• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சகியே...சகியே..

மனோஜா

✍️
Writer
சகியே சகியே சகித்தால் என்ன?

WOMEN HAVE ALWAYS BEEN THE PRIMARY VICTIMS OF WAR. WOMEN LOSE THEIR HUSBANDS, THEIR FATHERS, THEIRS SONS IN COMPACT.

-HILARY CLINTON.

MEN HAVE ALWAYS BEEN THE PRIMARY VICTIMS OF RAPE. IT HAPPENS TO THEIR WIVES , THEIR MOTHERS, AND THEIR DAUGHTERS.

-UNKNOWN

கூகுளம்மன் புண்ணியத்தால் எனக்கு இந்த மீம் கண்களில் பட்டது. ஹிலாரி கிளிண்டனுக்கு ஹிலாரியஸாக பதில் சொல்லுமாறு இந்த கோட் அமைந்திருந்தது.

பெண்கள் போர்களால் முதன்மையாக பாதிக்கப்படுபவர்கள். அவர்கள் கணவன், தந்தை, மகன் ஆகியவர்களை போர்களால் இழக்கிறார்கள். –ஹிலாரி கிளிண்டன்.

இதற்கு பதில் சொல்லும்படி பாலியல் வன்முறையால் முதன்மையாக பாதிக்கப்படுவர்கள் ஆண்கள். அவர்களின் மனைவிகள், அன்னையர்கள், மகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.

ஏளனமாக பதில் சொல்லும்படி அமைந்திருக்கும் இந்த பதில். மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் யார் இதை பெண்களுக்கு நிகத்துகிறார்கள்? ஏன் பெண்களுக்கு வெளி ஆண்களால் மட்டும் இது நடக்கிறதா? இதற்கு பிறகு ஒரு கேள்வியை நான் எழுதியிருக்க வேண்டாம். ஆனால் அந்த அளவு கடுமையாக எழுத வேண்டாம் என்று முடிவெடுத்தேன். மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுவதில்லையா? அவர்களும் உள்ளாக்கப்படுகின்றனர். நான் கண்மூடித்தனமாக பெண்களை ஆதரிப்பதை விட்டதற்கு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகப்பட்ட ஒரு ஆணை சந்தித்ததே காரணம்.

ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் இருபாலராலும் பாலியல் வன் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இதையெல்லாம் மற்றொரு நாள் எழுதுவோம்.



பாலியல் வன்கொடுமைக்கு அர்த்தம் உங்களுக்குத் தெரியும். அதனால் நான் உளவியல் பாதிப்புகளை மட்டும் எழுதப் போகிறேன்.

PTSD பற்றி பலர் கேள்வி பட்டிருக்கலாம். ஆனால் RTS பற்றி தெரிய வாய்ப்புகள் குறைவு. நானே இதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். RTS –RAPE TRAUMA SYNDROME.

பாலியல் வன் கொடுமையின் அதிர்ச்சியால் ஏற்படும் சின்ட்ரோம் இது. இதன் முக்கிய அறிகுறிகள்:

மீண்டும் வன் கொடுமை நிகழ்வை அனுபவிப்பது. நைட்மேர்ஸ் எனப்படும் கனவுகள், நடந்ததை திரும்ப நினைத்துப் பார்த்தால் அல்லது அப்படி நினைத்துப் பார்க்காமல் இருக்க இயலாத நிலை. அதிர்ச்சிகரமான சம்பவத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பர்.

அடுத்தது சமூக ஒதுங்கல்: இது ‘சைக்கிக் நம்பிங்க்.” அதாவது உணர்வுகளின்றி மரத்துப் போன நிலை.

தவிர்த்தல். வன்கொடுமை தொடர்பான நினைவுகள், இடங்கள் , ஆட்கள் இப்படி எது எல்லாம் அந்த சம்பவத்தை நினைவு ஊட்டுகிறதோ அவற்றைத் தவிர்க்கப் பார்ப்பர்.

கோவையில் சில நாட்களுக்கு முன்பு இறந்த அந்த மாணவிக்கு தினம் தினமும் குற்றவாளியை சந்திக்கும் நிலை எவ்வளவு பாதித்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். என்னைப் பொறுத்தவரை தினமும் அவனைச் சந்திக்க வேண்டிய நிலையை அந்த பெண்ணுக்கு ஏற்படுத்தியவர்கள் இதற்கு இறப்பிற்கு முழுக்காரணம். ஒவ்வொரு மனிதருக்கு ஒரு குறிப்பிட தகுந்த அளவு மன அழுத்ததை தாங்க முடியும். தாங்க முடியவில்லை எனும் போது மனவியாதி உண்டாகும். இல்லை இறப்பை நாடிச் செல்வர். அந்தப் பெண் இரண்டாவது வழியில் தள்ளிவிடப்பட்டாள்.

அடுத்த அறிகுறி மன எழுச்சி நிலை. எதற்கெடுத்தாலும் அதிர்ச்சி அடைதல், உயர் விழிப்புணர்வு நிலை, தூக்க வியாதிகள் , கவன சிதறல் இருக்கும்.

இது மனிதர்களைப் பொறுத்து மாறுபடும். ஆனால் பொதுவாக பல்வேறு படிநிலைகளில் இதை பாதிக்கப்பட்டவர் எதிர்கொள்வர்.



ACUTE STAGE – உடனடி நிலை.

இது வன்கொடுமை நடந்த பிறகு உடனடியாக சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வரை தொடரலாம். சிலர் அதர்ச்சியிலிருந்து வெளிவந்த பிறகு இதை அனுபவிக்கலாம்.

இந்த நிலையின் அறிகுறிகள் :

விழிப்புணர்வற்று அல்லது அதிக விழிப்புணர்வுடன் இருத்தல், புலன்களின் உணர்வு குறைதல், நினைவில் பாதிப்புகள் இருக்கலாம். ஒழுங்கற்ற சிந்தனைகள் , வாந்தி, மயக்கம், எதுவும் செயலாற்ற முடியாத பதற்றம், தங்களை தொடர்ந்து சுத்தம் செய்தல், உடைகளை சுத்தம் செய்ய முயலுவர், தினசரி வாழ்க்கையைப் பற்றிய குழப்பம், பிறரை சிறு செயல்களுக்கும் அதிப்படியான எதிர்வினை காட்டுவர். தற்கொலை எண்ணம் அதிகரிக்கும். முயற்சி செய்யும் வாய்ப்பும் அதிகம்.

OURWARD ADJUSTMENT STAGE – வெளிப்புறத்திற்கு தகவமைத்துக் கொள்ளுதல்.

உடனடி நிலை முடிந்தவுடன் இது தொடங்கும். சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை இந்நிலை தொடரலாம்.

பாதிக்கப்பட்ட நபர் வெளிப்புறத்தில் தான் அதிலிருந்து மீண்டு வந்ததாக காண்பிக்கலாம். ஆனால் உண்மையில் மனதை அந்த நிகழ்வு அரித்து தின்று கொண்டிருக்கும்.

இதிலிருந்து தப்பிக்க கோபிங்க் மெக்சானிசத்தைப் பயன்படுத்துவர். எல்லாம் நலமாக இருக்கிறது அல்லது நடந்தது ஒரு பெரிய விஷயம் கிடையாது என்பது போல் காட்டிக் கொள்வர்.

நடந்தவற்றை திரும்ப திரும்ப பேசுவர் அல்லது பேச அடியோடு மறுத்தல் அல்லது நடந்ததை தீர அலசிப் பார்ப்பர்.

தப்பித்து ஓடுவத் போல் புதிய இடத்திற்கு சென்றுவிடுவர். தோற்றத்தை மாற்றிக் கொள்வர்.

இதுபோன்று எதைச் செய்தால் தனக்கு நடந்ததிலிருந்து மீள முடியும் என்று முயலுவர்.

இந்த படிநிலையின் அறிகுறிகள்:

உடல் நலத்தை பேணுவது குறையும், பதட்டம் இருந்து கொண்டே இருக்கும், கையற்றநிலை, அதிக விழிப்புணர்வு, முன்பு இருந்த நெருங்கிய உறவுகளை தொடருவதில் சிரமம் இருக்கும். பயம் இருந்து கொண்டே இருக்கும். அதிக கோபம் அல்லது அதிக மகிழ்ச்சியிலிருந்து மன அழுத்தம் என்று மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். தூக்கத்தில் பிரச்சினைகள், டிஸ் அசோசியேன் எனப்படும் தன்னுடைய உடலில் தன்னுடையல்ல என்ற நிலை உருவாகலாம். பேனிக் அட்டாக் எனப்படும் தீடிரென்று உருவாகும் பயம் எதையும் செயல்பட விடாமல் தடுக்கும்.

நடந்த நிகழ்விலிருந்து விடுபட சிலர் ஆல்கஹால், போதைப் பழக்கம் போன்ற தன்னை அழிக்கும் பழக்கங்களுக்கு மாறலாம். சிலர் நேர்மறையாக தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவர்.

இந்த நிலையில் வாழ்க்கை முறை மாறியிருக்கும். முன்பு பயணம் செய்வது மிகவும் பிடித்திருந்தால் பாதுகாப்பு கருதி தற்போது அதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். கேம் ஓவர் என்ற படத்தில் தப்சி வீட்டை விட்டு வெளியே வர மாட்டார். இப்படி வாழ்க்கைமுறை மாறியிருக்கும். புதிய உறவுகளை ஏற்றுக் கொள்ள தயக்கம் இருக்கும்.



தன்னுடைய பாலியல் ஒருங்கமைவு பற்றி சந்தேகம் இருக்கும். ஆவ் என்ற தெலுங்குபடத்தில் காஜல் சிறுவயதில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகியிருப்பார். அதனால் ஆண்களை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணையாக முடிவு செய்திருப்பார். இப்படி வன் கொடுமைக்குப் பிறகு சிலரின் பாலியல் ஒருங்கமைவுகள் மாறிவிடலாம். உங்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து உதாரணங்களைக் காட்டுகிறேன். கொஞ்சம் புரிதலை ஏற்படுத்தும்.

அண்டர்கிரவுண்ட் நிலை:

இந்த படிநிலையில் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி இருப்பர். இதுவும் வருடக் கணக்கில் நீடிக்கலாம். இயல்பான வேலைகளில் ஈடுபட்டாலும் உணர்வுபூர்வமாக முழுவதும் சரியாகி இருப்பார்களா என்று கூற முடியாது. இயல்பான வாழ்க்கையில் சில தடைகள் இருக்கும். கவனச் சிதறல் இருக்கலாம். சிலர் டிஸ் அசோசியேசன் அல்லது அதிக விழிப்புணர்வு நிலையை உணரலாம்.



ரிஆர்கனேசன் நிலை (REORGANIZATION STAGE):

இது கொஞ்சம் சிக்கலான நிலை. வெளிப்புற சூழல் மற்றும் மனம் இரண்டிலும் உணர்வு நிலை பாதிக்கப்படும். பாதிக்கபட்டவர் பயத்தை உணருவர். குடும்ப நபர்களுக்கோ இதுவரை நல்லாயிருந்தவருக்கு என்ன ஆகிற்று என்ற குழப்பம் வருமாறு பாதிக்கப்பட்டவரின் நடத்தையில் மாற்றம் இருக்கும்.

கூட்டத்தில் இருக்க பயம், தனியாக இருக்க பயம், ஆண்கள் அல்லது பெண்களைப் பார்த்து பயம், வெளியே செல்ல பயம், யாரவது தொட்டால் பயம், குற்றவாளியோடு தொடர்புடைய விஷயம் எதாவது இருந்தாலும் பயம் ஏற்படலாம். உதாரணத்திற்கு சிகரெட் வாசனை, மது வாசனை, குற்றவாளி உடுத்தியிருந்த உடை, பயன்படுத்திய வாகனம். இப்படி எது வேண்டுமானாலும் பயத்தை உருவாக்கும். புதிய நபர்களை சந்தேக கண்ணோடுதான் பார்ப்பர். உணவு உண்ணும் முறையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு கொடூரமான முறையில் பழிவாங்கும் கற்பனைகள் கூட தோன்றும். தற்கொலை எண்ணமும் அதிகரிக்கும்.

ரிநார்மலைசேஷன் நிலை(RENORMALIZATION STAGE)

இந்த நிலையில் தனக்கு நிகழ்ந்த வன் கொடுமை அதிக கவனத்தில் இருக்காது. தங்களுடைய இயல்பான வாழ்வில் ஒன்றிப் போக முடியும். தன்னை அழிக்கும் பழக்கங்களையும் அவர்களால் உணர முடியும். பாலியன் வன் கொடுமையால் இருந்த ஏற்பட்ட உணர்வுகள் , வருத்தம், குற்றஉணர்ச்சி ஆகியன பெரும்பாலும் முன்பு இருந்ததைப் போல் பாதிக்கும் சக்தியிழந்துவிடும்.

இவையெல்லாம் ஆர்.டி.எஸ்ஸின் படிநிலைகள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள். பெண்கள் தங்கள் தோழிகளைக் கவனித்துப் பாருங்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சினை இருக்கிறது என்று தோன்றினால் அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். எடுத்த உடனே தங்களுக்கு நடந்ததைக் கூறிவிடப் போவதில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை என்றால் கூட அனுசரணையாக இருங்கள். தங்களுக்காக ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமே அவர்களை சிறிது சிறிதாக மாற்ற உதவும். மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் மனநல மருத்துவரை அணுக யோசிக்காதீர்கள். கண்ணாடி பாத்திரத்தில் சிறு கீறல் விழாமல் இருப்பது போல் கவனமாகப் பாதிக்கப்பட்டவரை கையாளுங்கள். அவர்கள் சிறிது சிறிதாக மீண்டு வர உதவுங்கள்.

பாலியல் வன் கொடுமை நிகழ்ந்தற்குப் பாதிக்கப்பட்டவர் காரணமல்ல. குற்றமிழைத்தவர்தான் காரணம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.











 

Nithya Mariappan

✍️
Writer
அருமையான விளக்கம் சிஸ்... சொசைட்டி எப்பவுமே விக்டிம் ப்ளேமிங் தானே பண்ணுது... பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவங்க எதிர்கொள்ளுற இந்த மாதிரி துன்பங்களை பத்தி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்குறதில்ல...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom