• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 27

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 27


விக்ரம் ஞாபகத்தை தள்ளி வைக்கவே ஊரை காலி செய்ய முடிவெடுத்து வெற்றி பெற்று பறந்தாள் அமெரிக்கா.


எவ்வளவு கனவுடன் சென்றாளோ, அதே அளவு வெறுத்து போனாள் ஒரு வாரத்திலே.


படிப்பும் கல்லூரியும் பிடித்து போனாலும் பசிக்கு விரும்பி சாப்பிடும் எதுவும் கிடைக்காமல் வீட்டு உணவை தேடி வயிறு கெஞ்ச ஒரே வாரத்தில் பாதி இளைத்து இருந்தாள்.


அன்றும் அவள் தங்கியிருந்த இடத்தில் சாப்பிட பிடிக்காமல் கால் போன போக்கில் சென்று கொண்டிருக்க ஒரு குரல் அவளை கலைத்தது.


"யோவ் நாங்க சரியா தான் வந்தோம். எருமை மாதிரி உள்ள வந்து விழுந்துட்டு திட்ட வேற செயிரியா?" என காய்ந்து கொண்டிருந்தான் ஒருவன்.


அந்த தமிழை கேட்டதும் அந்த சிறிய கூட்டத்தை கடந்து நடுவில் சென்றாள்.
அவன் இன்னும் அழகிய கெட்ட வார்த்தைகளால் தமிழில் திட்டிக் கொண்டிருக்க அருகில் நின்ற இன்னொருவன் ஆங்கிலத்தில் மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தான்.


எதற்கும் அசையாமல் நின்றவர்களை பார்த்து இருவரும் முழிக்க லாவண்யா உதவிக்கு சென்றாள்.


அடிபட்டதாக கூறியவனை பார்த்து சில சோதனை செய்து அவனுக்கு பெரிதாக எதுவுமில்லை என்று தெரிந்ததும் ஏகப்பட்ட மிரட்டளுடன் போலீஸ் என்று வேறு பயமுறுத்த அடங்கியது கூட்டம்.


அவர்கள் நகர அடிபட்டவன் தமிழில் திட்டிக் கொண்டே போக, முதலில் தமிழில் பேசியவன், "அட கடங்காரா! டேய் அவன் நம்மூர்காரன் போல! அதான் பணம் எதிர்பார்த்து இப்படி செஞ்சிருக்கான். அதானே பார்த்தேன் எல்லா ஊர்லயும் இதே வேலையைத்தான் பார்க்கிறாங்க போல!" என கூறிக்கொண்டிருக்க,


இன்னொருவன் "தேங்க் யூ சோ மச் மேம்" என்று அவளுக்கு நன்றி கூறினான்.


"நீங்கள் தமிழ் தானே" என்று அவள் கேட்க,


"வாவ் நீங்களும் தமிழா! சூப்பர் மேம்! தமிழனுக்கு தமிழன் தான் உதவி செய்வான். எவ்வளவு உண்மை இல்ல?" என்று கூறி "ஐம் பிரதாப்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டான் முதலில் பேசியவன் .


மற்றவனும் புன்னகையுடன், "ஐம் சுரேஷ்" என்று அறிமுகப்படுத்திக் கொள்ள அவளும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.


"என்ன சொல்லுங்க வெளியூர் வந்து நம்மூர்காரங்கள பார்த்தாலே சந்தோசம் தானா வந்துடுது" என்று கூறினான் பிரதாப்.


மற்றவர்களும் அதை ஆமோதிக்க, சிறிது பேசிவிட்டு விடைபெற்றாள் லாவண்யா.


சிலஅடிகள் நடந்தவள் திரும்பி அவர்கள் அருகே வந்தாள். அதற்குள் சுரேஷ் காரில் ஏறியிருந்தான். பிரதாப் காரை ஸ்டார்ட் செய்ய போக அவன் அருகே இருந்த கிளாஸ்சை மெலிதாக தட்டினாள்.


"சொல்லுங்க சிஸ்டர்" என அவன் இலகுவாக கேட்க தயக்கம் கொஞ்சம் சென்றது அவளிடம்.


"இல்ல நீங்க எல்லாம் எங்க சாப்பிடுவிங்க?" மீதி இருந்த தயக்கத்துடன் கேட்டுவிட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.


"இல்ல நான் வந்து டென் டேஸ் ஆச்சி. பட் ஃபுட் ஒத்துக்கலை. அதான்" என்று அவள் கேட்க,


"இவ்ளோ தானே வாங்க போகலாம்" என அவன் கார் கதவை திறந்தான்.


சுரேஷ் புன்னகை மூலம் சம்மதம் சொல்ல முன்பின் தெரியாதவர்களை நம்பி காரில் எற தயங்கினாள் லாவண்யா.


"ஏங்க, எங்களை பார்த்தால் அவ்ளோ மோசமாவா தெரியுது?" என அவள் முகபாவனைக்கு கேள்வி கேட்க உடனே ஏறி அமர்ந்து கொண்டாள்.


அவர்கள் எப்போதும் சாப்பிடும் தமிழ் ஃபுட் கோர்ட் அழைத்து சென்றனர். அப்போதே அவர்கள் பற்றிய தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர்.


அவள் தங்கியிருக்கும் இடத்தில் அவளை ட்ரோப் செய்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் என்ன தேவையானலும் அழைக்கும் படி கூறி விட்டு சென்றனர்.


சிலநாட்கள் ஓட சுரேஷ் அங்கு ஐடியில் வேலை பார்த்து கொண்டிருக்கும் நேரம் அவன் மொபைல் அழைத்தது.


அழைப்பது லாவண்யா என தெரிந்ததும் சிரித்து கொண்டே அட்டன் செய்தான்.


"ஹாய் சுரேஷ்! நான் லாவண்யா. இன்னிக்கு ஈவினிங் பிரீயா நீங்க?" என விடாமல் பேச,


"என்ன மேடம் ஏதும் பார்ட்டியா?" என சரியாக கணித்து கேட்டான் சுரேஷ்.


"ம்ம்ம் பரவாயில்லை நீங்கள் ஜீனியஸ் தான்" என்றவள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தாள்.


பிரதாப் அழைப்பை ஏற்காததால் அவனையும் அழைத்து வர சொல்லி பணித்தாள்.


பிரதாப் ஒரு பெரிய லாயரிடம் CA வாக இருப்பதால் வேலையில் அவள் அழைக்கும் போது பேச முடியவில்லை.


சுரேஷ் பிரதாப் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி இருப்பவர்கள். சுரேஷ் அப்பாவின் நண்பர் மகன் பிரதாப்.


பிரதாப் இருக்கும் இடம் கலகலப்பாகா இருப்பது அவன் பொறுப்பு. ஆனால் வேலை நேரத்தில் அவனை பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு பணிவு, அவ்வளவு அமைதி.


பிறந்தநாள் பார்ட்டி நல்லபடியாக முடிந்தது. அதன்பின் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.


லாவண்யா பேசும் விதம் பிடித்து போக ஒரு தோழமையுடன் ஏற்றுக்கொண்டான் சுரேஷ்.


அடிக்கடி சந்தித்து அவர்கள் நட்பும் வலு பெற்றது. அன்று அவள் பார்ட்டியின் போது சுரேஷ் எழுந்து வாஷ் ரூம் செல்ல, லாவண்யா செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.


சுரேஷிற்கு தோழமை உணர்வு கொடுத்தவள் அவனை தன் சகோதரனாக நினைக்க வைத்தது அவன் அவளை பாதுகாக்கும் சில நடவடிக்கைகள்.


அந்த நினைப்பில் அவள் பார்த்து கொண்டிருக்க அவளை பார்த்த பிரதாப், "என்ன மேடம் லவ் பண்றிங்களா?" என ஒருவித சிரிப்புடன் கேட்க,


அவள் மனக்கண்ணில் விக்ரம் வந்தான். பிரதாப் சுரேஷை லாவண்யா பார்த்த பார்வையை தவறாக புரிந்து கொண்டு கேட்க, அது புரியாத பெண் அவன் தற்செயலாக கேட்பதாக நினைத்து "ஆமா பட் இன்னும் என் காதலை சொல்லல" என்றாள் விக்ரமை மனதில் வைத்து.


உடனே பிரதாப், "இட்ஸ் டூ லேட் மேம். ஹி வாஸ் கமிடெட்" என்க,


"உன் வாயில பினாயில் ஊத்த! இப்படியா அபசகுணமா பேசுவ?" என்று அவள் காய்ச்சி எடுத்தாள்.


'பினாயிலா' என ஒரு நொடி திடுக்கிட்டவன் பின் தெளிந்து "ஹேய் நான் நிஜமா தான் சொல்றேன். வேணும்னா அவன் மொபைல் வாங்கி பாருங்க அவன் லவ் பண்ற பொண்ணு போட்டோ இருக்கு" என கூற குழம்பி போனாள் லாவண்யா.


"என்ன உளறுறிங்க? யாரு மொபைல்? யாரு போட்டோ?" என கேட்க சில நொடிகளில் புரிந்து கொண்டவள் பிரதாப் அருகே சென்று அவன் தலையில் 'நங்' என்று ஒரு கொட்டு வைத்தாள்.


'அம்மா' என அலறி கொண்டே தலையை தேய்த்தவனை அவள் முறைத்து கொண்டிருக்க சுரேஷ் வந்து சேர்ந்தான்.


அவள் முறைப்பதை பார்த்து என்னாச்சு என கேட்க அவள் பிரதாப் கூறியதை கூறினாள்.


இப்போது அவனும் சேர்ந்து முறைக்க, "அய்யோ சாமி ஆள விடுங்க டா!" என பயந்தவன் போல கூறியவன்,


"நீ உண்மையாவே லவ் பண்றல்ல அதை தான் டா சொன்னேன்" என்றான் மீண்டும் பிரதாப்.


அவள் மறுபடி அவனை அடிக்க எழுந்து கொள்ள, "வேகமாக ஓட எழுந்தவன் பார்க்க தான் தமன்னா மாதிரி ஒல்லி ஆனால் அக்கா ரொம்ப ஸ்ட்ரோங் டா. ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இருக்கு" என கூற,


முறைத்தவளிடம் வேகமாக சுரேஷ் மொபைலை பிடுங்கி அதில் இருக்கும் ஜோதி போட்டோவை காட்டினான்.


"இவங்க தான் சுரேஷ் லவ் பண்ற பொண்ணு. இப்போ நம்புறீங்களா?" என கேட்க,


"நீ எப்பவுமே லூசா? இல்ல எப்பவாச்சும் தான் இப்படியா?" என லாவண்யா கேட்க சுரேஷ் சிரித்தான்.


பின் அவளே அவன் நாயகன் பற்றி கூற இருவரும் அமைதியாக கேட்டனர்.
மீண்டும் சந்தேகம் என பிரதாப் கைதூக்க, "மறுபடியும் என்கிட்ட வாங்கி கட்டிக்காதே" என லாவண்யா எச்சரித்த பின் அமைதியானான்.


லாவண்யா கையில் இருந்த சுரேஷ் மொபைலில் ஜோதியை பார்க்க எங்கோ பார்த்த முகமாக தோன்றியது.


பின் வாழ்த்துக்கள் கூறிவிட்டு வந்தவர்களை கவனிக்க சென்றுவிட்டாள் லாவண்யா.


இப்படியே நாட்கள் நகர அவள் வந்து ஒருவருடம் முடிந்தது. வாரத்திற்கு ஒருமுறை சந்தித்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பும் விரிந்தது.


இடையில் பிரதாப் சொந்தமாக ஆபீஸ் ஆரம்பித்து கொள்ள இடைவெளி தேவை என லண்டன் சென்று விட்டான்.


ஜோதியிடம் சுரேஷ் லாவண்யா பற்றி கூற அவளும் ஜோதியுடன் போனில் பேசினாள். மூவருக்கும் நல்ல நட்பு வளர்ந்தது.


ஜோதி லாவண்யா நம்பர் கேட்டு வாங்கி கொண்டாள். இருவரும் பேசி நட்பை வளர்த்து கொண்டனர்.


சில மாதங்கள் கடந்திருக்க ஜோதி சுரேஷிடம் விக்ரம் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அந்த பெண்ணை பற்றி அம்மாவிடம் பேசியதாகவும் கூறியவள் விக்ரம் அனுப்பிய போட்டோவை சுரேஷிற்கு அனுப்பினாள்.


ஞாயிறு மதியம் லாவண்யா சாப்பிட சுரேஷை வெளியே அழைக்க அவனும் வருவதாக கூறினான்.


காலையில் ஜோ கூறியதும் போட்டோ பார்த்தும் குழம்பினான் சுரேஷ்.


ஏனோ விக்ரமிற்கு அந்த பெண் ஏற்றவள் என்று அவனுக்கு தோன்றவில்லை.


லாவண்யா வந்த பின்னும் அவன் அதே குழப்பத்தில் இருக்க சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவள்,


"என்ன சுரேஷ் அமைதியா இருக்கிற? ஏதாச்சும் ப்ரோப்லேம்மா? என்கிட்டே சொல்லலாம்னா சொல்லு" என கூறினாள்.


அவனும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஜோதி சொன்னதை கூறியவன் அவள் அனுப்பிய 'உமா' என்ற பெண்ணின் புகைப்படத்தையும் காட்டினான்.


"இதுக்கு ஏன் உனக்கு இவ்ளோ கண்பியூசன்? அவங்களுக்கு புடிச்சிருக்கு அப்புறம் என்ன? நீயா ஏன் குழப்பிக்குற? " என கேட்க அப்போதும் தெளியாமல் தலையாட்டினான்.


சிறிது யோசித்து "பொண்ணு ஏற்றவள் இல்லனு சொல்றியே உன் பிரென்ட் போட்டோ காட்டு. எப்படி இருக்காங்கனு பாக்கலாம்" என விளையாட்டாக கேட்டாள்.


அவளை முறைத்தவன் தன் நண்பன் புகைப்படத்தை காட்டினான்.


அவனை கலாய்க்க வேண்டும் என சிரித்து கொண்டே மொபைலை வாங்கியவள் பார்த்ததும் துடித்து போனாள்.


காதல் தொடரும்..
 

New Episodes Thread

Top Bottom