• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 04

Vathsala Raghavan

✍️
Writer
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே 04

நிமிடத்திற்கு ஒரு முறை வாசலுக்கு போய்ப் போய் திரும்பிக்கொண்டிருந்தது அவன் பார்வை. சில நிமிடங்களில் அங்கே வந்து நின்றார் கோதையின் அப்பா.

“வாங்கோ” என்றார் மதுசூதனன். புன்னைகயுடன் அவர் உள்ளே நுழைய, அவருக்கு பின்னால் கொஞ்சமாக பதுங்கிய படியே வந்தாள் அவனவள்! கோதை! அவள் முகமெங்கும் பூரிப்பு.

அவனுக்கு எதிரில் இருந்த அந்த சோபாவில், தனது அப்பாவின் அருகில் அமர்ந்துக்கொண்டாள் கோதை. அவனது கண்கள் அவளை சரணடைந்திருக்க, அவன் கண்களை சந்தித்தவளிடம் பளீர் புன்னகை.

அவளது திடீர் வருகையால் அதிர்ச்சியில் விழுந்து மீண்டவாராக இருவரையும் சிறிது நேரம் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் அவன் அருகில் இருந்த அம்மா.

“என்னமா கோதை சௌக்கியமா?” கேட்டார் அவன் தந்தை. அழகாய் தலை அசைத்தாள் கோதை.

“கோகுலுக்கு வரப்போற பொண்ணு எப்படி இருக்கான்னு பார்க்கணுமாம் அவளுக்கு. அதுதான் பிடிவாதம் பிடிச்சு என் கூட கிளம்பி வந்திருக்கா” சின்ன சிரிப்புடன் சொன்னார் ஸ்ரீதரன்.

அந்த வார்த்தைகளில் ஒரு நொடி வியப்பில் விழுந்து மீண்டான் கோகுல்.

மதுசூதனன் தனது மகளை அழைத்தார். உள்ளிருந்து வந்தாள் ஸ்ருதி. அவள் வந்து விட்டாள் என்பதை கோதையின் முக பாவத்திலிருந்தே புரிந்துக்கொண்டான் அவளையே பார்த்திருந்த கோகுல். கோதையின் முகமெங்கும் அப்படி ஒரு பரவசம்.

அவன் பார்வை கோதையை விட்டு விலகாமல் இருக்க,

“கண்ணா....” லேசான காரம் கலந்த அடிக்குரலில் அம்மா அழைக்க, ஒரு நொடி திரும்பி ஸ்ருதியை பார்த்தான் கோகுல்.

பார்த்தவர்களை பார்த்த மாத்திரத்தில் வசீகரித்து விடும் விதத்தில்தான் இருந்தாள் ஸ்ருதி. ஆனால் அது எதுவுமே அவனது கருத்தில் பதியவே இல்லை. மரியாதை நிமித்தமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தான் அவளைப் பார்த்து. பின்னர் தன்னாலே திரும்பிய அவன் பார்வை மறுபடியும் கோதையிடமே தஞ்சம்.

பூரிப்பில் மிதந்தது அவளது முகம்.

‘இது எந்த வகையான சந்தோஷம்? என்னுடைய மகிழ்ச்சி தான் அவளுடைய மகிழ்ச்சி என்பதற்கான அடையாளம் தானே இந்த பூரிப்பு? என் மீது அவள் வைத்திருக்கும், அவளே உணராத அளவு கடந்த நேசத்தின் அடையாளம் தானே இந்த சிரிப்பு?’ இமைத் தட்ட மறந்திருந்தான் கோகுல்.

அம்மாவின் தொண்டை செருமல் அவனை மறுபடியும் தரை இறக்கியது. அவன் மெல்லத் திரும்ப அங்கே இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.

அவனுடைய அம்மா தேவகி, அவளிடம் என்னென்னவோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அம்மாவிற்கு பதில் சொல்லிய படியே அவனை பார்வையால் அளந்துக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.

ஸ்ருதியின் அம்மா எல்லாருக்கும் காபியை கொடுத்துவிட்டு அவளருகில் சென்று நின்றுக்கொண்டார். ஸ்ருதியை பார்த்துக்கொண்டே தேவகி காபியை பருக, காபி டம்பளரில் வாயை வைத்து உறிஞ்சி காபியை சுவைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

அம்மாவுக்கு அது சுருக்கென்று உறுத்தி இருக்க வேண்டும்.

“எங்காத்துக்கு நீ வந்தேன்னா கொஞ்சம் ஆசாரமா இருக்கணும்மா” சொல்லியே விட்டிருந்தார் அவர்.

“ஆசாரமான்னா எப்படி?” ஸ்ருதியிடமிருந்து பிறந்தது கேள்வி.

“நான் மடி, எச்சில் இதெல்லாம் கொஞ்சம் பார்ப்பேன். ஆத்திலே பெருமாளுக்கு தினமும் திருவாராதனம் பண்ணுவோம்”

“நீங்க மட்டும் தானா? இல்லை உங்காத்திலே எல்லாருமா?” குடித்து முடித்த காபி டம்பளரை கீழே வைத்தவளின் பார்வை. கோகுலை ஊடுருவியது.

காட்சி திசை மாறுவது போல் தோன்ற, சுவாரஸ்யத்துடன் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தான் கோகுல். இப்போது ஸ்ருதியின் முகத்தை நேராக பார்த்தான் அவன்,

“ஏன் மா? எங்காத்திலே எல்லாரும் தான். என் பையன் தினமும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுவான். பெருமாளுக்கு ஆராதனை பண்ணுவான். தினமும் கோவிலுக்கு போவான்” அவர் குரலில் பெருமை. ஆனால் மெல்ல மாறியது ஸ்ருதியின் முகம்.

“குடுமி ஒண்ணுதான் பாக்கியா? இல்லை அதையும் வெச்சுண்டிருக்காரா?” கேலியான புன்னகையுடன் கேட்டே விட்டிருந்தாள் ஸ்ருதி.

அவளது அம்மா அப்பாவே கொஞ்சம் திகைத்துதான் போயினர். கோதையின் முகமும் கொஞ்சம் நிறம் மாறியது. ஆனால் கோகுலின் இதழ்களில் கம்பீரமான புன்னகை ஓடியது

“எனக்கு குடுமி வெச்சுக்கணும்னு தோணித்துன்னா கட்டாயம் வெச்சுப்பேன் மிஸ் ஸ்ருதி.” என்றான் அழுத்தமான குரலில்.

சட்டென எழுந்து விட்டிருந்தாள் ஸ்ருதி.

“உங்களையெல்லாம் சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம்” கையெடுத்து வணங்கி விட்டு உள்ளே போக எத்தனித்தாள் அவள்.

“ஹேய்... ஸ்ருதி என்னதிது மரியாதை இல்லாம?” அவளது அம்மா கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டார்.

“நான் உள்ளே போறேன்மா”

“உட்காரு” அவளது அம்மா பல்லைக் கடித்துக்கொண்டு சொல்ல

“இல்லைமா எனக்கு வேண்டாம்” என்றாள் அவள்.

குரலில் கோபம் தெறிக்க “ஸ்ருதி....” என்றார் அவள் அப்பா “உட்காரு முதல்லே”

எல்லார் முன்னிலையிலும் அப்பா காட்டிய கோபத்தில், அவளது தன்மானம் பட்டென்று அடிப்பட்டது. அதற்கு பதிலடியாக எகிறியது அவள் குரல்

“எனக்குப் பிடிக்கலைபா. எனக்கு இந்த கோகுலை பிடிக்கலை”

அந்த வார்த்தையில் முதலில் அதிர்ந்து போனவள் கோதை. அவள் முகத்தில் சுரு சுறுவென பரவியது கோபம்

“எனக்கு வரப்போற மாப்பிள்ளை மாடர்னா இருக்கணும். இந்த மாதிரி சாமியார் குடும்பத்திலே போய் என்னாலே குப்பை கொட்ட முடியாது. இதுக்கு மேலே என்னாலே எக்சிபிஷன் பொம்மை மாதிரி இங்கே உட்கார முடியாது. நான் உள்ளே போறேன்” சொல்லிவிட்டு விறுவிறுவென உள்ளே போய்விட்டிருந்தாள் ஸ்ருதி.

ஸ்ருதி சொன்ன அந்த வார்த்தைகளை தாங்கிக்கொள்ளவே முடியாதவளாக முதல் ஆளாக எழுந்து விட்டிருந்தாள் கோதை. அந்த இடத்தை விட்டு விலகி வாசலில் போய் நின்று விட்டிருந்தாள் அவள். அவளே அறியாமல் அவளது ஒவ்வொரு அசைவும் அவளது காதலை கோகுலிடம் சொல்லிக்கொண்டிருந்தது.

அதன் பின்னர் ஒவ்வொருவராக எழுந்தனர். இருக்கையை விட்டு எழுந்த வாசுதேவன் மதுசூதனனை எரித்து விடும் பார்வை பார்த்தார். அந்த இடத்தில எதையும் பேசி தனது கௌரவத்தை இழக்க விரும்பாதவராக கோபத்தை அப்படியே விழுங்கிக்கொண்டு விறு விறுவென நடந்து காரில் போய் அமர்ந்தார் வாசுதேவன். அவரை பின் தொடர்ந்தார் தேவகி.

ஸ்ருதியின் அம்மாவும், அப்பாவும் தர்ம சங்கடத்தில் நின்றிருக்க, திகைப்பிலிருந்து மீளாமல் நின்றிருந்தார் ஸ்ரீதரன்.

மெதுவாக நடந்த கோகுல் கோதையின் அருகில் சென்று நின்றான். தவித்து போய் கிடந்த அவளின் கண்களில் நீரேற்றம். அவள் காதலை கண்ணெதிரில் பார்த்துவிட்ட நிறைவில் அவன் இதழோரத்தில் மென் சிரிப்பு.

“வரேன்டா. சீக்கிரமே பார்க்கலாம்.” அவளிடம் சொல்லிவிட்டு நடந்தான் கோகுல்.

டந்தவைகளை ஜீரணித்துக்கொள்ளவே முடியாத மன நிலையில் வாசுதேவன் காரை செலுத்திக்கொண்டிருக்க. பின் சீட்டில் மௌனச்சிலையாக அமர்ந்திருந்தார் தேவகி. அவருகில் அமர்ந்திருந்தான் கோகுல். கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் அவர் கன்னம் தொட்டது.

“அம்மா. இப்போ என்னத்துக்கு அழுதிண்டு இருக்கே நீ?”

“தாங்கிக்க முடியலடா. அது எப்படிடா அவ உன்னை பிடிக்கலைன்னு சொல்லலாம்?”

கலகலவென சிரித்தான் கோகுல் “பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு தானே மா சொல்லுவா”

“அதுக்காக இப்படியா? எல்லார் முன்னாடியும்” கண்கள் இன்னும் அதிகமாக நீரை சுரந்தன.

“தட் இஸ் ஹர் வே ஆஃப் ஸேயிங். அதுக்கு என்னமா பண்ண முடியும்?”

“ஆமாம். நோக்கென்ன இப்போ? சொல்லபோனா நோக்கு இப்போ ரொம்ப கொண்டாட்டமாவே இருக்கும்.” நறுக்கென சொன்னார் அவர். “அம்மாவாலே ஏத்துக்க முடியலை டா”

“என்னைப் பொறுத்த வரைக்கும் ஸ்ருதி மேலே எந்தத் தப்பும் இல்லை.” என்றான் நிதானமாக. “கொஞ்சம் யோசிச்சு பார். நீ மட்டும் உன் பிள்ளைக்கு உன் அந்தஸ்துக்கு ஏத்த பொண்ணுதான் வேணும்னு நினைப்பியாம். நீ மட்டும் மத்தவாளை பிடிக்கலைன்னு சொல்லுவியாம். அவ மட்டும் மாடர்ன்னா மாப்பிள்ளை வேணும்னு நினைக்கக் கூடாதா?. என்னை பிடிக்கலைன்னு சொல்லக்கூடாதா? ஷி ஹாஸ் காட் ஆல் தி ரைட்ஸ் டு சே நோ டு மீ இல்லையா மா?” என்றபடியே நீர் பளபளத்துக்கொண்டிருந்த அம்மாவின் கண்களை சில நொடிகள் ஊடிருவியது அவனது கத்தி முனை பார்வை. பின்னர் விருட்டென சாலையின் பக்கம் திரும்பிக்கொண்டன அவன் விழிகள்.

அதற்கு மேல் அம்மா எதுவுமே பேசவில்லை. காரில் கனத்த மௌனம் நிலவியது.

ன்றிரவு மிக நிம்மதியாய் உறங்கினான் கோகுல். மறுநாள் காலை மணி ஒன்பதை கடந்திருந்தது.

காலை உணவை முடித்து விட்டு எழுந்தவனிடம் மெல்லக்கேட்டார் அம்மா “கண்ணா. மனசே சரியில்லை டா. ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வரலாமாடா?.”

சில நிமிடங்கள் கழித்து அந்த கண்ணனை தரிசித்து விட்டு கோவிலின் பிராகாரத்தை வலம் வந்துக்கொண்டிருந்தனர் அம்மாவும் மகனும்.

அதே நேரத்தில் 'மாரி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் ...' திருப்பாவையை உச்சரித்த படியே சந்நிதியை விட்டு வெளியே வந்தாள் கோதை. அடுத்த நொடி மலர்ந்தது அவள் முகம்

'கோகுல் தானே அது?’ சற்று தூரத்தில் இருந்தவளின் கண்ணில் அவனது அம்மா தென்படவில்லை. உள்ளமெங்கும் பரவிய உற்சாகத்துடன் அவனை நோக்கி ஓடினாள் அவள்.

மூச்சிரைக்க அவன் முன்னால் சென்று நின்ற பின்னர் தான் அவள் பார்வையில் பட்டார் தேவகி. மெல்ல இரண்டடி பின் வாங்கினாள் கோதை.

கோகுலிடம் வியப்பில் கலந்த புன்னகை. தேவகியிடமும் புன்சிரிப்பு மலர்ந்தது

“எதுக்குமா இப்படி ஓடி வரே?” அவர் கை தன்னாலே நீண்டு கோதையின் கன்னம் தொட்டு வருடியது.

“இ..இல்லை சு,, சும்மா உங்களைப் பார்த்தேன் அதான்”

“அப்படியா?” என்றார் அம்மா. அவர் கை கோதையின் தோள் அணைத்துக்கொண்டு நடக்க, மூவரும் ஒன்றாக நடக்கத் துவங்கினர்.

“ஏம்மா கோதை” என்றார் அம்மா. “உன்னை ஒண்ணு கேட்பேன் சட்டுன்னு மனசிலே இருக்கறதை மறைக்காம சொல்லுவியா?”

ஒரு நொடி அவரை பார்த்தவள் வேகமாக தலை அசைத்தாள் “ம்.'

“நோக்கு கோகுலை பிடிக்குமா?”

கண்கள் நிறைய தவிப்புடன் கோகுல் அவள் பக்கம் திரும்ப,

“ஏ... ஏன்... அப்படி கேட்கறேள்?” என்றாள் கோதை

“இல்லைடா” என்றார் தேவகி, “நேத்து. அந்தப் பொண்ணு கோகுலை பிடிக்கலைன்னு சொல்லிட்டா பார்த்தியோன்னோ, அதான் நோக்கு பிடிக்குமான்னு”

முடிக்கவில்லை அவர், அதற்குள் படபடவென வெளிவந்தன அவள் வார்த்தைகள்.

“ஆமாம் பிடிக்கலையாமாம் பிடிக்கலை அது எப்படி சொல்லுவா அவ. நம்ம கோகுல் மாதிரி மாப்பிள்ளை யாருக்கு கிடைக்கும்? திமிரு. திமிரு அவளுக்கு. பாவம் மாமி நம்ம கோகுல் அவரைப் போய். பிடிக்கலைன்னு.... அப்படியே அவளை அங்கேயே அடிச்சு போட்டுடலாம்னு தோணித்து. பெரியவா நீங்க எல்லாம் இருந்தேள் அதனாலே நான் பேசாம எழுந்து போயிட்டேன். என்.. என்னாலே என்னாலே அதை தாங்கிக்கவே முடியலை. நேக்கு அப்படியே....” அவள் குரல் கொஞ்சம் கரைய கண்களில் நீர் கட்டிக்கொண்டது.

அவளது வார்த்தைகளும், தவிப்பும் கண்ணீரும் அம்மாவை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

“நான் நேற்று துடித்த துடிப்பிற்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம்? இவளை விட அன்பான பெண்ணை என்னால் கோகுலுக்கு தந்து விட முடியுமா என்ன?”

சில நொடிகள் பேச்சிழந்து நின்றிருந்தார் அவர்.

கண்களில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் நிமிர, “சரி நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே.” என்றார் அவர். “நோக்கு கோகுலை பிடிக்குமா?'

அரை நொடியில் பதில் வந்தது பட்டென “நேக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.”

“அப்படின்னா நீயே அவனை கல்யாணம் பண்ணிக்கோயேன்.” என்றார் புன்னகையுடன்.
 

Rajam

Well-known member
Member
கோதையின் கள்ளமில்லா அன்பு
தேவகியையே நெகிழ வைத்து விட்டதே.
நிராகரிப்பின் வலி உணர்ந்த பின்னால்
கோதையின் குணம் புரிகிறது.
இதை என்றோ உணர்ந்தவன் கோகுல்.
பாசுரம் முழுசா போட்டுருக்கலாம்.
கோதையின் கோகுல்.
 

kothaisuresh

Well-known member
Member
கோதையோட அருமையான குணம்
தேவகிக்கு இப்போதான் தெரியுது.இது கோகுலுக்கு எப்போதோ தெரிஞ்சிடுத்தே
 

பிரிய நிலா

Well-known member
Member
அதானே வேண்டும்... நிராகரித்த பின்பு தான் அதன் வலியை உணர முடிகிறது..

கோதையை தேவகி ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி சிஸ்..
 

பிரிய நிலா

Well-known member
Member
ஒரு வேண்டுகோள் சிஸ்.. தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

இங்கு பதிவிடும் போது எழுத்தின் அளவு சிறிதாக பதிவிட்டால் படிக்க கொஞ்சம் எளிதாக இருக்கும்..

எழுத்தின் அளவு பெரிதாக இருப்பதால் நீண்டு ஒரு மாதிரி அசளகரியமாக இருக்கிறது..

தவறாக ஏதும் சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்..
 

Nuvali

Member
Member
ஆத்மார்த்தமான பரிசுத்தமான அன்பு :love::love::love:
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom