நீல மல்லிகை -1

மீ.ரா

✍️
Writer
கோவை மாநகர். பன்னாட்டு விமானநிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு தெரு. பன்னாட்டு விமானநிலையம் அருகில் என்றாலும் பரபரப்பு என்பது இல்லை. சர் சர் என்று காற்றில் பறக்கும் வாகனப் போக்குவரத்தும் தெருவில் காண இயலாது. பெரிய பெரிய வீடுகளுடன் அமைதியாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு மரமாவது நிழல் தரும் வகையில் இருந்தது.

மரங்களைத் துறந்த இலைகள் புதுநிறம் பெற்று தார்ச்சாலைகளில் விழுந்து கிடந்தது. மே மாதத்தில் சற்று வேகமாக வீசும் தென்றலினால் இலைகள் உருண்டு பிரண்டு தார்ச்சாலையிடம் சண்டை பிடித்து கொண்டிருந்தது. ஆனால் தார்ச்சாலை அசைந்து கொடுக்கவில்லை. என் அமைதியைக் குலைக்கும் வல்லமை ஆதவனுக்கு மட்டும் உள்ளதை உணர்ந்து அமைதியுடன் இருந்தது. சூரியன் மெல்ல மெல்ல தனது வெம்மையைக் கூட்டிக் கொண்டிருந்தது.

அந்நேரம் தார்ச்சாலையில் சண்டை நடத்தும் இலைகளை கலைத்துப் போட்டபடி சித்திரைக் கனி பூ என்று செல்லமாக அழைக்கப்படும் சரக்கொன்றை மரத்தின் முன் சிவப்பு நிறத்தில் குளித்த வெஸ்பா ஒன்று வந்து நின்றது. கையை உயர்த்தி கருப்புநிற கிரிஸ்டல் பதித்த அந்த வாட்ச்சில் காஜல் தீட்டிய கண்களைப் பதித்தாள் அந்த மங்கை. மணி எட்டு முப்பத்திதைந்து எனக் காட்டியது. ‘அப்படா..ஐந்து நிமிஷம்தான் லேட். யாதவி திட்டமாட்டா’ என நினைத்தபடி ஸ்கூட்டியை பூட்டி விட்டு இறங்கினாள்.

பச்சை நிற காட்டன் டாப்பும் , ஜீன்ஸ்ம் அணிந்திருந்த அவள் தன் ஸ்விங்க் பேக்கை ஒரு முறை சரி செய்தவாறே கேட்டைத் திறந்து உள்நுழைந்தாள். தன் தோழி தங்கியிருக்கும் மாடியறையை நோக்கி படிகளில் ஏறினாள்.

அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கின்றனர். கீழே ஒரு குடும்பம் தங்கியிருக்கிறது. மேலே அவள் தோழி யாதவி தங்கியிருக்கிறாள். மெட்டைமாடி அறையைச் சுற்றிலும் பல்வேறு செடிகள் பூத்துக் குலுங்கின. பூக்களின் மணம் காற்றில் மிதந்து வந்து நாசிகளைத் தீண்டியது.

இவள் வந்ததை உணர்ந்த அணில் ஒன்று குதித்து ஓடியது.

யாதவியின் அறைக்கதவை அந்தப்பெண் தட்டினாள். எந்தப் பதிலும் இல்லை.

“யாது கதவைத் திறடி.” என்று சத்தம் கொடுத்தாள். எதிர்ப்புறம் எந்த பதிலும் இல்லை.

‘ஏன் கதவைத் திறக்க மாட்டிங்கரா? வண்டி வெளில நிக்குது. ஹெட் செட் போட்டுருப்பானு நினைக்கிறேன். சரி போன் பன்னுவோம்.’ என எண்ணியவள் அழை பேசியை எடுத்து யாதவிக்கு அழைத்தாள். போன் வீட்டினுள் ஒலித்தது.

‘உள்ளதா இருக்கா அப்ப ஏன் போன் எடுக்க மாட்டிங்கற?’ என சிந்தித்தவள் கதவை மீண்டும் தட்டினாள். கதவின் வட்ட வடிவ லாக்கைப் பிடித்துத் திருகினாள். கதவு தானாக திறந்து கொண்டது.

“யாது “ கத்திக் கொண்டே உள்ளே சென்றாள். ஹாலில் அவள் கண்ட காட்சியில் அலறிக் கொண்டே போனைக் கீழே தவறவிட்டாள். கீழே மடிந்து அமர்ந்து கொண்டே “யாதவி” என்று சத்தமிட்டாள். அமைதியான தெருவில் அவள் அலறியது பக்கத்து வீடுகளுக்கும் கேட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. அங்கு இரத்த வெள்ளத்தில் அங்காங்கே திதற இறந்து கிடந்தாள் யாதவி.
 

Latest profile posts

மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இருபத்தேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

மக்களே!!!
"உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..."
பதினேழாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..☺️☺️☺️

அன்பு நெஞ்சங்களே,

எல்லாரும் எப்பிடி இருகீங்க. மனதோடு வீசும் தென்றல் பகுதி 5 இதோ உங்களுக்காக. படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஆவலா காத்திட்டு இருக்கேன்.


அன்புடன்
உமா நாதன்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
வெய்யோனின் தண்மதி அவள் அத்தியாயம் 7😎👇
ஓம் சாயிராம்.
திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.

New Episodes Thread

Top Bottom