• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,741

Profile posts Latest activity Postings About

  • #பூந்தென்றலாய்_வந்தவளே epi 18
    கனகதாரணியிடம் போகிற போக்கில் சொல்லிவிட்டு ராதாவைத் தொடர்ந்து நடந்தான் அவன்.

    மாதவன் என்ற ஒருவன் தன்னைத் தொடர்கிறான் என்பதை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென நடந்த ராதா கங்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தாள்.

    காலணியைக் கழற்றிவிட்டுக் கோவிலுக்குள் பிரவேசித்தவளை “நிக்க மாட்டியா ராதா? ராதே என் ராதேனு பாட்டு வேணும்னா பாடட்டுமா?” என்று உரத்தக்குரலில் கேட்டான் மாதவன்.

    தனது சீண்டலுக்குப் பதிலடி கொடுப்பாள் என எதிர்பார்த்த மாதவனுக்குப் பெருத்த ஏமாற்றம். அவனை ராதா திரும்பிக்கூட பார்க்கவில்லை.

    நேரே அம்மன் சன்னதிக்கு முன்னே போய் நின்றவள் கருவறையில் இருந்த கங்கையம்மனைக் கரம் கூப்பி வணங்கினாள்.

    மாதவனும் அவளோடு சேர்ந்து கண் மூடி வேண்டிக்கொண்டிருந்தபோது

    “அம்மா தாயே! வளைகாப்புல வச்ச வேண்டுதலை வாபஸ் வாங்கிக்கிறேன்… என் பக்கத்துல நிக்குறவருக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகக்கூடாது” என்று சத்தமாகக் கூறினாள் அவள்.

    அது கோவில் நடை சாத்தும் நேரம் என்பதால் அவர்கள் இருவரைத் தவிர வேறு எந்தப் பக்தர்களும் இல்லை. ஆனால் பூசாரி இருந்தாரே! அவர் இருவரையும் விசித்திரமாகப் பார்த்து வைத்தார்.

    “ஷ்ஷ் ராதா சத்தம் போடாத” என உதட்டின் மீது விரல் வைத்து சைகை காட்டினான் மாதவன்.

    “நீங்க ராதே என் ராதேனு பாட்டு பாடுறதா சொன்னதை விட இது ஒன்னும் சத்தமில்ல”

    உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு மீண்டும் சத்தமாக அதே கோரிக்கையை வைத்தாள் அவள்.

    பூசாரி ஆரத்தி தட்டுடன் வந்தவர் “அம்பாள் கிட்ட இந்த மாதிரி கெடுதலான வேண்டுதல் வைக்கக்கூடாதும்மா” என்றார்.

    “அம்பாளுக்குக் கெடுதலா தெரிஞ்சாலும் இதோ நிக்குறாரே, இந்த மனுசனுக்கு நல்லது தான்”

    குத்தலாகச் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விபூதியை வாங்கிக்கொண்டாள்.

    பூசாரி மாதவனைப் பரிதாபமாகப் பார்த்து விபூதியை நெற்றியில் பூசிவிட்டார்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 17
    “என்ன மாதவா? வருங்கால மனைவி கூட எங்க ரெஸ்ட்ராண்டுக்கு வந்திருக்க போல... இன்னைக்கு நீ என்ன சாப்பிட்டாலும் பில்லுக்குக் காசு தர வேண்டாம்... உனக்கும் எனக்கும் விட்ட குறை தொட்ட குறையா ஏதோ ஒரு உறவு இருக்குல்ல... அந்த உறவுக்காக சின்னதா ஒரு டிஸ்கவுண்ட்”

    மெதுவாக ஒலித்தாலும் அவனது கேவலமான பேச்சில் மாதவனின் முகம் இறுகிப்போனது. ராதாவுக்கு அதைக் கண்டதும் மனோகரின் முகத்திலிருக்கும் ஏளனத்தைத் துடைத்தெறிய வேண்டுமென்ற வெறி!

    “என் கிட்டவும் கொஞ்சம் பேசுங்க பூமர் அங்கிள், எங்க உங்க ஜோடிக்கிளிய காணும்? எப்பவும் அன்றில் பறவை மாதிரி ஒன்னா சுத்துவிங்க... இன்னைக்கு என்ன ஒத்தைல வந்து நிக்குறிங்க? வீட்டுல எதுவும் விசேசமா அங்கிள்? அப்பிடினா சொல்லுங்க... நானும் மாமாவும் ஜோடியா வந்து உங்க காதல் மனைவிய பாத்து வாழ்த்திட்டுப் போறோம்... எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க காதல் மனைவிக்கு டெலிவரி ஆகிடுச்சுனா குழந்தையையும் பாத்து ஆசிர்வாதம் பண்ணிடுவோம்... ஏன்னா ஆப்டர் மேரேஜ் மாமாவும் நானும் குறைஞ்சது ஆறு மாசம் ஹனிமூன் கொண்டாடலாம்னு இருக்கோம்... அதுவும் சிம்லால”

    மனோகரின் முகம் ராதாவின் கிண்டலில் கறுக்க ஆரம்பித்தது. அவனுக்கும் மஹதிக்கும் இன்னும் குழந்தை இல்லையென அவனது குடும்பத்தார் முணுமுணுக்க ஆரம்பித்திருந்தனர். மஹதி அதை புரிந்துக்கொள்ளாமல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு இருந்ததால் தான் அவன் தனியாக ரெஸ்ட்ராண்டுக்கு வந்திருந்தான்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi15
    அவள் அமர்ந்ததும் வேகமாகப் பைக்கைக் கிளப்பியவன் “அப்பாவோட மனசைக் குழப்பிட்டியா?” என்று கடினக்குரலில் கேட்டபடி சாலையில் கவனம் செலுத்தினான்.

    “குழப்பல... நான் பெரிய மாமாவோட மகனுக்கு எது நல்லதோ அதை எடுத்துச் சொல்லிட்டு வந்திருக்கேன்”

    “சோ அப்பாவ ப்ரெய்ன் வாஷ் பண்ணிருக்க?”

    “அப் கோர்ஸ்... என்னைக் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போகமாட்டிங்கனு சொன்னிங்கல்ல... அதுக்கும் மாமா கிட்ட பெர்மிசன் வாங்கிட்டேன்”

    “அவர் பெர்மிசன் குடுத்திருக்கலாம்... ஆனா உன்னோட ரெக்வஸ்டை அப்ரூவ் பண்ண வேண்டியது மாமாவோட மகன் ஆச்சே”

    சொன்ன விதத்தில் இருந்த கேலியில் அவன் தன்னை கல்லூரிக்கு இனி அழைத்துச் செல்லப்போவதில்லை என்ற செய்தி வெளிப்படவும் ராதா அவனது இடையில் நறுக்கென கிள்ளினாள்.

    அவள் குத்தியதும் மாதவனின் பைக் தடுமாறியது.

    “தொடாம வாடி... இல்லனா பைக்கை வயலுக்குள்ள விட்டுருவேன்” தடுமாறியபடி உரைத்தான் அவன்.

    “அப்ப என்னைக் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போவேன்னு சொல்லுங்க... இல்லனா கிச்சுகிச்சு மூட்டி விடுவேன்”

    “விளையாடாத ராதா... ரோட்ல போயிட்டிருக்கப்ப உனக்கு ஏன் இந்த டேஞ்சர் கேம்? நான் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போறேன் தாயே... ப்ளீஸ் என் இடுப்புல இருந்து கைய எடு”

    ராதா நமட்டுச்சிரிப்போடு கையை விலக்கவும் பைக்கை ஒழுங்காக ஓட்ட ஆரம்பித்தான் மாதவன்.

    அன்னபூரணியின் இல்லத்தின் முன்னே அவளை இறக்கிவிட்டவன் “நாளைக்கு நான் வர்றப்ப ரெடியா இருக்கணும்... அப்ப தான் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போவேன்... எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு” என்று முறைப்போடு சொல்லிவிட்டுப் பைக்கைக் கிளப்பி சென்றுவிட்டான்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 13
    “ராதா...”

    மாதவனின் குரல் கேட்கவும் “அப்புறமா பேசுறேண்ணா” என அழைப்பைத் துண்டித்தவள் “சொல்லுங்க மாமா” என்றாள் நல்லப்பெண்ணாக.

    “நீ தப்பா முடிவெடுத்திருக்க”

    எடுத்ததும் குற்றச்சாட்டை முன்வைத்த மாதவனை அயர்ச்சியோடு ஏறிட்டாள் அவள்.

    “ஷப்பா! இப்ப தான் எங்கம்மா அப்பாக்குப் புளி போட்டு விளக்கிட்டு வந்தேன்... உங்களுக்கு எதைப் போட்டு விளக்குனா புரியும்? விம் பாரா சபீனாவா?”

    “நீ என்ன விளக்குனாலும் ஐ வோண்ட் அக்ரி யுவர் இடியட்டிக் டிசிசன்”

    “லவ் பண்ணுறது இடியட்டிக் டிசிசனா? ம்ம்ம்...” ஆட்காட்டிவிரலால் முகவாயில் தட்டி யோசித்தவளின் கண்கள் அடுத்த நொடி பிரகாசித்தன.

    “எங்கயோ படிச்சிருக்கேன், காதல் எப்பேர்ப்பட்ட அறிவாளியையும் முட்டாள் ஆக்கிடுமாம்... அதுக்கு இந்த ஜீனியஸ் ராதா மட்டும் விதிவிலக்கில்லையே மாமா”

    “காதலா? உனக்கு என் மேல வந்ததுக்குப் பேரு காதல் இல்ல... நடந்த பிரச்சனைல இருந்து உன்னைக் காப்பாத்துனதும் நீ என்னை ஹீரோவா நினைக்குற போல... அதை லவ்னு தப்பா முடிவு பண்ணாத ராதா”

    ராதா மறுப்பாகத் தலையசைத்தாள். மாதவன் அவளது மறுப்பில் கடுப்புறுவதைக் கண்டவளாக மீண்டும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதில் கவனமானாள் அவள்.

    அவளது கையிலிருந்த ஹோஸை பிடுங்கியவன் “அப்ப நீ யார் சொன்னாலும் கேக்க மாட்ட?” என்க

    “கேக்க முடியாது” என்றவள் ஹோஸை கொடுக்கும்படி கை நீட்டினாள்.

    அதை தூர எறிந்த மாதவன் “அப்ப என் முடிவையும் கேட்டுக்க... எந்தக் காலத்துலயும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர முயன்றபோது ராதாவின் கைங்கரியத்தால் சகதியாய் கிடந்த மண்ணில் கால் வைத்து வழுக்கி விழப்போனான்.

    க்ஷண நேரத்தில் விழப்போனவனைத் தனது கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டாள் ராதா.

    “இதை மாதிரி லைஃப் லாங் நான் உங்களைத் தாங்கி பிடிச்சிப்பேன் மாமா... ட்ரஸ்ட் மீ” என்று சொல்லி கண்களைச் சிமிட்டினாள் அவள்.

    மாதவன் அவளது கரத்தில் தான் சாய்ந்திருப்பதை உணர்ந்து வேகமாக விலகி சகதியில்லாத இடத்தில் நின்றான்.

    காலில் ஒட்டியிருந்த சேறை உதறியவனைப் பார்த்து பீறிட்ட சிரிப்பை அடக்கியபடி ஹோஸ் தண்ணீரை அவனது காலில் பீச்சியடித்தாள் ராதா.

    “வீராவேசமா சபதம் போடுறப்ப அக்கம்பக்கம் பாக்கணும் மாமா... இல்லனா இப்பிடி தான் ஆகும்”

    தன்னைக் கிண்டல் செய்தவளை முறைத்தவன் அரைகுறையாக கழுவிய காலோடு அங்கிருந்து சுற்றுப்பாதையின் வழியே நடந்து வீட்டின் முன்பக்கத்துக்குச் சென்றுவிட்டான்.

    “நாட்பேட் ராதா! அப்பா அம்மா கிட்ட பேசுன சீரியஸ் மோடை விட்டு நீ இவ்ளோ சீக்கிரம் நார்மல் மோடுக்கு வந்துட்ட... கடைசில இந்தப் பாழப்போன காதல் தி க்ரேட் ராதாவ கூட சீரியசா பேச வச்சிடுச்சே”
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே 12
    “எந்த ஆம்பளை அவங்க அப்பா அம்மாக்கு நல்ல மகனா இருக்குறானோ அவன் தன்னோட பிள்ளைக்கு நல்ல அப்பாவா இருப்பான்.... தன்னோட மனைவியைக் கைவிடாம எல்லா நேரத்துலயும் உறுதுணையா இருப்பான்... மாதவன் அண்ணா அந்த கேட்டகரி... நீ சாமிக்குக் குடுத்த வளையல் செஞ்சு சீக்கிரம் அண்ணாக்குக் கல்யாணம் நடக்கட்டும்... அவரோட நல்ல மனசுக்கு அவர் சந்தோசமா வாழணும்”

    செண்பகவல்லி மாதவனின் திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் ராதாவின் மனம் சுணங்கியது.

    இப்போது தன்னிடம் அன்பாகப் பழகுபவன், அக்கறையாக நடத்துபவன் மனைவி வந்த பிறகு மாறிவிடுவானோ என்ற பயம் அவளுக்குத் துளிர்த்தது.

    அவனது அன்பையும் அக்கறையையும் இன்னொருத்தி பங்கு போட்டுக்கொள்ள வருவதாகப் பேச்செடுத்தாலே ஒருவித எரிச்சல் உண்டானது.

    அதே எரிச்சலோடு கல்லூரியிலிருந்து மாதவனோடு கிளம்பியவள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

    அங்கே சங்கரனும் செண்பகவல்லி சொன்னதையே வேறு வார்த்தைகளில் சொன்னார்.

    “உங்கம்மா இல்லாம உன் அண்ணி கிட்ட நான் பேச்சு வாங்கிட்டு இருக்கேன் மாதவா... உனக்கு என் நிலமை வந்துடக்கூடாது... பொம்பளைங்க அளவுக்கு நமக்குத் துணிச்சல் கிடையாதுப்பா... அவங்க ஆண் துணை இல்லாம தைரியமா வாழ்க்கைய வாழுவாங்க... ஆம்பளைங்களான நமக்குத் துணை இல்லனா மனசுல வெறுமை வந்துடும்... ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க மாதவா... நான் போறதுக்குள்ள நீ குடும்பஸ்தனா வாழுறதை பாத்துடணும்னு ஆசைப்படுறேன்”

    வழக்கமாக திருமணப்பேச்சை எடுத்தாலே மறுக்கும் மாதவன் அன்று சில நொடிகள் தாமதித்து சம்மதிக்கவும் ராதாவுக்கு அதிர்ச்சி.


    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-12.5730/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 11
    “மூனு வேளையும் நான் சமைச்சுப் போட்டதை தின்னுட்டு உங்கப்பா எங்க போயி நன்றிய காட்டிருக்கார் பாருங்க... இதனால தான் முன்னாடியே சொத்து முழுக்க எழுதி வாங்குங்கனு தலை தலையா அடிச்சேன்... என் பேச்சைக் கேட்டிங்களா?”

    கிருஷ்ணனால் தந்தையிடம் வெளிப்படையாகக் கோபத்தைக் காட்ட முடியாத நிலை. இப்போதே வீட்டை விட்டுக் கிளம்பு எனச் சொல்லிவிட்டார் என்றால் அவனும் மகாலெட்சுமியும் எங்கே செல்வார்கள்?

    ஆனால் அவன் மனைவிக்கு அந்தப் பயமில்லை.

    சங்கரன் தனது காட்டுக்கத்தலை கண்டுகொள்ளவில்லை என்றதும் கோபம் உச்சிக்கேறியது அவளுக்கு.

    நேரே அவர் முன்னே வந்தவள் “என்ன பெருசா செஞ்சு கிழிச்சிட்டான்னு அந்த மகனுக்கு எல்லா சொத்தையும் எழுதி வச்சிருக்கிங்க? அவனால என்ன பிரயோஜனம் உங்களுக்கு? அந்த ராசி கெட்டவன் ஆம்பளையே இல்லனு அவன் பொண்டாட்டி அத்து விட்டுட்டுப் போயிட்டா... பட்ட மரத்துக்குச் சொத்து ஒன்னு தான் கேடு”

    நரம்பில்லாத நாக்கு சுடுசொற்களை அமிலமாய் அள்ளி இறைக்க ஒவ்வொரு சொல்லும் சுருக்கென நெஞ்சில் குத்துவது போன்ற பிரமை சங்கரனுக்கு.

    மகாலெட்சுமியின் தேள்கொடுக்கு வார்த்தைகள் அவருக்குப் பழகிப்போனது தான். ஆனால் மாதவனை ஆண்மையற்றவன், பட்டமரம், ராசி கெட்டவன் என அவள் வகைதொகையின்றி திட்டுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

    இப்படிப்பட்டவளா தனக்கு மருமகளாக வந்து வாய்த்திருக்க வேண்டும்?

    மனவேதனையின் உச்சமாகச் சுருக்கெனப் பிரமையாகத் தோன்றிய வலி சில நிமிடங்களில் உண்மையாகி இதயத்தைக் கைகளில் வைத்துக் கசக்குவது போன்ற கொடூர வலியாய் மாரடைப்பாய் மாற நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார் சங்கரன்.

    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 7
    சட்டையின் ஸ்லீவை முழங்கை வரை ஏற்றிவிட்டவாறு வந்தவன் அவரையும் ராதாவையும் பார்த்த பார்வை இலஞ்சியில் தார் பார்வலைவனத்தின் வெம்மையை உணர வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
    “வாங்க மாமா! சிப்ஸ் சாப்பிடுறிங்களா?”
    கையில் வைத்திருந்த சிப்ஸ் தட்டை நீட்டினாள் ராதா. மனதுக்குள் முறைப்பு மன்னன் என்ன சொல்வானோ என்ற பயம் பூனைக்குட்டியாய் அங்குமிங்கும் ஓடி விளையாடிதெல்லாம் தனிக்கதை.
    “சிப்சோட என் கதையையும் சேர்த்து கொறிக்குற போல?”
    குத்தலாகக் கேட்டவன் அன்னபூரணியைக் கண்டிக்கும் பார்வை பார்த்தான்.
    “அவ சின்னப்பொண்ணு... உங்களுக்குமா விவரம் பத்தல ஆச்சி?”
    ராதா அவனது முறைப்பிலும் கடுகடுப்பிலும் அலுத்துப்போனவளாக இடைமறித்தாள்.
    “அப்பிடி என்ன வரலாறை ஒழிச்சு வச்சிருக்கிங்க நீங்க? கிடாரை எடுக்கவே மாட்றிங்க... கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொன்னா பதிலே வரமாட்டேங்கிறதுனு சங்கரன் மாமா ஒரே புலம்பல்... ஆப்டர் ஆல் ஒரு ப்ரேக்கப்புக்கு இவ்ளோ சீன் வேண்டாம் மாமா... ஒரு செடில ஒரு பூ தான் பூக்கும்னு முட்டாள்தனமா நம்புற ஆளா நீங்க? எஃப்.பில ஒரு பொண்ணு கூட கடலை போட்டுக்கிட்டே, இன்னொரு பொண்ணு கிட்ட இன்ஸ்டா டி.எம்ல நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்னு சேட் பண்ணுறங்க பசங்களோட காலம் இது... டிண்டர், பம்பிள்னு உலகம் ஃபாஸ்டா மூவ் ஆகிட்டிருக்கு... நீங்க இன்னும் பழைய காதலை நினைச்சு தாடி மீசை வைக்காத தேவதாஸ் மாதிரி உருகிட்டிருக்கிங்க... மூவ் ஆன் ஆகுங்க மாமா”
    “நான் மூவ் ஆன் ஆகலனு யார் சொன்னாங்க?”
    மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சலித்துப்போன குரலில் கேட்டான் மாதவன்.
    “மூவ் ஆன் ஆகியிருந்தா இந்நேரம் நீங்க கல்யாணம் பண்ணிருப்பிங்க”
    புத்திசாலிபோல கூறினாள் ராதா.
    “ப்ரேக்கப்ல இருந்து மூவ் ஆன் ஆகுறது சுலபம்... பட் டிவோர்ஸ்ல இருந்து மூவ் ஆன் ஆகுறதுக்கு ரொம்ப பக்குவம் வேணும் ராதா”
    ‘டிவோர்ஸ்’ என்றதும் சிப்சை வாய்க்குள் வைக்கப்போன ராதாவின் கரம் அந்தரத்தில் நின்றது.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 6
    “ரொம்ப சந்தோசம் தம்பி... உங்க கேட்டரிங் சர்வீஸ் திருப்தியா இருந்துச்சு... இனிமே நம்ம வீட்டு விசேசம் எல்லாத்துக்கும் உங்க சாப்பாடு தான்... சீக்கிரமே நீங்களும் கல்யாணச்சாப்பாடு போடணும்... அதை மறந்துடாதிங்க”
    பெரியவர் மனதாற வாழ்த்தினார்.
    மாதவனுக்கு அவரது வாழ்த்தில் பிற்பாதி பலிக்கப்போவதில்லை என்ற எண்ணம் சிரிப்பை வரவழைத்தது. பெரியவரோ கல்யாணப்பேச்சை எடுத்ததும் மாதவனுக்கு வெட்கம் வந்துவிட்டதென நினைத்துக்கொண்டு கிளம்பினார்.
    சமீரோடு சேர்ந்து பாத்திரங்களை மினிவேனில் ஏற்றிக் கொண்டிருந்தபோது தான் அச்சம்பவம் நடந்தேறியது.
    அவள் அங்கே வந்தாள். வந்தவள் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் விதி அவளைப் பேசவைத்தது.
    “எதையோ சாதிக்கப்போறேன்னு கிராமத்துக்கு வந்து கடைசில சமையல்காரனா நிக்கிறிங்களே மாதவன்... த்சூ! பாவம் நீங்க... உங்க ராசி லெச்சணம் என்னனு சொல்லியும் பெரியப்பா கேக்கல... அவங்க மகன் இன்னும் எத்தனை மாசம் பொண்டாட்டி கூட வாழப்போறானோ? கடவுளுக்கு தான் வெளிச்சம்”
    அவளது பேச்சு சமீருக்கு எரிச்சலை உண்டாக்கியது.
    “வாய மூடு மஹதி”
    மாதவன் அவனைக் கண்களால் பொறுமை காக்கும்படி வேண்டிக்கொண்டது வீணானது.
    சமீர் அந்த மஹதியை இன்று சும்மா விடுவதாக இல்லை.
    “என் ஃப்ரெண்டை சொல்லுற... நீ மட்டும் பெருசா என்ன வாழ்ந்து கிழிச்சிட்ட? அந்த மனோகர் கூட ஜோடி சேர்ந்து சுத்துறத தவிர வேற என்ன செஞ்ச நீ?”
    மஹதி என்பவள் சமீரைப் பார்த்த பார்வையில் ஐம்பது சதவிகிதம் அலட்சியமும் ஐம்பது சதவிகிதம் கேலியும் கலந்திருந்தது.
    “சமையல்காரனுக்கு அசிஸ்டெண்டா இருக்குறவன் தானே, உனக்கு சுத்துவட்டாரத்துல நடக்குறதை யாருமே சொல்லலையா சமீர்? நானும் மனோகரும் சேர்ந்து குத்தாலத்துல ஒரு ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்... இடம் பாத்து வாடகையும் குடுத்தாச்சு... செஃப், ஸ்டாஃப்ஸ் எல்லாரும் ரெடி.... வர்ற வெள்ளிக்கிழமை க்ராண்ட் ஓப்பனிங்குக்கு சிங்கர் சரணை இன்வைட் பண்ணிருக்கோம்... உங்க ஓட்டுவீடு மெஸ் மாதிரி நினைச்சுடாத... எங்க ரெஸ்ட்ராண்ட் ரொம்ப ஹைஃபையானது... உன்னை மாதிரி ஆளுங்களை அங்க பாத்திரம் தேய்க்கக்கூட அப்பாய்ண்ட் பண்ணமாட்டோம்.... எல்லாரும் க்வாலிஃபைட் ஸ்டாப்ஸ்... கிடார் வாசிக்கிறவனும் ஃப்ளூட் வாசிக்கிறவனும் கரண்டி பிடிக்கிற மெஸ்ஸே இப்பிடி வளர்ந்து நிக்குறப்ப எங்க ரெஸ்ட்ராண்ட் வளராதா? அது வளர்ந்ததுக்கு அப்புறம் நான் என்ன கிழிச்சேன்னு உனக்குத் தெரியும்”
    அவள் சமீரிடம் அதிகப்படி கர்வத்துடன் பேசியது அமைதியாய் செல்வோமென நினைத்த மாதவனைச் சீண்டிவிட்டது.
    “சரி! நீயும் மனோவும் கிழிச்சுட்டு வந்து பேசுங்க... இப்ப வழிய விட்டு நகரு”
    மாதவனின் உதாசீனம் மஹதியை சிலிர்த்தெழ செய்தது. ஒரு காலத்தில் மஹி மஹி என பூனைக்குட்டி போல என் காலைச் சுற்றி வந்தவனுக்கு இப்போது இவ்வளவு அலட்சியமா? இவனை விடக்கூடாது. வலிக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 5
    “ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா தம்பி?”
    “இல்லைய்யா... நான் வந்து பத்து நிமிசம் தான் இருக்கும்”
    பணிவாய் பேசிய மாதவன் சமையலில் அதிகப்படியாக சேர்க்கவேண்டிய உணவு வகைகளின் பட்டியலை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
    கூடவே அட்வான்சையும் கொடுத்தவர் “இந்த வட்டாரத்துல உங்க சமையல் தான் பெஸ்டுனு சொன்னாங்க... சின்னப்பையனுக்கு என்ன தெரியும்னு யோசிச்சவனை நிச்சயதார்த்தத்துக்கு நீங்க சமைச்ச சாப்பாடு தலைகீழா மாத்திடுச்சு தம்பி... கல்யாணத்துக்கும் நீங்க தான் சமைக்கணும்னு என் பொண்டாட்டி பிடிவாதமா சொல்லிட்டா... அப்புறம், என் மருமகனோட பொண்டாட்டி சொன்னதை தப்பா நினைச்சுக்காதிங்க... அதுக்குக் கொஞ்சம் மூளைக்கோளாறு” என்று கடந்த வாரம் நடந்த சம்பவத்துக்காக மீண்டும் மன்னிப்பு வேண்டினார்.
    மூளைக்கோளாறு என்றதும் மாதவனுக்குச் சிரிப்பு பீறிட்டது. இதை மட்டும் அவள் கேட்டிருக்க வேண்டும்.
    “பரவால்லங்கய்யா... மன்னிப்புலாம் எதுக்கு? உங்களுக்கு என் அப்பாவோட வயசு இருக்கும்... பெரிய வார்த்தை பேசாதிங்க.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்” என்றான் மாதவன்.
    “உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது தம்பி... அவ என்ன உங்களை ராசிக்கெட்டவன்னு சொல்லுறது? நீங்க கைராசிக்காரர்னு ஊர்ல பேசிக்கிறாங்க... நீங்க கேட்டரிங் பண்ணுன கல்யாணத்துல யாருமே சாப்பாடு சரியில்லனு முகம் சுளிச்சதே இல்லையாம்... பத்து நல்ல மனுசங்க இருக்குற இடத்துல இந்த மாதிரி சில தேள்கொடுக்கும் இருக்கு... ஹூம்!”
    பெரியவர் சொன்ன வார்த்தை மாதவனின் மனதுக்கு இதமாக இருந்தது. சமையலில் அவனது கைமணம் தனி. அதற்காக இலஞ்சியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் அவனுக்கு நற்பெயர் இருப்பதை இப்போது தான் ஒருவர் சொல்லி கேட்கிறான் மாதவன். இதை விட வேறென்ன வேண்டும்?
    மனநிறைவோடு பெரியவரிடமிருந்து விடைபெற்றான் மாதவன்.
    இனி அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறதே! பட்டியலில் உள்ள உணவுக்குத் தேவையான மளிகை, காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும், உதவியாளர்களுக்குச் சம்பளம் எவ்வளவு, எவ்வளவு இலாபம் என திட்டமிட்டுச் செயலாற்றுவது அவனது பாணி.
    அதனால் தான் இசையுலகத்தை விட்டு சம்பந்தமற்ற சமையல் தொழிலில் இறங்கிய போதும் மாதவன் தடுமாறவில்லை.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே எபி 4
    என்னடா சொல்லுற? அது விளைச்சல் நிலம்... அதை விக்குறது தப்பு... எங்கப்பா பாடுபட்டு உழைச்ச பூமிடா அது... உனக்குக் கல்யாணம் ஆனதும் உன் பேர்ல அதை மாத்தலாம்னு வச்சிருக்கேன் மாதவா”

    மாதவன் தந்தை அருகே அமர்ந்தான். அவரது கையைப் பற்றிக் கொண்டவன்

    “கல்யாணம்னு ஒரு சம்பவம் இனிமே என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுப்பா... அண்ணன் சொன்னபடி அந்த நிலத்தை வித்து அண்ணியோட ட்ரீட்மெண்டுக்கு பணம் குடுத்துடுங்க” என்றான் நிதானமாக.

    சங்கரனுக்குக் கண்கள் கலங்கிப் போனது.

    “ஏன்டா இப்பிடிலாம் பேசுற? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க மாதவா”

    “எனக்கு நம்பிக்கை இல்லப்பா... இன்னும் எத்தனை பேர் அந்தப் பொய்யை உண்மைனு நம்பிட்டிருக்காங்கனு உங்களுக்கோ எனக்கோ தெரியுமா? நம்ம கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணுனாலும் யாரும் நம்ப மாட்டாங்கப்பா”

    விட்டேற்றியாக மொழிந்தவனை ஆதங்கத்துடன் ஏறிட்டார் சங்கரன்.

    “நீ அந்தப் பொய்யை ஒத்துக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்டா... ஏன் அவசரப்பட்டு இந்த மாதிரி ஒத்துக்கிட்ட?”

    “உங்களுக்கே தெரியும்ல, எனக்குப் பிடிச்சவங்க என்ன கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன்னு... அப்ப எனக்கு வேற வழி தெரியலப்பா... நான் வேண்டவே வேண்டாம்னு ஒதுங்கிப் போறவங்களை இழுத்து வச்சிக்க விரும்பல... அவங்க சொன்ன பொய்யை ஒத்துக்கிட்டு விலகிப்போறதுக்கு வழி விட்டுட்டேன்”

    “ஆனா நீ யாருக்காக இதெல்லாம் செஞ்சியோ அவங்க உன்னை பத்தி யோசிக்கலயேடா... அவங்க இப்ப சந்தோசமா வாழுறாங்க... அவங்க சந்தோசத்துக்குக் காரணமான நீ இப்பிடி தனிமரமா நிக்குறியே”
    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom