• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 3

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 3


ரிது பர்ணா இந்த பெயரை இன்று மட்டும் ஆனந்த் நூறு முறையாவது சொல்லியிருப்பான்.


அவள் பெயரை முதல் நாள் ரெஸ்யூமில் பார்த்தான் தான். ஆனால் அன்று கருத்தில் பதியவில்லை. இப்போது சொல்லி கொண்டே இருக்கிறான்.


செகிரேட்டரி போஸ்ட் அவளுக்கு என்று அவன் முடிவு செய்யவில்லை. அது அவன் தந்தை முடிவு தான்.


கலந்து பேசியதில் தந்தை கூறும் போது கூட இது சரி வருமா என அவனும் யோசித்தான்.


ஆனால் தந்தையே அது தான் சரி என்று விட,


'சரி தான் தூரம் பார்த்த அப்பவே தூக்கம் போச்சி. இனி கூடவே வா!' என்று யோசித்தாலும் அது இனிக்கவே செய்தது.

அன்று இரவு முழுவதும் யோசித்தான். மனைவி என்ற சொல்லையோ அதற்கு மேலோ யோசிக்காதவனிற்கு இப்போது அந்த சொல்லே ரிதுவை தான் கண்முன் கொண்டு வந்தது.


தன்னுடைய விருப்பத்திற்கு அம்மா என்றுமே மறுப்பு சொல்லியதில்லை. அதிலும் திருமண விஷயத்தில் மறுக்கவே மாட்டார்கள் என்று நம்பினான்.


ஆனால் ரிது? அவளின் சம்மதம் முக்கியம் அல்லவா?


வீட்டில் கூறினால் உடனே ராஜ் சாரிடம் பேசி கல்யாண ஏற்பாடு கூட செய்து விடுவார்கள் தான். ஆனால் ரிது என்னை விரும்ப வேண்டுமே!


அவள் முழு மனதுடன் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவள் என் காதலை உணர வேண்டும். அதன் பிறகு தான் மற்றவர்களின் சம்மதம் என்று முடிவு செய்தான்.


இரண்டு நாட்களில் இவ்வளவு யோசிக்க வைத்தவளை எண்ணி சிரித்துக் கொண்டவனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை.


காதல்... ஏன் கல்யாணம் பற்றி கூட சிந்திக்காதவன் ஆகிற்றே நம் ஹீரோ!


அம்மாவிடம் சொல்லாமல் எதுவுமே செய்ததில்லை. அம்மாவிடம் சொல்லி விடலாமா? வேண்டாம் சொன்னால் அவர்களுக்கு சந்தோசம் தான்.


உடனே பேச வேண்டும் என்றால்? சரி எதுவாக இருந்தாலும் முதலில் ரிதுவின் மனதில் இடம் பிடித்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.


ஆனால் விதி இடையில் விளையாட இருப்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை .

அன்று முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ள சற்று முன்னதாக வந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தான் ஆனந்த்.


அப்போது தான் அந்த மீட்டிங்கிற்கான ஃபைலை வீட்டில் வைத்துவிட்டு வந்தது ஞாபகம் வந்தது.


சரி மீட்டிங் ஆரம்பிப்பதற்குள் எடுத்து வந்து விடலாம் என அறை கதவை திறந்தான்.


பூங்கொத்துக்கள் மேல் வந்து மோதியதோ?


சரியாக அப்போது உள்ளே நுழைந்த ரிது அவன் மேல் மோதிவிட, நிற்க முடியாமல் தடுமாறி விழ இருந்தவளை தோள்தொட்டு நிறுத்தினான்.


ஒரு நொடி அவன் இந்த உலகிலேயே இல்லை.


கதவை திறந்ததும் யாரோ வரும் நிழல் தெரிந்து நின்றுவிட்டான் தான். ஆனால் ரிது தான் கவனிக்காமல் மோதிவிட்டாள்.


மனதில் உணர்ச்சிகள் வார்த்தைகளால் சொல்ல முடியா அளவிற்கு எழுந்து அவஸ்தை கொள்ள அடுத்த நொடி தன்னிலை அடைந்து அவளையும் நேர் நிறுத்தினான்.


ரிதுவின் நிலையோ அதை விட மோசம். அவன் கையை எடுத்த பின்பு தான் தெளிந்தாள்.


அவள் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று நினைத்தவன்


"சாரி! நீங்க விழாம இருக்க... கை அதுவா.." என்று வார்த்தை வராமல் தடுமாற,


தன் மேல் தான் தவறு என்று அவள் புரிந்து கொண்டாள். இருந்தாலும் ஏனோ அந்த நிமிடம் பேச்சு வர மறுக்க "பரவாயில்லை" என்று மெல்லிய குரலில் கூறி நகர்ந்தாள்.

மீட்டிங், ஃபைல் எதுவும் மறந்து கண்மூடி சீட்டிலே அமர்ந்து விட்டான்.


'என்ன கண்ணு டா அது! எப்பப்பா அவளை பார்த்தாலே உலகமே நின்னா மாதிரி இருக்கு'.


இன்னும் எத்தனை நாள் தான் இப்படி தவிப்பது என்று நினைத்தவன் பின் தலை குலுக்கிக் கொண்டான். மீட்டிங் ஞாபகம் வர சரி வீட்டுக்கு செல்லலாம் என எழுந்தான்.


அப்போது "மே ஐ கம் இன் சார்" என்ற குரலில் சிரித்துவிட்டு வாங்க என்றான். உள்ளே வந்த ரிதுவிடம்


"என்ன இப்ப ஜாக்கிரதையா கேட்டுட்டிங்க போல" என்றதும், அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட,


"சாரி சார்! நீங்க வருவீங்க நினைக்கல. தெரியாம..." என்று அவள் முடிப்பதற்குள்,


"ஹேய் கூல் கூல்! நான் ஜஸ்ட் சும்மா தான் கேட்டேன். டோன்ட் பீ நெர்வஸ்" என்று கூறி சிரித்தான்.


அவளும் சிரித்து ஒரு ஃபைலை நீட்டி கையெழுத்து கேட்டாள். அதன் பின் மீட்டிங் ஞாபகபடுத்தினாள்.


"யாஹ்! ஐ ரெமெம்பெர். அதுனால தான் நான் அப்பவே வந்துட்டேன் மிஸ் ரிது. ஃபைல் வீட்ல இருக்கு. அத எடுத்திட்டு வரத்தான் கிளம்பினேன்" என்றான்.


ரிதுவிற்கு அவனின் மிஸ் ரிது சற்று வித்யாசமாக தெரிந்தது. தனக்கு தெரிந்த பெண்ணிடம் பேசுவது போல, சாதாரணமாக கூறியது போல தோன்றியது.


'அவன் மிஸ் ரிதுனு தான சொன்னான்! அதுல என்ன உனக்கு வித்யாசம் தெரியுது?' என்று மூளை பதில் கேள்வி கேட்க அவள் அடங்கினாள்.


"மிஸ்" ரிதுவா? தன்னை தானே நினைத்து சிரித்து கொண்டான் ஆனந்த்.


அவள் மீட்டிங் என்று ஞாபகப்படுத்த முயலவும்,


'அதுக்கு தானடா ஃபைல் எடுக்க வீட்டுக்கு போகலாம்னு கதவை திறந்தேன். பூக்குவியல் மாதிரி நீ என் மேல் விழுந்தாய்' என்று கூற ஆசை தான்.

'ஆனால் மிஸ் ரிதுனு மரியாதையா கூப்பிடதுக்கே நீ முறைக்கிற மாதிரி பாக்குறியடா!' என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.


அவளை உரிமையாக அழைத்தது பல ஜென்ம பழக்கம் போல் தோன்றியது.


ஆனால் தன் மனதில் இருப்பதை சொல்லாமல் தான் ஏதும் அவள் பார்வைக்கு தவறாக தெரியும்படி செய்திடக்கூடாது என்று உறுதியாக இருந்தான்.


ஒரே ஒரு நொடி தான் என்றாலும், தன்னை தோள் தொட்டு தூக்கும் போது அவன் கண்களில் இருந்த ஏதோ ஒருவித தவிப்பை உணர்ந்தாள் ரிது. அடுத்த நொடி அவன் அதை மறைத்ததாகவே தோன்றியது.


தான் பார்த்த இரண்டு நாட்களில் அவன் நல்லவன் தான். தவறாக சிறு வார்த்தை கூட சொல்ல முடியாது.


ஆனால் தன்னிடம் பேசும் போது ஏதோ ஒரு வேறுபாடு இருப்பது போலவே தோன்றியது ரிதுவிற்கு.


அப்போது அவள் மூளை சொன்னது 'அவன் இருக்கட்டும். நீ என்ன செய்தாய்? அவன் தோள் தொட்டதும் நீயாக விலக வேண்டியது தானே? உன்னை பிடித்து நிறுத்தும் வரை என்ன கனவில் இருந்தாயோ?' என்று கேள்வி கேட்க,


அப்போது தான் ரிதுவிற்கு உரைத்தது! தானும் அவன் நிறுத்தும் வரை அவன் கண்களை பார்த்து கொண்டிருந்தது.


பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இருக்கிறார்கள் பார்த்தவுடன் திரும்பி பார்க்க வைப்பவர்கள்.


ஆனந்த் அந்த வகை தான் என்று முதல் நாள் பார்த்தவுடன் அவள் நினைத்தாள் தான்.


ஆனால் அதற்காக தான் எப்படி இப்படி நடந்து கொண்டோம் என்று தெரியவில்லை.


இனி அவன் முன் 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி நிற்க கூடாது' என்ற முடிவு செய்து கொண்டாள்.


மீட்டிங்கில் உற்சாகத்துடன் பேசி முடித்து அந்த ப்ராஜெக்ட்டையும் தன் வசப்படுத்தி இருந்தான் ஆனந்த்.


ஆனந்த் திறமை பற்றி அப்பா கூறி இருந்தாலும் அவன் பேச்சு திறமையில் மெய் மறந்திருந்தாள் ரிது.


"பரவாயில்லை! எவரையும் பேச்சில் கவர்ந்து விடுகிறான். காரியக்காரன் தான்" என்று நினைத்து கொண்டாள்.


அவன் பேசி முடித்து அமர்ந்ததும் சிறிது பிரேக் எடுத்து கொண்டு அறைக்கு சென்று காபி கேட்டு அவன் போன் செய்தான்.


தன்முன் கையில் காபியுடன் நின்றவளை பார்த்து "என்ன ரிது நீ போய் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்க? காபி கொண்டு வர லக்ஷ்மி அம்மாகிட்ட தானே சொன்னேன்? அவங்க எங்கே?" என்று வேகமாக கூறி விட்டான்.


"இல்லை சார்! அவங்க லீவ். நீங்க போன் பண்ணும் போது நான் அங்கே தான் இருந்தேன். அதான் அங்கே கொடுத்ததும் எடுத்துட்டு வந்தேன்" என்றதும்,


'எப்படி இந்த வேலையெல்லாம் நீ செய்யலாம்?' என்று நினைத்தாலும் தனக்காக அவள் செய்ததும் அவனுக்கு பிடித்திருந்தது .


ரிதுவிற்கு அவன் கேட்ட வேகத்தில் ஏதும் தவறு செய்து விட்டோமோ? என்று பயந்தே விட்டாள்.


பின் எப்போதும் போல் அவள் மூளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது.


அவனின் ஒருமை பேச்சும், ரிது என்று அழைத்து பேசியதும் நிஜமாகவே அவன் ஏதோ தன்னை மட்டும் தனியாக நடத்துவது புரிந்தது.


ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை! (இல்லை., இல்லை., புரிந்தாலும் புரிந்ததாக காட்டிக் கொள்ள முடியவில்லை).


அவன் சாதாரணமாக கூட கேட்டிருக்கலாம் என்று ஒருமனம் அவனுக்காக வாதாடியது.


ஆனந்த் அது எதையும் யோசிக்கவில்லை சந்தோசத்துடன் மீட்டிங்கையும் வெற்றிகரமாக முடித்திருந்தான்.


கொட்டேஷன் பற்றிய விவரங்களை ரிது மூலம் சரிசெய்து முடித்தவன் அதை தன் ட்ராயரில் பத்திரப்படுத்திக் கொண்டான்.


வீட்டிற்குள் நுழையும்போதே புன்சிரிப்புடன் நுழையும் மகனை ஆராய்ந்து பார்க்காமல் சுகன்யா சாதாரணமாக இருக்க,


அவரை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றதுடன் அவன் ஹம் செய்த பாடல் தான் மீண்டும் அவரை யோசிக்க வைத்தது.


ரிதுவுடனான அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடி வந்தவன் தன்னையும் மறந்து சிரித்ததுடன்,


"உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான்! உன் மேல் ஆசைதான்
"


என்று ஹம் செய்து கொண்டே சுகன்யாவை கடந்து மாடிப்படிகளில் எற சென்றான்.


"டேய் ஆனந்த்!" என்ற குரலில் மாயலோகம் விட்டு பூலோகம் வந்தவன் திரும்பிப் பார்க்க, அன்னை அவனை முறைத்து நின்றார்.


"அம்மா" என்றவன் முகத்திலும் குரலிலும் அவ்வளவு அசடு வழிந்தது.


"நினச்சேன் டா! ரெண்டு நாளா நீ சரி இல்லனு நினச்சேன். ஆனால் இவ்வளவு பெரிய உருவம் நிக்குறது கூட தெரியாமல் அப்படி என்ன டா ஆச்சு உனக்கு?" என்றவர் குரலில் கோபம் கொஞ்சமேனும் இருந்திருக்கலாம்.


மீண்டும் மாட்டிக் கொண்ட தருணம். முன்னபின்ன காதலிச்சா தானே அதை மறைக்கவெல்லாம் தெரியும்?


இதோ மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக ஆடு திருடிய கள்வன் போல கண்களை உருட்டி அன்னை முன் ஆனந்த்.


"சரி சரி ரொம்ப யோசிச்செல்லாம் நீ சொல்ல வேண்டாம். ஆனால் நான் உன்னை பெத்தவ அதை மறந்திடாத!" சுகன்யா.


"அய்யோ! ம்மா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. சீக்கிரமே நல்ல விஷயமா சொல்றேன். ஓகே! அதுவரை ப்ளீஸ் ம்ம்ம்ம்!" என்று கண்ணடித்து கன்னம் பிடித்து செல்லம் கொஞ்சி அவன் ஓடிவிட,


தான் நினைப்பது சரி தான் என்று நினைத்து சிரித்துக் கொண்டார் சுகன்யா.


காதல் தொடரும்..
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom