• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 24

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 24


ரிதுவிற்கும் ஆனந்த்திற்கும் அடுத்த நாட்களில் இருந்து நாட்கள் சாதாரணமாகவே சென்றது.


முன்பு போல முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை அதற்காக சேர்ந்து கொள்ளவும் இல்லை.


முகம் கொடுத்து நட்பாக பேசும் அளவு அவர்கள் உறவு சுமூகமாக சென்றது.


விக்ரம் லாவண்யா இருவரும் காதலர்களாக சுற்ற முடியாத குறையை திருமணத்திற்கு பிறகு அனுபவித்து வாழ்ந்து வந்தனர்.


ரிது ஆனந்த் ரிசெப்சன் எந்த குறையும் இன்றி நல்லபடியாகவே முடிந்தது. இனி இது தான் தன் வாழ்க்கை என முடிவு செய்ததால் அதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.


சுரேஷ், தந்தை பிசினஸ்ல் முழு ஈடுபாடு கொண்டு திறம்பட செயல்படத் தயாராகிக் கொண்டிருந்தான்.


சுரேஷ் பிசினஸ்ஸில் முதல்வெற்றி கிடைத்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி அவர்களுடன் ஹோட்டல் செல்ல முடிவு செய்தான்.


ஜோதியும் வர வேண்டுமே அதனால் இதை ஃபேமிலி பார்ட்டியாக மாற்றி அவனுடைய வீட்டிலேயே சிம்பிள்ளாக வைத்து கொள்ளலாம் என மாற்றி கொண்டான்.


சுகன்யா ரகு இருவரும் ஆனந்த் ரிது சிறிது மாறி இருப்பதை உணர்ந்தனர். அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி அவர்கள் பார்ட்டிக்கு வரவில்லை என கழண்டு கொண்டனர்.


ஆனந்த் கிளம்பி கட்டிலில் அமர்ந்து ரிது கிளம்பும் அழகை பார்த்துக் கொண்டிருந்தான்.


"2 ஹார்ஸ் ஆகுது இன்னும் நீ கிளம்பின மாதிரி தெரியல அம்மு".


"ஹலோ பாஸ்! தி கிரேட் பிஸினஸ்மேன் ஆனந்த் வைஃப்னா சும்மாவா? வரேன் பாஸ்" என்றவளிடம்,


"ஹ்ம்ம் சரிங்க மேடம்" என்று சிரித்தவன் அவள் அருகில் சென்று நிற்க, அவள் கண்ணாடியின் முன் நின்று தயாராகி கொண்டிருந்தாள்.


"எனக்கொரு டவுட் பாஸ்"


"என்ன".


"ஜோதியும் உங்க பிரண்ட் சுரேஷ்ஷும் விரும்புறாங்களா?"


"ஹேய்ய்! உனக்கு எப்படி தெரியும்? ஜோதி சொல்லிட்டாளா?" என்றான் ஆச்சர்யமாக.


"ஹ்ம்ம் அப்ப உங்களுக்கு தெரியும்! என்கிட்டே வேணும்னு தான் சொல்லலை. அப்படி தானே?" என கோபமாக கேட்க,


"ச்ச! ச்ச! என்ன அம்மு? வேணும்னு எல்லாம் மறைக்கலை டா! அன்னிக்கு பீச் போனோமே அப்போது தான் எனக்கே தெரியும். அவன் ஒன்னும் என்கிட்ட சொல்லலை. தற்செயலா அவன் பேசினது கேட்டேன். அவ்வளோ தான். சரி உனக்கு எப்படி தெரியும் சொல்லு".


"இல்லை நானும் அன்னைக்கு தான் பார்த்தேன். அவங்க 2 பேரும் கவனமா இருந்தாலும் அடிக்கடி கண்ணால பேசினத பார்த்தேன். அதான் எனக்கு ஒரு டவுட். உங்களுக்கு தெரியுமானு கேட்டேன்".


'நான் வாயால பேசினாலும் கண்டுக்க மாட்ட! ஊருல கண்ணால் பேசுறதெல்லாம் தெரியும். கடவுளே!' என நினைத்து கொண்டவன்
"ஒஹ்" என்றான்.


பின் விக்ரமிற்கும் தெரியும் என பட்டும் படாமல் சொல்லி வைத்தான்.


ஒஹ் என்றவள், "அப்புறம் இன்னொரு விஷயம் கேட்கணும்" என்றாள்.


"நீ என்ன வேணாலும் சொல்லு அம்மு. நான் கேட்டுட்டே இருப்பேன். தயங்காதே".


"அதெல்லாம் ஒன்னும் இல்லை. லாவண்யாக்கு சுரேஷ் எப்படி தெரியும்?" என்று கேட்க,


"இதென்ன கேள்வி? அவனும் விக்ரம் லாவண்யா ரிசெப்ஷன் வந்தான் தானே! அப்பவே தெரியுமே" என்றான்.


"ப்ச் நோ! அவங்க ரெண்டு பேருமே முன்னாடியே தெரிஞ்சவங்க. ஐ மீன் ஒருத்தருக்கு ஒருத்தர் முன்னாடியே கண்டிப்பா தெரிஞ்சிருக்கனும்".


"எப்படி சொல்ற அம்மு? புரியல?"


"ஹ்ம்ம் கூடவே இருக்க பிரண்ட்ஸ் பத்தி எதுவும் தெரியல. யாருன்னே தெரியாத பொண்ண பத்தி மட்டும் டாப் டு பாட்டம் தப்பா தெரிஞ்சி வச்சிக்கோங்க" என்று அவள் குற்றம் சாட்டி கூறியதில் முகம் சுருங்கி போனான் ஆனந்த்.


அதில் தன்னையே திட்டிக் கொண்டவள் வருந்தி பேச்சை மாற்றினாள்.


"அவங்க ரெண்டு பேரும் எப்படி ஜாலியா பிரண்ட்லியா பேசிக்கிட்டாங்க பாத்திங்களா? கண்டிப்பா இது சில நாள்ல தெரிஞ்சவங்க பேசின மாதிரி இல்லை".


"நீ இவ்ளோ நோட் பண்ணியா?" ஆனந்த்.


"ப்ச்! நீங்க என்ன பன்னிட்டு இருந்தீங்க இதெல்லாம் பார்க்காமல்? " - ரிது


"உன்னை தான் பார்த்திட்டு இருந்தேன்" என்றவனை முறைத்தவள் ஏதும் சொல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தாள்.


'ஊர்ல இருக்கிற எல்லாரையும் நோட் பண்ணிருக்கா. பக்கத்துலயே எப்போ நம்மை பார்ப்பானு இருந்த நான் மட்டும் கண்ணுக்கு தெரியலையாம். இந்த பொண்ணுங்களே இப்படி தான் போல" என முணுமுணுத்துக் கொண்டே அவள் பின்னே சென்றான்.


காரில் இருந்து இறங்கிய ரிது ஆனந்த் சொல்ல வந்ததை கூட கவனிக்காமல் உள்ளே செல்ல தலையில் அடித்து கொண்டான்.


'புருஷன்னு ஒருத்தன் வந்தானே! அவன் பின்னாடி வர்றானானு கூட பார்க்காமல் டிரைவர் மாதிரி விட்டுட்டு போறா பாரு' என முனங்கி கொண்டே பார்க் செய்து விட்டு உள்ளே சென்றான்.


உள்ளே சென்றவள் லாவண்யாவிடம் பேசிக் கொண்டிருக்க, ஆனந்த், விக்ரம் சுரேஷ் உடன் இணைந்து கொண்டான்.


"என்னடா மூஞ்சில கலர் கலரா பல்ப் எரியுது. தங்கச்சிய சமாதானம் பண்ணிட்டியா" என விக்ரம் வம்பிழுக்க,


"வாயில நல்ல நல்ல வார்த்தையா வருது. எதாவது சொல்லிடுவேன். பேசாமல் போய்டு" என்று ஆனந்த் கூற 'பே' என முழித்த விக்ரமை பார்த்து சத்தமாக சிரித்தான் சுரேஷ்.


"ஏன் டா இவ்ளோ கோபம் உனக்கு?" என சுரேஷ் கேட்க,


"எல்லாம் இவனால தான் டா. ஐடியா குடுக்க சொன்னா பாழா போன ஐடியா குடுத்து எங்களை பிரிக்க பார்த்தான். கடைசியா அவளை சமாளிக்க போதும் போதும்னு ஆகிடுச்சு.இதுல என்னை பார்த்து இவனுக்கு நக்கல் வேற" என விக்ரமை முறைக்க, சிரித்து கொண்டிருந்த சுரேஷ் சட்டென ஞாபகம் வந்தவனாக அங்கிருந்து கழண்டு கொள்ள


"சரி டின்னர் ரெடியானு பார்த்துட்டு வரேன்.பேசிட்டு இருங்க" என சொல்லிவிட்டு நகர்ந்தான்.


அங்கு ஜோதி இல்லை என்பதை யாரும் கவனிக்கவில்லை.


லாவண்யா மற்றும் ரிதுவிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு ஆனந்த் விக்ரம் இருவரும் தோட்டத்து பக்கம் வந்தனர்.


"டேய் அவ சாதாரணமா பேசுறா டா. ஆனால் மனைவின்ற உரிமையை என்னால எடுத்துக்க முடியலை. நான் என்ன தான் பண்ணட்டும்" என ஆனந்த் நூறாவது முறையாக விக்ரமிடம் புலம்பினான்.


"உனக்கு சாமர்த்தியம் பத்தலை டா" என்றவனை முறைக்க,


"எனக்கு இப்போது பதில் வேணும். நீ ரிதுகிட்ட பேசு. வாய் கிழிய தங்கச்சி தங்கச்சினு சொல்லுவல்ல! உன் தங்கச்சி என்னை பத்தி என்ன நினைக்கிறானு எனக்கு இன்னைக்கு தெரியணும். எல்லா குழப்பத்துக்கும் நீ தானே காரணம்? ஒழுங்கா அவகிட்ட என்னை பத்தி பேசு" என விக்ரமை மிரட்ட


"டேய்! அதெப்படி டா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம என் மேல பழி போடுற. சனியன தூக்கி பனியன்ல போட்டது நீ. ஆனால் நான் ஜின்ஜர் சாப்பிட்ட மன்கி மாதிரி அவ முன்னாடி நிக்கணுமா? போடா" என்றவன், திரும்பி அவனை பார்த்து,


"என்னவோ அன்னைக்கு டயலாக்கெல்லாம் விட்ட? அவளை பாத்துட்டு இருந்தா போதும்! பக்கத்துல இருந்து தண்டனை தந்தா போதும்! அப்படினு. இப்போ மட்டும் என்ன? அப்படியே பார்த்துட்டு இருக்க வேண்டியது தானே?" என பொங்க ஆரம்பித்து விட்டான்.


இவன் பேசியதில் முன்பு நடந்ததெல்லாம் நினைத்து வருந்தினாலும் இப்போது இருக்கும் நிலையை தெளிவாக கூறினான்.


"அதுக்காக பக்கத்துல வச்சி பாத்துட்டே இருக்க முடியுமா? எனக்கும் ஆசை எல்லாம் இருக்கும்ல! முன்னாடி மாதிரி இருந்தா கூட பரவாயில்லை! அவ என்னை புரிஞ்சிகிட்டா டா. என்னை மன்னிச்சுட்டா. இப்போல்லாம் என்கிட்டே சரிக்கு சமமா பேசுறா! சண்டை போடுறா! சில நேரம் செல்லமா அடிக்க வேற செய்யுறா!. பின்ன நான் மட்டும் எப்படி கண்ட்ரோலா இருக்க முடியும்? எப்பாவது நான் தெரியாத்தனமா லூசு மாதிரி செல்ப் கண்ட்ரோல் மீறிட்டா? அதுக்கு தான் சொல்றேன். அவகிட்ட பேசி எங்களை சேர்த்து வச்ச புண்ணியமாச்சும் உனக்கு கிடைக்கட்டும்!"


என பேசிக் கொண்டே அவன் மாமரத்து கிளையை உயர தூக்க, தூரத்தில் ஜோதி சுரேஷ் கன்னத்தில் முத்தமிட்டு ஓடி கொண்டிருந்தது கண்ணில் பட்டது.


பார்த்தவன் அதிர்ந்து திரும்பி விக்ரமை பார்க்க அவன் தீவிரமாக கீழே குனிந்து மண்ணை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.


"மச்சி நீ இப்போ ஏதாச்சும் பார்த்த?" என அதே அதிர்ச்சியுடன் விக்ரமை கேட்க, அவனோ


"ஆமா டா! இங்க பாரு பட்டாம்பூச்சி" என காட்டினான்.


முதலில் உண்மையிலேயே பார்த்திருக்க மாட்டானோ என நினைத்தவன் பின் 'நீ பார்த்தாலும் பாக்கலைனு தானே டா சொல்லுவ' என்று வந்த வழி திரும்பி நடந்தான் விக்ரமுடன்.


காதல் தொடரும்..
 

New Episodes Thread

Top Bottom