு ஜெகன்… இதுக்கு மேல என்னால செய்யாத தப்புக்குப் பேச்சு வாங்க முடியாது… சி.சி.டிவிய செக் பண்ணுனா போதும், நிஷாவோட குட்டு வெளிய வந்துடும்… ஆனா எட்வின் சார் அதை செய்ய மாட்டார்… நான் அவரோட ஸ்டாஃப் தான்… அடிமை இல்லை… இன்னைக்கு ஈவ்னிங் தி.நகர்ல இருக்குற டேட்டா ரெகவரி லேப்ல இந்த ட்ரைவை குடுத்து டேட்டாவ ரெகவர் பண்ணப்போறேன்… டேட்டா ரெகவர் ஆனதும் ட்ரைவை வாங்கி நீ ஆபிஸ்ல குடுத்துடு”

    “பொறுமையா இருடி… அவ தான் தப்பு செஞ்சானு ப்ரூவ் பண்ண வேண்டாமா?”

    “எனக்கு என்ன அவசியம் ஜெகன்? வேண்டுனவங்க தப்பு பண்ணுனாலும் பொறுத்துக்கிட்டுப் போறது தப்பான மேனேஜ்மெண்ட்… அப்பிடி ஒரு மேனேஜ்மெண்டுக்குக் கீழ என்னால ஒர்க் பண்ண முடியாது ஜெகன்… ப்ளீஸ் மூவ் அ லிட்டில்”

    ஜெகன் விலகி நிற்கவும் விருட்டென சீறிப் பாய்ந்தது விஸ்மயாவின் ஸ்கூட்டி.

    அவள் மனமெங்கும் இந்த மாதம் வங்கியில் வாங்கியிருந்த நகைக்கடனுக்கான தவணையை எப்படி கட்டப்போகிறோமென்ற கவலை.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே epi 1 & 2

    “இன்னைக்கு உங்க ஸ்டூடியோக்கு ஆக்டர் நிஷாந்த் வந்ததா கேள்விப்பட்டேன்… போட்டோஷூட் எப்பிடி போச்சு?”
    “ஹூ நோஸ்மா? என்னமோ நான் அவரை போட்டோ எடுத்த மாதிரில்ல கேக்குற”
    விஸ்மயா தோளைக் குலுக்கியபோதே விஷாகா புயலைப்போல வந்து நின்றாள்.
    “இந்தக் கேள்விய நீ போட்டோஷூட் பண்ணுன எட்வின் சார் கிட்ட கேக்கணும்… அவரோட எடுபிடி கிட்ட கேட்டா எப்பிடி பதில் வரும்மா?”
    தனக்கு உதவமாட்டேன் என்று சொன்ன தங்கையை எள்ளி நகையாடிப் பழி தீர்த்துக்கொண்டாள் விஷாகா.
    “நான் எடுபிடினா இந்தம்மா யாராம்? அட்லாண்டிஸ்ல உக்காந்து அவல் பொறிகடலை சாப்பிடுற அல்லக்கைக்குப் பேச்சைப் பாரு”
    பதிலடி கொடுப்பதில் தேர்ந்தவள் தான் என நிரூபித்தாள் விஸ்மயா. உண்மையும் அதுவே. விஸ்மயாவிடம் வாயைக் கொடுத்து மீளமுடியாது.
    “அட்லாண்டிசோட பெஸ்ட் ஈவெண்ட் ப்ளானர்டி நான்”
    விஷாகா சிலிர்த்துக்கொண்டாள்.
    “ட்வின் டவர்சோட பெஸ்டஸ்ட் ஸ்டாஃப்டி நான்”
    இரு பெண்களும் சண்டைக்கோழிகளாகச் சிலிர்த்துக்கொள்ள வித்யாவின் வ்ளாக் ஷூட்டிங் தடைப்பட்டது.
    இரு மகள்களையும் வரவழைத்த புன்னகையோடு பார்த்தார் வித்யா.
    “அந்தப் பக்கமா போய் உங்க ஆர்கியூமெண்டை கண்டினியூ பண்ணுங்க தங்கங்களா! அம்மா இன்னைக்கு ‘ஹவ் டு எம்பவர் யுவர் சைல்ட்’னு நியூ வ்ளாக் ஒன்னு ஷூட் பண்ணிட்டிருக்கேன்… டோண்ட் டிஸ்டர்ப் மீ”
    விஷாகாவும் விஸ்மயாவும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டார்கள்.
    இருவரும் மோவாயைத் தோளில் இடித்துக்கொண்டு அழகு காட்டிவிட்டு அவரவர் அறைக்குள் சென்று அடைபட்டுக்கொண்டனர்.
    இரு மகள்களும் சென்றதும் வ்ளாக் ஷூட் செய்ய ஆரம்பித்த வித்யா “இன்னைக்கு ஃப்லிம்ஃபேர் அவார்ட் பாக்கணும்பா” என்று கடைக்குட்டி விபாஷினியின் குரல் மீண்டும் வீடியோ ஷூட்டுக்கு இடையூறாக ஒலிக்கவும் “ஷப்பா” என்று பெருமூச்சு விட்டார்.
    வாயிலைத் திரும்பிப் பார்க்காமலே “இன்னும் கொஞ்சநேரம் இவ கூட வாக் போயிருக்கலாமே வினய்… நான் வ்ளாக் ஷூட் பண்ணிருப்பேன்” என்று குறைபட்டார் அவர்.

    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/
    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே final எபி சைட்ல போட்டாச்சு மக்களே. ஜனவரி 2 வரை சைட்ல இருக்கும்... அப்புறம் ரிமூவ் பண்ணிடுவேன்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே Pre-final
    “மோனல் மேடம் என்ன சொன்னாங்க?”

    வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராதா மாதவனின் கேள்விக்குப் பதில் சொல்லலாமா வேண்டாமா என்ற ரீதியில் விழித்தாள்.

    “என்ன பதிலே வரல?”

    “நீங்க சென்னைல எவ்ளோ கஷ்டப்பட்டிங்கனு சொன்னாங்க” என்றாள் அவள் பொதுப்படையாக.

    “அவ்ளோ தானா?”

    “ஆமா”

    “பொய் சொல்லுற”

    சாலையில் கண் பதித்தபடி அவளிடம் கூறினான் மாதவன். ராதா கண்களை இறுக மூடித் திறந்தவள்

    “தேவ் சாரோட டெத்துக்கு வந்த உங்களை மதன் சார் அவமானப்படுத்துனதா சொன்னாங்க” என்று இறுகிப்போன குரலில்.

    “அவ்ளோ தானா?”

    “என்ன அவ்ளோ தானா? அவருக்கு இப்ப உடம்பு முடியலங்கிறதால நான் சும்மா விட்டுட்டு வந்தேன்... இல்லனா நறுக்குனு நாலு கேள்வி கேட்டிருப்பேன் மாமா... இவர் குடிச்சுட்டு ஊர் சுத்துனதால அப்பாவோட பாசத்தை இழந்தார்... அதுக்காக ஃபாதரோட டெத்துக்கு வந்த உங்களை அடிச்சு அவமானப்படுத்துவாரா? நீங்க ஏன் பதிலுக்கு ரெண்டு அறை குடுக்கல மாமா?”

    “ஏன்னா அவர் தேவ் சாரோட மகன்... தேவ் சாருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன் ராதா... அவர் என்னோட குரு”

    “உங்க குருபக்திக்கு ஒரு எல்லை இல்லையா? போங்க மாமா”

    வருத்தமாய் ஒலித்தது ராதாவின் குரல்.

    “இன்னொன்னும் சொன்னாங்க மோனல் மேடம்”

    என்ன என்பது போல அவளைப் பார்த்தான் மாதவன்.

    “கிடாரைப் பாக்குறப்பலாம் அந்த பூமர் ஆன்ட்டியோட ஞாபகம் வருதுனு தான் நீங்க அதை தொடுறதே இல்லையாம்... உண்மையா மாமா?”

    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 18
    கனகதாரணியிடம் போகிற போக்கில் சொல்லிவிட்டு ராதாவைத் தொடர்ந்து நடந்தான் அவன்.

    மாதவன் என்ற ஒருவன் தன்னைத் தொடர்கிறான் என்பதை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென நடந்த ராதா கங்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.

    காலணியைக் கழற்றிவிட்டுக் கோவிலுக்குள் பிரவேசித்தவளை “நிக்க மாட்டியா ராதா? ராதே என் ராதேனு பாட்டு வேணும்னா பாடட்டுமா?” என்று உரத்தக்குரலில் கேட்டான் மாதவன்.

    தனது சீண்டலுக்குப் பதிலடி கொடுப்பாள் என எதிர்பார்த்த மாதவனுக்குப் பெருத்த ஏமாற்றம். அவனை ராதா திரும்பிக்கூட பார்க்கவில்லை.

    நேரே அம்மன் சன்னதிக்கு முன்னே போய் நின்றவள் கருவறையில் இருந்த கங்கையம்மனைக் கரம் கூப்பி வணங்கினாள்.

    மாதவனும் அவளோடு சேர்ந்து கண் மூடி வேண்டிக்கொண்டிருந்தபோது

    “அம்மா தாயே! வளைகாப்புல வச்ச வேண்டுதலை வாபஸ் வாங்கிக்கிறேன்… என் பக்கத்துல நிக்குறவருக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகக்கூடாது” என்று சத்தமாகக் கூறினாள் அவள்.

    அது கோவில் நடை சாத்தும் நேரம் என்பதால் அவர்கள் இருவரைத் தவிர வேறு எந்தப் பக்தர்களும் இல்லை. ஆனால் பூசாரி இருந்தாரே! அவர் இருவரையும் விசித்திரமாகப் பார்த்து வைத்தார்.

    “ஷ்ஷ் ராதா சத்தம் போடாத” என உதட்டின் மீது விரல் வைத்து சைகை காட்டினான் மாதவன்.

    “நீங்க ராதே என் ராதேனு பாட்டு பாடுறதா சொன்னதை விட இது ஒன்னும் சத்தமில்ல”

    உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மீண்டும் சத்தமாக அதே கோரிக்கையை வைத்தாள் அவள்.

    பூசாரி ஆரத்தி தட்டுடன் வந்தவர் “அம்பாள் கிட்ட இந்த மாதிரி கெடுதலான வேண்டுதல் வைக்கக்கூடாதும்மா” என்றார்.

    “அம்பாளுக்குக் கெடுதலா தெரிஞ்சாலும் இதோ நிக்குறாரே, இந்த மனுசனுக்கு நல்லது தான்”

    குத்தலாகச் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விபூதியை வாங்கிக்கொண்டாள்.

    பூசாரி மாதவனைப் பரிதாபமாகப் பார்த்து விபூதியை நெற்றியில் பூசிவிட்டார்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 17
    “என்ன மாதவா? வருங்கால மனைவி கூட எங்க ரெஸ்ட்ராண்டுக்கு வந்திருக்க போல... இன்னைக்கு நீ என்ன சாப்பிட்டாலும் பில்லுக்குக் காசு தர வேண்டாம்... உனக்கும் எனக்கும் விட்ட குறை தொட்ட குறையா ஏதோ ஒரு உறவு இருக்குல்ல... அந்த உறவுக்காக சின்னதா ஒரு டிஸ்கவுண்ட்”

    மெதுவாக ஒலித்தாலும் அவனது கேவலமான பேச்சில் மாதவனின் முகம் இறுகிப்போனது. ராதாவுக்கு அதைக் கண்டதும் மனோகரின் முகத்திலிருக்கும் ஏளனத்தைத் துடைத்தெறிய வேண்டுமென்ற வெறி!

    “என் கிட்டவும் கொஞ்சம் பேசுங்க பூமர் அங்கிள், எங்க உங்க ஜோடிக்கிளிய காணும்? எப்பவும் அன்றில் பறவை மாதிரி ஒன்னா சுத்துவிங்க... இன்னைக்கு என்ன ஒத்தைல வந்து நிக்குறிங்க? வீட்டுல எதுவும் விசேசமா அங்கிள்? அப்பிடினா சொல்லுங்க... நானும் மாமாவும் ஜோடியா வந்து உங்க காதல் மனைவிய பாத்து வாழ்த்திட்டுப் போறோம்... எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க காதல் மனைவிக்கு டெலிவரி ஆகிடுச்சுனா குழந்தையையும் பாத்து ஆசிர்வாதம் பண்ணிடுவோம்... ஏன்னா ஆப்டர் மேரேஜ் மாமாவும் நானும் குறைஞ்சது ஆறு மாசம் ஹனிமூன் கொண்டாடலாம்னு இருக்கோம்... அதுவும் சிம்லால”

    மனோகரின் முகம் ராதாவின் கிண்டலில் கறுக்க ஆரம்பித்தது. அவனுக்கும் மஹதிக்கும் இன்னும் குழந்தை இல்லையென அவனது குடும்பத்தார் முணுமுணுக்க ஆரம்பித்திருந்தனர். மஹதி அதை புரிந்துக்கொள்ளாமல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு இருந்ததால் தான் அவன் தனியாக ரெஸ்ட்ராண்டுக்கு வந்திருந்தான்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi15
    அவள் அமர்ந்ததும் வேகமாகப் பைக்கைக் கிளப்பியவன் “அப்பாவோட மனசைக் குழப்பிட்டியா?” என்று கடினக்குரலில் கேட்டபடி சாலையில் கவனம் செலுத்தினான்.

    “குழப்பல... நான் பெரிய மாமாவோட மகனுக்கு எது நல்லதோ அதை எடுத்துச் சொல்லிட்டு வந்திருக்கேன்”

    “சோ அப்பாவ ப்ரெய்ன் வாஷ் பண்ணிருக்க?”

    “அப் கோர்ஸ்... என்னைக் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போகமாட்டிங்கனு சொன்னிங்கல்ல... அதுக்கும் மாமா கிட்ட பெர்மிசன் வாங்கிட்டேன்”

    “அவர் பெர்மிசன் குடுத்திருக்கலாம்... ஆனா உன்னோட ரெக்வஸ்டை அப்ரூவ் பண்ண வேண்டியது மாமாவோட மகன் ஆச்சே”

    சொன்ன விதத்தில் இருந்த கேலியில் அவன் தன்னை கல்லூரிக்கு இனி அழைத்துச் செல்லப்போவதில்லை என்ற செய்தி வெளிப்படவும் ராதா அவனது இடையில் நறுக்கென கிள்ளினாள்.

    அவள் குத்தியதும் மாதவனின் பைக் தடுமாறியது.

    “தொடாம வாடி... இல்லனா பைக்கை வயலுக்குள்ள விட்டுருவேன்” தடுமாறியபடி உரைத்தான் அவன்.

    “அப்ப என்னைக் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போவேன்னு சொல்லுங்க... இல்லனா கிச்சுகிச்சு மூட்டி விடுவேன்”

    “விளையாடாத ராதா... ரோட்ல போயிட்டிருக்கப்ப உனக்கு ஏன் இந்த டேஞ்சர் கேம்? நான் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போறேன் தாயே... ப்ளீஸ் என் இடுப்புல இருந்து கைய எடு”

    ராதா நமட்டுச்சிரிப்போடு கையை விலக்கவும் பைக்கை ஒழுங்காக ஓட்ட ஆரம்பித்தான் மாதவன்.

    அன்னபூரணியின் இல்லத்தின் முன்னே அவளை இறக்கிவிட்டவன் “நாளைக்கு நான் வர்றப்ப ரெடியா இருக்கணும்... அப்ப தான் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போவேன்... எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு” என்று முறைப்போடு சொல்லிவிட்டுப் பைக்கைக் கிளப்பி சென்றுவிட்டான்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 13
    “ராதா...”

    மாதவனின் குரல் கேட்கவும் “அப்புறமா பேசுறேண்ணா” என அழைப்பைத் துண்டித்தவள் “சொல்லுங்க மாமா” என்றாள் நல்லப்பெண்ணாக.

    “நீ தப்பா முடிவெடுத்திருக்க”

    எடுத்ததும் குற்றச்சாட்டை முன்வைத்த மாதவனை அயர்ச்சியோடு ஏறிட்டாள் அவள்.

    “ஷப்பா! இப்ப தான் எங்கம்மா அப்பாக்குப் புளி போட்டு விளக்கிட்டு வந்தேன்... உங்களுக்கு எதைப் போட்டு விளக்குனா புரியும்? விம் பாரா சபீனாவா?”

    “நீ என்ன விளக்குனாலும் ஐ வோண்ட் அக்ரி யுவர் இடியட்டிக் டிசிசன்”

    “லவ் பண்ணுறது இடியட்டிக் டிசிசனா? ம்ம்ம்...” ஆட்காட்டிவிரலால் முகவாயில் தட்டி யோசித்தவளின் கண்கள் அடுத்த நொடி பிரகாசித்தன.

    “எங்கயோ படிச்சிருக்கேன், காதல் எப்பேர்ப்பட்ட அறிவாளியையும் முட்டாள் ஆக்கிடுமாம்... அதுக்கு இந்த ஜீனியஸ் ராதா மட்டும் விதிவிலக்கில்லையே மாமா”

    “காதலா? உனக்கு என் மேல வந்ததுக்குப் பேரு காதல் இல்ல... நடந்த பிரச்சனைல இருந்து உன்னைக் காப்பாத்துனதும் நீ என்னை ஹீரோவா நினைக்குற போல... அதை லவ்னு தப்பா முடிவு பண்ணாத ராதா”

    ராதா மறுப்பாகத் தலையசைத்தாள். மாதவன் அவளது மறுப்பில் கடுப்புறுவதைக் கண்டவளாக மீண்டும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதில் கவனமானாள் அவள்.

    அவளது கையிலிருந்த ஹோஸை பிடுங்கியவன் “அப்ப நீ யார் சொன்னாலும் கேக்க மாட்ட?” என்க

    “கேக்க முடியாது” என்றவள் ஹோஸை கொடுக்கும்படி கை நீட்டினாள்.

    அதை தூர எறிந்த மாதவன் “அப்ப என் முடிவையும் கேட்டுக்க... எந்தக் காலத்துலயும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர முயன்றபோது ராதாவின் கைங்கரியத்தால் சகதியாய் கிடந்த மண்ணில் கால் வைத்து வழுக்கி விழப்போனான்.

    க்ஷண நேரத்தில் விழப்போனவனைத் தனது கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டாள் ராதா.

    “இதை மாதிரி லைஃப் லாங் நான் உங்களைத் தாங்கி பிடிச்சிப்பேன் மாமா... ட்ரஸ்ட் மீ” என்று சொல்லி கண்களைச் சிமிட்டினாள் அவள்.

    மாதவன் அவளது கரத்தில் தான் சாய்ந்திருப்பதை உணர்ந்து வேகமாக விலகி சகதியில்லாத இடத்தில் நின்றான்.

    காலில் ஒட்டியிருந்த சேறை உதறியவனைப் பார்த்து பீறிட்ட சிரிப்பை அடக்கியபடி ஹோஸ் தண்ணீரை அவனது காலில் பீச்சியடித்தாள் ராதா.

    “வீராவேசமா சபதம் போடுறப்ப அக்கம்பக்கம் பாக்கணும் மாமா... இல்லனா இப்பிடி தான் ஆகும்”

    தன்னைக் கிண்டல் செய்தவளை முறைத்தவன் அரைகுறையாக கழுவிய காலோடு அங்கிருந்து சுற்றுப்பாதையின் வழியே நடந்து வீட்டின் முன்பக்கத்துக்குச் சென்றுவிட்டான்.

    “நாட்பேட் ராதா! அப்பா அம்மா கிட்ட பேசுன சீரியஸ் மோடை விட்டு நீ இவ்ளோ சீக்கிரம் நார்மல் மோடுக்கு வந்துட்ட... கடைசில இந்தப் பாழப்போன காதல் தி க்ரேட் ராதாவ கூட சீரியசா பேச வச்சிடுச்சே”
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே 12
    “எந்த ஆம்பளை அவங்க அப்பா அம்மாக்கு நல்ல மகனா இருக்குறானோ அவன் தன்னோட பிள்ளைக்கு நல்ல அப்பாவா இருப்பான்.... தன்னோட மனைவியைக் கைவிடாம எல்லா நேரத்துலயும் உறுதுணையா இருப்பான்... மாதவன் அண்ணா அந்த கேட்டகரி... நீ சாமிக்குக் குடுத்த வளையல் செஞ்சு சீக்கிரம் அண்ணாக்குக் கல்யாணம் நடக்கட்டும்... அவரோட நல்ல மனசுக்கு அவர் சந்தோசமா வாழணும்”

    செண்பகவல்லி மாதவனின் திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் ராதாவின் மனம் சுணங்கியது.

    இப்போது தன்னிடம் அன்பாகப் பழகுபவன், அக்கறையாக நடத்துபவன் மனைவி வந்த பிறகு மாறிவிடுவானோ என்ற பயம் அவளுக்குத் துளிர்த்தது.

    அவனது அன்பையும் அக்கறையையும் இன்னொருத்தி பங்கு போட்டுக்கொள்ள வருவதாகப் பேச்செடுத்தாலே ஒருவித எரிச்சல் உண்டானது.

    அதே எரிச்சலோடு கல்லூரியிலிருந்து மாதவனோடு கிளம்பியவள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

    அங்கே சங்கரனும் செண்பகவல்லி சொன்னதையே வேறு வார்த்தைகளில் சொன்னார்.

    “உங்கம்மா இல்லாம உன் அண்ணி கிட்ட நான் பேச்சு வாங்கிட்டு இருக்கேன் மாதவா... உனக்கு என் நிலமை வந்துடக்கூடாது... பொம்பளைங்க அளவுக்கு நமக்குத் துணிச்சல் கிடையாதுப்பா... அவங்க ஆண் துணை இல்லாம தைரியமா வாழ்க்கைய வாழுவாங்க... ஆம்பளைங்களான நமக்குத் துணை இல்லனா மனசுல வெறுமை வந்துடும்... ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க மாதவா... நான் போறதுக்குள்ள நீ குடும்பஸ்தனா வாழுறதை பாத்துடணும்னு ஆசைப்படுறேன்”

    வழக்கமாக திருமணப்பேச்சை எடுத்தாலே மறுக்கும் மாதவன் அன்று சில நொடிகள் தாமதித்து சம்மதிக்கவும் ராதாவுக்கு அதிர்ச்சி.


    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-12.5730/

    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom