• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

தேடல் - 9

Nancy mary

✍️
Writer
❤அத்தியாயம் - 9❤

நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல் சத்யமூர்த்தியின் கார் நுழைவதற்கும் கலவரம் அடங்கி கூட்டம் கலைந்து செல்வதற்கும் சரியாக இருந்தது.

இதற்கு நடுவில் இவ்வழக்கின் அமைச்சரின் மகன் சம்மந்தபட்டிருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் மீடியாக்களும் குழுமியிருக்க அவர்களுக்கும் இக்காட்சி பரபரப்பு செய்தியாய் அமைந்தது.

அப்பொழுது சத்யமூர்த்தியின் காரினை பார்த்த அவரின் ஜீனியர் செல்வாவோ காரினை நோக்கி வர, காரிலிருந்து இறங்கிய சத்யமூர்த்தியோ அவனிடம் சில தகவல்களை சேகரித்தபடியே தன் அலுவலக அறையை நோக்கி விரைந்தார்.

"செல்வா, வினோத் அனிதாவை காதலிச்சான்னு நிருபிக்க ஒரே சாட்சி அவனோட பிரண்ட் தீலிப் தானே அவன் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரானா இல்ல ஏதாவது பிராப்ளம் இருக்கா" என கேட்க அதற்கு செல்வாவோ,

"சார், தீலிப் சாட்சி சொல்ல தயாரா இருந்தாலும் அவனோட பேரண்ஸ் பயப்படுறாங்க சார்; வினோத் அரசியல்வாதியோட பையனா இருக்கிறதால இந்த கேஸுல தலையிட்டா நாலபின்ன அவங்க பையனுக்கு பிரச்சனையாகுமோனு யோசிக்குறாங்க; நானும் ஏதேதோ சொல்லி கண்வின்ஸ் பண்ணிருக்கேன் ஒருவேளை நீ வரதா இருந்தா எனக்கு இன்பார்ம் பண்ணுடானு தீலிப்கிட்டயும் சொல்லிட்டு தான் வந்தேன்; ஆனா இன்னமும் அவன்கிட்டயிருந்து போன் வரல சார் எனக்கென்னமோ அவன் வர மாட்டானு தான் தோணுது சார்" என கூற,

அதனை கேட்டபடி தன் அலுவலக அறைக்குள் நுழைந்தவரோ ஒரு ஆழ்ந்த பெருமூச்சைவிட்டு கொண்டு "சரி, அவனோட சாட்சி இல்லாமலேயே ஏதாவது செய்ய முடியுதானு பார்க்கலாம்" என கூறி கருப்பு கோர்ட் மாட்டிகொண்டு அலுவலக அறையிலிருக்கும் தன் தந்தையின் புகைபடத்தின் முன் வேண்டுதலை வைத்துவிட்டு தேவையான பைல்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அங்கு நீதிமன்றத்திற்குள் வேதாச்சலம் தன் பேச்சு திறனால் நாகலிங்கத்துக்கு நம்பிக்கையளித்து கொண்டிருந்தார்

"நீங்க கவலையேபடாதீங்க சார், வேதத்தின்படி நடக்குறவன் சார் இந்த வேதாச்சலம், நான் ஒரு கேஸை எடுத்தா அதுல யாருக்காக வாதாடுறேனோ அவங்க பக்கம் தான் நீதி இருக்கும்னு இங்க இருக்கிற எல்லாருக்குமே தெரியும்; இதுவே போதும் சார், உங்களோட பையன் கேஸுல இருந்து வெளி வந்துட்டான்னு நினைச்சிக்கோங்க" என கூறி முடிக்க அவரின் பேச்சினில் மதிமயங்கிய நாகலிங்கமோ வினோத்தை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு மகனை பார்த்து கொண்டே அங்கிருக்கும் பென்ச்சில் சென்றமர்ந்தார்.

அதேசமயத்தில் அங்கு வந்த சத்யமூர்த்தியோ அனிதாவின் பெற்றோரினை பார்த்து நம்பிக்கையளிக்கும் விதமாக சிறு தலையசைப்போடு அவரின் இருக்கைக்கு சென்றமர்ந்தார்.

அப்பொழுது நீதிபதி வந்து கேஸுனை துவங்கி வைக்க வழக்கு ஆரம்பமானது

வினோத்..!!!
வினோத்..!!!
வினோத்..!!!

என தபாலி முன்று முறை அழைக்க வினோத் கைவிலங்கு அவிழ்க்கபட்ட நிலையில் குற்றவாளி கூண்டிற்குள் நிற்க வைக்கபட சத்யமூர்த்தி தன் வாதத்தை துவங்கினார்.

"யுவர் ஆனர், குற்றவாளி கூண்டிலிருக்கும் இச்சிறுவன் தன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அக்காதலுக்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இம்மாணவன் அச்சிறுமியை தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாக்காரம் செய்து கொண்றதாகவும் கூறப்படுகிறது" என பேசிகொண்டிருக்க,

அப்பொழுது எழுந்த வேதாச்சலமோ, "அப்ஜக்ஸன் மை லார்ட், என் கட்சிகாரர் அப்பெண்ணை காதலிக்கவில்லை இவரும் அப்பெண்ணும் நண்பர்களாகவே பழகிகொண்டிருந்தனர்; அப்படிபட்ட நட்பிற்கு காதல் என்ற சாயம் பூசி அந்நட்பினையே கலங்கபடுத்தும் செயல் தவறானது" என கூற

அதனை கேட்ட சத்யமூர்த்தியோ "நீதிபதி அவர்களே எதிர்கட்சி வக்கீலுக்கு யாரோ தவறுதலான தகவல்களை தந்திருக்காங்க போல, அவருக்கே சில விஷயத்தில் விளக்கம் தேவைபடுது அப்படிபட்ட விளக்கத்தினை விளக்க வினோத்தோடு சேர்ந்து குற்றம் புரிந்த இரண்டு நண்பர்களை விசாரிக்க அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்" என கூற வினோத்தோடு சேர்ந்து சரணடைந்த நண்பர்கள் கூண்டில் ஏற்றபட அவர்களை பார்த்து கோபமாக முறைத்தான் வினோத்.

வினோத்தின் நண்பர்களிடம் தன் விசாரணையை துவங்கிய சத்யமூர்த்தியோ, "இந்த குற்றத்துல நீங்க எப்படி சம்மந்தபட்டீங்க; என்ன நடந்துச்சுனு எல்லாத்தையும் விளக்கமா சொல்ல முடியுமா" என கேட்க அதற்கு அம்மாணவர்களின் ஒருவனோ,

"சார், வினோத்தும் நாங்களும் பத்தாவது வரை ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்; ஸ்கூல்ல நாங்க செய்யாத தப்பே இல்லனு சொல்லலாம் தம் அடிக்கிறது, சரக்கு அடிக்கிறது, கிளாஸை கட் அடிச்சி சினிமாவுக்கு போறதுனு நிறைய தப்பு பண்ணிருக்கோம் ஆனா வினோத் பெரிய இடத்து பையனால எங்களை யாராலயும் பெருசா கண்டிக்க முடியல; அதுனால ரொம்பவே கெத்தா சுத்திகிட்டு இருந்தோம் சார்"

"அதேமாதிரிதான் ஒருநாள் நாங்க குடிச்சிட்டு எங்க ஸ்கூல் பொண்ணுகிட்ட வம்பிழுக்க; அது பெரிய பிரச்சனையாகி வினோத்தை வேற ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க சார்; அதுவரை எங்களோட பிரண்ட்டா பழகுனவன் அதுக்கு பிறகு எங்களோட பிரண்ட்ஷிப்பையே விட்டுட்டு நல்லவனா மாறிட்டான் சார்"

"இவனோட பிரண்ட்ஷிப் போனதால ஸ்கூல்ல எங்களுக்கு இருந்த கெத்தும் போச்சு சார்; அதுனால அதே பழைய கெத்து கிடைக்கணும்னு நாங்க நிறைய தப்பு பண்ணோம் சார்" என கூறிகொண்டே போக அதனை கேட்ட சத்யமூர்த்தியோ சிறுவர்களின் சாமர்த்திய நகர்வை கேட்டு கேலியாய் புன்னகைத்து கொள்ள வினோத் குழப்பமாக முகபாவத்துடன் நண்பர்களை நோக்கினான்.

அப்பொழுது மேலும் தன் பேச்சினை தொடர்ந்த அம்மாணவனோ "இப்படியே ஒரு வருஷம் போச்சு சார்; அப்புறமா ஒருநாள் நாங்க ரோட்ல போற ஒருத்தவங்களோட செயினை திருடிட்டு, அதை சேட்டு கடையில வைக்கலாம்னு போனப்போ வழியிலே வினோத் ஒரு பொண்ணு கூட ஒண்ணா வரதை பார்த்து யாருடானு விசாரிச்சதுக்கு இவ பேரு அனிதா என்னோட பிரண்ட்னு வினோத் சொன்னான் சார்"

"அப்போ எங்களோட திருட்டு வேலையை பார்த்து வினோத் அனிதாவை அங்கயிருந்து அனுப்பி வைச்சிட்டு எங்களுக்கு அட்வைஸ் குடுக்க அப்போ, நாங்க பண்ண திருட்டுதனத்துக்காக மக்கள் எங்களை துரத்திட்டு வர; அதை பார்த்தோனே நாங்க எல்லாருமே தெறிச்சு ஓடிட்டோம் இதான் நடந்தது சார்; இதைவைச்சு போலிஸ் நாங்க அனிதாவை ரேப் பண்ணி கொண்ணுட்டோம்னு கேஸை மாத்திட்டாங்க சார்" என கூறி முடிக்க அதனை கேட்ட வினோத்தோ நண்பர்கள் தனக்கு சாதகமாய் பேசுவதை கேட்டு ஆச்சர்யபட்டவனோ இனி ஒண்ணும் செய்ய முடியாதென கேலியாய் புன்னகைத்து கொண்டான்.

ஆனால் இவர்களின் பேச்சினை கேட்ட சத்யமூர்த்தியோ, "பசங்களா கேஸ்ல இருந்து தப்பிக்கணும்னு இப்படி லூசு மாதிரி கதை விடாதீங்க சரியா; நீங்க சொல்ற கதையெல்லாம் நல்லா லாஜிக்கா தான் சொல்லுறீங்க ஆனா கதையையும் தாண்டி கேஸை போலிஸும் கோர்ட்டும் எப்படி கையாளும்னு தெரியாம சொல்லுறீங்களே ப்பா" என சிரித்தவரோ நீதிபதியிடம் சென்று,

"யுவரு ஆனர், வினோத் தான் குற்றவாளினு நிருபிக்கும் வகையில சில சிசிடிவி ஆதாரங்கள் இதுல இருக்கு அனிதா இறப்பு எப்படி நிகழ்ந்ததுனு தெளிவா சொல்றதுக்கு தேவையான போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை ரெடி பண்ற டாக்டரால இப்போதைக்கு அதை ரெடி பண்ண முடியல அதுனால அதை அடுத்த ஹியரிங்கு சப்மிட் பண்ணிடுறோம் இப்போதைக்கு இந்த ஆதாரங்களை பாருங்க இதை பார்த்தாலே சில விஷயங்கள் தெளிவா புரியும்" என கூறி தர அதனை நீதிபதி பார்வையிட்டார்.

அதில் வினோத் அனிதாவோடு பள்ளி முடிந்ததும் பள்ளியை விட்டு வெளியேறும் காட்சி இருக்க; அதோடு, இன்னொரு சிசிடிவி காட்சியில் அனிதா கற்பழிக்கபட்ட இடத்திற்கு அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு வெளியே இருக்கும் சிசிடிவி காட்சியில் வினோத்தையும் அவனின் நண்பர்களையும் மக்கள் துரத்த அவர்களிடமிருந்து தப்பித்து காரில் ஏறி செல்லும் காட்சியும் ஓடியது

இதனை பார்த்து வினோத் அதிர்ச்சியாக சத்யமூர்த்தி நீதிபதியிடம், "யுவர் ஆனர், முதல் வீடியோபடி பார்த்தா குற்றம் சாட்டபட்ட வினோத்துடன் தான் அனிதா கடைசியாக சென்றிருக்கிறாள்; அதுப்போக இரண்டாவது வீடியோபடி இம்மாணவர்கள் செய்த ஏதோ ஒரு தவறிற்காக மக்கள் இவர்களை துரத்தியிருக்கிறார்கள் அது இம்மாணவர்களின் கூற்றின்படி திருட்டாகவே இருந்தாலும் அந்த இடத்திற்கு அமைச்சரின் வீட்டிலிருந்த வாகனம் எவ்வாறு வர முடியும், ஆம்! நீதிபதி அவர்களே, அந்த வாகனத்தை ஓட்டி வந்தது அமைச்சர் நாகலிங்கத்தின் அடியாள் காளி தான்; இந்த வீடியோவில் பதிவான கார் அமைச்சர் நாகலிங்கத்திற்கு சொந்தமானது என கூறுவதற்கான ஆதாரங்களையும் இப்பொழுது உங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்" என கூறி அதற்காக சில பைல்களை தந்துவிட்டு மேலும் தொடர்ந்தவரோ,

"இந்த ஆதாரங்களை அடிப்படையாய் கொண்டு இக்கொலை ஒரு திட்டமிடபட்ட சதி என தெளிவாய் கூறிவிடலாம்; அனிதாவோடு நட்புறவாடுவதை போல நாடமாடி இச்சிறுவர்களே அனிதாவை கற்பழித்து கொன்றிருக்கிறார்கள் அதற்கு உடந்தையாக காளியும் உதவியிருக்கிறான் இதான் நடந்த உண்மை" என கூறி முடிக்க,

இவரின் வாதத்தினை பார்த்து வாயடைத்து போன வேதாச்சலமோ அதிர்ந்து போய் அமர்ந்திருக்க அதனை பார்த்த மருதநாயகமும் நாகலிங்கமும் அவ்வக்கீல் மேல் கொலைவெறியோடு இருந்தனர்.

ஆனாலும் தன் வாதத்தில் பிடிவாதமாக இருந்த வேதாச்சலமோ நீதிபதியிடம் வினோத்திற்காக ஜாமின் கேட்க,

அதற்கு நீதிபதியோ, "மிஸ்டர் வேதாச்சலம், வினோத்துக்கு எதிரா வலுவான ஆதாரம் இருக்கிற இந்த சமயத்துல எப்படி ஜாமின் தர முடியும் ஒரு வக்கீலா கொஞ்சமாவது பேஸிக் சென்ஸோட யோசிங்க; உங்க கட்சிகாரரை காப்பாத்துறேனு பதறாதீங்க" என கூறியவரோ சத்யமூர்த்தியிடம் பேச செல்ல அவமானத்தோடு தன்னிருக்கையில் அமர்ந்தார் வேதாச்சலம்.

"சத்யமூர்த்தி, இப்போதைக்கு நீங்க சமர்பிச்ச ஆதாரங்கள் எல்லாமே சரிதான் ஆனா அடுத்த ஹியரிங்க்கு வரும்போது இம்மாணவர்களுக்கு உதவியதாக கூறபட்ட காளியும் அதோடு அனிதாவின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டையும் சமர்பிக்கணும் அதையெல்லாம் பார்த்ததுக்கு அப்புறமா தான் மேற்கொண்டு கேஸை பற்றி பேச முடியும் அதுவரை இந்த கோர்ட் ஒத்தி வைக்கப்படுகிறது" என கூறி முடித்து நீதிபதி எழுந்து செல்ல வினோத்தையும் அவனின் நண்பர்களையும் கைவிலங்கு பூட்டி போலிஸார் இழுத்து சென்றனர்.

அப்பொழுது சேகர் ஐ பி எஸ் சத்யமூர்த்தியிடம் வந்து, "வினோத்கிட்ட எப்படியாவது வாக்குமூலம் வாங்கிடணும்ற வேகத்துல இவனுங்ககிட்ட நடந்தை வாக்குமூலமா வாங்காம மிஸ் பண்ணிட்டேன் சார்; ஒரு நிமிசத்துல கேஸையே தலைகீழா மாத்த பார்த்தாங்களே நல்லவேளை நீங்க சரியா வாதாடிட்டீங்க சூப்பர்" என பாராட்ட

அதற்கு சத்யமூர்த்தியோ, "ஓஹோ, யானைக்கும் அடி சறுக்கும்னு சொல்லுவாங்களே அது இதுதானா ஆனா சார் ஆதாரமில்லாம என்னாலயும் ஒண்ணும் பெருசா வாதாடிருக்க முடியாது அப்படி பார்த்தா சிசிடிவி ஆதாரத்தை எல்லாம் நீங்க தானே கொண்டு வந்தீங்க அப்போ நீங்களும் இந்த வெற்றிக்கு காரணம் தான்" என கூறி புன்னகைத்து பேசி கொண்டிருந்தனர்.

அப்பொழுது அனிதாவின் பெற்றோர்களும் இவர்களை பார்த்தபடியே தன் பெண்ணுக்கு நிச்சயம் நீநி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து சென்றனர்.

மற்றொருபுறம் வேதாச்சலத்தை நாகலிங்கமும் மருதநாயகமும் விலாசி கொண்டிருந்தனர்.

"எங்ககிட்ட கேஸுல ஜெயிச்சிடலாம் வானத்தை பிடிச்சிடலாம்னு சீன் போட்டுட்டு அங்க கோர்ட்டுல ஒண்ணும் பேசாம மிக்ஸர் திண்ணுட்டு உட்கார்ந்திட்டு இருக்க; இதுக்கா, உனக்கு பணம் குடுத்து வாதாட சொன்னோம் இனி நீ ஒண்ணும் பண்ண வேணாம்; நாங்களே வேற ஒரு நல்ல லாயரா பார்த்துக்கிறோம்" என கூற

உடனே பதறிய வேதாவோ, "அய்யோ சார், இப்படியெல்லாம் குண்டை தூக்கி போடாதீங்க இன்னமும் கேஸ் கைமீறி போகல எப்படியாவது தடுத்திடலாம் சார் என்னைய நம்புங்க" என கூற அவனை அரைமனதோடு நம்பிய நாகலிங்கத்தினை பத்திரிக்கையாளரும் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விக்கணையினை தொடுக்க அவர்களிடமிருந்து தப்பித்து செல்வதற்குள் நாகலிங்கம் திணறி போனார்.

💘💘💘💘💘

கல்லூரி வளாகத்தில் கவி வகுப்பிற்கு செல்லாமல் சோகமே உருவாய் கேண்டினில் அமர்ந்திருக்க அப்பொழுது வகுப்பில்லாமல் நண்பர்களுடன் கேண்டினிற்கு வந்த நேசனின் கண்களில் அவள் பட்டுவிட உடனே நண்பர்களை சமாளித்து கவியின் எதிரே சென்றமர்ந்தான்.

தன் முன் ஒரு ஜீவன் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துகொண்டும் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டும் இருப்பதை உணராத கவியோ ஏதோ ஓர் சிந்தனையில உழல கவியின் ஒற்றை விழிபார்வைக்காக பொறுந்திருந்து பொறுமை இழந்தவனோ தொண்டை செறுமலில் தன் இருப்பினை உணர்த்தினான்.

தன்னெதிரே நேசனை பார்த்த நொடியில் அன்று பயத்தில் இவனிடம் தஞ்சம் புகுந்த தருணம் நினைவிற்கு வர; அடுத்த நொடியே வாடிய முகம் கோபத்தினை சூடிகொள்ள கண்ணிலோ கோபகணல் கொழுந்துவிட்டு எரிந்தது.

அவனின் செயலினை கண்டு குறும்புபார்வை பார்த்து சிரித்தபடியே அவளிடம், "இன்னைக்கு என் தேவதையோட தரிசணம் கிடைக்காதோனு நினைச்சேன், நல்லவேளை கிடைச்சிடுச்சு; ஆமா, நேத்து ஏன் நீ காலேஜ் வரல இப்போ ஏன் என்னைய தேவையில்லாம முறைக்கிற நீ கோபபடுற அளவுக்கு நான் ஒண்ணுமே பண்ணலயே" என முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு வினவ அதனை கேட்டு மேலும் கோபமானவளோ,

"எது ஒண்ணுமே பண்ணலயா, நீ அன்னைக்கு என்ன பண்ணனு உனக்கு நியாபகம் வரலையா அன்னைக்கு நானே பயத்துல தெரியாம உன்னைய கட்டிபிடிச்சா நீ என்னைய விலகாம நீயும் என்னைய கட்டிபிடிக்கிற என்னைய லவ் பண்றனா ஓவரா உரிமை எடுத்துப்பீயா; ஒரு விஷயம் நல்லா நியாபகம் வைச்சிக்கோ நீ மட்டும் தான் என்னைய லவ் பண்ற நான் இல்லை இனியும் இப்படி ஏதாவது செஞ்ச நடக்குறதே வேறயா இருக்கும் ஜாக்கிரதை" என தன் விரல் நீட்டி எச்சரிக்க,

அவளின் கோபத்தினை ரசித்தவனோ அவளிடம், "இங்க பாரு கவிமா, அன்னைக்கு நீ ரொம்பவே பயந்து போயிருந்த உன்னோட நிலையையே மறந்து போயிருந்த; அப்படிபட்ட சமயத்துல ஒரு காதலனா உன்னைய அரவணைச்சு பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை தானே; அதைதான் நானும் செஞ்சேன், இதுல எந்த தப்பான எண்ணமும் இல்ல அதை நல்லா புரிஞ்சிக்கோ சரியா" என கூறிபவனின் பேச்சில் இருந்த நியாயம் புரிந்து சட்டென்று அமைதியான கவியிடம் மேலும் சில கேள்விகளை கேட்டான்.

"ஆமா கவி, அன்னைக்கு நீ ரொம்பவே பயந்தீயே இப்போ அதெல்லாம் சரியா போச்சா" என கேட்க ஏனோ அவனின் கேள்வியில் அக்கறை மேலோங்கி இருப்பதாய் எண்ணிய கவியும் தன் மனதிலுள்ளதை பகிர துவங்கினாள்.

"என்னோட பயம் எல்லாம் அப்போவே போச்சு; ஆனா அந்த பொண்ணோட நிலைமையை நினைச்சா தான் கவலையா இருக்கு;
என் கண்ணுமுன்னாடி நடந்த விஷயத்தை என்னால தைரியமா வெளியில சொல்ல முடியல; இதுனால அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்காம போச்சுனா காலம் முழுக்க அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொண்ணுடும் அதான் பயமா இருக்கு" என கூறினாள்.

அவளிற்கு ஆறுதலாய் அவள் கரத்தில் மேல் தனது கரத்தினை வைத்து அழுத்தம் தந்தவனோ அவளிடம், "கவிமா, இதுல உன்மேல தப்பே இல்லடா; இப்போ நீயே பயமில்லாம போய் சாட்சி சொல்றனு வைச்சிக்கோயேன் அடுத்த நிமிசமே அதை ஒண்ணுமில்லாம பண்ணிடுவாங்க; அப்புறம் சாட்சி சொன்ன காரணத்துக்காக உன்னோட குடும்பத்தையே அழிச்சிடுவாங்க; உங்க அழகான குடும்பம் நீதிக்காக சாக வேண்டிய நிலை தள்ளபட்டிடும் இதெல்லாம் தேவையா; உன்னோட சாட்சியை தவிர எத்தனையோ ஆதாரம் அவங்களுக்கு கிடைக்கும்; அதுனால நீ தேவையில்லாம கவலைபடாத, நாம நம்ம வாழ்க்கையை பார்க்கலாம் சரியா" என அவளிற்கு ஆறுதல் கூறியவனோ அவனுடைய பாக்கெட்டில் ஒரு பென்டிரைவ்வினை மறைத்துகொண்டு அவளின் பதிலிற்காக காத்திருந்தான்

அவன் பேச்சை கேட்டு சரியென்று தலையாட்டியவளோ அவனின் கூற்று முழுதாய் புரிபட உடனே பட்டென தன் தலையினை நிமிர்த்திய கவியோ,

"எது நம்ம வாழ்க்கையா, நம்ம வாழ்க்கையை பத்தி என்னடா யோசிக்கணும்" என கோபமாய் வினவ,

அதற்கு நேசனோ அவளை மீட்டெடுக்கும் வழி இதுதான் என புரிந்துகொண்டு அவளை சீண்டும் விதமாக,

"அட என்ன கவிமா, நம்ம வாழ்க்கைனா நம்ம காதல், நம்ம கல்யாணம், நம்ம குழந்தைனு எத்தனையோ விஷயம் இருக்கே; இதுல நம்ம கல்யாணத்துல பிரிஞ்ச இரண்டு குடும்பமும் ஒண்ணு சேர வேண்டிய மகத்தான பணி இருக்கு; அதுக்கப்புறம் நம்ம குழந்தையை என்னோட மச்சான் கார்த்திக்கோட மடியில உட்கார வைச்சு காது வேற குத்தணும் இப்படி எவ்வளோ இருக்கு இதைபத்தியெல்லாம் யோசிக்கணும்ல" என கண்ணடித்து வினவ,

அவனின் கூற்றில் கவியில் முகம் ஒரு நொடி வெட்கத்தால் சிவந்தாலும் உடனே அதனை கோபமாக வெளிகாட்டியவளோ நேசனிடம், "நம்ம வாழ்க்கையை பத்தி யோசிக்கணும்னு பேசுறதே தப்பு இதுல என் தம்பி மடியில உட்கார வைச்சு காது குத்தணுமா மவனே!
இப்போ நான் கும்மாகுத்து குத்துறதுல நீ காதுகுத்துறதை பத்தியே யோசிக்ககூடாது உன்னைய" என கூறி அவனை அடிக்க துரத்த அவளிடம் சிக்காமல் போக்கு காட்டி ஓடியவனோ அவளின் கைகளில் அகப்படாதவண்ணம் அவர்கள் அமர்ந்திருந்த மேசையை சுற்றியே தப்பித்து ஓடிகொண்டிருக்க இவர்களின் இந்த அலப்பறையை பார்த்த நேசனின் நண்பர்களோ வாய்விட்டு சிரித்தனர்.

💘💘💘💘💘

மாலை நேரத்தில் பள்ளியில் வகுப்புகள் முடிந்து அனைத்து மாணவர்கள் வீட்டிற்கு கிளம்ப பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது கேண்டினை தாண்டி எங்கோ வேகமாய் ஓடிகொண்டிருந்த அனுவின் நினைவுகளிலோ பிரேக் டைமில் கார்த்திக் கூறிய விஷயமே ஓடி கொண்டிருந்தது.

"அனு, நீ எந்தளவுக்கு பாடுவனு எனக்கு தெரியல, அதுனால நான் உனக்கு பாட்டு சொல்லி தரேன்; தினமும் ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சதும் எனக்காக மியூசிக் ரூம்ல வெயிட் பண்ணு 5 மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சதும் ஒரு மணிநேரம் பாட்டு கத்துகிட்டு கிளம்பு; இன்னைக்கு முதல் நாள்றதால என்னோட ஸபெஷல் கிளாஸை விட்டுட்டு வரேன் நாளையில இருந்து வீட்டுல இதைபத்தி இன்பார்ம் பண்ணிட்டு வந்திடு ஓகே வா" என கேட்ட நினைவே ஓட,

அவளின் மனதிற்குள் 'அனு, சீனியர் உனக்காக ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் கட் பண்ணிட்டு காத்திருக்காரு ஆனா நீ என்னனா இதைபத்தி சுத்தமா மறந்துட்டு பிரண்ட்ஸ் கூட மாங்கா சாப்பிட ஓடிட்டீயே போச்சு போச்சு இன்னைக்கு உனக்கு பயங்கரமா திட்டு விழ போகுது பாரு' என நினைத்துகொண்டே மியூசிக் ரூம் நோக்கி ஓடினாள்.

அவளின் நினைப்பிற்கேற்ப கார்த்திக்கும் அவளிற்காக மியூசிக் ரூம் வாசலிலே வாட்ச்சை பார்த்துகொண்டே அமர்ந்திருந்தான்.

அதனை பார்த்து வேகமாக அவனிடம் சென்றவளோ மூச்சு வாங்கிகொண்டு நிற்க அவளை நிமிர்ந்து பார்த்தவனோ வேகமாய் உள்ளே சென்றான்.

அவனின் செயலில் தன்மேல் கோபம் கொண்டானோ என யோசிக்க அவளின் யோசனையை புரிந்து கொண்டது போல, "நீ லேட்டா வரதால எனக்கு பிரச்சனை இல்லை; எவ்ளோநேரம் நீ லேட்டா வரீயோ அதேமாதிரி அவ்ளோநேரம் நானும் லேட்டா தான் விடுவேன்" என கூற அதனை கேட்டு அதிர்ச்சியானவளோ "அப்போ கண்பார்ம் அம்மாகிட்ட திட்டு வாங்குவோம்" என எண்ணிகொண்டே அவனை பின்தொடர்ந்தாள்.

அந்த மியூசிக் ரூமில் அனைத்து இசை கருவிகளும் ஒன்றாய் இருக்க அவ்விடமே பொருட்காட்சி போலவும் தியான மடம் போலவும் காட்சியளிக்க; அங்குமிங்கும் இவர்களை போல பாட்டு பயிற்சிக்காக குழுமியிருந்த சில மாணவர்களே அவர்களின் பயிற்சியினாலே இது தியான மடமல்ல என்பதை உணர்த்தினர்.

அதனை எல்லாம் பார்த்து கொண்டே சென்ற அனுவோ கார்த்திக்கிடம், "சீனியர், எங்க கிளாஸ்ல சில பேர் பேசிகிட்டாங்க நீங்க சூப்பரா பாடுவீங்களாமே அப்போ நீங்களும் பாட்டு போட்டியில கலந்திருந்து நல்லா பாடிருக்கலாம்ல" என கேட்க

அதற்கு கார்த்திக்கோ, "அவளை திரும்பி பார்த்து பாட்டு பிராட்டிஸ் பண்ணிகிட்டே படிப்புல காண்சன்ரேட் பண்றது எனக்கு ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல இரண்டையுமே ஈஸியா பண்ணிடுவேன்; ஆனா என்னோட பிரண்ட்ஸ் பாட்டுனு போயிட்டா படிப்பை கோட்டை விட்டுடுவாங்க நான் கலந்துகிட்டா அவங்களும் வந்திடுவாங்க; அதான் படிப்புக்காக பாட்டை விட்டேன்னு சொல்லிட்டு இருக்கேன் ஆனா நீ இதுல நல்லா பாடணும் நம்ம ஸ்கூல்ல பாட்டு போட்டியில யாராலயும் தோக்கடிக்க முடியாது அந்த பெருமையை இப்போ நீதான் காப்பாத்தணும் ஓகே வா" என கூறிகொண்டவன் மனதினுள்

நான் பிரண்ட்ஸ்க்காக பாட்டு போட்டியை கைவிட்டா விதி என்னோட காதலுக்காக வழி பண்ணிருக்கு இப்போ உனக்கு நான் பாட்டு பயிற்சி தர போற சில நாள்ல காதல் பயிற்சியும் தந்து உன் மனசுல நான் காதலனா உயரணும் இதையெல்லாம் எப்படி செய்வேனோ என யோசித்துகொண்டே அங்கிருந்த கிட்டாரை எடுத்து சினிமா பாடலை டியூனாய் போட துவங்கினான்.

அப்பொழுது அங்கு பிராக்டிஸ் என்ற பெயரில் கார்த்திக்கை வம்பிழுக்க வந்த அவனின் எதிரி குருப்பான டேவிட் குருப் அங்கிருந்த பிற மாணவர்களை வம்பிழுத்தே மியூசிக் ரூம்மை விட்டு ஓட வைத்தனர்.

அதன்பிறகு டேவிட் தன் நண்பர்களிடம், "டேய், இங்க பாருடா நம்ம படிப்ஸு மியூசிக் ரூமுக்கு வந்திருக்காரு" என கூறியபடி கார்த்திக் புறம் திரும்பியவனோ,

"என்ன படிப்ஸு லைப்ரரிக்கு போறேனு வழிமாறி வந்துட்டீயா, இந்த தடவை நீ பாட்டு போட்டியில கலந்துக்கலயே அப்புறம் எதுக்கு நீ இங்க வந்திருக்க.." என கேட்க,

அதற்கு டேவிட்டின் மற்றொரு நண்பனோ, "அது ஒண்ணுமில்லை மச்சி, நம்ம படிப்ஸு பாட்டு கிளாஸ் எடுக்க வந்திருக்காரு அப்படிதானே படிப்ஸு" என கூற,

அதனை கேட்டு வெடிசிரிப்பு சிரித்த டேவிட்டோ, "என்னடா படிப்ஸு பசங்க சொல்றது உண்மையா, எப்போல இருந்து படிப்ஸு வாத்தியா மாறிச்சு" என கிண்டலாய் கேட்டு பக்கத்திலிருந்த நண்பனுக்கு ஹைபை தர இவர்களின் கிண்டலை எல்லாம் கண்டும் காணாதது போலிருந்த கார்த்திக்கும் கிட்டாரை வாசிக்க ஆரம்பித்தான்.

அப்பொழுதும் அவனை விடாமல் தொல்லை செய்ய நினைத்த கும்பலோ அனுவை காட்டி ரகசியமாய் பேச அதனை பார்த்த அனுவோ முகத்தை சுழித்துகொண்டு கார்த்திக்கிடம் சென்று நின்று கொண்டார்.

அதனை பார்த்து ஆரவாரமாக சிரித்த டேவிட்டோ, "டேய், நீங்க சொன்னப்போ நான் நம்பல டா ஆனா இப்போ நம்பாம இருக்கவே முடியல படிப்ஸு அப்போ இதுனால தான் நீ வாத்தியா மாறுனீயா ஒரே நேரத்துல பாட்டு பத்தின பாடமும் எடுத்த மாதிரி ஆச்சு காதல் பாடமும் நடந்துன மாதிரி ஆச்சு ரைட்டா" என கேட்க

அவர்களின் கூற்றில் விழித்த கார்த்திக்கோ, 'இவனுங்களுக்கு எப்படி நம்பலோட பிளான் தெரியும்' என யோசிக்க அப்பொழுது 'பளார்' என்ற சத்தத்தில் அவனின் யோசனை கலைந்தது.

டேவிட் குருப்பின் பேச்சினை கேட்டு பொறுத்து போன அனுவால் அவர்களின் இறுதி வரியான காதல் என்ற விஷயத்தை கேட்டு பொறுத்திருக்க முடியவில்லை அதனால பொறுத்தது போதுமென பொங்கியெழுந்தவளோ டேவிட்டின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.

அவளின் அடியில் ஒருநொடி திகைத்த டேவிட்டோ மறுநொடி அவளையே அடிக்க பார்க்க அதற்குள் சுதாரித்த கார்த்திக்கோ அவளை தன் பின்னால் நிறுத்தி காத்து கொண்டான்.

அப்போதும் கோபத்தில் உச்சத்திலிருந்த அனுவோ, "சீனியர், என்ன விடுங்க சீனியர் இவனுங்களை நான் இன்னைக்கு இரண்டுல ஒண்ணு பார்க்காம விட போறது இல்ல; ஏண்டா, எவ்ளோ தைரியமிருந்தா எங்களை பத்தியே தப்பா பேசுவீங்க; எங்களை பத்தி உங்களுக்கு என்னடா தெரியும் உனக்கு வாய் இருக்குனா இஷ்டத்துக்கு பேசுவீயா" என கோபத்தில் வெடித்து கொண்டிருக்க

உடனே கார்த்திக்கோ அனுவிடம் திரும்பி, "அனு கொஞ்சம் அமைதியா இருக்கீயா; இவனுங்க எல்லாம் மோசமான பசங்க, இவங்ககிட்ட நீ பேசாத நானே பேசிக்கிறேன்" என கூறி அவர்களின் புறம் திரும்ப,

ஆனாலும் அடங்கா கோபத்திலிருந்த அனுவோ பெரிய அனுகுண்டை ஆயுதமாக்கி தூக்கியெறிந்தாள்.

"டேய், உன்னோட நொள்ளை கண்ணுக்கு எங்களை பார்த்தா லவ்வர்ஸ் மாதிரியா தெரியுது; நாங்க சீனியர் ஜீனியர் டா, இப்போ மட்டும் இல்ல எப்பயுமே எங்க உறவுக்கு நடுவுல காதல்னு ஒன்னு வரவே வராது; அப்படி வரணும் நாங்க விட மாட்டோம் அப்படிதானே சீனியர்" என கார்த்திக்கிடம் கேட்க

அனு போட்ட அனுகுண்டில் கார்த்திக்கின் இதயம் சுக்குநூறாக உடைந்து போனது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்தவனின் கையை பிடித்த அனுவோ டேவிட்டிடம், "டேய், இன்னொரு தடவை எங்களை லவ்வர்ஸ்னு சொல்லிட்டு திரிஞ்ச அப்புறம் நடக்குறதே வேற பார்த்துக்கோ" என மிரட்டிவிட்டு கார்த்திக்கின் கரம்பிடித்து அங்கிருந்து அவனை இழுத்து கொண்டு செல்ல உயிரற்ற ஜீவனாய் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தான் கார்த்திக்.



காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
விறுவிறுப்பாக
போகுது கதை.
தெளிவான நடை.
செம.
 

பிரிய நிலா

Well-known member
Member
எல்லா பக்கமும் சொன்னாலும் கதையை சிதற விடாமல் கொண்டு போறீங்க...
சத்தயமூர்த்தி சார் பின்னிட்டார். வினோத்க்கு தண்டனை கிடைக்கனும்..
கார்த்திக் பாவம்..
 

பிரிய நிலா

Well-known member
Member
எல்லா பக்கமும் சொன்னாலும் கதையை சிதற விடாமல் கொண்டு போறீங்க...
சத்தயமூர்த்தி சார் பின்னிட்டார். வினோத்க்கு தண்டனை கிடைக்கனும்..
கார்த்திக் பாவம்..
 

Nancy mary

✍️
Writer
எல்லா பக்கமும் சொன்னாலும் கதையை சிதற விடாமல் கொண்டு போறீங்க...
சத்தயமூர்த்தி சார் பின்னிட்டார். வினோத்க்கு தண்டனை கிடைக்கனும்..
கார்த்திக் பாவம்..
கண்டிப்பா தண்டனை தந்திடலாம்😍😍😍
ரொம்ப சந்தோஷமா இருக்கு சகி நன்றிகள் பல😍😍😍❤️❤️❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
சத்தியமூர்த்தி சார் அந்த வினோத்த பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்... பிறவி கிரிமினலா இருப்பான் போல
ஆமா ஆமா பிடிச்சு தள்ளுங்க😂😂😂
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom