• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,260

Profile posts Latest activity Postings About

  • #பூந்தென்றலாய்_வந்தவளே epi 11
    “மூனு வேளையும் நான் சமைச்சுப் போட்டதை தின்னுட்டு உங்கப்பா எங்க போயி நன்றிய காட்டிருக்கார் பாருங்க... இதனால தான் முன்னாடியே சொத்து முழுக்க எழுதி வாங்குங்கனு தலை தலையா அடிச்சேன்... என் பேச்சைக் கேட்டிங்களா?”

    கிருஷ்ணனால் தந்தையிடம் வெளிப்படையாகக் கோபத்தைக் காட்ட முடியாத நிலை. இப்போதே வீட்டை விட்டுக் கிளம்பு எனச் சொல்லிவிட்டார் என்றால் அவனும் மகாலெட்சுமியும் எங்கே செல்வார்கள்?

    ஆனால் அவன் மனைவிக்கு அந்தப் பயமில்லை.

    சங்கரன் தனது காட்டுக்கத்தலை கண்டுகொள்ளவில்லை என்றதும் கோபம் உச்சிக்கேறியது அவளுக்கு.

    நேரே அவர் முன்னே வந்தவள் “என்ன பெருசா செஞ்சு கிழிச்சிட்டான்னு அந்த மகனுக்கு எல்லா சொத்தையும் எழுதி வச்சிருக்கிங்க? அவனால என்ன பிரயோஜனம் உங்களுக்கு? அந்த ராசி கெட்டவன் ஆம்பளையே இல்லனு அவன் பொண்டாட்டி அத்து விட்டுட்டுப் போயிட்டா... பட்ட மரத்துக்குச் சொத்து ஒன்னு தான் கேடு”

    நரம்பில்லாத நாக்கு சுடுசொற்களை அமிலமாய் அள்ளி இறைக்க ஒவ்வொரு சொல்லும் சுருக்கென நெஞ்சில் குத்துவது போன்ற பிரமை சங்கரனுக்கு.

    மகாலெட்சுமியின் தேள்கொடுக்கு வார்த்தைகள் அவருக்குப் பழகிப்போனது தான். ஆனால் மாதவனை ஆண்மையற்றவன், பட்டமரம், ராசி கெட்டவன் என அவள் வகைதொகையின்றி திட்டுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

    இப்படிப்பட்டவளா தனக்கு மருமகளாக வந்து வாய்த்திருக்க வேண்டும்?

    மனவேதனையின் உச்சமாகச் சுருக்கெனப் பிரமையாகத் தோன்றிய வலி சில நிமிடங்களில் உண்மையாகி இதயத்தைக் கைகளில் வைத்துக் கசக்குவது போன்ற கொடூர வலியாய் மாரடைப்பாய் மாற நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தார் சங்கரன்.

    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 7
    சட்டையின் ஸ்லீவை முழங்கை வரை ஏற்றிவிட்டவாறு வந்தவன் அவரையும் ராதாவையும் பார்த்த பார்வை இலஞ்சியில் தார் பார்வலைவனத்தின் வெம்மையை உணர வைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
    “வாங்க மாமா! சிப்ஸ் சாப்பிடுறிங்களா?”
    கையில் வைத்திருந்த சிப்ஸ் தட்டை நீட்டினாள் ராதா. மனதுக்குள் முறைப்பு மன்னன் என்ன சொல்வானோ என்ற பயம் பூனைக்குட்டியாய் அங்குமிங்கும் ஓடி விளையாடிதெல்லாம் தனிக்கதை.
    “சிப்சோட என் கதையையும் சேர்த்து கொறிக்குற போல?”
    குத்தலாகக் கேட்டவன் அன்னபூரணியைக் கண்டிக்கும் பார்வை பார்த்தான்.
    “அவ சின்னப்பொண்ணு... உங்களுக்குமா விவரம் பத்தல ஆச்சி?”
    ராதா அவனது முறைப்பிலும் கடுகடுப்பிலும் அலுத்துப்போனவளாக இடைமறித்தாள்.
    “அப்பிடி என்ன வரலாறை ஒழிச்சு வச்சிருக்கிங்க நீங்க? கிடாரை எடுக்கவே மாட்றிங்க... கல்யாணம் பண்ணிக்கோங்கனு சொன்னா பதிலே வரமாட்டேங்கிறதுனு சங்கரன் மாமா ஒரே புலம்பல்... ஆப்டர் ஆல் ஒரு ப்ரேக்கப்புக்கு இவ்ளோ சீன் வேண்டாம் மாமா... ஒரு செடில ஒரு பூ தான் பூக்கும்னு முட்டாள்தனமா நம்புற ஆளா நீங்க? எஃப்.பில ஒரு பொண்ணு கூட கடலை போட்டுக்கிட்டே, இன்னொரு பொண்ணு கிட்ட இன்ஸ்டா டி.எம்ல நாளைக்கு எங்க மீட் பண்ணலாம்னு சேட் பண்ணுறங்க பசங்களோட காலம் இது... டிண்டர், பம்பிள்னு உலகம் ஃபாஸ்டா மூவ் ஆகிட்டிருக்கு... நீங்க இன்னும் பழைய காதலை நினைச்சு தாடி மீசை வைக்காத தேவதாஸ் மாதிரி உருகிட்டிருக்கிங்க... மூவ் ஆன் ஆகுங்க மாமா”
    “நான் மூவ் ஆன் ஆகலனு யார் சொன்னாங்க?”
    மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சலித்துப்போன குரலில் கேட்டான் மாதவன்.
    “மூவ் ஆன் ஆகியிருந்தா இந்நேரம் நீங்க கல்யாணம் பண்ணிருப்பிங்க”
    புத்திசாலிபோல கூறினாள் ராதா.
    “ப்ரேக்கப்ல இருந்து மூவ் ஆன் ஆகுறது சுலபம்... பட் டிவோர்ஸ்ல இருந்து மூவ் ஆன் ஆகுறதுக்கு ரொம்ப பக்குவம் வேணும் ராதா”
    ‘டிவோர்ஸ்’ என்றதும் சிப்சை வாய்க்குள் வைக்கப்போன ராதாவின் கரம் அந்தரத்தில் நின்றது.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 6
    “ரொம்ப சந்தோசம் தம்பி... உங்க கேட்டரிங் சர்வீஸ் திருப்தியா இருந்துச்சு... இனிமே நம்ம வீட்டு விசேசம் எல்லாத்துக்கும் உங்க சாப்பாடு தான்... சீக்கிரமே நீங்களும் கல்யாணச்சாப்பாடு போடணும்... அதை மறந்துடாதிங்க”
    பெரியவர் மனதாற வாழ்த்தினார்.
    மாதவனுக்கு அவரது வாழ்த்தில் பிற்பாதி பலிக்கப்போவதில்லை என்ற எண்ணம் சிரிப்பை வரவழைத்தது. பெரியவரோ கல்யாணப்பேச்சை எடுத்ததும் மாதவனுக்கு வெட்கம் வந்துவிட்டதென நினைத்துக்கொண்டு கிளம்பினார்.
    சமீரோடு சேர்ந்து பாத்திரங்களை மினிவேனில் ஏற்றிக் கொண்டிருந்தபோது தான் அச்சம்பவம் நடந்தேறியது.
    அவள் அங்கே வந்தாள். வந்தவள் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் விதி அவளைப் பேசவைத்தது.
    “எதையோ சாதிக்கப்போறேன்னு கிராமத்துக்கு வந்து கடைசில சமையல்காரனா நிக்கிறிங்களே மாதவன்... த்சூ! பாவம் நீங்க... உங்க ராசி லெச்சணம் என்னனு சொல்லியும் பெரியப்பா கேக்கல... அவங்க மகன் இன்னும் எத்தனை மாசம் பொண்டாட்டி கூட வாழப்போறானோ? கடவுளுக்கு தான் வெளிச்சம்”
    அவளது பேச்சு சமீருக்கு எரிச்சலை உண்டாக்கியது.
    “வாய மூடு மஹதி”
    மாதவன் அவனைக் கண்களால் பொறுமை காக்கும்படி வேண்டிக்கொண்டது வீணானது.
    சமீர் அந்த மஹதியை இன்று சும்மா விடுவதாக இல்லை.
    “என் ஃப்ரெண்டை சொல்லுற... நீ மட்டும் பெருசா என்ன வாழ்ந்து கிழிச்சிட்ட? அந்த மனோகர் கூட ஜோடி சேர்ந்து சுத்துறத தவிர வேற என்ன செஞ்ச நீ?”
    மஹதி என்பவள் சமீரைப் பார்த்த பார்வையில் ஐம்பது சதவிகிதம் அலட்சியமும் ஐம்பது சதவிகிதம் கேலியும் கலந்திருந்தது.
    “சமையல்காரனுக்கு அசிஸ்டெண்டா இருக்குறவன் தானே, உனக்கு சுத்துவட்டாரத்துல நடக்குறதை யாருமே சொல்லலையா சமீர்? நானும் மனோகரும் சேர்ந்து குத்தாலத்துல ஒரு ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்... இடம் பாத்து வாடகையும் குடுத்தாச்சு... செஃப், ஸ்டாஃப்ஸ் எல்லாரும் ரெடி.... வர்ற வெள்ளிக்கிழமை க்ராண்ட் ஓப்பனிங்குக்கு சிங்கர் சரணை இன்வைட் பண்ணிருக்கோம்... உங்க ஓட்டுவீடு மெஸ் மாதிரி நினைச்சுடாத... எங்க ரெஸ்ட்ராண்ட் ரொம்ப ஹைஃபையானது... உன்னை மாதிரி ஆளுங்களை அங்க பாத்திரம் தேய்க்கக்கூட அப்பாய்ண்ட் பண்ணமாட்டோம்.... எல்லாரும் க்வாலிஃபைட் ஸ்டாப்ஸ்... கிடார் வாசிக்கிறவனும் ஃப்ளூட் வாசிக்கிறவனும் கரண்டி பிடிக்கிற மெஸ்ஸே இப்பிடி வளர்ந்து நிக்குறப்ப எங்க ரெஸ்ட்ராண்ட் வளராதா? அது வளர்ந்ததுக்கு அப்புறம் நான் என்ன கிழிச்சேன்னு உனக்குத் தெரியும்”
    அவள் சமீரிடம் அதிகப்படி கர்வத்துடன் பேசியது அமைதியாய் செல்வோமென நினைத்த மாதவனைச் சீண்டிவிட்டது.
    “சரி! நீயும் மனோவும் கிழிச்சுட்டு வந்து பேசுங்க... இப்ப வழிய விட்டு நகரு”
    மாதவனின் உதாசீனம் மஹதியை சிலிர்த்தெழ செய்தது. ஒரு காலத்தில் மஹி மஹி என பூனைக்குட்டி போல என் காலைச் சுற்றி வந்தவனுக்கு இப்போது இவ்வளவு அலட்சியமா? இவனை விடக்கூடாது. வலிக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே epi 5
    “ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா தம்பி?”
    “இல்லைய்யா... நான் வந்து பத்து நிமிசம் தான் இருக்கும்”
    பணிவாய் பேசிய மாதவன் சமையலில் அதிகப்படியாக சேர்க்கவேண்டிய உணவு வகைகளின் பட்டியலை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
    கூடவே அட்வான்சையும் கொடுத்தவர் “இந்த வட்டாரத்துல உங்க சமையல் தான் பெஸ்டுனு சொன்னாங்க... சின்னப்பையனுக்கு என்ன தெரியும்னு யோசிச்சவனை நிச்சயதார்த்தத்துக்கு நீங்க சமைச்ச சாப்பாடு தலைகீழா மாத்திடுச்சு தம்பி... கல்யாணத்துக்கும் நீங்க தான் சமைக்கணும்னு என் பொண்டாட்டி பிடிவாதமா சொல்லிட்டா... அப்புறம், என் மருமகனோட பொண்டாட்டி சொன்னதை தப்பா நினைச்சுக்காதிங்க... அதுக்குக் கொஞ்சம் மூளைக்கோளாறு” என்று கடந்த வாரம் நடந்த சம்பவத்துக்காக மீண்டும் மன்னிப்பு வேண்டினார்.
    மூளைக்கோளாறு என்றதும் மாதவனுக்குச் சிரிப்பு பீறிட்டது. இதை மட்டும் அவள் கேட்டிருக்க வேண்டும்.
    “பரவால்லங்கய்யா... மன்னிப்புலாம் எதுக்கு? உங்களுக்கு என் அப்பாவோட வயசு இருக்கும்... பெரிய வார்த்தை பேசாதிங்க.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்” என்றான் மாதவன்.
    “உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது தம்பி... அவ என்ன உங்களை ராசிக்கெட்டவன்னு சொல்லுறது? நீங்க கைராசிக்காரர்னு ஊர்ல பேசிக்கிறாங்க... நீங்க கேட்டரிங் பண்ணுன கல்யாணத்துல யாருமே சாப்பாடு சரியில்லனு முகம் சுளிச்சதே இல்லையாம்... பத்து நல்ல மனுசங்க இருக்குற இடத்துல இந்த மாதிரி சில தேள்கொடுக்கும் இருக்கு... ஹூம்!”
    பெரியவர் சொன்ன வார்த்தை மாதவனின் மனதுக்கு இதமாக இருந்தது. சமையலில் அவனது கைமணம் தனி. அதற்காக இலஞ்சியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் அவனுக்கு நற்பெயர் இருப்பதை இப்போது தான் ஒருவர் சொல்லி கேட்கிறான் மாதவன். இதை விட வேறென்ன வேண்டும்?
    மனநிறைவோடு பெரியவரிடமிருந்து விடைபெற்றான் மாதவன்.
    இனி அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறதே! பட்டியலில் உள்ள உணவுக்குத் தேவையான மளிகை, காய்கறிகளை வாங்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும், உதவியாளர்களுக்குச் சம்பளம் எவ்வளவு, எவ்வளவு இலாபம் என திட்டமிட்டுச் செயலாற்றுவது அவனது பாணி.
    அதனால் தான் இசையுலகத்தை விட்டு சம்பந்தமற்ற சமையல் தொழிலில் இறங்கிய போதும் மாதவன் தடுமாறவில்லை.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-பூந்தென்றலாய்-வந்தவளே.373/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே எபி 4
    என்னடா சொல்லுற? அது விளைச்சல் நிலம்... அதை விக்குறது தப்பு... எங்கப்பா பாடுபட்டு உழைச்ச பூமிடா அது... உனக்குக் கல்யாணம் ஆனதும் உன் பேர்ல அதை மாத்தலாம்னு வச்சிருக்கேன் மாதவா”

    மாதவன் தந்தை அருகே அமர்ந்தான். அவரது கையைப் பற்றிக் கொண்டவன்

    “கல்யாணம்னு ஒரு சம்பவம் இனிமே என் வாழ்க்கைல நடக்கவே நடக்காதுப்பா... அண்ணன் சொன்னபடி அந்த நிலத்தை வித்து அண்ணியோட ட்ரீட்மெண்டுக்கு பணம் குடுத்துடுங்க” என்றான் நிதானமாக.

    சங்கரனுக்குக் கண்கள் கலங்கிப் போனது.

    “ஏன்டா இப்பிடிலாம் பேசுற? எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க மாதவா”

    “எனக்கு நம்பிக்கை இல்லப்பா... இன்னும் எத்தனை பேர் அந்தப் பொய்யை உண்மைனு நம்பிட்டிருக்காங்கனு உங்களுக்கோ எனக்கோ தெரியுமா? நம்ம கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணுனாலும் யாரும் நம்ப மாட்டாங்கப்பா”

    விட்டேற்றியாக மொழிந்தவனை ஆதங்கத்துடன் ஏறிட்டார் சங்கரன்.

    “நீ அந்தப் பொய்யை ஒத்துக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்டா... ஏன் அவசரப்பட்டு இந்த மாதிரி ஒத்துக்கிட்ட?”

    “உங்களுக்கே தெரியும்ல, எனக்குப் பிடிச்சவங்க என்ன கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன்னு... அப்ப எனக்கு வேற வழி தெரியலப்பா... நான் வேண்டவே வேண்டாம்னு ஒதுங்கிப் போறவங்களை இழுத்து வச்சிக்க விரும்பல... அவங்க சொன்ன பொய்யை ஒத்துக்கிட்டு விலகிப்போறதுக்கு வழி விட்டுட்டேன்”

    “ஆனா நீ யாருக்காக இதெல்லாம் செஞ்சியோ அவங்க உன்னை பத்தி யோசிக்கலயேடா... அவங்க இப்ப சந்தோசமா வாழுறாங்க... அவங்க சந்தோசத்துக்குக் காரணமான நீ இப்பிடி தனிமரமா நிக்குறியே”
    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே எபி 3
    “என்ன கொழுந்தனாரே! அடுத்த பலியாடை தயார் பண்ணிட்டீங்க போலயே” என அந்தப் பெண் எள்ளலாக வினவினாள்.
    “ராதா வா போவோம்”
    மாதவன் ராதாவின் கரத்தைப் பற்ற இருவரது கரத்தையும் பார்த்து நமட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தாள் அந்தப் பெண்.
    “இந்தப் பொண்ணை எங்கயோ பாத்திருக்கேனே”
    அவள் யோசித்தாள்.
    “பாத்திருக்கிங்கல்ல, அப்ப பொறுமையா உக்காந்து யார்னு ஞாபகப்படுத்தி பாருங்க... உங்க கூட வெட்டியா பேசி என் நேரத்தை நாசம் பண்ண எனக்கு விருப்பமில்ல”
    கடினக்குரலில் பதிலளித்தவாறு ராதாவுடன் நகர எத்தனித்தான் மாதவன்.
    அப்போது “லெட்சுமி அர்ச்சனை தட்டை மறந்துட்டு வந்துட்டம்மா” என்றபடி வேகமாக வந்தான் ஒரு ஆடவன். ஜாடையில் மாதவனை ஒத்திருந்தவன் அவனைக் கண்டதும் “மாதவா யாருடா இந்தப் பொண்ணு?” என்றபடி நின்றான்.
    “உங்க ராசிகெட்ட தம்பி கிட்ட சிக்கிருக்குற அடுத்த அப்பாவி” என்றாள் லெட்சுமி என்ற அந்தப் பெண் நக்கலாக.
    மாதவனின் பொறுமை எல்லையைக் கடக்கப் போகிறது என்பது அவனது பிடி இறுகுகையில் தெரிந்தது ராதாவிற்கு.
    இவ்வளவு தூரம் பேசியவளை அப்படியே விட்டு செல்ல மனமில்லை அவனுக்கு.
    அந்த ஆடவனையும் அவளையும் உணர்ச்சியற்ற பார்வையால் வெறித்தவன் அன்றொரு நாள் சங்கரன் கூறிய அறிவுரை நினைவுக்கு வரவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான்.
    “இந்த ராசிகெட்டவன் கூட இருந்ததால உங்க வீட்டுல எந்த நல்லதும் நடக்கலனு உன் ஒய்ப் வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவாங்களே, நான் வீட்டை விட்டு வெளிய வந்து ஒரு வருசம் ஓடிருச்சு... இந்த ஒரு வருசத்துல என்னோட கெட்ட ராசி உங்களை ஒன்னும் பண்ணிருக்காதே... அப்பவும் ஏன் நீ அப்பா ஆகலண்ணா?”
    வார்த்தைகளை மாதவன் ஏளனத்தோடு கடித்துத் துப்பவும் அந்தத் தம்பதியினரின் முகம் செத்துப் போய்விட்டது.
    “அண்ணனா?” என்று மனதிற்குள் திகைத்தாள் ராதா.
    “ஒருத்தவங்களோட குறைய குத்திக் காட்டி பேசுறது எனக்குச் சுத்தமா பிடிக்காதுண்ணா... ஆனா எதிர்ல இருக்குறவங்க என்னை வலிக்க வலிக்க அடிக்குறப்ப கையைக் கட்டிட்டு வேடிக்கை பாக்குறதுக்கு நான் ஒன்னும் காந்தி இல்லயே... நானும் சராசரி மனுசன்தான்... என் வாழ்க்கைல எனக்கு எந்த நல்லதும் நடக்காததுக்கு என் ராசி காரணம்னா உங்க வாழ்க்கைல குழந்தைனு ஒன்னு வராததுக்கு உங்க ராசி காரணமா? இத்தனை நாள் நான் மௌனமா இருந்ததுக்குக் காரணம் உன் ஒய்ப் அளவுக்கு நான் தரம் இறங்க கூடாதுனு மட்டும் தான்... ஆனா என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு... இதோட என்னை பத்தி கிண்டலா பேசுறதை நிறுத்திக்கிட்டா அவங்களுக்கு நல்லது... இன்னொரு தடவை இதே மாதிரி பொறுமையா நான் பேசமாட்டேன்... பூர்வீக சொத்து எனக்கு வேண்டாம்னு நான் இன்னும் பத்திரத்துல கையெழுத்து போட்டு குடுக்கல... உங்க சங்காத்தம் வேண்டாம்னு ஒதுங்கி இருக்குறவனை தேடி வந்து சீண்டாதிங்க”
    அவர்களிடம் உறுமிவிட்டு ராதாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான் மாதவன்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-3.5679/

    #நித்யாமாரியப்பன்
    #பூந்தென்றலாய்_வந்தவளே எபி 2
    “மாமா இல்லடி... அத்தான்னு சொல்லு... அவங்கப்பாவும் மாமா, அவனும் மாமாவா உனக்கு?”
    “அத்தான்னு சொல்லுறதுலாம் டூ ஓல்ட் ஃபேஷன்... என்னைப் பாத்தா அந்தக் காலத்து சரோஜாதேவி சாவித்திரி மாதிரி தெரியுதாம்மா உனக்கு? அத்தான்னு கூப்புடணுமாம்ல... உவ்வேக்” என்றாள் ராதா.
    அவளது ‘உவ்வேக்’கில் மாதவன் திரும்பிப் பார்க்கவும்
    “அது உங்களுக்குச் சொன்ன உவ்வேக் இல்லை மாமா... அந்த அத்தான்ங்கிற வார்த்தைக்குச் சொன்னது... நீங்க வேலைய பாருங்க” என்றாள் அவள்.
    அதற்குள் உள்ளே இருந்து “உன்னைய போய் சரோஜாதேவி சாவித்திரி கூட கம்பேர் பண்ணுவேனாடி? அவங்க மூக்கும் முழியுமா எவ்ளோ அழகா இருப்பாங்க... நான் பெத்தது பொண்ணா குரங்கானு இப்ப வரைக்கும் எனக்கே சந்தேகமா இருக்கு... வாலு ஒன்னு தான் இல்லை” என்று பதிலடி வந்தது கனகதாரணியிடமிருந்து.
    ராதா “க்ரேட் இன்சல்ட்” என்று வாய்க்குள் முணுமுணுக்க மாதவனிடமிருந்து நமட்டுச்சிரிப்பு வெளிப்பட்டது.
    உடனே அவனை முறைத்தாள் ராதா.
    “இதுக்கு மட்டும் கத்துதா இந்தப் பல்லி?” என்று மைண்ட் வாய்சில் மட்டும் கேட்டுக்கொண்டாள், எல்லாம் அவனது முறைப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தான்.
    இத்தனை களேபரங்களுக்கு இடையே ராதாவின் முதுகலைப்படிப்பிற்கான விண்ணப்பமும் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டது.
    “செலக்டான ஸ்டூடண்ட்ஸ் லிஸ்டை சைட்லயே பாத்துக்கலாம்... ஃபீசும் ஆன்லைன்லயே கட்டிட்டோம்னா காலேஜ் திறக்குறப்ப அங்க போனா போதும்”
    அவளிடம் கூறிய மாதவன் சமையலறையை நோக்கி செல்ல அவனை ராதாவும் தொடர்ந்தாள்.
    கனகதாரணி மகளுக்குக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று வினவினார் மாதவனிடம்.
    “நல்ல மார்க் இருக்கு அத்தை... அதனால சீட் கிடைக்கிறதுல பிரச்சனை இருக்காது... நீங்க யோசிக்காம யூனிஃபார்முக்குத் துணி எடுத்து தைக்க குடுத்துடுங்க” என்றான் மாதவன்.
    கனகதாரணி சந்தோசத்தில் தலையசைத்தபோது “என்னது யூனிஃபார்மா?” என ராதாவின் அதிர்ந்த குரல் கேட்டது.
    “ஆமா... ஏன் அங்க யூனிஃபார்ம் போடணும்னு உனக்குத் தெரியாதா?”
    சாதாரணமாக கேட்டுவிட்டு மெஸ்சுக்குக் கிளம்ப தயாரானான் மாதவன்.
    சீருடை அணிந்து கல்லூரிக்குச் செல்வது தனக்கு இழைக்கப்படும் அநீதி எனும் அளவுக்கு ராதா கனகதாரணியிடம் வாதிட ஆரம்பிக்க அதை கேட்டு சிரித்தபடியே தனது அறைக்குள் சென்றான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/பூந்தென்றல்-2.5668/

    #நித்யாமாரியப்பன்
    #அவள்ஒருராகமாலிகை epi 27
    சந்திரிகாவின் தோற்றத்தில் திருப்தியுற்றவன் ரிசார்ட்டிலிருந்து காரைக் கிளப்பி ஜங்டுங்சாவை நோக்கி செலுத்தினான்.
    செல்லும் வழியெங்கும் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
    “இந்த வருசம் செர்ரி ப்ளாசம் கொஞ்சம் ஏர்லியரா ஆரம்பிச்சிடுச்சு”
    “இதெல்லாம் நீங்க ரசிப்பிங்களா? ஆச்சரியமா இருக்கு”
    “ஏன் நான் ரசிக்கக்கூடாதா?”
    “இல்ல… செர்ரி ப்ளாசமை ஜப்பானியர்கள் தானே கொண்டாடுவாங்க… அதான் கேட்டேன்”
    “கொரியா முழுக்க ஜப்பானோட காலனி ஆதிக்கத்துக்குக் கீழ வந்தப்ப அவங்க கொரிய பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சு ஜப்பானோட கலாச்சாரத்தை புகுத்த ஆரம்பிச்சாங்க… அதோட ஆரம்பமா கொரியாவுல முக்கியமான அரண்மனைகள்ல செர்ரி மரங்களை வளர்த்தாங்க… ஆரம்பத்துல செர்ரி ப்ளாசமை கொரியர்கள் ‘பிட்டர் ஸ்வீட் மொமண்ட்’டா கடந்தாலும் காலப்போக்குல அதை தூய்மை அழகோட சின்னமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க… சௌத் கொரியால செர்ரி ப்ளாசம் ஃபெஸ்டிவலை அந்தந்த பிராந்தியங்கள்ல ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க… எனக்குச் செர்ரி ப்ளாசம் வந்தாலே என் அம்மாவோட ஞாபகம் வந்துடும்”
    எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவன், அதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என கறாராகப் பேசுபவன் அன்று மனம் விட்டுப் பேசுவதே சந்திரிகாவுக்கு ஆச்சரியம். அதிலும் அவனது அன்னையைப் பற்றி சொன்னதும் கொஞ்சம் மனம் இளகியது அவளுக்கு.
    “உங்க அம்மா எங்க இருக்காங்க?” மெதுவாக வினவினாள்.
    “வூசொங் யூனிவர்சிட்டில கொரியன் லாங்வேஜ் செண்டர்ல ஒர்க் பண்ணுனாங்க”
    “பண்ணுனாங்க மீன்ஸ்….”
    “ஷீ இஸ் நோ மோர் நவ்”
    சந்திரிகா அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
    “அப்பிடி பாக்காத… எனக்குப் பிடிக்கல”
    அடுத்த நொடியே அவள் தன்னைத் தவறாக எண்ணிவிடுவாளோ என விளக்கமளிக்க ஆரம்பித்தான்.
    “நான் சின்ன வயசுல இருந்து இப்பிடியே வளர்ந்துட்டேன்… யாரும் என்னை பரிதாபமா பாத்தா பிடிக்காது… சாரி”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அவள்-ஒரு-ராகமாலிகை-27.5653/

    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom