• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேவியின் அன்பே உந்தன் சஞ்சாரமே.

selvipandiyan

Active member
Member
அன்பே உந்தன் சஞ்சாரமே.
ஆதி வெளி நாடு செல்லும்முன் தங்கை திருமணத்தை முடித்துவிட்டு அம்மாவை பார்த்துக்கொள்ள தன் திருமணத்தையும் முடித்து வெளி நாடு செல்கிறான்.பிரயு கணவனின் குடும்பத்தை கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்கிறாள்.கணவனின் பிரிவு ஒரு புறம்,மாமியாரின் மகள் பாசம்,வித்யாவின் குடும்ப வாழ்க்கையை பார்த்து ஏக்கம் இப்படி நாட்களை கடத்துகிறாள்.மகளின் வாழ்வில் இருக்கும் அக்கறை மகன் வாழ்வில் இருப்பதில்லை சில அம்மாக்களுக்கு.
அனைவரின் நடவடிக்கை,கணவனின் பிரிவு,குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் அழுத்தங்கள் சேர்ந்து பிரயுவின் உடல் நலம் சீர் கெடுகிறது.ஆதி தன் கோணத்தில் நினைத்திருக்க பிரயுவின் பார்வையில் தன் தவறு புரிகிறது.படிக்கும் நமக்கே ஆதியின் மீது எரிச்சல் வருகிறது.பிரயுவின் கேள்விகள் சுளீர்!எங்கிருந்தோ வரும் பெண் இவன் குடும்பத்தை கவனிக்கணுமாம்,இவன் தன் வேலையில் முன்னேறுவானாம்,இவன் அம்மா தன் பெண்ணை மட்டும் தாங்குவார்களாம்,என்ன ஒரு கொடுமை?!பிரயுவின் அப்பா மீதுதான் எனக்கு கடும் கோபம் வருது!என்ன ஆண்களோ?
தன் தவறு புரிந்து தவிக்கும் ஆதி!வழக்கம்போல மன்னிக்கும் மனைவி!வேறு என்ன செய்ய முடியும்?ஆண்களின் புரிதல் அவ்வளவுதான்!பெண்களின் இந்த குணங்கள் இல்லையென்றால் நம் ஊரில் குடும்ப அமைப்புகள் உடைந்து விடும்.
 

Devi Srinivasan

✍️
Writer
Thank you so much Selvi Pandiyan.. உங்க கமெண்ட்ஸ் எபிசோட் வைஸ் படிச்சு ரொம்ப ஹாப்பியா பீல் பண்னினேன். இப்போ இந்த ரிவ்யுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. எஸ். நீங்க சொன்ன ஆண்களின் புரிதல் அது தான் முக்கிய காரணம். அந்தப் புரிதல் அவங்களுக்கு வர்றதுக்குள் கொஞ்சம் காலங்கள் கடந்து விடும். அது திரும்ப வராது . கதை என்பதால் நாம் புரிதல் வருதுன்னு சொல்கிறோம். அதுவே நிஜ வாழ்க்கையில் எத்தனை தூரம் சாத்தியமாகிறது என்பது கேள்விக்குறியே. தொடர்நது படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொண்டாமைக்கு மிக்க நன்றிகள்மா :love::love:🙏🙏
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom