• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,871

Profile posts Latest activity Postings About

  • #அவள்ஒருராகமாலிகை எபி 22
    சந்திரிகா அவரைப் பொறுமையாக இருக்குமாறு கண் காட்டினாள்.
    உணவுமேஜையில் அமர்ந்திருந்த சாந்தமதிக்கு வேலைக்காரப்பெண் முன்னே நடந்த அவமானத்தில் முகம் கறுத்து கண்கள் கலங்கிவிட்டன.
    சர்வேஷும் சரிதாவும் நமக்கேன் வம்பு என இட்லிகளைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
    சந்திரிகா அவர்களைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டாள்.
    “எவன் செத்தா என்ன? என் வயிறு நிறையணும்… சீ! என்ன புத்தி?”
    கடுகடுவென அவள் பேசவும் சட்டநாதன் வழக்கமாய் சொல்லும் அறிவுரையைச் சொல்ல ஆரம்பித்தார்.
    “இதுங்க மூனும் அட்டைப்பூச்சி மாதிரி உன் உழைப்பை உறிஞ்சிடும் பாப்பா… அதான் மூனு பேரையும் தூத்துக்குடிக்கு அனுப்பிடுவோம்னு சொன்னேன்”
    சந்திரிகாவுக்குத் தந்தையின் பேச்சிலிருந்த ஆதங்கம் புரியாமல் இல்லை. ஆனால் தனக்கு தாயும் தமையனும் செய்த துரோகத்திற்காக தந்தையை அவரது மனைவி மகனிடமிருந்து பிரிப்பது பாவமென நினைத்தாள் அவள்.
    என்றாவது ஒரு நாள் அவர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறாள் அவள். வயோதிகத்தில் தந்தைக்குத் துணையாக தாய் தானே இருக்கவேண்டும். என்ன தான் மகளாக சந்திரிகா அவருக்குத் துணையாக இருந்தாலும் சாந்தமதியின் துணை தானே அவருக்கு நிரந்தரம்.
    சந்திரிகா யோசிக்கவும் “என்ன பாப்பா, நம்ம கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டா அப்பாவை கவனிக்க ஆள் இருக்காதேனு யோசிக்கிறியா?” என்று கேட்க
    “நான் கல்யாணம் பண்ணிட்டுப் போவேனாங்கிற கேள்விய விடுங்கப்பா… உங்களுக்கு எத்தனை பேர் துணையா நின்னாலும் அம்மா உங்க கூட இருக்குற மாதிரி வராதுப்பா… அண்ணன் மாறுவானானு எனக்குத் தெரியாது… ஆனா அம்மா மாறுவாங்கனு நம்புறேன்… அண்ணனை நம்பி அவங்களைத் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்க முடியாதுப்பா… அவன் சுயநலமானவன்… அவங்களால அவனுக்குப் பிரயோஜனமில்லனு தெரிஞ்சு போச்சுனா அம்மாவை அவன் தூக்கியெறிஞ்சிடுவான்… அப்ப அவங்க எங்க போவாங்க? நான் அவங்களை வெறுத்துட்டேன்… ஆனா நீங்க வெறுத்துடாதிங்க” என்றாள் சந்திரிகா.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-22.5631/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை Epi 18
    “நான் துணைக்கு வரட்டுமா பாப்பா?”
    நைச்சியமாகக் கேட்டான் சர்வேஷ். இன்னும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே தங்கையிடம் ஒட்டிக்கொள்ள விரும்பினான்.
    “ஏன்? நரேஷ் மாதிரி இன்னொரு சுரேஷை வரவச்சு என் வாழ்க்கைய நாசம் பண்ணவா? நீ உன் லிமிட்ல இரு... உன் கூடவும் உங்கம்மா கூடவும் எனக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாதுனு சொல்லிட்டேன்... எனக்கு இனிமே ஃபேமிலினா அது என் அப்பா மட்டும் தான்... இது தான் சாக்குனு சும்மா ஒட்டிக்க நினைக்காத”
    முகத்திலடித்தாற்போல அவள் கூறிவிடவும் சர்வேஷின் முகம் செத்துவிட்டது.
    அன்னையோடு எழுந்தவன் இடத்தைக் காலி செய்தான்.
    “கொரியா வரைக்கும் போயும் இவ ஒன்னத்தையும் கிழிக்கல... ஆனா வாயைப் பாரு... இவ புத்திக்குத் தான் இப்பிடி தோத்து நிக்குறா”
    சாந்தமதியிடம் சர்வேஷ் முணுமுணுத்தது தெள்ளத்தெளிவாகச் சந்திரிகாவின் காதில் விழுந்தது.
    நான் ஒன்றும் திறமை இல்லாமல் தோற்றுப்போகவில்லை! ஒரு மூடனின் சுயநலத்தால் தோற்கடிக்கப்பட்டேன் எனக் கத்திவிடலாமா என்று கூடத் தோன்றியது அவளுக்கு.
    மனக்கண்ணில் இனி உன்னால் ஜெயிக்க முடியாது என்பது போன்ற அலட்சிய பாவனையோடு வந்தான் லீ ஹோ சூக்.
    சந்திரிகாவுக்குள் தோற்கக்கூடாதென்ற பிடிவாதம் கிளர்ந்தெழுந்தது.
    தந்தையை நோக்கியவள் “டீ-சீரிஸ் ஆல்பத்துல பாடுறதுக்குச் சம்மதம்னு நான் பேசிடுறேன்பா” என்றாள் கம்பீரமாக. சட்டநாதன் மகளின் இந்தப் புதிய கம்பீரத்தை பார்த்துச் சந்தோசப்பட்டார்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-18.5608/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை epi 17
    நண்பனிடம் விடைபெற்றாள் சந்திரிகா. ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டிலிருந்து அவளை விமானநிலையத்திற்கு அழைத்துச் செல்ல கார் ஒன்று வந்தது. அதிலேறியவள் விமான நிலையத்தில் இறங்கிய பிற்பாடு தான் காரிலிருந்த ஓட்டுனரை கவனித்தாள்.
    அவன் லீ ஹோ சூக்.
    அடுத்து என்ன செய்யப்போகிறானோ என அவள் பயப்படும் போதே புன்முறுவல் பூத்தான் லீஹோ.
    “பயப்படாத... நான் உன்னை செண்ட் ஆப் பண்ண தான் வந்தேன் க்வாங்... பட் எதுவும் முடிஞ்சிடல... ஞாபகம் வச்சுக்க”
    அவனது திமிர் என்று அவனை விட்டுப்போகுமோ? மனதிற்குள் சலித்துக்கொண்டாள் சந்திரிகா.
    “இங்க ஆரம்பமே இல்ல லீஹோ... அப்ப ஏன் முடிவை பத்தி பேசணும்?”
    “ஆரம்பமே இல்லையா? மானிங் நெக்டாரைக் கூட மறந்துட்டியா?”
    “அது என்னோட தடுமாற்றத்தால நடந்த ஆக்சிடெண்ட்... ஞாபகம் வச்சுகுற அளவுக்கு அழகான மொமண்ட் இல்ல அது”
    லீ ஹோ சூக் கீழுதட்டை வருடியபடி சிரித்தான்.``
    “இப்பவும் கலங்காம பேசுற பாரு, இந்த தைரியத்துக்காகவே உன்னை காதலிக்கலாம்”
    சந்திரிகாவின் முகம் கடுகடுத்தது. காதல் என்ற மெல்லுணர்வை அவள் வெறுத்துவிட்டாள். காரணம் அவளது வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்த இரு ஆண்கள்.
    நரேஷ் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சுயநலவாதி என்றால், லீ ஹோ சூக் அவளது கனவைச் சிதைத்த கடன்காரன்.
    இருவரையும் எக்காலத்திலும் சந்திரிகா மன்னிக்கமாட்டாள்.
    லீ ஹோ சூக் அவளது கையைப் பற்றினான். சந்திரிகா எரிச்சலுறும் போதே “குட் பை மிஸ் வோல்க்வாங்... சீக்கிரமே மறுபடி சந்திப்போம்” என்றான் சிரிப்போடு.
    எந்த நம்பிக்கையில் இவ்வாறு உரைக்கிறான் என எண்ணியவாறு “குட் பை” என்று சொல்லிவிட்டு தனது உடமைகளோடு செக்-இன் செய்ய சென்றுவிட்டாள் சந்திரிகா.
    எல்லாம் முடிந்து விமானம் ஏறியவள் தனக்கும் தென்கொரியாவுக்கும் இருந்த பந்தம் அத்தோடு அறுந்துவிட்டது என்பதை வலியோடு ஏற்றுக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள். இனி அவள் வாழ்க்கையில் வோல்க்வாங் என்ற அத்தியாயம் முடிந்தேவிட்டது என்று எண்ணிக்கொண்டாள் பதினெட்டு வயது பாவை.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-17.5603/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை Epi 13

    அவளைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் “அவங்களுக்குச் சிவியரான ஆஸ்துமா அட்டாக் வந்திருக்கு... புகை, தூசி, வித்தியாசமான வாசனை இதுல எதுவோ ஒன்னு காரணமா இருக்கணும்... அல்புடெரோல் குடுத்திருக்கோம்” என்றார்.
    அவர் அந்த மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் (Pulmonologist) யூனா.
    சிகிச்சைகள் வேகமாக நடைபெற வோல்க்வாங்கின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைப் பார்த்துவிட்டு மேற்படி என்ன செய்யவேண்டுமென்ற முடிவை எடுத்தார் யூனா.
    அங்கே நடந்து கொண்டிருந்த பரபரப்பான காட்சிகளைப் பார்த்தவாறு நிச்சலனமாய் அமர்ந்திருந்தான் லீ ஹோ சூக்.
    மனதுக்குள் சில நாட்களுக்கு முன்னர் நடந்த அனைத்தும் திரைப்படமாக ஓடியது.
    “ஆஸ்துமா பாதிப்பு உள்ளவங்க தூசி, புகை, அலர்ஜி உண்டாக்க கூடிய சில கெமிக்கல்ஸ்ல இருந்து தூரமா இருக்கணும்... சிலநேரம் அவங்களை அறியாம கூட ஆஸ்துமா அட்டாக் வந்துடும்”
    அன்றொரு நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்தானே, அப்போதே தனக்குத் தெரிந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் வோல்க்வாங்கின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை மின்னஞ்சல் செய்து விவரம் கேட்டிருந்தான் லீஹோ.
    “என்னென்ன கெமிக்கல்ஸ் இவங்களை பாதிக்கும்? ஏன் கேக்குறேன்னா, இன்னும் கொஞ்ச மாசத்துல இவங்களோட பேண்ட் டெபியூ ஆகப்போகுது... சோ இவங்க மெடிக்கல் ஹிஸ்டரி தெரிஞ்சா நாங்க கவனமா இருந்துப்போம்... ஒவ்வொரு ஐடலோட ஹெல்தும் எங்களுக்குப் பொக்கிஷம் மாதிரி” என மருத்துவரிடம் கூறியிருந்தான் அவன்.
    அவரும் ஆஸ்துமா அலர்ஜி உண்டாக்கக்கூடிய சில பொருட்களையும் வேதிப்பொருட்களையும் விவரித்தார்.
    “லாஸ்ட் மன்த் ஒரு பேஷண்ட் ஆஸ்துமா அட்டாக்ல அட்மிட் ஆனாங்க... அதுக்கு என்ன காரணம்னு கேட்டா நீங்க சிரிச்சிடுவிங்க மிஸ்டர் லீஹோ”
    “அப்பிடி என்ன காரணம்?”
    “செண்டட் கேண்டில்ஸ்... வெட்டிங் ஆனிவர்சரி செலிப்ரேட் பண்ணுறதுக்காகக் கேண்டில் லைட் டின்னர் அரேஞ்ச் பண்ணிருக்காங்க... அதுல வாசனையோட எரியக்கூடிய கேண்டிலை ஏத்திருக்காங்க... கேண்டில் எரிய எரிய அதோட மணம் அவங்களுக்கு அலர்ஜிய குடுத்திருக்கு... மூச்சுத்திணறல், நெஞ்சுவலியோட அட்மிட் ஆனாங்க... ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களைக் காப்பாத்துனோம்... இந்த மாதிரி செண்டட் கேண்டில் எரியுறப்ப பென்சீன், டோலுயீன்ங்கிற கெமிக்கல்ஸை ரிலீஸ் பண்ணும்... கச்சா எண்ணெய்யோட பை-ப்ராடக்டான பாரஃபின் வேக்ஸ்ல இருந்து தான் இந்த மாதிரியான கேண்டில்ஸ் தயாரிக்கிறாங்க... சோ எரியுறப்ப இந்த மாதிரியான கெமிக்கல்ஸ் வரும்... இதை ஆஸ்துமா ப்ராப்ளம் உள்ளவங்க சுவாசிச்சா அவங்களுக்கு உடனே அலர்ஜியும், ஆஸ்துமா அட்டாக்கும் வரும்”
    அவர் சொன்ன தகவலை கேட்டபிறகு தான் திட்டமொன்றை தீட்டினான் லீஹோ.
    ஏனெனில் வோல்க்வாங்கின் மருத்துவ அறிக்கைப்படி அவள் ஆஸ்துமா நோயாளி.
    அவளது இந்த நோயால் கே-பாப் வாழ்க்கையில் எந்தப் பாதிப்பும் நேரப்போவதில்லை தான். ஆனால் ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் நினைத்தால் இதைக் காரணமாக வைத்து அவளைத் தங்களின் நிறுவனத்திலிருந்து விலக்கிவைக்க முடியும்.
    இந்த நோயைக் காரணம் காட்டி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்டின் மேலாண்மையிடம் கே-பாப் ஐடலுக்குத் தகுதியற்றவளாக உன்னைச் சித்தரிப்பேன் என மிரட்டுவதே லீ ஹோ சூக்கின் திட்டம்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-13.5583/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 12
    அறையெங்கும் கமழ்ந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் நறுமணம் அனைவரின் முகத்திலும் சிரிப்பை முகிழ்க்க வைத்திருந்தது.

    ஆனால் அவளருகே நின்று கைத்தட்டி பாட்டு பாடிக்கொண்டிருந்த வோல்க்வாங்கின் வதனத்தில் இருந்த சிரிப்பு மெதுவாக மறையத் துவங்கியது.

    கூட்டத்திலிருந்து நகர்ந்து தனியே வந்தவள் அந்த அறையின் விதானத்தைப் பார்த்துப் பெரிய மூச்சுகளை எடுத்துவிட்டாள்.

    அவளது நாசிகளில் மெல்லிய எரிச்சல் பரவியது. அது மெதுவாக மூச்சுக்குழல்களையும் ஆக்கிரமித்து நுரையீரலை அடைந்தது.

    நுரையீரலின் காற்றுப்பைகளில் எரிச்சல் சுருசுருவெனப் பரவ மூச்சு விடுவது சிரமமானது. அங்கே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளோ இன்னும் எங்கள் நறுமணத்தை வாங்கி கொள் பெண்ணே எனக் கமழ்ந்தபடி எரிந்து கொண்டிருந்தன.

    நறுமணம் வேண்டாம், ஆக்சிஜன் வேண்டுமென எரிச்சலோடு தவித்த நுரையீரல் மூச்சிறைப்பை உணர்த்த அவசரமாக ப்ரோம் கவுனின் பாக்கெட்டுகளைத் தடவினாள் வோல்க்வாங்.

    கேக் வெட்டி முடித்தபிறகு எழுந்த கரகோசத்தின் நடுவே அவளது பரிதவிப்பை தூரமாக நின்று பொறுமையாக ரசித்துக் கொண்டிருந்தான் லீ ஹோ சூக்.

    இன்னும் கொஞ்சம் நேரம் தான்! பின்னர் அவள் முழுவதுமாக அவனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவாள் என்ற கர்வம் அவனது வதனத்தில் பிரதிபலித்தது.

    என்னிடமா சவால் விடுகிறாய்? அதிலும் சட்டத்தைக் காட்டி என்னை சி.ஈ.ஓ பதவியை விட்டு துரத்துவேன் என்று வேறு கூறினாய் அல்லவா? பார்க்கலாம், யார் யாரைத் துரத்துகிறார்கள் என்று.

    அவனது மன எண்ணங்களை அறியாத அப்பாவி வோல்க்வாங்கிற்கு அங்கே நடக்கும் எதையும் கவனிக்கும் அளவுக்குச் சுவாதீனம் இல்லை. மூச்சுவிட முடியாமல் தவித்தவளுக்குப் பார்வை மங்கியது.

    அத்தருணத்திற்காக காத்திருந்தவனைப் போல லீஹோ கண்கள் இருட்ட மூச்சுக்காக ஏங்கியபடி தடுமாறியவளை ஓடிச் சென்று தாங்கிப் பிடித்தான்.

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 9
    “அம்மா என்ன சொன்னாலும் நம்ம நல்லதுக்காக தான் இருக்கும் பாப்பா... நீ வேலைக்குப் போய் என்ன செய்யப்போற? நம்ம நரேஷ் கிட்ட இல்லாத சொத்தா? அவ்ளோ சொத்துக்கும் நீ தான் ராணி” என்று கடுப்போடு அன்னைக்கு ஒத்தூதினான் சந்திரிகாவின் அண்ணன் சர்வேஷ்.
    அப்போது தான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்திருந்தான். ஏன் இவன் அடிக்கடி வேலைக்கு விடுப்பு எடுக்கிறான் என எரிச்சலோடு அவனை ஏறிட்டாள் சந்திரிகா.
    “இவ போய் தொலைஞ்சா தான் நானும் சரிதாவும் கல்யாணம் பண்ணிக்க முடியும்... இவ நந்தி மாதிரி இருந்தா என் லைன் எப்பிடி க்ளியர் ஆகும்? எப்ப நானும் சரிதாவும் கபிள் வ்ளாகர் ஆகி சம்பாதிக்கிறது?”
    மனதிற்குள் கறுவிக்கொண்டவாறு சொம்பிலிருந்த தண்ணீரை மடமடவென அருந்தினான் சர்வேஷ்.
    சந்திரிகாவுக்கோ இப்போது படிக்கவேண்டும், அவ்வளவு தான்! அவளுக்கென ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவை அடைய பணம் வேண்டும். கொஞ்சம் பிரபலத்துவம் வேண்டும். அதற்காக தான் ரீல்ஸ், சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சிங் எல்லாமே!
    திருமணம் முடித்து கபிள் வ்ளாகராக காலை காபி போடுவதில் ஆரம்பித்து இரவு ஆல் அவுட் லிக்விட்டை ஆன் செய்வது வரை தனிமையில் ரசிக்கவேண்டிய அழகிய தருணங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் ஊரார் முன்னே கடை பரப்பும்படி வீடியோ எடுத்து காசு பார்க்க எண்ணுபவனை மணமுடிக்க அவளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
    அந்த நரேஷுக்கு ஆதரவாகப் பேசி தன்னை சம்மதிக்க வைக்க எண்ணும் அண்ணன் மீது கோபம் பிறந்தது அவளுக்கு. கூடவே நரேஷும் அவனது குடும்பமும் காலிப்பெருங்காய டப்பா என்பதை வேறு கண்டுகொண்டாளே!
    “பணக்காரன்னு அவன் சொன்னானா? அவன் ஒன்னும் பணக்காரன் இல்ல.... பணக்காரன் மாதிரி காட்டி உங்களை மயக்கப் பாக்குற ஏமாத்துக்காரன்... சொத்து சொத்துனு சொல்லுறானே, எல்லா சொத்தும் வில்லங்கத்துல இருக்குதாம்... அவன் என்னைக் கல்யாணம் பண்ணுறது யூடியூப்ல கபிள் வ்ளாக் போட்டு சம்பாதிக்கிறதுக்காக தான்”
    சந்திரிகா கோபத்தோடு சொன்னது தான் தாமதம், தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த எவர்சில்வர் சொம்பினை அவளது கையைக் குறிவைத்து எறிந்தான் சர்வேஷ்.
    குறி தப்பாமல் அவளது புறங்கையில் கனமான சொம்பு மோதிய வேகத்தில் “அம்மாஆஆஆ” என அலறிக்கொண்டு கையை உதறியவாறு வலியில் துடித்தபடி எழுந்தாள் சந்திரிகா.
    “தம்பி என்ன காரியம் பண்ணிட்ட?” – சாந்தமதி. இவள் முடமாகிவிட்டால் யார் வ்ளாக் போடுவது என்ற அச்சம்.
    சர்வேஷ் ஆவேசத்துடன் தங்கையை நெருங்கினான். கொஞ்சம் கூட இரக்கமோ பாசமோ இல்லாமல் அவளது கூந்தலைப் பற்றி இழுத்து உலுக்கினான்.
    “கட்டிக்கப்போறவனை அவன் இவன்னு சொல்லுற? இப்பிடி தான் நம்ம அம்மா உன்னை வளர்த்தாங்களா? நீ மட்டும் நரேஷைக் கட்டிக்கலனா உன்னை கொன்னு புதைச்சிடுவேன்” என்று கேட்டு தங்கையை அறைய கை ஓங்கினான்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-9.5557/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை epi 8
    “உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையாலே? அவ வெள்ளைத்தோலை காட்டி மயக்கிட்டாளாக்கும்? மரியாதை தெரியாத கழுதைய தான் காதலிச்சு தொலைப்பியா?” இது பரமேஷ்வரி.
    “எம்மா நான் எங்க காதலிச்சேன்? கழுதைனு சொல்லுறல்ல, அந்தக் கழுதை மாசமாசம் எவ்ளோ சம்பாதிக்குது தெரியுமா? நான் மட்டும் அவளைக் கட்டிக்கிட்டா அவளை காட்டியே யூடியூப்ல ஃபேமஸ் ஆகிடுவேன்... அவளை மாதிரி சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அந்தக் கழுதைய கழிச்சு கட்டிட்டு ஒழுக்கமானவளா குடும்பப்பொண்ணா ஒருத்திய கட்டிக்கிறேன்”
    “இதுக்குலாம் எத்தனை வருசம் ஆகுமோ? அதுக்குள்ள பிள்ளை கிள்ளைனு எதுவும் தொந்தரவு வந்துட்டுனா என்னய்யா செய்ய?”
    வெட்கமே இல்லாமல் கேட்டு வைத்தார் அவனைப் பெற்ற மகராசனான நடேசன்.
    “பிள்ளை வந்தா கூட நல்லது தான்... இப்ப யூடியூப்ல புள்ளத்தாச்சிங்களை காட்டி காசு பாக்குற பிசினசும் நடக்குப்பா... முதல் மாச செக்கப்புக்குப் போனோம், எங்க பிள்ளைக்கு அந்தக் குறைபாடு, இந்தக் குறைபாடுனு இல்லாத ஒன்னை இஷ்டத்துக்கு அடிச்சு விட்டு செண்டிமெண்டா பேசி காசு பாக்கானுங்க... நீ வேற விசயம் தெரியாம இருக்கியேப்பா”
    “என்னமோ சொல்லுத... உன் கைக்கு காசு வந்தா தான் நம்ம சொத்து பிரச்சனை தீரும்ல... அம்புட்டு சொத்தும் வில்லங்கத்துல சிக்கி கெடக்கு பாத்துக்க... அதை மனசுல வச்சு சட்டுப்புட்டுனு சம்பாதிக்க பாரு... சம்பாதிச்சதும் அந்தக் கூத்தாடி சனியனை தலை முழுகிட்டு நம்ம ஊர்க்கார பொண்ணு ஒன்னை கட்டிக்க.. அது தான் நமக்கு கௌரவம்”
    நாக்கா தேள்கொடுக்கா என சந்தேகப்படும் அளவுக்கு குரூரம் தொனிக்க மகனுக்குத் திட்டத்தை விளக்கினார் நடேசன்.
    இவ்வளவு நேரம் தேனொழுக பேசியவர்களா இவர்கள் என சந்திரிகாவே திகைக்கும் அளவுக்கு அவளைப் பற்றி கேவலமாகப் பேசி திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள் மூவரும்.
    “உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையாலே? அவ வெள்ளைத்தோலை காட்டி மயக்கிட்டாளாக்கும்? மரியாதை தெரியாத கழுதைய தான் காதலிச்சு தொலைப்பியா?” இது பரமேஷ்வரி.
    “எம்மா நான் எங்க காதலிச்சேன்? கழுதைனு சொல்லுறல்ல, அந்தக் கழுதை மாசமாசம் எவ்ளோ சம்பாதிக்குது தெரியுமா? நான் மட்டும் அவளைக் கட்டிக்கிட்டா அவளை காட்டியே யூடியூப்ல ஃபேமஸ் ஆகிடுவேன்... அவளை மாதிரி சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அந்தக் கழுதைய கழிச்சு கட்டிட்டு ஒழுக்கமானவளா குடும்பப்பொண்ணா ஒருத்திய கட்டிக்கிறேன்”
    “இதுக்குலாம் எத்தனை வருசம் ஆகுமோ? அதுக்குள்ள பிள்ளை கிள்ளைனு எதுவும் தொந்தரவு வந்துட்டுனா என்னய்யா செய்ய?”
    வெட்கமே இல்லாமல் கேட்டு வைத்தார் அவனைப் பெற்ற மகராசனான நடேசன்.
    “பிள்ளை வந்தா கூட நல்லது தான்... இப்ப யூடியூப்ல புள்ளத்தாச்சிங்களை காட்டி காசு பாக்குற பிசினசும் நடக்குப்பா... முதல் மாச செக்கப்புக்குப் போனோம், எங்க பிள்ளைக்கு அந்தக் குறைபாடு, இந்தக் குறைபாடுனு இல்லாத ஒன்னை இஷ்டத்துக்கு அடிச்சு விட்டு செண்டிமெண்டா பேசி காசு பாக்கானுங்க... நீ வேற விசயம் தெரியாம இருக்கியேப்பா”
    “என்னமோ சொல்லுத... உன் கைக்கு காசு வந்தா தான் நம்ம சொத்து பிரச்சனை தீரும்ல... அம்புட்டு சொத்தும் வில்லங்கத்துல சிக்கி கெடக்கு பாத்துக்க... அதை மனசுல வச்சு சட்டுப்புட்டுனு சம்பாதிக்க பாரு... சம்பாதிச்சதும் அந்தக் கூத்தாடி சனியனை தலை முழுகிட்டு நம்ம ஊர்க்கார பொண்ணு ஒன்னை கட்டிக்க.. அது தான் நமக்கு கௌரவம்”
    நாக்கா தேள்கொடுக்கா என சந்தேகப்படும் அளவுக்கு குரூரம் தொனிக்க மகனுக்குத் திட்டத்தை விளக்கினார் நடேசன்.
    இவ்வளவு நேரம் தேனொழுக பேசியவர்களா இவர்கள் என சந்திரிகாவே திகைக்கும் அளவுக்கு அவளைப் பற்றி கேவலமாகப் பேசி திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள் மூவரும்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-8.5545/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 7
    “சூப்பர் அண்ணா, அண்ணியும் நீங்களும் செம பேர்”
    “அண்ணா நீங்க தாம்பரமா? நாங்களும் அங்க தான் இருக்கோம்... அண்ணிய ஒரு தடவை சூப்பர்மார்க்கெட்ல பாத்தோம். நீங்க மேட் ஃபார் ஈச் அதர் அண்ணா”
    “யாருக்குலாம் அண்ணா அண்ணியோட ஷாப்பிங் வ்ளாக் பாக்கணும்னு ஆசையா இருக்கு?”
    இதெல்லாம் கமெண்டில் இருந்த நகைச்சுவைகள்.
    உண்மையான அன்பும் அழகான காதலும் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை என்பதை அறியாத ஈராயிரத்தின் குழவிகள் கமெண்டில் செய்திருந்த இந்த நகைச்சுவைகளைப் பார்த்ததும் சரிதாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.
    இருவரிடமும் ஆளுக்கொரு துப்பாக்கியைக் கொடுத்தால் மாறி மாறி சுட்டுக்கொள்ளுமளவுக்குக் ஒருவர் மீது மற்றொருவருக்குக் கோபம் இருக்கிறது. ஆனால் இந்தச் சிறுபிள்ளைகள் இந்த சில நிமிட வீடியோக்களை வைத்து அவர்களை ஆதர்ச தம்பதிகளாகவே சித்தரித்துவிட்டனரே!
    அதை சர்வேஷிடமும் சொல்லிச் சிரித்தாள் அவள்.
    “எதுக்குச் சிரிக்கிற? நம்மளும் இன்னும் கொஞ்சநாள்ல கபிள் வ்ளாகர் ஆகப்போறோம்... அதை மறந்துடாத”
    “டார்லிங்! நம்ம நிஜமான காதலர்கள்டா... உன் தங்கச்சியும் நரேஷ் அண்ணாவும் அப்பிடியா?”
    “உண்மையான லவ்வர்ஸா இருந்தாலும் நம்ம மட்டும் ரியாலிட்டியவா வ்ளாகா எடுக்கப்போறோம்? ஆல்ரெடி கேமரா செட் பண்ணி வச்சிட்டு எடுக்குற வீடியோவ ப்ராங்க்னு சொல்லப்போறோம்... ஸ்க்ரிப்ட் எழுதி வச்சு நடிக்கப்போறதை ‘எங்கள் வாழ்வில் ஒருநாள் வ்ளாக்னு’ வாய்க்கூசாம பொய் சொல்லப்போறோம்... நம்ம செய்யப்போறதும் நரேஷ் மாதிரி கபிள் வ்ளாகர் பிசினஸ் தான் பேபி”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-7.5542/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 6
    சக ட்ரெயினிகளைப் பற்றி தெரியாமல் பேசுகிறார்களே என நொந்துகொண்டாள் வோல்க்வாங்.
    லீஹோவின் பார்வை வோல்க்வாங்கின் மீது பட்டது தான் அவர்களின் பொறாமைக்குக் காரணமேயொழிய அவளது திறமையல்ல என்பதை எப்படி கூறுவாள் அவள்?
    பெருமூச்சு விட்டவள் ஹெங்பொக்கைப் பார்த்து சிரித்தாள்.
    “கே-பாப் ஐடல்ஸை பாத்து எவ்ளோ ஃபயர் விட்டிருப்போம்? அவங்களை மாதிரி நம்மளும் ஆகணும்னு எவ்ளோ கனவு கண்டிருப்போம்? பட் மேடையில ஜொலிக்கிற ஒவ்வொரு ஐடலுக்குப் பின்னாடியும் இவ்ளோ கஷ்டம் இருக்கும்னு இப்ப தானே புரியுது... இது புரியாம ஒரு பேண்டோட ஃபேன்ஸ் இன்னொரு பேண்ட் மெம்பரை தரக்குறைவா பேசுறது, ஸ்லட்சேம் செய்யுறது, அவங்க செக்சுவாலிட்டிய சொல்லி கிண்டல் பண்ணுறதுனு நிறைய ஃபேன்ஸும் ஆன்ட்டி-ஃபேன்சும் கே-பாப் ஐடல்சுக்கு சைக்காலஜிக்கலி எவ்ளோ பெரிய ப்ரஷரைக் குடுக்குறாங்க? இந்த ப்ரஷரை ஹேண்டில் பண்ணமுடியாம தான் சிலர் சூசைட் பண்ணிக்கிறாங்க போல”
    ஹெங்பொக் வோல்க்வாங்கின் பேச்சில் திடுக்கிட்டான். அவளது கையைப் பற்றினான்.
    “ஆர் யூ ஓ.கே க்வாங்? உனக்குப் பிரச்சனைனா எங்க கூட ஷேர் பண்ணிக்க... தப்பான முடிவு எதையும் எடுத்துடாத... ஐடல் ஆகலனா வாழ்க்கை ஒன்னும் முடிஞ்சிடாது... நமக்குனு வேற மாதிரியான எதிர்காலம் காத்திருக்கும் க்வாங்”
    நம்பிக்கையூட்டும் விதமாக அவன் பேசினான்.
    ஷி வொன்னுக்கும் வோல்க்வாங்கின் பேச்சு அதிர்ச்சியே!
    “நான் ட்ரெயினிங்ல இருந்து ட்ராப்-அவுட் ஆகிட்டேன்... என்ன செத்தா போயிட்டேன்? டாக்சிக் சரவுண்டிங்ல சர்வைவ் ஆகுறது கஷ்டம் தான்... பட் யூ ஆர் வெரி வெரி ஸ்ட்ராங்”
    நண்பர்கள் கொடுத்த ஆறுதலுக்குப் பிறகு தனது மனதை அழுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை ஷி வொன்னிடம் கேட்டாள் வோல்க்வாங். அவள் தானே தென்கொரிய பிரஜை.
    “சப்போஸ் ட்ரெய்னிங் பீரியட்ல வேற மாதிரியான ஃபேவர் எதிர்பாத்து வர்ற ஸ்பான்சர்ஸ் மேல லீகல் ஆக்சன் எடுக்க முடியுமா?”
    “தாராளமா எடுக்கலாம்... சாலிட் எவிடென்ஸ் இருந்துச்சுனா யாராவது உனக்குத் தொந்தரவு குடுத்தா அவங்க மேல நீ போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கலாம்... அவங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சௌத் கொரியன் கவர்மெண்ட் அவங்களை சும்மா விடாது”
    ஷி வொன்னின் வார்த்தைகள் நம்பிக்கையையும் தெம்பையும் கொடுக்க வாங்கி வைத்திருந்த பனானா மில்கை காலி செய்தாள் வோல்க்வாங்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-6.5535/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை எபி 4
    சந்திரிகா வேறு வழியின்றி உயர்த்தி பிடித்த தம்ளரை அவனிடமிருந்து வாங்குவதற்காக எக்கி நிற்க அந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவளை இடையோடு அணைத்தான் நரேஷ்.
    “என்ன பண்ணுறிங்க? என்னை விடுங்க... இல்லனா அம்மா கிட்ட சொல்லிடுவேன்”
    மிரட்டியவளைப் பார்த்து கொள்ளிவாய் பிசாசு போல சிரித்தான் அவன்.
    “இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் உங்கம்மா இங்க அனுப்பிருக்காங்க பேபி”
    கண்சிமிட்டியவனின் தோள்பட்டையில் பற்கள் பதியும்வரை நன்றாகக் கடித்தாள் சந்திரிகா.
    அவன் வலியில் “ஆஆஆ” என துடித்தபடி கைகளை விலக்கிக்கொள்ள விருட்டென கதவைத் திறந்து ஓடினாள் அவள்.
    நரேஷ் வலித்த தோளைத் தேய்த்தபடி அறைக்குள் நிற்க சாந்தமதி பதறியடித்துக்கொண்டு வந்தார்.
    “என்னாச்சு பாப்பா?”
    கண்ணீர் மல்க நின்ற சந்திரிகா நரேஷைக் கை காட்டினாள்.
    “இவன் என் கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறான்மா”
    சாந்தமதி அவனைப் பார்க்க நரேஷோ அலட்டிக்கொள்ளவில்லை.
    “அத்தை நான் ஃப்ராங் வீடியோ ஷூட் பண்ணிட்டிருந்தேன்... நம்பலனா இங்க பாருங்க” என்று அவ்வளவு நேரம் ஒளித்து வைத்திருந்த கேமராவை எடுத்துக் காட்டினான்.
    “இப்ப இது தான் ட்ரெண்ட் அத்தை... நான் பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு அழகா எடிட் பண்ணலாம்னு யோசிச்சேன்... சந்து பேபி பாதியிலயே என்னைத் தப்பா நினைச்சிட்டு ஓடி வந்துட்டா”
    சாந்தமதி அவனை விடுத்து மகளை முறைத்தார்.
    “ப்ராங்க் வீடியோனு தெரியாம மருமகனை தப்பா நினைச்சிட்டியே பாப்பா... இனிமே இப்பிடி பேசாத”
    சொல்லிவிட்டுச் சமையலறைக்குப் போய்விட்டார் அவர். சந்திரிகாவை நக்கலாகப் பார்த்தான் நரேஷ்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-4.5518/

    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom