• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 31

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 31


"நான் மயக்கமாக இருக்கும் போது என் கிட்ட வந்திங்க தானே?" முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அவள் கேட்க சுருங்கிய கண்களுடன் ஆம் என தலை ஆட்டினான்


"என்ன பேசுனீங்க?"


"நான் நான்.. எதுவும்.. " என்று அவன் திணற,


அவன் சட்டையை பிடித்தவள், "அவ்வளவு தானே? நான் உங்களுக்கு வேணாம் தானே? இதானே நம்மோட கடைசி சந்திப்பு?" என சட்டையை பிடித்து உலுக்க,


கண்களில் கண்ணீர் வடிய அவளை பார்க்காமல் வெறிச்சோடி சுவற்றை பார்த்து நின்றான்.


"உங்களுக்கு என்னை எப்பவுமே புரிஞ்சிக்க முடியாதா? நீங்க என்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருந்தாலும் உங்களை என்னைக்குமே என்னாலே வெறுக்க முடியல! ஆனால் நீங்க? என்னை விட்டுட்டு போற அளவுக்கு வந்துட்டிங்கல்ல?"


வார்த்தைகள் சாட்டையால் அடித்தது போல இருந்தது. சட்டையை பிடித்து உலுக்கியவள் அவன் மேலேயே சாய்ந்து அழ அவனும் அவளை அணைத்து கொண்டான்.


அவள் வாய் திறந்து அழுது விட்டாள் என்னால் அது மட்டும் தான் முடியவில்லை என்பது போல அவன் கண்ணீரோடு அவளை ஆறுதலாய் அணைத்து நின்றான்.


திடீரென அவனை விட்டு விலகியவள் "இல்லை என்னால முடியாது. நானும் வருவேன்" என்று கதவை நோக்கி போக ஒரே எட்டில் அவளை தாவி பிடித்து அணைத்தான்.


"ஏண்டி என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டுறீங்க?" நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.


அவன் முகத்தில் இப்பொது தெளிவின் சாயல் இருக்க, "சாரி அம்மு! என்னால இப்பவும் தெளிவான முடிவு எடுக்க முடியலை! ஆனாலும் நீ இங்கே தான் இருக்கனும்" என்றதும் அவள் விலக முற்பட, அதை தடுத்தவன் அவளை அணைத்தே நின்றான்.


"ப்ளீஸ் புரிஞ்சிக்கோ அம்மு! அன்னைக்கு நான் பேசினது உனக்கு கேட்டுச்சா?" என்றதும் அவள் மேலும் கீழுமாக தலையை ஆட்ட,


"என் முடிவுக்கான காரணம் அப்போ உனக்கு தெரியும் தானே? " என்க,


அவள் ஏதோ சொல்ல வர அவள் உதடுகளில் விரல் வைத்தவன், "நீ என்ன சொல்ல வர்றனு புரியுது. ஆனால் என் நிலைமை அப்படி. நீ எப்பவாச்சும் என்னோட சந்தோசமா இருந்தியா? இல்லையே நான் உன்னை இருக்க விடலையே? அந்த பயம் தான். ஆனால் என்னாலயும் முடியாது அம்மு உன்னை விட்டு..." என்றவன் அவளை இறுக்கி அனைத்து கொண்டான்.


"நிஜமாவே கொஞ்சநாள் இங்கே இரு. நான் டெய்லி உன்னை பார்க்க வருவேன். என்னை நம்பு அம்மு" என்றதும் தனிமையை தேடுகிறானோ என நினைத்தவள் அதன் பின் எதுவும் பேசவில்லை.


"உன்கிட்ட எதையும் மறைக்கணும் நினைக்கல ஆனாலும் அன்னைக்கு ஹாஸ்பிடலில் பேசினது நிஜம். இன்னுமே அதை என்னால் ஒதுக்க முடியலை. உன்னோட நலன் எனக்கு ரொம்ப முக்கியம். நீ எனக்கு முக்கியம் அதுக்காக என்ன வேணா செய்ய நன்றி தயார். உனக்கு சரியாகட்டும். அதுவரை இங்கேயே இரு" என்று அவள் தெளியும் வரை விளக்கம் கொடுத்து விட்டே சென்றான்.


விக்ரம் சுரேஷுடன் பேசி ஒரு வாரம் ஆகியிருந்தது. சுரேஷ் மீதோ ஜோதி மீதோ விக்ரமிற்கு கோபம் இல்லை. ஆனால் அவன் ஏன் லாவண்யா பற்றி என்னிடம் சொல்லவில்லை என்ற வருத்தம் தான்.


லாவண்யா பற்றி சுரேஷ் சொல்வதை விட அவனே புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் சுரேஷ் எதிர்பார்த்தான். எல்லாரும் ஒன்றாகி தன்னை தனித்து விட்டுவிட்டனர் என்பது போல விக்ரமிற்கு ஒரு எண்ணம்.


ஜோதி அன்று அனைவரின் முன் பேசியது மட்டுமே. அதன்பின் யாரிடமும் பேசவில்லை. சுரேஷிடம் கூட அன்று நடந்ததை சொல்ல அவள் முயற்சிக்கவில்லை.


பலமுறை சுரேஷ் முயற்சித்தும் ஜோதி மொபைலை பிடிக்க முடியவில்லை. லாவண்யா தான் இரண்டு நாட்களுக்கு பின் சுரேஷிடம் அன்று நடந்ததை கூறினாள்.


விக்ரமின் எண்ணம் சுரேஷிற்கு நன்றாக புரிந்தது. இனி அவனே முடிவு எடுக்கட்டும் என விட்டுவிட்டான். ஆனால் ஜோதியிடம் தான் பேசாமல் இருக்க முடியவில்லை.


லாவண்யா மூலம் முயற்சித்தும் பலன் இல்லை. ரிது ஹாஸ்பிடலில் இருந்த ஒரு வாரமும் சுரேஷ் விக்ரம் இருவரும் பார்த்து கொண்டாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.


சுரேஷிற்கு விக்ரம் கோபம் பார்த்து சிரிப்பு தான் வந்தது. ஜோதியை ரிது வீட்டில் பார்த்து அவன் பேச முயற்சிக்க எதுவும் எடுபடவில்லை..


இவ ஏன் இப்படி இருக்கிறாள் என சிறு கோபம் கூட வந்தது சுரேஷிற்கு.


ஆனந்த் ரிது இருக்கும் நிலையில் இது பற்றி அவர்களிடம் பேச யாருக்கும் தோன்றவில்லை. மெதுவாக சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.


பின் அங்கே இருக்க முடியாமல் ஆனந்த்திடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் சுரேஷ்.


ஜோதி அனைவரும் இருக்கும் நேரம் அமைதியாக இருப்பதும் தனிமையில் அழுவதுமாக இருந்தாள்.


வீட்டிற்கு வந்த லாவண்யா, விக்ரம் அவன் அறையினுள் நுழைந்ததும் இவளும் சென்றாள்.


அவன் கண்டு கொள்ளாமல் வேறு உடைக்கு மாற இவள் அவன் முன் சென்று நின்றாள்.


என்ன என்பது போல் அவன் பார்க்க இவளும் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.


ஆம் லாவண்யாவிடம் கூட விக்ரம் பேசவில்லை. லாவண்யாவும் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை.


இன்று மட்டும் என்ன என்பது போல அவன் பார்க்க அந்த பார்வையை அவளும் தாங்கி நின்றாள்.


"ஜோதியை பொண்ணு பார்க்க எப்ப வரட்டும்?" என அவளே ஆரம்பித்தாள்.


"என்ன சொல்ற?"


"நான் சுரேஷ் சிஸ்டரா கேட்குறேன். என்மேல இருக்குற கோபத்துல ஜோதியை கஷ்டப்படுத்த வேண்டாம்" என அவள் பேச,


"ஏன் நான் பேசலைன்னு அவ என்ன அவன்கிட்ட பேசாமலா இருக்கிறா?" என அவனும் கேட்க, அவளின் ஆமாம் என்ற பதிலில் அசந்து தான் போனான்.


"ஜோதி சுரேஷ்கிட்ட பேசலையா?" விக்ரம் கேட்க,


"பேச மாட்டா! உங்களை மீறி அவன்கிட்ட இவ போக மாட்டா. ஆனா அவனை தவிர யாரையும் அவ கல்யாணமும் பண்ணிக்க மாட்டா" லாவண்யா சொல்லில் அப்படியே நின்றான் விக்ரம்.


'தன்னையே இந்த அளவுக்கு வில்லனாக நினைத்திருக்கிறாளா?' என்ற எண்ணத்தில் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவன் எண்ணம் புரியாதவளோ "ஜோதிக்கு சுரேஷ் அளவுக்கு இந்த வீடு முக்கியம்னு நீங்க நினைக்கிறீங்க. ஆனால் இந்த வீடு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தான் சுரேஷ் முக்கியம்னு உங்களுக்கு புரியல. ரெண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. யோசிச்சு பாருங்க. இனி உங்க விருப்பம் இல்லாமல் ஜோதி சுரேஷ்கிட்ட பேசமாட்டா" என்க விக்ரம் பேசாமலேயே நின்றான்.


"நாங்க சொல்லாதது மட்டும் தானே உங்களுக்கு கோபம்? அதை என்கிட்ட கேட்டு சண்டை போட வேண்டியது தானே? ஏன் இப்படி பேசாம என்னை வதைக்கிறிங்க? " மனதின் குமுறலையும் தாளாமல் அவள் கேட்டுவிட,


அவளை ஒரு பார்வை பார்த்தவன் "இப்போ தானே அவனுக்கு சிஸ்டரா பேசுறேனு சொன்ன?" என கேட்க,


அவள் முகத்தில் சிறிதாக பயம். தேவையில்லாமல் சுரேஷ் மேல் கோபத்தை வளர்த்து கொள்கிறானோ என்று பயம்.


அந்த கலக்கத்துடன் அவள் அவனை பார்க்க அந்த பார்வையில் மொத்தமாக விழுந்தான் விக்ரம்.


"இவ்வளவு தான் உன் தைரியமா லாவி? நான் பேசலைனா நீயும் பேச மாட்டியா? இப்பவும் அவனுக்காக மட்டும்தான் என்கிட்டே பேசணும்னு உனக்கு தோணிச்சா?" என அவன் கேட்க மறுபடியும் சுரேஷை பேசியதில் ரொம்பவும் பயந்து விட்டாள்.


"எனக்கு எப்படி லாவி உன்கூட சண்டை போட முடியும்? நீ இல்லாம நான் இருப்பேன்னு உனக்கு தோணுதா? உன்னை வருத்தக் கூடாதுனு தான் உன்கிட்ட பேசலை. நீயா பேசுவனு எதிர் பார்த்தேன். அந்த லூசு மடையனும் பேசுவானு நினச்சேன். ஆனால் நீங்க எல்லாம் ஒண்ணாகி என்னை தனியா பிரிச்சுட்டீங்க இல்ல!" என அவன் வருந்த அதிர்ந்துவிட்டாள் லாவண்யா.


சுரேஷ் மேல் இருந்த பாசத்தில் விக்ரமை கவனிக்காமல் விட்டோமே என அப்போது தான் புரிந்தது லாவண்யாவிற்கு.


"விக்ரம்!"


"போ லாவி! எனக்கு இப்ப எப்படி இருக்கு தெரியுமா? யாருமே இல்லாம அனாதையா நிக்குற மாதிரி இருக்கு"


இதை லாவண்யா எதிர்பார்க்கவில்லையே!


"சாரி சாரி விக்ரம்! நிஜமா சாரி! நான் இதை நினைக்கல. சுரேஷ் நல்லா இருக்கனும்னு அவனை பத்தியே நினச்சு.. ப்ச் வெரி சாரி மாமா ப்ளீஸ்" என்க அதன் பின் விக்ரம் நிலை கேட்கவும் வேண்டுமா?.


"உன் மேல தப்பு இல்ல லாவி. முதல்ல ரெண்டு நாள் நான் என்ன நினைச்சேனு எனக்கே தெரியல!. அப்புறம் தான் தெரிஞ்சுச்சு நீங்களும் என்கிட்ட பேசலைன்னு. ஜோதிக்கு நான் முக்கியம் இல்லாமல் போயிட்டேனோனு ஒரு தாட். சுரேஷ் கூட என்கிட்ட பேசல!. இதெல்லாம் விட நீயும் என்னை புரிஞ்சிக்கலைனா? நான் என் வாழ்க்கைல யாருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கேன்னு ஒரு எண்ணம்" என அவளை அணைத்து சொல்ல அவளும் இனங்கிக் கொண்டாள்.


'நான் ஒரு வார்த்தை பேசியிருந்தால் இவ்வளவு யோசித்திருக்க மாட்டானே' என்ற எண்ணத்தில் அவள் அவன் கண்களை பார்த்து மன்னிப்பு கேட்டு கெஞ்ச,


"நீ என்னை விட்டு விலக மட்டும் செய்யாதே லாவி. நான் தப்பு பண்ணினா என்னை நிக்க வச்சு கேள்வி கேளு. கோபமா அடி. ஆனால் இப்படி பேசாமல் தண்டனை கொடுக்காத டி" என்றதும் அவனை விட்டு தள்ளி நின்று,


"அப்போ சரி. இப்ப சொல்லுங்க. சுரேஷை எப்போ வர சொல்லலாம்?" என்றதும் சிரித்தவன் அம்மாவிடம் பேசி நல்ல நாளில் வரவழைத்து பேசலாம் என்று கூறி மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.


அன்றே விக்ரம் தன் அம்மாவிடம் பேசி அடுத்த இரண்டு நாட்களில் பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்தான்.


சுரேஷிடம் சொல்லாதே என்று லாவண்யாவிடம் சொன்னவன் அடுத்த நாள் ஆனந்தை தேடிச் சென்றான்.


ரிதுவிடம் கொஞ்சநாள் என்று சொல்லிவிட்டாலும் ஆனந்த் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை.


அன்று ரிதுவை அவள் வீட்டில் விட்டு அம்மாவையும் ட்ராப் செய்தவன் நேராக சுரேஷ் வீட்டிற்கு சென்றான்.


இப்போது அவனுக்கு தனிமை வேண்டும். அதே சமயம் துணையும் வேண்டும்.


சுரேஷ் இல்லாத நாட்களில் விக்ரமை தேடி செல்பவன் பின் விக்ரமின் திருமணத்திற்கு பின் சுரேஷ் தான் என்றானான்.


வாசலில் காரை விட்டவன் உள்ளே செல்ல அங்கே சுரேஷ் சோஃபாவில் படுத்து கண் மூடி இருந்தான். ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது.


இவனை இப்போது தொந்தரவு செய்யவா என அவன் தயங்கி நிற்க அதற்குள் யாரோ தன்னை பார்க்கும் உணர்வில் கண் விழித்தான் சுரேஷ்.


காதல் தொடரும்..
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom