• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels

  • புதிய நந்தவனம் நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 nandhavanamnovels.com

  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Copy right act 1957( பதிப்புரிமை சட்டம்)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Copy right act 1957( பதிப்புரிமை சட்டம்)
பழைய காலங்களில் கலைஞர்களும், இசைவாணர்களும், ஆசிரியர்களும் தங்களது படைப்புகளை புகழுக்காகவும் மற்றவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வதற்காக உருவாக்கினர், படைப்புகளை தங்களது வாழ்க்கைத் தொழில் பிழைப்பிற்காக படைக்கவில்லை, அப்பொழுது பதிப்புரிமை என்ற வினா எழவில்லை, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே பதிப்புரிமையின் முக்கியத்துவம் உணரப்பட்டது நூல்களில் மறு தயாரிப்புகளுக்கு பெருமளவில் இது வழிவகை செய்தது.

இந்திய பதிப்புரிமை குறித்து முதலாவது செய் சட்டம்(statutory law) 1847 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது.

பதிப்புரிமை அறிவுசார் சொத்துரிமையின் ஒரு வகையாகும், பதிப்புரிமை ஆனது மனித திறமை மற்றும் உழைப்பு அல்லது மனித மூளையின் விளைபொருள், ஆதலால் சட்டத்தினால் நுண் பொருளியல் ஆக (in corporal movable property) அசைவில் சொத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் படி பதிப்புரிமை என்பது இலக்கிய, இசை அல்லது கலைத்திறன் படைப்பு பொருட்களை, மீண்டும் தயாரிக்க, வெளியிட மற்றும் விற்க ஒரு தனிப்பட்ட உரிமையாகும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் பதிப்புரிமை என்பது ஆசிரியர் அல்லது இசையமைப்பாளர் போன்றவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தங்களது மூலப் படைப்பு நகல்களை அச்சிட, வெளியிட மற்றும் விற்க சட்டத்தினால் கிடைக்கும் ஒரு தனிப்பட்ட உரிமை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

பதிப்புரிமையின் உடைமையாளர் நகல் எடுத்தல், பொதுமக்களுக்கு வழங்குதல், நிகழ்ச்சி நடத்துதல் நாடகம் ஆக்குதல், பொதுமக்களுக்கு காட்டுதல் மற்றும் படைப்பினை ஒளிபரப்புகள் ஆகியவற்றை செய்ய என அவருக்கு பல்நோக்கு உரிமைகள் உண்டு.

பதிப்புரிமையின் சிறப்பம்சம் யாதெனில் ஆசிரியர் தான் பொருள் குறித்து குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யவும் அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அதிகாரமளித்தல் ஆகும். அதாவது அவரது படைப்பினை உரிமை மாற்றம், மறு பதிப்பு, மறு வெளியீடு, திருத்தம் செய்தல் முதலிய செயல்களுக்கும் மற்றவருக்கு அதிகாரமளித்தல் இதில் அடங்கும்,

ஆசிரியரின் அனுமதியின்றி மேற்கூறிய செயல்களில் செயல்களை யாராவது ஒரு நபர் செய்திருந்தால் அவர் உரிமை மீறல் குற்றத்தை செய்தவர் ஆகிறார்.

பதிப்புரிமை என்பது ஒரு மதிப்புள்ள சொத்தாகும் இதனை பல்வேறு வகையில் பயன்படுத்தலாம் இதை முழுவதுமாக அல்லது பகுதியாக மாற்றம் (assign)செய்யலாம், இந்தப் உரிமை குறிப்பிட்ட கால எல்லை அளவிற்கு மட்டும் இருக்கலாம்.

பிரிவு 1:-

1957 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கமானது மூலப் படைப்புக்களை உருவாக்க கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் செயல் முறையாளர்கள் போன்றவர்களை ஊக்குவிப்பதும் தூண்டுவது மற்றும் செயல்படுத்துவதும் ஆகும்.

பிரிவு 2 :

ஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம்:

1.இலக்கிய அல்லது நாடக படைப்புகளை உருவாக்கியவர் படைப்பின் ஆசிரியர்

2.இசை படைப்புகளை உருவாக்குபவர்கள் இசை அமைப்பாளர்

3.. கலைத்திறன் படைப்புகளை உருவாக்குபவர்கள்

4. திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு ஒலிப்பதிவு குறித்த படைப்புகளை உருவாக்குபவர் தயாரிப்பாளர்

எழுத்தாளர்களிடம் நாவல் அல்லது நாடகத்திற்கான கரு குறித்து யோசனை தெரிவிப்பவர் அல்லது ஒரு கலைஞரிடம் படத்திற்கான கருப்பொருளை தெரிவிப்பவர்கள் அந்த நாவல் அல்லது புதினத்தின் அல்லது நாடகம் அல்லது படத்திற்கு ஆசிரியராக மாட்டர்கள்.

பிரிவு 3:-

இலக்கிய படைப்பு விளக்கம்:

இலக்கியப் படைப்பு என்பது ஒரு மொழியில் எழுத்து வடிவில் பொருளொன்றை வெளியிடுவது ஆகும், ஆனால் அது ஒருவரின் மூல கருத்தாகவோ அல்லது கற்பனை ஆகத் தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை, பதிப்புரிமை பொருத்தவரை என்ன தேவை என்றால் ஒருவரது படைப்பானது மற்றவரிடம் இருந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது, அது அதன் ஆசிரியரிடம் இருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்பதுதான். இலக்கியப் படைப்பு என்பது ஆசிரியர் ஒருவர் தனது படைப்பியல் திறமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் விளைவு ஆகும்.

வெளியிடுதல்(பப்ளிகேஷன்)விளக்கம்:

வெளியிடுதல் என்பதன் பொருள் பற்றி பிரிவு 3 விளக்குகிறது ,வெளியிடுதல் அல்லது பப்ளிகேஷன் செய்தல் என்பது ஒரு நாவல் அல்லது புதினத்தின் படைப்புகளை அல்லது நகல்களை பொதுமக்களுக்கு கிடைக்கும்படி செய்தல் அல்லது பொதுமக்களுக்கு தெரியும்படி செய்தலாகும்.

பதிப்புரிமையின் கருப்பொருள் (subject matter of copyright)பிரிவு 13:

1. ஒரு பதிப்புரிமையின் கருப்பொருள் என்பது
அதனை உருவாக்கிய ஆசிரியரிடம் இருந்து தோன்றியதாக இருத்தல் வேண்டும்,

குடியுரிமை:

பதிப்புரிமை பெறுவதற்கான தகுதியை குறித்து பிரிவு 13 (2)கூறுகிறது.

1. ஒரு படைப்பானது முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்டு இருந்தால் அதன் ஆசிரியர் எந்த நாட்டவர் ஆக இருந்தாலும் அதற்கு பதிப்புரிமை உண்டு ஆனால் முதல் முதலில் இந்தியாவிற்கு வெளியே அச்சிடப்பட்டு இருந்தால் அதன் ஆசிரியர் இந்திய குடிமகனாக இருந்தால் மட்டுமே அதற்கு பதிப்புரிமை பெற முடியும்,

இந்தியாவிற்கு வெளியே வெளிநாட்டு ஆசிரியர் படைப்பு வெளியிட்டிருந்தால் யுனிவர்சல் பதிப்புரிமை உடன்படிக்கையின் வாயிலாக பதிப்புரிமையை பெறலாம்

இந்திய பதிப்புரிமைச் சட்டமானது படைப்பு ஒன்று பாதுகாப்பு பெற அது கட்டயமாக பதிவு செய்ய வேண்டும் என கூறவில்லை இது ஒரு விருப்ப உரிமை மட்டுமே.

பிரிவு 14 பதிப்புரிமை என்ற சொல்லின் வரையறை:

பதிப்புரிமை என்பது ஒரு எதிர்மறை உரிமையாகும் . அது ஆசிரியரின் ஒப்புதலின்றி அவரது படைப்பை இன்னொருவர் சுரண்டுவதை தடுக்க அவருக்கு உரிமை அளிக்கிறது, இலக்கிய படைப்புகளின் படைப்பாளர்கள் சில செயல்களை செய்வதற்கும் அவர்களின் படைப்பு முயற்சிகளை மற்றவர்கள் நியாயமற்ற முறையில் ஆதாயம் தேடிக் கொள்வதை தடுப்பதற்காகவும் உள்ளது.

பதிப்புரிமை பெற்ற ஆசிரியரின் உரிமைகள் :

1. தங்களது படைப்புகளை மீண்டும் வெளியிட

2.அதன் நகல்களை வழங்க அல்லது திருத்தம் செய்ய

3. பொது இடத்தில் நிகழ்ச்சியாக நடத்த,திரைப்படமாக எடுக்க,மொழிபெயர்க்க, ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு செய்ய,

4.பதிப்புரிமையின் ஆசிரியர் தமக்குள்ள படைப்புகளில் தமக்கு ஆதாயம் நல்கும் எவ்வகையிலும் பயன்படுத்த உரிமை உண்டு, அதனால் பொருளாதார அனுகூலமும் பெறலாம், அதாவது தமக்குள்ள முழுமையை மற்றவருக்கு மறுபயன் பெற்று மாற்றக்கம் செய்யலாம்.இதனால் அவருக்கு படைப்பின் முழு பயனை பெற உரிமை உண்டு, ஆனால் அதே சமயத்தில் தனது உரிமையை பொது நலத்திற்கு எதிராகவும் பயன்படுத்த கூதாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.

நூலின் ஆசிரியர் பெற்றுள்ள அறநெறி உரிமை(authors special rights) :

1.ஒரு படைப்பின் ஆசிரியர் அல்லது திரைப்படம் திரைப்படம் ஒன்றின் இயக்குனர் என கண்டறியும் உரிமை(paternity right)

2.ஒரு படைப்பினை அல்லது திரைப்படத்தினை கேவலமாக முறையில் நடத்தப்படுவதை எதிர்க்கும் ஆசிரியர் ஒருவரின் உரிமை அல்லது இயக்குனரின் உரிமை(integrity right)

3.ஒரு படைப்பு பற்றி பொய்யாகக் கூறினால் அதை எதிர்க்கும் உரிமை(general right).

பிரிவு 17:

ஒரு படைப்பின் ஆசிரியரே பதிப்புரிமையின் முதல் உடமை உரிமையாளர் ( the author of a work shall be the first owner of the copyright therein)ஆவார். எனவே ஒரு பதிப்புரிமைகான உடைமை உரிமையானது கீழ்க்காணும் சூழ்நிலைகளையும் காரணிகளையும் பொருத்தது.

ஓரு பதிப்புரிமைக்கான உடைமையானது பல்வேறு காரணிகள் அல்லது சூழ்நிலைகளின் அடிப்படையில் எழுவது ஆகும்,

1. அதை படைப்பின் ஆசிரியர் தனிப்பட்ட முறையில் படைத்துள்ளாரா?

2. படைப்பிற்கான மறுபயன் பெறப்பட்டுள்ளதா?

3. படைப்பானது அரசுக்காக ஆக்கப்பட்டதா?

4. படைப்பானது அதே பொழுது நிறுவனத்தின் கட்டளை அல்லது கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஆக்கப்பட்டுள்ளதா ?

5. படைப்பானது பணிக்கான ஒப்பந்தம் (contract for service) அல்லது தொழில் பயிற்சியின்(apprenticement) கீழ் ஆக்ககப்பட்டதா?

பதிப்புரிமை ஒரு சொத்துரிமை ஆகும், அதன் உரிமையாளர் அதனை தன் விருப்பம் போல கையால உரிமை உண்டு, தனது உரிமையை அவர் உரிமை மாற்றம் செய்யலாம் அல்லது அதனை மறுபதிப்பு செய்ய உரிமம் வழங்கலாம்.

பிரிவு 18 (a)

மாற்றக்கம் என்பதின் பொருள்(transmission of copyright):
தனது பதிப்புரிமை களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பொதுவாக அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிப்புரிமை முழு கால அளவிற்கு அல்லது பகுதி அளவிற்கு மாற்றம் செய்யலாம்.

மாற்றக்கம் செய்யப்படும் முறைகள் :

பிரிவு 19:

1. மாற்றக்கம் எழுதப்பட்டிருக்க வேண்டும், அதில் மாற்றம் செய்பவரோ அல்லது அவரது அதிகாரம் பெற்ற முகவரோ கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.

2. படைப்பு எது என்று அதில் குறிப்பிட வேண்டும், மாற்றக்கம் செய்யப்பட்ட உரிமைகள் அதற்கான கால அளவுகள் மற்றும் மாற்றக்கதின் நிலப்பகுதி(territorial extent) அளவு ஆகியவை குறிப்பிட வேண்டும்.

3. உரிமை ஊதியத் தொகை(royality value) குறிப்பிடவேண்டும்.

மாற்றக்கம் பெற்றவர், மாற்றக்கம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் தனக்கு அளிக்கப்பட்ட உரிமையை செலுத்தவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறார், அவ்வாறு இல்லையெனில் அந்த கால வரையறை முடிவுற்ற பின்னர் உரிமை மாற்றம் முடிவுக்கு வந்துவிடும் . மாற்றக்கம் கால அளவு(duration) எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில் மாற்றக்கம் 5 ஆண்டுகளுக்கு உரியது.

பதிப்புரிமை மாற்றக்கமானது உரிமை மாற்றம் செய்பவரால் எழுதப்பட்ட வடிவில் இருக்க வேண்டும், அவ்வாறு எழுதப்பட்ட உடன் உரிமை மாற்றம் பெற்றவர், உரிமை மாற்றம் செய்தவரின் அனைத்து உரிமைகளையும் பெறுவார், எனினும் பதிப்புரிமை தொடர்பு பத்தியமாக(actionable claim) இருத்தல் வேண்டும், வாய்மொழியான மாற்றம் அனுமதிக்க தக்கதல்ல.

ஸ்ரீமகள் அண்ட் கோ எதிர் துவாரகா பிரசாத் எனும் வழக்கில், பதிப்புரிமைகான மாற்றக்கம் ஆவணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளது, மாற்றக்கம் பெற்றவர் மூன்றாமவர் வெளியிட அதிகாரம் அளிக்கலாம்.

பதிப்புரிமையை துறக்கும் உரிமை:

பதிப்புரிமையின் பதிவாளருக்கு அறிவிக்கை ஒன்றை கொடுத்துவிட்டு ஒரு படைப்பின் ஆசிரியர் தனது அனைத்து உரிமைகளையும் அல்லது அவற்றின் சில உரிமைகளை துறக்கலாம், அறிவிக்கையில் விளைவு யாதெனில் அந்த அந்த அறிவிக்கை நாளிலிருந்து அவரது உரிமைகள் நீங்கும்.

பதிப்புரிமையின் காலஅளவு:

வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்கான கால அளவு: பிரிவு 22

வெளியிடப்பட்ட இலக்கிய படைப்புகளுக்கான கால அளவானது, அவற்றின் ஆசிரியரின் ஆயுட்காலம் அல்லது அவரின் மறைவுக்குப் பின்னர் 60 ஆண்டுகள் ஆகும், கூட்டு பதிப்புரிமையை பொருத்தமட்டில் அவர்களில் யார் இறுதியாக இறக்கிறாரோ அவரது மறைவிற்குப் பின்னர் 60 ஆண்டு கால அளவு நிலைக்கும்.

பிரிவு 23 :

ஆசிரியர் பெயர் அறியப்படாத படைப்பு அல்லது புனைப்பெயர் கொண்ட படைப்பிற்கான பதிப்புரிமை கால அளவு:

ஆசிரியர் பெயர் தெரியாத படைப்பு யாதெனில் ஒரு படைப்பின் ஆசிரியர் பெயரை குறிப்பிடாது ஆகும் , புனைப்பெயர் கொண்ட படைப்பில் ஆசிரியர் தனது உண்மையான பெயரை மறைத்து வைத்துக் கொண்டு கற்பனையான ஒரு பெயரில் எழுதுவது ஆகும், ஆசிரியர் பெயர் தெரியாத அல்லது புனைப்பெயர் கொண்ட படைப்பு ஆகியவற்றிற்கான கால அளவானது அவை வெளியிடப்பட்ட ஆண்டிலிருந்து 60 ஆண்டுகள் வரையில் ஆகும், 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியரின் அடையாளம் தெரியப்படுத்தப்பட்டால் அந்த ஆசிரியரின் மறைவிற்குப் பின்னர் 60 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

இறந்தவரின் படைப்பிற்கான கால அளவு:
ஆசிரியரின் மறைவின்போது ஒரு இலக்கியப் படைப்பு வெளியிடப்படுமனால் அவர் இறந்த பின்னர் வெளியிடப்பட்ட ஆண்டிலிருந்து 60 ஆண்டுகள் ஆகும்.

பிரிவு 32 :

எந்த ஒரு மொழியிலும் இலக்கிய அல்லது நாடக படைப்புகளின் மொழிபெயர்ப்பை தயாரிப்பு அல்லது வெளியிட பிரிவு 32 வழிவகை செய்துள்ளது. படைப்பானது முதலில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 7 ஆண்டு காலத்திற்கு பின்னரே குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உரிமம் வழங்கப்படும், இதற்கான உரிமத்தை பதிப்புரிமை வாரியத்தில் இருந்து பெற வேண்டும்.

பிரிவு 32 A
இலக்கிய இலக்கிய படைப்புகளை மறு தயாரிப்பிற்கான கட்டாய உரிமம் வழங்குவது பற்றி பிரிவு 32A கூறுகிறது.

1. கதை கவிதை நாடகம் இசை அல்லது கலைப்படைப்பு ஆகியவற்றிற்கு ஏழு ஆண்டுகள்.

2.இயற்கை அறிவியல் இயற்பியல் கணிதம் அல்லது தொழில்நுட்பம் மூன்றாண்டுகள்.

3.மற்ற படைப்புகள் ஐந்து ஆண்டுகள்.

உரிமைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் -பிரிவு 32 B
இந்தப் பிரிவு கட்டாய உரிமம் வழங்கப்பட்டதை முடிவுக்குக் கொண்டு வருதலை பற்றி எடுத்துரைக்கிறது, பதிப்புரிமையின் ஆசிரியர் ஒரு நியாயமான விலையில் அதே தரத்தில் அதே மொழியில் அவரது படைப்பு மொழி பெயர்ப்பு செய்து வெளியிடும்போது வழங்கப்பட்ட உரிமை முடிவுக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளதது

பதிப்புரிமை அலுவலகம் :

பதிப்புரிமை அலுவலகத்தை அமைக்க பிரிவு ஒன்பது வழிவகை செய்துள்ளது , இந்த அலுவலகம் பதிப்புரிமை பதிவாளரின்( copy right registrar) நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும், மைய அரசின் (central government) மேற்பார்வை மட்டும் கட்டளையின் கீழ் பதிவாளர் செயல்படுவார்.

பதிப்புரிமை அலுவலகம் பதிப்புரிமை பதிவேடு என்ற பதிவேட்டை பேணுகின்றது இப்பதிவேட்டில் பதிப்புரிமை படைப்புகளின் ஆசிரியர் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய தகவல்களும் உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் பெயர்கள் மற்றும் முகவரிகளும் இடம் பெற்றிருக்கும், பதிப்புரிமை பதிவேட்டில் ஒவ்வொரு வகையிலான படைப்பிற்கும் ஒவ்வொரு பாகம் உண்டு.

பதிப்புரிமை வாரியம் :

பதிப்புரிமை வாரியத்தை அமைக்க பிரிவு 11 வழிவகை செய்துள்ளது, இந்த வாரியம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட 14 உறுப்பினர்களுக்கும் மிகைப்படாமல் உறுப்பினர்களை கொண்டிருக்கும், தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவி வகிப்பர்,

வாரியத்தின் தலைவர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருத்தல் வேண்டும் அல்லது உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி கொண்டிருத்தல் வேண்டும் அல்லது உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட தகுதி கொண்டிருக்க வேண்டும்.

பதிப்புரிமை வாரியத்தின் பணிகள் :

1. பதிப்புரிமை கான கால அளவை தீர்மானிக்கும்.

2. மாற்றக்கம் குறித்து எழும் தகராறுகள் தீர்த்து வைக்கும்.

3. வெளிடப்படாத படைப்புகளை வெளியிட, கட்டாய உரிமம் வழங்குதல்,

4. இலக்கிய படைப்புகள் தயாரிக்கவும், வெளியிடவும் உரிமம் வழங்குதல்,

5. இலக்கிய படைப்புகள் மொழிபெரியர்ப்பு செய்து வெளியிட உரிமம் வழங்குதல்,

6. பதிப்பாளர் அல்லது பாதிக்கப்பட்ட நபரின் மனுவின் பெயரில் பதிவேட்டில் உள்ள தவறுகளை நீக்குதல்.

பதிப்புரிமை வாரியம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எதிராக மேல் முறையிட்டுடை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் வேண்டும்.

பதிப்புரிமை வாரியம் பெற்று இருக்கும் நீதிமன்ற அதிகாரம்:

1. எவரையும் அழைப்பாணை விடுத்து ஆனை உறுதியின் பெயரில் விசாரித்தல்,

2.எந்த ஒரு ஆவணத்தையும் கண்டறிய மற்றும் கொண்டுவர பணித்தல்

3. ஆணை உறுதி ஆவணத்தின் பெயரில் சான்றுகளை ஏற்றல்

4.சாட்சிகள் வல்லது ஆவணங்களில் விசாரணைக்காக ஆணையங்களை உருவாக்குதல்

5. மற்ற நீதிமன்றம் அல்லது அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு பொது பதிவேடு நகலை கொண்டுவர பணித்தல்,

பல்வேறு முடிவுற்ற வழக்குகளில் பதிப்புரிமை பதிவு என்பது ஒரு விருப்ப உரிமை கொண்டது என எடுத்துரைக்கப்பட்டுள்ளது, பதிவு இன்றியே ஆசிரியர் ஒருவர் தமது படைப்பில் பதிப்புரிமையை பெறுவார், பதிவு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் படைப்பின் ஆசிரியர் பதிப்புரிமையை பெற தகுதி உடையவர் ஆகிறார்.

பதிப்புரிமையை கட்டாயமாக பதிவு செய்ய தேவையில்லை என்பதை சத்சங் மற்றும் இன்னொருவர் எதிர் கிரண் சந்திரன் மற்றும் பலர் என்ற வழக்கில் இயம்பி உள்ளது.

பதிப்புரிமை உரிமை மீறலுக்கான இழப்பீடு கோருவதற்கு பதிப்புரிமையின் பதிவானது கட்டாயமானது அல்லது ஒரு முன் நிபந்தனையும் அன்று என மனோஜ் சீனி ப்ரொடக்ஷன்ஸ் சுந்தரேசன் என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பதிப்புரிமை என்பது ஒரு மனிதனின் உழைப்பு, திறமை மற்றும் மூலதனத்தின் விலை பொருளாகும். இதை எவரும் கைப்பற்றுதல் கூடாது, ஆசிரியர்க்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும் அவரது ஒப்புதலின்றி அவரது படைப்பை சுரண்டுவதை தடுப்பதற்காக உரிமையை அவருக்கு பிரிவு 14 வழங்குகிறது.

பிரிவு 51 :

இத்தகைய செயல்கள் உரிமை மீறலாக கருதப்படும் என்பதை கூறுகிறது.

1. யாராவது ஒருவர் உடைமையாளர் அல்லது பதிவாளரால் வழங்கப்படும் ஒரு உரிமையை இல்லாமல் அல்லது பதிவாளரால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கும் முரணாக

2.உடைமையாளரின் தனி உரிமையை மீறி எதையாவது செய்யும் பொழுது அல்லது

3. எந்த இடத்திலாவது ஆதாயத்திற்காக அனுமதிக்கும்போது

4. யாராவது ஒருவர் படைப்பின் உரிமை மீறிய நகல்களை ( infringing copies, pdf or audios ) விற்பனைக்கு அல்லது வாடகைக்கு விடும் போது அல்லது வர்த்தகம் வாயிலாக காட்சிப்பொருளாக வைக்கும் போது அல்லது விற்பனை அல்லது வாடகை முனைவு அளிக்கும்போது,

5.வர்த்தக நோக்கத்திற்காக விநியோகிக்கும் போது அல்லது வர்த்தகம் வாயிலாக பொதுமக்களிடம் காட்சிப்பொருளாக வைக்கும்போது

6. இந்தியாவில் இறக்குமதி செய்யும் போது

மேற்கூறிய செயல்கள் அனைத்தும் பதிப்புரிமையை மீறுவதாக கருதப்படும்.

உரிமை மீறல்களின் பல்வேறு வடிவங்கள் :

1.படைப்பின் மறு தயாரிப்பு

2. படைப்பின் வெளியீடு

3.பொதுமக்களிடம் படைப்பினை கொண்டு செல்லல்,

4. பொதுஇடத்தில் படைப்பினை நிகழ்த்திக் காட்டுதல், மொழிபெயர்ப்பு செய்தல், ஆசிரியரின் அனுமதி இல்லாமல் படைப்பினை திருத்தம் செய்தல்,

5. ஆசிரியரின் அனுமதி இல்லாமல் அவரின் படைப்புகளை பிடிஎப் மற்றும் ஆடியோ நாவல்களாக வெளியிடுதல் முதலியவை பதிப்புரிமை உரிமை மீறலில் அடங்கும்.

உரிமை மீறலை நிலைநாட்ட நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகள்:

1. இரண்டு படைப்புகளுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை இருக்க வேண்டும்

2.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாதியின் படைப்பினை பிரதிவாதி சட்டவிரோதமாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.

3. வாதியின் பதிப்புரிமை பெற்ற படைப்பையும் உரிமை மீறிய பிரதிவாதியின் நகலை இணைக்கும் காரணகாரிய சங்கிலி ஒன்று இருக்க வேண்டும்.

4. வாதியின் படைப்பை அல்லது அந்த படைப்பின் உரிமை மீறும் நகலை பெற வாய்ப்பு இருந்திருக்க வேண்டும்.

வாதி ஆனவர் தனது வழக்கு வெற்றி பெற தனது படைப்பானது பதிப்புரிமை பெற்ற ஒன்று என்பதை நிரூபித்து காட்டுதல் வேண்டும்.

பதிப்புரிமைகளின் உரிமை மீறலுக்கு எதிரான தீர்வுகள்:

1. உரிமையில் தீர்வு வழிகள்

2. குற்றவியல் தீர்வு வழிகள்

3. நிர்வாகவியல் தீர்வு வழிகள்

உரிமை இயல் வகையிலான தீர்வு வழிகள்:

படைப்பின் உரிமையாளர் தனது படைப்புகள் மறு பதிப்பு, மறு வெளியீடு, களவு போகாமல் தடுக்க உறுத்துக்கட்டளை மற்றும் இழப்பீடு ஆகிய தீர்வுகளைப் பெற முடியும்.

பிரிவு 55 இன் கீழ் படைப்பின் ஆசிரியர் உரிமை மீறுகை அல்லது உரிமைமீறல் தொடர்வதில் இருந்து உடனடி பாதுகாப்பு பெற உறுத்துக்கட்டளை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

இழப்பீடு:

பதிப்புரிமையின் உடைமையாளர் உரிமை மீறிய பொருட்களின் சுவாதீனம்(ownership) உரிமை பெற்றுள்ளார், பதிப்புரிமை கொண்டுள்ள படைப்பின் அனைத்து உரிமை பிரதிகளுக்கு(infringement copies) பதிப்புரிமையின் உரிமையாளருக்கு உரியவையாகும், விற்கப்பட்ட உரிமை மீறும் பிரதிகள் பதிப்புரிமை உடைமையாளரின் சொத்து என கருதப்படுவதால் அதன் விற்பனை கிடைத்த பணத்தை அவர் இழப்பீடு மூலம் பெற வழி வகை உண்டு.

குற்றவியல் வகையிலான தீர்வு வழிகள் :

இந்தச் சட்டத்தினால் வழங்கப்பட்ட எந்த ஒரு உரிமையை மீறினால் அல்லது மீறுவதற்கு உடந்தையாக இருந்தால் ஆறு மாதங்களுக்கு குறைவு இல்லாத ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேற்படாத சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும், அபராத தொகை 50 ஆயிரத்திற்கு குறைவில்லாமல் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேற்படாமலும் இருக்கும்.

பிரிவு 63 இன் கீழ் கூறப்படும் குற்றத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அல்லது அதற்கு மேற்பட்ட செய்தால் கூடுதலான சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

நிர்வாகவியல் முறையிலான தீர்வுகள்:

நிர்வாகவியல் முறையிலான தீர்வுகளை ஒருவர் இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பதிப்புரிமை பதிவாளரிடம் புகார் அளித்தோ அல்லது பதிப்புரிமை வாரியத்திடம் புகார் அளித்தோ பெறலாம்.

இதில் சந்தேகம் உள்ளவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்கலாம்....

- அட்வகேட் சரண்யா லக்ஷ்மணன்
 

Latest profile posts

ஹாய் பிரண்ட்ஸ் ,
நான் உங்கள் பவித்ரா முருகன்.கதைக்கு கொஞ்சம் கேப் அதிகம் ஆயிடுச்சு. வீட்ல பங்க்ஷன் அதனாலதான் லேட். இப்போ அத்தியாயம் 9 பதிவிட்டு உள்ளேன். வாசித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Thread 'என் ஜன்னல் நிலவு 9' https://nandhavanamnovels.com/threads/en-jannal-nilavu-9.360/
சந்திப்போமே கனாக்களில் எபி 17
சந்திப்போமே கனாக்களில் 16

உன்னில் சங்கமித்தேன் டிசம்பர் 7 சனி இரவு வரை தான் லிங்க் ஆக்டிவாக இருக்கும்,

#முக்கிய_அறிவிப்பு📢📢📢
#விரைவில்_நிறைவுறும் 📢📢📢
நிகரில்லா நீ! கதை இன்னும் 2 எபியில் முடிந்துவிடும்‌. முடிந்தபின் 3 நாட்கள் மட்டுமே லிங்க் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது மக்களே... அதனால் படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்துவிடுங்கள்.

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-நிகரில்லா-நீ.412/

New Episodes Thread

Top Bottom