migavum sirappaga ulathu akka10) ‘தனி’ என்னும் சொல்லின் பின் வலி மிகும்.
எ-டு.
தனி + சிறப்பு = தனிச்சிறப்பு
தனி + பிறவி = தனிப்பிறவி
தனி + கேள்வி = தனிக் கேள்வி
தனி + குடித்தனம் = தனிக் குடித்தனம்
தனி + பண்பு = தனிப் பண்பு
migavum utaviyaga irunthathu akka11) அன்றி, இன்றி என்னும் எச்சச்சொற்களுடன் புணரும் வல்லினம் மிகும்.
அதாவது இந்த இகர ஈற்றுச் சொல்லுருபுகளின் பின் வலி மிகும்.
எ-டு.
அன்றி - செருப்பு அணிந்தோரன்றிப் பிறர் நடக்கக் கூடாது.
அன்றி - கேள்வி கேட்கும் மாணவனன்றிப் பிற மாணவர் பேசக் கூடாது.
இன்றி - வெளியில் தடையின்றிச் செல்லலாம்.
இன்றி - இந்த வீட்டில் வருத்தமின்றித் தங்கலாம்.
இன்றி - பையின்றிப் போக மாட்டான்.