பயணங்கள் - 7

Viswadevi

✍️
Writer
முன் கதை சுருக்கம் - கணவனை இழந்த கீதாஞ்சலி, வீட்டிலிருக்க... அவளது அண்ணியின் வரவால் வேலைக்குச் செல்கிறாள். அங்கு தன்னுடைய முன்னாள் காதலனும், தனது தோழியின் அண்ணனுமான நிரஞ்சனை சந்திக்கிறாள். தன்னை ஏமாற்றியதாக கீதாவின் மேல் கோபத்தில் இருக்கிறார்.

கீதாவோ,அங்கு தன் தோழி ஓடிப் போய் விட்டதாக தெரியவர, அவள் அப்படிச் செய்து இருக்க மாட்டாள் என்று நிரஞ்சனுக்கு புரிய வைக்க முயலுகிறாள். நிரஞ்சன் புரிந்துக் கொண்டாரா? அவனது தங்கைக்கு என்ன ஆனது. என்று தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள் தோழிகளே.
IMG-20210531-WA0058.jpg


பயணங்கள் - 7

கீதாவும், மதுவும் அமைதியாக இருக்க, அவர்கள் ஆர்டர் செய்த காஃபியும் வந்து விட்டது.

இருவரும் குடித்து முடித்து விட்டு கிளம்ப, "அக்கா வீட்டுக்குத் தானே." என்று மது வினவ.

" வீட்டிற்கு போனா அண்ணி என்னாச்சு என்று கேட்பாங்க‌. அதுவும் இரண்டு பேரும் சேர்ந்து வந்ததா ஏதாவது சொல்லுவாங்களே மது." என டயர்டாகக் கூறினாள் கீதா.

" அக்கா… ஏதாவது ஒரு படத்துக்கு போயிட்டு வீட்டுக்குப் போகலாம். டைம் கரெக்டா இருக்கும்."

" ப்ச் மது. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை டா. எனக்கு ரம்யா, வானதிப் பத்தி தெரிஞ்சுக்காம என்னால இயல்பா இருக்க முடியாது."

" அப்போ ஆஃபிஸ்க்கே போறீயா."

" ம்கூம். நான் தான் லீவ் போட்டுட்டேனே."

"அப்புறம் என்ன கா. நடு ரோட்டுலையா இருக்க முடியும். கோவிலும் இந்த நேரம் தொறந்து இருக்காது. ஜஸ்ட் த்ரீ ஹவர்ஸ் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வீட்டுக்கு போயிடலாம்."

மது சொல்வதும், சரியாக இருக்க.. பிரபல மாலிற்கு சென்று காத்திருந்து படம் பார்த்து விட்டு வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்தவர்களை, நந்தினி ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீதா இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. மது தான் சுதாரித்து பிறகு கலகலவென பேசி அந்த சூழ்நிலையை மாற்றினாள்.

இரவு உறங்கப் போகும் போது, கீதாவின் பின்னயே சென்றவள், " கவலைப்படாதே கா. சீக்கிரம் இந்தப் பிரச்சினைக்கு சொல்யூஸன் கிடைக்கும்." என்று ஆறுதல் அளித்து விட்டு உறங்கச் சென்றாள்.

காலையில் அதிசயத்திலும், அதிசயமாக அக்காவிற்காக சீக்கிரம் எழுந்து அவளது அறைக்குச் சென்றாள் மது.
"அக்கா" என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைய...

கீதாவோ, இவ்வளவு சீக்கிரம் தங்கை எழுந்ததும் மட்டும் அல்லாமல், குளித்து தயாராகி வேறு வந்திருக்கவும், பயந்து போய், " ஏன் டா? என்ன பிரச்சனை? என்ன ஆச்சு?" என்று படுத்து இருந்தவள் பதறி எழுந்தாள்.

" ஒன்னு இல்ல கா… நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற…"

"பின்ன நீ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பி வரவும் நான் பயந்துட்டேன்." என்று கூறிய கீதா தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

" அது ஒன்னும் இல்ல கா… உன் ஃப்ரெண்ட்ஸப் பத்தி விசாரிப்போம் என்று வந்தேன். ஆமா,கா நீ ஏன் எழுந்திருக்காமல் இருக்கிற… ஆஃபிஸ்க்கு கிளம்பணும் தான." என வினவ..

" இதோ கிளம்பணும் மது… நைட் எல்லாம் தூக்கமே வரலை. இப்போ ஒரே டயர்டா இருக்கு."

" முடியலைன்னா இன்னைக்கும் லீவு போடுக்கா." என மதுக் கூற.

கீதாவோ அவளை முறைத்துக் கொண்டே, " வேலைக்கு சேர்ந்தே இரண்டு நாள் தான் ஆகுது. இதுல நேத்தும் லீவ் போட்டுட்டேன். இதுல இன்னைக்கும் லீவ் கேட்டா? எந்த ஆஃபிஸலையும் லீவு தர மாட்டாங்க… நீ வீட்டுலே இரு மா..
ஆஃபிஸ்க்கு எல்லாம் வர வேண்டாம் என்று துரத்தி தான் விடுவாங்க. அது தான் நடக்கணும்னு நீ நினைக்கிறீயா என்ன?" என்றாள்.

" ஐயோ, கா அப்படியெல்லாம் இல்லை. சும்மா உன்னை வம்பு இழுத்தேன். நீ போய் ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா… நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று கூறி விட்டு சிட்டாக பறந்தாள் மது.
*****************
அருணுக்கு காஃபி கொடுத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்த நந்தினி… கிச்சனுக்குள் இருந்த மதுவைப் பார்த்து ஆச்சிரியப்பட்டு மதுவிடம் " என்ன சின்னக்குட்டி இன்னைக்கு மழை வரப் போகுது, நீ இன்னைக்கு சீக்கிரம் எந்திரிச்சுட்ட.. அதுவும் இல்லாமல் குளிச்சு ரெடியாகி, கிச்சனுக்குள் எல்லாம் வந்து நிக்கிற." என கிண்டல் பண்ண.

" அண்ணி… அக்காவுக்கு தலைவலிக்குது சொன்னா… அதான் காஃபி போட்டு எடுத்துட்டு போகலாம் என்று வந்தேன்" என்றாள்.

" நீ போட்ட காஃபியை குடித்தால், தலைவலி இன்னும் அதிகம் தான் ஆகும்.சரி நகரு நான் போட்டு தரேன். " என்றுக் கூறி இரு கோப்பைகளில் காஃபியை ஊற்றிக் கொடுத்தாள் நந்தினி.

அண்ணியை முறைக்க முடியாமல், கோபத்துடன் காஃபியை எடுத்துக் கொண்டு கீதாவின் ரூமிற்கு சென்றாள்.

முகத்தை துடைத்துக் கொண்டிருந்த கீதா, மதுவின் முகத்தை பார்த்து, " ஏன் டா கோவமா இருக்கிற." என கேட்டுக் கொண்டே மது நீட்டிய காஃபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள் …

மது கிச்சனில் நடந்ததைக் கூற..
கீதாவிற்கோ, சிரித்து காஃபி புரையேறியது.

தங்கை முறைக்க, " சரி விடு மது. அண்ணி உண்மையை தான சொன்னாங்க." என்றுக் கூற…

"அக்கா." என மது சிணுங்கினாள்.

" சும்மா சொன்னேன் டா… ஆமாம் என்னுடன் படிச்சவங்களோட டீடெயில்ஸ் கிடைச்சிருக்குமா மது." என வினவ…

"ஐயோ! அக்கா, நீ இன்னும் பேஸ்புக் பார்க்கவில்லையா ? இன்னேரம் நிறைய புது ஃப்ரெண்ட்ஸ் ரெக்வஸ்ட் வந்திருக்கும் கா…

நீ ஏன் கா இவ்வளவு லேட் பிக்கப்பா இருக்கிற… கொஞ்சம் அப்டேட்டா இருக்கா. சரி உன் ஃபோனை தா கா, நான் பார்க்கிறேன்." என்றுக் கூற...

கீதா அவளுடைய ஃபோனை எடுத்துக் கொடுக்க… மது ஃபேஸ்புக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

கிட்டத்தட்ட கீதாவின் கல்லூரி, பள்ளித் தோழிகள் அனைவரும் நட்பு அழைப்பு விடுத்து இருக்க... அது எல்லாவற்றிற்கும் அக்செப்ட் பண்ணிக் கொண்டிருந்தாள் மது.

பிறகு இன்பாக்ஸில் ரம்யா, மற்றும் வானதியை பற்றி விசாரித்தாள். தெரிந்தவர்கள் விவரம் கூறுமாறு கேட்டுக் கொண்டாள்.

" சரிக்கா… நீங்க போய் ஆஃபீஸ்க்கு கிளம்புங்க... ஆஃபிஸ் போறதுக்குள்ள ரம்யா அக்காவை பத்தி ஏதாவது விவரம் வந்திருக்கும்." என்று நம்பிக்கையோடு கூறினாள் மது.

கீதாவோ, " அதுக்குள்ள தெரிஞ்சிடுமா மது ." என அப்பாவியாக வினவ...

" அக்கா... உலகமே நல்ல கம்யூனிகேஷன்ல இருக்கு கா. சீக்கிரம் நம்ம கண்டுபிடிச்சுடலாம். கவலைப்படாதே." என்றுக் கூறி விட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள்.

******************

குளித்து தயாராகி வந்த கீதா, வெளியே செல்லும் முன்பு ஃபோனை எடுத்துப் பார்க்க… அவளுக்கு தேவையான தகவல் வந்திருந்தது.

கண்களில் இருந்து நீர் வடிய முகத்தில் சொல்ல முடியாத சோகத்துடன், " மது" என அழைத்துக் கொண்டே அவளது அறைக்கு ஓடினாள்.

" என்னாச்சு ஏன் கா ? இப்படி ஓடி வர்ற." என மது வினவ …

" இங்கப் பாரு…" என்று அழுதுக் கொண்டே ஃபோனை நீட்ட…

" சரி கா. நீ முதல்ல இப்படி உட்காரு." என அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு, போனை எடுத்துப் பார்த்தாள். அதில் அவர்களுக்குத் தேவையான தகவல் வந்திருந்தது. ரம்யாவை பற்றிய விவரம் தெரியவில்லை. ஆனால் வானதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்வதை ஒரு தோழி பார்த்து இருக்கிறாள். வானதியிடம் அந்த தோழி பேச முயன்றிருக்கிறாள், ஆனால் அவளோ ஒதுங்கி போனதாக தகவல் கிடைத்தது.இதை பார்த்து விட்டு தான் கீதா கண்ணீர் விட்டு அழுதுக் கொண்டிருந்தாள்.

" அக்கா முதலில் அழுவதை நிறுத்து கா. இப்போ நாம அடுத்து என்ன செய்வதென்று பார்க்கணும். எனக்கு என்னமோ நிரஞ்சனத்தானை…" என்றுக் கூறி விட்டு, அக்காவின் அடிபட்ட பார்வையில், "இல்லை கா... உங்க பாஸிடம் சொல்லி விசாரிப்போம். நானும் வரேன் கா. ஆஃபிஸ்க்கு ஃபோன் போட்டு லீவு சொல்லிடுறேன். நீ போக்கா இதோ ஐந்து நிமிடத்தில் வந்துடுறேன்." என்றவள், கீதா வெளியே சென்றவுடன் கண்கள் மூடி அமர்ந்தவளோ, பழைய நினைவுகளை அசை போட்டாள். ' நிரஞ்சனத்தான் நம்ம மேல் எவ்வளவு பிரியமாக இருந்தார். மது மா எனக் கூறிக் கொண்டே இருப்பார். நாமளும் அத்தான் என்று அவனையே சுத்தி வருவோம். இன்றோ அப்படி கூப்பிடும் உரிமை இல்லை.' என நினைத்தவள், பெருமூச்சு விட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

சாப்பிடும் வரை இருவரும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
நந்தினி மட்டும் இருவரையும் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே, " அருண், அண்ணியோட வண்டி எப்போ வரும்." என்று வினவ.

சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரும் நிமிர்ந்து நந்தினியைப் பார்த்தனர்.

அருணோ," இந்த வாரத்தில் வந்துடும் நந்து." என்றவன் கிளம்பி விட்டான்.

" வரோம் அண்ணி…" என்ற இருவரும் கிளம்பினர்.

வண்டி ஓட்டிக் கொண்டிருந்த மது, " அக்கா… பார்த்தீயா அண்ணியை. அவங்க நேத்திலிருந்து நம்மளை சந்தேகமாகவே பார்த்ததுட்டு இருக்காங்க. நாம இரண்டு பேரும் ஒண்ணா போனா இவங்களுக்கு என்ன வந்துச்சு. அண்ணா கிட்ட நைஸா போட்டுக் குடுக்குறாங்க."

" விடு மது… எதுனாலும் பார்த்துக்கலாம்."

"அதுவும் சரி தான்." என்று மது, வேறு விஷயம் பேசிக் கொண்டே வர, கீதாவின் ஆஃபிஸும் வந்தது…
வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

பியூன் "கீதாமா" நீங்க வரவும் எம்.டி சார் உடனே வரச் சொன்னாங்க.

" ஓ…" என்ற கீதா… மதுவைப் பார்க்க, அவளோ கண்களாலே தைரியப்படுத்த..

"சரிங்க மாரிண்ணா … இவ என் தங்கை மது… சாரைப் பார்க்க வந்திருக்கா… நாங்க பார்த்து விட்டு வந்துடுறோம்." என்றவள் மதுவை அழைத்துக் கொண்டு நிரஞ்சன் அறையை நோக்கிச் சென்றாள்.

இங்கே பியூனோ, " என்ன நடக்குது ஒன்னுமே புரியல." என புலம்பிக் கொண்டே அவன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

மதுவும், கீதாவும் நிரஞ்சனின் அறைக் கதவை தட்ட... ஒன்றும் பதில் இல்லாமல் போகவும், தயக்கத்துடனே இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கு அசோக்கும் நிரஞ்சனும் ஜன்னல் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அசோக்கிடம் நிரஞ்சன், " நீ அப்பவே சொன்னடா. கீதா மேல எந்த தப்பும் இருக்காது என்று … நான் தான் புரிந்து கொள்ளவில்லை. அப்பா, அம்மா தான் ஏதோ செய்திருக்க வேண்டும் … ஆனால் என்ன என்று நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் கீதாவிற்கு, வேறு வாழ்க்கை அமைந்து விட்டது. என்னோடான அவளுடைய பயணம் முடிந்துவிட்டது. முடிந்தக் கதை முடிந்ததாகவே இருக்கட்டும்.

ரம்யாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் டா. அதனால் தான் அண்ணா மூலம் மூவ் பண்ணியிருக்கேன். நீ சொல்லும் போதெல்லாம் உன்னை அவமானப் படுத்தி அனுப்பிட்டேன். சாரி அசோக்."என…

" டேய் நமக்குள்ள என்னடா சாரி எல்லாம், எனக்கு கீதா மேல நம்பிக்கை இருந்துச்சு. நான் அவளை தங்கையா நினைச்சேன் … உனக்கு அவ காதலி‌. அதான் உன்னால எதையும் யோசிக்க முடியாமல் போயிடுச்சு. சரி விடு டா. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்." என்றவன் திரும்பிப் பார்க்க… மதுவும், கீதாவும் நின்றிருந்தனர்.

மது, கீதாவைப் பற்றி சொல்லப் போக, கீதாவோ மதுவை கண்களால் எதுவும் கூறக் கூடாது எனத் தடுத்து விட்டாள்.

நிரஞ்சனோ அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றான்.

பயணங்கள் தொடரும்…..
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom