• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,876

Profile posts Latest activity Postings About

  • #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 13

    மார்த்தாண்டனின் கண்கள் அகல விரிந்தன.

    “இந்தப் பையன் இனியாவோட ஃப்ரெண்ட்னு சொன்னானே… கான்ஸ்டபிள் ஊர்க்காரங்க கிட்ட விசாரிச்சப்ப இவன் செவ்வாய்கிழமை ஊர்லயே இல்லனு சொன்னதா ரெக்கார்ட் இருக்கு மேடம்… ராஸ்கல் பொய் சொல்லிருக்கான்” என பற்களை நறநறத்தார் அவர்.

    “எந்த சஸ்பெக்டும் லட்டு மாதிரி உண்மைய நம்ம கையில கொண்டு வந்து குடுக்கமாட்டாங்க மார்த்தாண்டன்… நீங்க ஒரே கோணத்துல கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணி நிறைய சாட்சிகளை மிஸ் பண்ணிட்டிங்கனு நான் சொல்லுவேன்… இனியாவோட மொபைல் அண்ட் லேப்டாப்பை எப்பிடி கஸ்டடிக்கு எடுக்க மறந்திங்க? சக்கரவர்த்தி எஸ்டேட் தவிர வேற எங்கயாச்சும் சி.சி.டி.வி இருக்குதானு கூட தேடல… சாத்தான் ரோஷண்ணு அதை மட்டுமே குறிவச்சு போயிருக்கிங்க… அதான் கொலைகாரனுங்க உங்களுக்கே செக் வச்சிட்டாங்க” மார்த்தாண்டன் செய்த தவறைக் கூறினாள் இதன்யா.

    உடனே “இனியாவோட மொபைல் அண்ட் லேப்டாப்பை சைபர் க்ரைம் ஆபிசர்ஸ் கிட்ட குடுத்து அதுல இருந்து நமக்குத் தேவையான இன்ஃபர்மேசனை எடுக்கச் சொல்லணும் இதன்யா மேடம்… நான் அந்த வேலைய கவனிக்குறேன்” என முரளிதரன் கூறினார்.

    “ஓ.கே… நீங்க அந்த வேலைய பாருங்க… இன்னைக்கு என்கொயரில எதுவும் புதுசா தெரிய வந்துச்சா?” முரளிதரனிடம் கேட்டாள்.

    “நான் விசாரிச்ச வரைக்கும் கலிங்கராஜனுக்கு இனியா மேல பெருசா பாசம் இல்ல… அதை அவரே ஒத்துக்கிட்டார்… ரோஷணை எப்பிடி தெரியும்னு கேட்டதுக்கு அவரோட ஒய்ப் கிளாரா அறிமுகப்படுத்தி வச்சதா சொன்னார்… தொழில்ல சரியா லாபம் இல்ல போல… இப்ப ஏகலைவன் சக்கரவர்த்தியோட முதலீட்டுக்காக காத்திருக்கிறதா சொன்னார்”

    “இது ஆல்ரெடி மார்த்தாண்டன் விசாரிச்சது தானே… புதுசா எதுவும் தெரியலையா?”

    “கலிங்கராஜனுக்கு அவரோட மனைவி கிளாராவோட நடத்தை மேல சந்தேகம் இருக்கு… அவங்க யார் கூடவே ஈ.எம்.ஏல இருக்காங்கனு சந்தேகப்படுறார்”

    இது புதியத் தகவல் தானே! குறித்து வைத்துக்கொண்டாள் இதன்யா.

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 11
    “ஏன் கண்ணா அக்காவுக்கு அம்மாவை பிடிக்காது?” நயமாக நித்திலராஜனிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.

    “அம்மா ஒரு தடவை அக்காவை கன்னத்துல ஸ்லாப் பண்ணிட்டாங்க” என்றான் அவன்.

    “அப்பிடியா?” குழந்தைகளைப் போலவே அவள் கண்களை விரித்து கதை கேட்கும் பாணியில் பேசவும் ஜென்னி வாயைத் திறந்தாள்.

    “ஆமா மேம்! இனிமே என் பெர்ஷனல்ல தலையிடாதனு சொல்லி அறைஞ்சாங்க” என்றாள் அவள்.

    இதன்யா அதை கையோடு கொண்டு வந்த சிறிய நோட்பேடில் குறித்துக்கொண்டாள்.

    “வேற யாரை பிடிக்காது?”

    இரு குழந்தைகளும் யோசிக்க ஆரம்பித்தார்கள். இதற்கிடையே இதன்யாவின் பார்வை மிச்செல்லை நோட்டமிட்டது.

    “ஜான் அங்கிள் – நவநீதம் ஆன்ட்டிய அக்காக்குப் பிடிக்காது… இன்னொரு தடவை இப்பிடி செஞ்சிங்கனா அப்பா கிட்ட சொல்லி வேலைய விட்டு அனுப்பிடுவேன்னு அக்கா ஒரு தடவை ஜான் அங்கிளைத் திட்டுனாங்க” என்றாள் ஜென்னி.

    “ஓ” அடுத்த பாயிண்ட் கிடைத்துவிட்டது. ஆனால் கண்டிப்புக்கான காரணம் தெரியவில்லை.

    “அப்புறம் குமாரி ஆன்ட்டியையும் பிடிக்காது” இது நித்திலராஜன்.

    “ஏன்?”

    “ஏன்னா அம்மாவும் ஏகலைவன் அங்கிளும் பேசுறதை அக்கா பாத்துட்டாங்கனு அம்மா கிட்ட போட்டுக் குடுத்து அடி வாங்க வச்சவங்க குமாரி ஆன்ட்டி தான்” இதை சொன்னவள் ஜென்னி.

    இதன்யாவின் நோட்பேடில் அடுத்து ஒன்றல்ல இரண்டு பாயிண்ட்கள் இடம்பிடித்தன.

    இத்தனைக்குப் பிறகும் அவர்களில் மூத்தவளான மிச்செல்லின் தயக்கம் இன்னும் தீரவில்லை.

    “நீ எதையாச்சும் என் கிட்ட மறைக்கிறியா?”

    “அது… வந்து..”

    “சொல்லு!”

    “அக்காக்கு நிஷாந்தை ரொம்ப பிடிக்கும்… ஒரு நாள் அப்பாக்கு அவ நிஷாந்த் கூட போன்ல பேசுற விசயம் தெரிஞ்சு இனிமே நீ போன் யூஸ் பண்ணக்கூடாதுனு திட்டிட்டாங்க.. அக்கா அன்னைக்கு நைட் முழுக்க அழுதுகிட்டே இருந்தா”

    இனியாவின் மொபைல்! இதன்யாவுக்கு எதுவோ இடிக்கவும் “உன் அக்காவோட மொபைல் எங்க? அப்பா கிட்ட இருக்குதா?” என்று கேட்க

    “என் கிட்ட தான் இருக்கு மேம்… இருங்க, எடுத்துட்டு வர்றேன்” என்று தனது மேஜையறையிலிருந்து எடுத்து வந்து கொடுத்தாள்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/நித்யா-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/


    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 10

    “உங்க மகளோட வழக்குல மாவட்ட காவல்துறை மேலயும், போஸ்ட் மார்ட்டம் பண்ணுன டாக்டர் குரூப் மேலயும் நம்பிக்கை இல்லனு யாரோ ஒருத்தர் மதுரை ஹைகோர்ட் ப்ராஞ்ச்ல பெட்டிசன் போட்டிருக்காங்க கலிங்கராஜன்… அந்த கேசுக்கு வரப்போற தீர்ப்பைப் பொறுத்து தான் விக்டிமோட பாடியை உங்க கிட்ட ஒப்படைக்கணுமா வேண்டாமானு டிசைட் பண்ண முடியும் சார்”

    “அதுல எப்ப தீர்ப்பு வரும் கமிஷ்னர் சார்? அது வரைக்கும் என் மகளோட சடலம் என் கைக்கு வராதா?”

    “இதுக்கே அங்கலாய்க்கிறீங்க… தீர்ப்பு மட்டும் பெட்டிசன் போட்டவருக்குச் சாதகமா வந்துச்சுனா அழுதுடுவிங்கபோல”

    கமிஷ்னர் மனதிலிருந்த புகைச்சலைக் காட்டினார்.

    கலிங்கராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    “இங்க பாருங்க கலிங்கராஜன்… அந்த பெட்டிசன் போட்ட ஆள் இனியாவோட பாடிய செகண்ட் அட்டாப்சிக்கு அனுப்பணும்னு கேட்டுருக்கார்… மாவட்ட காவல்துறை இந்த கேஸ்ல உருப்படியா எதுவும் செய்யாததால கேஸை க்ரைம் ப்ராஞ்சுக்கு மாத்தணும், அதுக்கு ஒரு போலீஸ் டீமை போடணும்னு நிறைய வேண்டுகோள் வச்சிருக்கார்… ஜட்ஜ் அவர் கேட்டதுலாம் சரிதான்னு நினைச்சு தீர்ப்பு குடுத்தார்னா இந்த கேஸ் எங்க அதிகாரத்துக்குள்ள வராது… க்ரைம் ப்ராஞ்ச் ஆபிசர் ஒருத்தர் கைக்குப் போயிடும்… அவரும் அவரோட டீம் ஆளுங்களும் எங்க ஆளுங்க மாதிரி சாஃப்டா விசாரணையை ஹேண்டில் பண்ணமாட்டாங்க”

    காவல் ஆணையர் சொன்ன செய்தியில் மாரடைப்பு வராத குறையாக வீடு வந்து சேர்ந்தார் கலிங்கராஜன். அங்கே நடந்ததை

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 9

    “அவன் எப்பிடிப்பட்டவனாவும் இருந்திருக்கலாம்… ஆனா இப்ப அவன் உயிரோட இல்ல… தயவு செஞ்சு வழிய விடுங்க” என்று பாதிரியார் கெஞ்சியும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

    ராக்கியின் கண்ணீரும் அவர்களுக்கு இளக்கம் உண்டாக்கவில்லை.

    “இந்தக் கொலைகாரப்பாவியால என் மக செத்துப்போயிருக்கா ஃபாதர்… இன்னும் அவ சடலத்தைக் குடுக்கமாட்டோம்னு சொல்லி போலீஸ் பிடிவாதம் பிடிக்காங்க…. என் பொண்ணு ஒரு ஈ எறும்புக்குக் கூட துரோகம் நினைக்காதவ… அவளுக்கு இந்த நிலமை வரக் காரணமானவனுக்கு மட்டும் ஈமக்கிரியை சரியானபடி நடக்கணுமா?” என்று கொதித்தெழுந்தார் கலிங்கராஜன்.

    பாதிரியார் பவுல் ரசூல் பாயையும் ஏகலைவனையும் மத்தியஸ்தம் பேச அழைத்தார்.

    இருவருமே ரோஷணின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வருவது சரியல்ல என்று தான் கூறினர். மருத்துவமனை அருகே இருக்கும் மின்மயானத்தில் அவனுக்கு அந்திமக்கிரியை செய்து எரிப்பதே சிறந்தது என்றார்கள் இருவரும்.

    “அவனே போய்ட்டான் ஃபாதர்… இதுக்கு மேல நம்ம ஏன் ஆர்கியூ பண்ணனும்? பாயும் சாரும் சொல்லுற மாதிரி செஞ்சிடுவோம்” என்று ராக்கியே நொந்து போய் கூறிவிட ரோஷணின் உடல் மருத்துவமனைக்கு அருகேயுள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது,

    முந்தைய நாள் வரை தான் கொலையாளி இல்லை என்று சொன்னதையே சொல்லி காவல் நிலையத்திலுள்ள அனைவரையும் எரிச்சலூட்டியவன் பிடி சாம்பலாக மாறிப்போனான்.

    மெய்யான தலைவலி ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கையில் மார்த்தாண்டனும் மகேந்திரனும் அதையறியாதவர்களாக ரோஷணிடம் நடத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் சோதனையின் முடிவை அறிய எஸ்.பியைச் சந்திக்கக் கிளம்பினார்கள்.

    எஸ்.பி.கங்காதரன் சென்ட்ரல் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபரட்டரியின் சென்னைப்பிரிவு அதிகாரிகள் தங்களிடம் தாக்கல் செய்த அறிக்கையை முழுவதுமாக வாசித்துவிட்டு அதிருப்தியோடு மார்த்தாண்டனிடம் நீட்டினார்.

    மார்த்தாண்டன் முழுமையான நம்பிக்கையோடு அந்த அறிக்கையை வாங்கி படித்தவர் அதில் சொல்லப்பட்ட முடிவைப் படித்ததும் அதிர்ந்து போனார்.

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 8

    “சாத்தான் உன் நேரம் முடிஞ்சுதுனு சொன்னாரு”

    கண்களை இமைக்காமல் பெரிய குரலில் கத்தினான் செங்கோடன்.

    இவன் லாக்கப்புக்குள் எப்படி வந்தான்? கொஞ்சம் கொஞ்சமாக செங்கோடனின் உருவம் மறைந்து அவன் கண்ணுக்கு இனியா தெரிய ஆரம்பித்தாள்.

    முகத்திலிருந்த தோல் எல்லாம் உரிந்து முன்தலையிலிருந்த கூந்தலை இழந்து உடலெங்கும் இரத்தம் வழிய கோர ரூபமாக நின்றவள் தன்னைப் பார்த்து சிரிப்பதைப் போல தோன்றியது ரோஷணுக்கு.

    “இனியா”

    அவன் தன் போக்கில் பேசுவதை புகாரைத் தட்டச்சு செய்துகொண்டிருந்த ரைட்டர் பார்த்தார்.

    கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து “என்ன கனகு, அந்த ரோஷண் தன்னந்தனியா புலம்பிக்கிட்டு இருக்கான்… லை டிடக்டிங் டெஸ்டுல மாட்டிப்போம்னு பயத்துல அவனுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சோ?” கிண்டலாகச் சொல்ல

    “அவன் டிப்ரசனுக்கு மாத்திரைக்குச் சாப்பிடுறான்… சில மாத்திரை மருந்து எடுத்துக்கிட்டா அப்பிடி தான் யாரோ கூட இருக்குற மாதிரியே தோணும்… அவனுக்கு யார் கூட இருக்குற மாதிரி தோணுதுனு தெரியல” என்றார் கான்ஸ்டபிள்.

    அவர்கள் இருவரும் தன்னைக் கிண்டல் செய்வதைப் பற்றிய அறிவின்றி கண்களில் மருட்சியோடு “இனியா” என்றான் ரோஷண் மீண்டும்.

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 7
    அவனது வீட்டுக்கு வந்தவன் தோட்டத்தின் மூலையில் ராமபாண செடியின் அருகே யாரோ நிற்கவும் அதிர்ந்து போனான்.

    “யாருங்க அது?” என உரத்தக்குரலில் அவன் கூறவும் நின்ற உருவம் திரும்பிக் கூட பார்க்காமல் ஓட்டம் எடுத்தது.

    “ஏய் நில்லு”

    துரத்திக்கொண்டே ஓடிய ஏகலைவன் அந்த உருவம் சில பூந்தொட்டிகளைத் தூக்கி எறிந்ததால் நிலைதடுமாறி சரிய அச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு சுவர் ஏறிக்குதித்த அவ்வுருவம் தப்பியோடிவிட்டது.

    பூந்தொட்டிகளில் ஒன்று ஏகலைவனின் மார்பில் நச்சென மோதியிருந்தது. என்ன தான் திடகாத்திரமான ஆண்மைகனாக இருந்தாலும் அவனுக்கு மார்புகூடு வலித்தது.

    மெல்ல சுதாரித்து எழுந்தவன் ராமபாண செடியினருகில் அந்த உருவம் என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வியோடு அச்செடியைப் பார்க்கப் போனான்.

    அங்கே அவன் கண்ட காட்சியில் ஒரு நொடியில் உலகமே இருண்டு போனது.

    “நோஓஓஓஓஓ”

    அந்த இடமே அதிரும்படி மனம் நொறுங்க அலறினான் ஏகலைவன்.

    அவனுக்கு மிகவும் பிடித்த ராமபாண செடியின் மீது கந்தக அமிலத்தை ஊற்றியிருந்தது அந்த உருவம். அமிலத்தின் வீரியத்தால் செடி பொசுங்கிக் கொண்டிருக்கும் காட்சியை ஏகலைவனால் கண்கொண்டு காண முடியவில்லை.

    அப்படியே மடிந்து அமர்ந்து கண்ணீரில் கரைந்தான் அவன்.
    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 6

    “இனியாவோட பி.எம் ரிப்போர்ட்ல நிறைய குளறுபடி நடந்திருக்கு இன்ஸ்பெக்டர்… எனக்கு சீஃப் டாக்டர் மேல சந்தேகம்… அதை பத்தி பேச தான் உங்களை இங்க வரச் சொன்னேன்”

    “சொல்லுங்க சார்… என்ன சந்தேகம் உங்களுக்கு?”

    “அந்தப் பொண்ணு இனியாவோட உடம்புல இருந்து ஃபாரன்சிக் டீம் எடுத்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ்ல மேக்சிமம் கண்டாமினேட் ஆகிடுச்சு…. பயாலஜிக்கல் எவிடென்ஸ், டி.என்.ஏ வச்சு டெஸ்ட் பண்ணுனப்ப உங்களோட சஸ்பெக்ட்ஸ் கூட அது மேட்ச் ஆகல... இனியா கேஸ்ல இனிமே டேரக்ட் எவிடென்ஸ் கிடைக்குறது கஷ்டம் சார்… முக்கியமான விசயம் என்னனா அந்தப் பொண்ணோட ஜெனிட்டல்ல கிடைச்ச செமன், ஸ்பெர்ம் எவிடென்ஸ் ஒருத்தரோடது இல்ல… அன்பார்சுனேட்லி இனிமே அந்த செமன் எவிடென்ஸை வச்சும் அக்யூஸ்ட் யாருனு கண்டுபிடிக்க வாய்ப்பில்ல… காலம் கடந்து போயிடுச்சு சார்”

    மார்த்தாண்டன் அதிர்ந்து போனார்.

    “வாட் டூ யூ மீன்?”

    “இனியா வாஸ் ப்ரூட்டலி ரேப்ட் அண்ட் கில்ட் பை மோர் தன் ஒன் பெர்சன்”

    மருத்துவர் சொன்னதும் அடுத்ததாக வழக்கில் முளைத்த திருப்புமுனையைப் பார்த்து மலைத்துப் போனார் மார்த்தாண்டன். இனியாவின் தந்தையும் கிளாராவும் இந்தக் குற்றத்தில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட நபர்களாக இருக்க வேண்டுமானால் வாய்ப்புள்ளது. ஆனால் குற்றத்தில் ஈடுபட்டவர்களாக அவர்கள் இருக்க வாய்ப்பேயில்லை.

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் எபி 5

    “இங்க எதுக்கு வந்திங்க ஃபாதர்?”

    “ராக்கியை பலவந்தமா நீங்க போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்துட்டு வந்ததா எனக்குச் செய்தி கிடைச்சுது இன்ஸ்பெக்டர்”

    ஆமா… ரோஷண் மாட்டிக்கக்கூடாதுனு ராக்கி சி.சி.டி.வி ஃபூட்டேஜை டெலீட் பண்ணிருக்கான்… இனியாவோட மர்டர்ல ராக்கிக்கும் சம்பந்தம் இருக்கும்னு எனக்கு டவுட்”

    “இதுக்குலாம் உங்க கிட்ட ஆதாரம் இருக்குதா இன்ஸ்பெக்டர்?”

    “இருந்த ஆதாரத்தை ராக்கி அழிச்சிட்டானே”

    “நீங்க மர்டரரைக் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தை ராக்கி கிட்ட காட்டுறிங்களோனு எனக்குச் சந்தேகமா இருக்கு… நான் இதை இப்பிடியே விடப்போறதில்ல… எம்.எல்.ஏ மூலமா மூவ் பண்ணுறேன்”

    பாதிரியார் பவுலின் வளர்த்த பாசம் அவரை அப்படி பேச வைத்துவிட்டது. அவர் தன் மீது போட்ட பழியில் மார்த்தண்டன் வெகுண்டெழுந்தார்.

    “ஷட்டப்… என் ஸ்டேசனுக்கு வந்து உங்க இன்ஃப்ளூயன்சை காட்டி அக்யூஸ்டை தப்பிக்க வைக்கப்பாக்குறிங்கனு என்னாலயும் சொல்ல முடியும் ஃபாதர்… இந்தப் பசங்க மேல அப்பிடி என்ன ஸ்பெஷல் கேர் உங்களுக்கு? சர்ச் ஃபாதர் கிட்ட வளர்ந்தவன்ல ஒருத்தன் சாத்தானைக் கும்பிட்டு நரபலி குடுக்குறான், இன்னொருத்தன் போதைக்கு அடிமையானவன்… இந்த மாதிரி ரெண்டு தறுதலைங்களுக்குச் சப்போர்ட் பண்ணி உங்க மரியாதைய கெடுத்துக்காதிங்க ஃபாதர்… உங்களை மாதிரி ஆளுங்களால தான் இனியா போல அப்பாவி பொண்ணுங்க மரணத்துக்கு நியாயம் கிடைக்குறதுல சிக்கல் வருது”

    பாதிரியார் பவுல் மார்த்தாண்டனின் கோபத்தைக் கண்டு வாயடைத்துப் போனார்.

    பின்னர் நிதானமாக “ரோஷண் மேல உங்க சந்தேகம் நியாயமானது… ஆனா ராக்கி பாவம்… போதைக்கு அடிமையாகி வழிமாறிப்போனவனை ரொம்ப கஷ்டப்பட்டு நான் நல்வழிப்படுத்தி காலேஜுக்கு அனுப்பிட்டிருக்கேன் இன்ஸ்பெக்டர்… அவன் மனம் திருந்தி வாழுற பையன்… ரோஷணையும் திருத்திடணும்னு அடிக்கடி என் கிட்ட சொல்லுவான்… ப்ளீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு அப்பாவியைக் குற்றவாளி பட்டியல்ல சேர்த்துடாதிங்க”

    மார்த்தாண்டனும் நிதானத்துக்கு வந்தார்.

    “ஓ.கே… அப்ப அந்த சி.சி.டி.வி ஃபூட்டேஜ் டெலீட் ஆனதுக்கு யார் காரணம்? ரோஷண் செவ்வாய்கிழமைல இருந்து பொன்மலைல இல்லனு சொல்லுறாங்க... அவன் உங்க யார் பார்வைக்கும் படாம இருந்திருக்கான்ங்கிறது தான் உண்மை… அதை நான் நிரூபிப்பேன்… பட் அவன் வேலைய ராக்கி தான் பாத்திருக்கான்… சோ செவ்வாய்கிழமைல ஆரம்பிச்சு புதன்கிழமை இனியாவோட பாடி அங்க யாராலயோ கொண்டு வரப்பட்ட வரைக்கும் ரெக்கார்ட் ஆனதை சி.சி.டி.வில இவனும் பாத்திருப்பான்னு தானே அர்த்தம்”

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் எபி 4

    “நீ குடுக்குற செல்லத்தால தான் இவன் கெட்டுப்போயிட்டான்கா… கலிங்கராஜனோட பொண்ணை இவன் காதலிச்சிருக்கான்… அது தெரியுமா உனக்கு?”

    சாவித்திரியின் தலையில் யாரோ இடியை இறக்கினார்கள். பயத்தில் மேனி நடுங்க மகனைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார்.

    “தம்பி என்னடா சொல்லுறான்? உண்மையா இதெல்லாம்? நீ இனியாவைக் காதலிச்சியா?”

    “ஆமாம்மா”

    ஏகலைவன் சிகையைக் கோதியபடி சோபாவில் தொப்பென அமர்ந்தான்.

    “அது மட்டுமில்ல… கடைசியா இவன் தான் இனியாவ காட்டுப்பாதைல பாத்திருக்கான்”

    அடுத்த இடி! இம்முறை சாவித்திரியோடு நிஷாந்தும் அதிர்ந்து போனான். யாருக்கும் தெரியாதென அவன் நினைத்த உண்மை மாமனுக்குத் தெரிந்த அதிர்ச்சி!

    நிலைகுலைந்து போனார் சாவித்திரி. கணவரின் மரணத்துக்குப் பிறகு புகுந்தவீட்டுச் சொந்தங்கள் கை கழுவியதால் விருதுநகரிலிருந்து பிறந்த ஊரான பொன்மலைக்கு வந்தவர் அவர்.

    இங்கே தனக்கும் தனது மகனுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. கூடவே ஏகலைவன் இருக்கிறான் என்ற நிம்மதி.

    ஏகலைவன் உதவியால் மகனை நன்றாகப் படிக்கவைத்து நல்ல நிலைக்கு வரவைக்க வேண்டுமென போராடிக்கொண்டிருந்தவருக்கு மகனின் இந்தக் காதல் விவகாரம் பெரும் வேதனையைக் கொடுத்தது.

    “உனக்கு எப்பிடி இவங்க சந்திச்சது தெரியும் தம்பி?”

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom