நந்த வன மலர்களே..
நாளையுடன் என் மேல் விழுந்த மழையே! கதை முடிந்து விடும். இனி பென்டிங்கில் இருக்கும் இரு கதைகளை மட்டும் முடிப்பேன். சில காலம் எழுவதை நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கிறேன். Thank you all.
“ஆனால் உனக்கு மட்டும் எப்படி பயப்பட்டாள்?”
“எனக்கு மேடம் பயப்பட்டாங்களா? போடா.. இன்னுமடா அதை நம்பிட்டு இருக்கு இந்த உலகம்? என்னை எந்த பாயிண்டில் அட்டாக் பன்னனும் அவளுக்குத் தெரியும். செய்ய மாட்டாள் அப்படிங்கறது மட்டும் தான் உண்மை. நான் அவளோட அப்பாவைக் காட்டி பிளாக்மெயில் செஞ்ச மாதிரி அவளால் என்னோட பேரண்ட்ஸ் காட்டி பிளாக்மெயில் செய்ய முடியாதுனு நீ நினைக்கிறியா?” புருவத்தை உயர்த்தியபடி கேட்டான்.