• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 14

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 14


அன்றைய சடங்கு பற்றி தெரிந்தும் வேண்டுமென இரவு வெகு நேரம் கழித்து வீடு வந்தான் ஆனந்த்.


ரிது அவன் அறைக்கு சென்றவள், ஆனந்த் இன்னும் வராததால் சிறிது நேரம் காத்திருந்து பார்த்து பின் தூங்கிவிட்டாள்.


அன்றைய ஆனந்த், சுகன்யா உரையாடலுக்கு பின் ரிது மறந்தும் ஆனந்த் முன் போய் எதற்கும் நின்றது இல்லை.


அவனுக்கும் அதுவே தேவை என்பதால் அவனும் கண்டு கொள்ளவில்லை.


எனவே இன்றும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவன் அறைக்கு சென்றவள் காத்திருந்து தூங்கியும் போனாள்.


நேரம் கழித்து வந்தவன் யாரையும் அழைக்காது தன் கையில் இருக்கும் சாவி மூலம் கதவை திறந்து சென்று தன் அறைக்குள் தள்ளாடிய படி நுழைந்தான். உள்ளே பார்த்தவன் கடுங்கோபத்தில் கண்கள் சிவந்தது.


அறை முழுதும் அலங்காரம் செய்திருக்க, தன் அறையில் தன் கட்டிலில் படுத்து உறங்கியிருந்தாள் ரிது.


எப்போது அவளிடம் தன் கோபத்தை காட்டலாம் என் எண்ணியிருந்தவன், இன்று அதுவும் பெரியவர்களின் விருப்பத்தால் தான் அவன் அறைக்கு வந்தவளிடம் தன் மற்றொரு முகத்தை காட்டினான். அதுவும் தேவை இல்லாத காரணத்தால்.


தூங்கிக் கொண்டிருப்பவளை எப்படி எழுப்ப என பார்த்தவன் தன் மொபைலை அதிக சத்தத்தில் அலற விட்டான். அவன் நினைத்தது வீண் போகவில்லை. அடித்துபிடித்து எழுந்து நின்றாள் அவள்.


அதே முறைத்த முகத்துடன் அவளை பார்த்து கொண்டிருந்தான். தூக்க முகத்தில் முதலில் தடுமாறியவள் பின் தெளிந்து நேராக நின்றாள் அவன் முன்.


ஏன் இப்படி நிற்கிறான் என புரியாமல் விழித்தவளிடம், "இது என்னோட பெட், உன்னை யார் இதில் படுக்க சொன்னது" என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.


இதென்ன கேள்வி என்றே தோன்றியது ரிதுவிற்கு. கூடவே சிறுபிள்ளை தனமாகவும்.


"உன்கிட்ட தான் கேட்டேன்" என திரும்பவும் கூற,


"அத்தை தான்..." என்று இழுத்தவளின், முகத்தை பார்த்து


"அவங்க ஆயிரம் சொல்வாங்க உனக்கு புத்தி வேணாம்" என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.


அந்த கூர் பார்வையில் தான் அவன் கண்களின் சிவப்பின் காரணம் புரிந்தது.


அப்போது தான் அவன் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.


"நீங்கள் குடிப்பிங்களா?" என்றவளிடம், உளறலாகவே அனைத்தையும் கொட்டினான். அதை தெளிவாய் கொட்டி இருந்தால் பரவாயில்லை எனும் அளவு இருந்தது அவன் உளறல்.


"உன்னால தான், எல்லாம் உன்னால தான். என் வாழ்க்கைல எனக்கு பிடிக்காம இப்ப நடக்குற எல்லாம் உன்னால மட்டும் தான்" என்றான் குழறலான குரலில்.


இன்று ஒருநாள் அவன் வாயை திறக்காமல் இருந்திருந்தால் அவன் வாழ்க்கை அடுத்த நாளே பாலைவனம் மாறி பூக்கள் பூக்க மாறியிருக்கும். ஆனால் நடப்பது நடந்தே தீரும் தானே.


அவள் பேசுவாள் இன்றே அனைத்தையும் கொட்டிவிட வேண்டும். தன் பக்கம் திரும்பாதவாறு பேசிவிட வேண்டும் என நினைத்தான்.


ஸ்டடியாக வந்தால் அவனால் அதை பேச முடியாதே! சுகன்யா வளர்ப்பு ஆகிற்றே!. அதற்காகவே குடித்திருந்தான். இல்லை இல்லை பாட்டிலை முகர்ந்து தன் மேலும் ஊற்றி இருந்தான்.


குடியின் மனமே பிடிக்காத ஒருவனுக்கு முகர்ந்தால் வருமே ஒரு போதை நிலை.. அந்த நிலை தான் இப்போது நின்றிருக்கும் ஆனந்த் நிலை.


பார்ட்டிகளில் கூட அந்த கிளாசை தொடாதவன் மனதில் இருக்கும் தீயை யாரிடமும் சொல்லி அழிக்கவோ அணைக்கவோ முடியாமல் குடியை நாடி, அதுவும் கடைசியில் சொதப்பி, முகர்ந்த வாடையே ஒற்றுக் கொள்ளாமல் கேர்ரான நிலைக்கு அவனை இழுத்து சென்றிருந்தது.


இது அறியாத ரிதுவோ மொத்தமாய் வெறுத்து போயிருந்தாள் அந்த நொடியில்.


'உன்னால் தான் குடித்தேன்' என்ற பதிலில் அவன் தன்னால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று நினைத்து அதிர்ந்தவள் ஒரு தலையணை எடுத்து கீழே போட்டாள்.


இதை எதிர் பார்க்காதவன் அவளை உறுத்து விழித்தான். அப்போதும் அவள் கண்டுகொள்ளாமல் போக,


"எனக்கு ஒரு பதில் வேண்டும்" என்றான்.


என்ன என்ற பார்வையை அவள் வீச, "எனக்கு விக்ரம் தெரியும் நம்பர் ஒன், ஆனால் அடுத்து நீ பிடித்த அந்த அப்பாடக்கர் நம்பர் டூ யாருனு தெரியணும்"


"அது மட்டும் இல்லை இன்னும் உன் லிஸ்ட்ல வச்சிருந்தது எத்தனை பேர்னும் தெரியணும்" என்று தெளிவாகவே கூறினான்.

"நானும் பணக்காரன் தான்! ஆனால் நீ நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த் இல்லையே? அப்புறம் எப்படி இந்த
கல்யாணத்துக்குசம்மதம் சொன்ன?
இப்ப நீ சொல்லியே தீரணும்" என்று வார்த்தைகளை வீசினான்.


இது ரிதுவிற்கு மிகப் பெரிய வலி. வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி அவன் கொடுத்த தண்டனை.


ஏற்கனவே அவன் ஆபீசில் கேட்ட, "இப்போது பிடித்திருக்கும் பணக்காரன் விஜயன்" சரியான நேரத்தில் ஞாபகம் வந்தது.


அவளுக்கு இப்போது அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.


இவன் இன்னும் தன்னை பற்றிய அபிப்ராயத்தை மாற்றவில்லை. இப்போதும் என்னை பற்றி என்னிடம் ஏதும் கேட்காமல் அவனாக முடிவு செய்துள்ளான் என்று எண்ணிக் கொண்டிருக்க,


ஆனந்த் ஒரு ஏளன சிரிப்புடன் அவளை பார்த்து, "என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா? எண்ணவே முடியாது போல!" என்றான் கேலியுடன்.


அவனுக்கு இப்போது இருக்கும் நிலையில் பதில் சொன்னால் புரிந்து கொள்ளவும் முடியாது. அதையும் மீறி காலையில் மறந்து, நாளையும் இதே கேள்வி கேட்பான் என்று தோன்ற, இதை இப்படியே விட கூடாது. நாளைக்கே பேசி விட வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.


அவனை சமாதானப்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை. ஆனால் தெளிவுபடுத்த வேண்டும். தன் வாழ்க்கை தான் என்ன? என்று நாளையே முடிவும் செய்ய வேண்டும் என எண்ணி கொண்டாள்.


அவனை ஒரு பார்வை பார்த்தவள் கண்களில் ஒரு படி இறங்கி போனான். அவன் எப்போதும் குடிப்பது இல்லை. அதற்காக பார்ட்டிகளில் குடிப்பவனும் கூட இல்லையே!.


அவள் தன்னை பார்த்த பார்வையில் அவமானப்பட்ட உணர்வு. ஏதோ தினமும் குடித்து விட்டு வரும் குடிகாரனை பார்ப்பது போல அற்ப பார்வை.


அதை அவனால் தாங்கவும் முடியவில்லை. ஏனோ அதற்கு மேல் பேச தோணாது அப்படியே படுத்துவிட்டான்.


விடிந்து சில மணி நேரங்கள் பின்னே தான் முழிப்பு வந்தது ஆனந்த்திற்கு. நேற்று நடந்தது கண் முன் வர தலையை பிடித்து கொண்டு எழுந்தான்.


நேற்று அதிகப்படியாக பேசி விட்டோமா என்று நினைத்தவன் பின் இல்லை இப்படியே எத்தனை நாட்கள் கடக்க முடியும். என்றாவது கேட்க வேண்டியது தானே என்று நினைத்து குளியல் அறைக்குள் நுழைந்தான்.


தங்களுக்குள் இருக்கும் மனஸ்தாபத்தை வெளியே கூற தோன்றவில்லை ரிதுவிற்கு. அதற்கு அப்பாவும் ஒரு காரணம்.


அத்தை மாமாவிற்கு கூட தெரிய வேண்டாம் என நினைத்தவளுக்கு ஏனோ அன்று அன்னை மடியில் படுத்து ஆறுதல் தேடிய குழந்தை இவன் தானா? என்று தோன்றியது.


எப்போதும் போல அவன் அறைக்கு காபி கலந்து கொண்டு சென்றவள் அங்கிருந்த டீப்பாயில் வைத்து விட்டு திரும்பினாள்.


பின் அவனிடம் இப்போதே பேசி விடலாம் என அவன் வருகைக்காக காத்திருந்தாள்.


வெளியே வந்தவன் அவள் இருப்பதை கண்டு கொள்ளாதது போல அவளை கடந்து சென்றன்.


அவனுடன் பேச பின்னால் சென்றவள் அவன் குளித்து விட்டு ஈரக் கால்களுடன் வந்ததால் அதில் மிதித்த ரிது கீழே விழ போனவள் முன்னாள் சென்ற தன் கணவன் பின்னால் முதுகிலேயே சாய்ந்தாள்.


ஒரே ஒரு நொடி தடுமாறியவன் அடுத்த நொடியில் சுதாரித்து விலக முனைய அதற்கு முன் சுதாரித்த ரிது உடனே விலகினாள்.


"லுக் இந்த மாதிரி சீன் க்ரியேட் செய்து என்னையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்து விட நினைக்க வேண்டாம். என்னை பத்தி உனக்கு தெரியாது. உன்னை பத்தி நீயே இங்க இருக்கிற எல்லார்கிட்டையும் சொல்லி அவங்களே உன்னை இந்த வீட்ட விட்டு அனுப்ப வைக்கிறேனா இல்லையா பாரு"


எடுத்ததும் அவன் எகிறிக் கொண்டு வர, ரிதுவிற்கு தோன்றியதோ


'பரவாயில்லை நேற்று பேசியதை அவன் மறக்கும் அளவுக்கு குடிக்கவில்லை' என்பதே!.


ஆனால் இப்போது கோபமும் சேர்ந்திருந்தது ரிதுவிற்கு. எல்லாம் அவனே முடிவு செய்து கொள்வதா? என்று. நிதானமாக பேச வந்தவள் பொங்கி ஏழ இவனே வழி வகுத்தான்.


"ஷட் அப் ஆனந்த்! என்ன விட்டா பேசிட்டே போறீங்க. ஆபீஸ்ல தான் ஏதோ தெரியாம உளறுறிங்கனு பார்த்தால் இன்னும் என்னை பத்தி எதுவும் தெரியாமலே ஏதோ பெரிய தியாக செம்மல் மாதிரி அப்பா சொன்னாங்க, ஆயா சொன்னாங்கனு தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டு நீங்க என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா?"


என்று கோபத்தில் பொரிய, அவனுக்கோ என்ன தைரியம் என்று மட்டுபட்ட கோபம் துளிர் விட்டது.


யாரேனும் ஒருவர் அமைதி காத்திருந்தால் அல்லவா பிரச்சனை முடிவுறும்? திரும்ப ஏதோ சொல்ல போனவன் ரிது என்ற தன் அன்னையின் குரலில் கோபத்தை அடக்க முடியாமல் பக்கத்தில் இருந்த டீப்பாவை நோக்கி கால்களை உதறினான்.


அதற்கு கொஞ்சமும் குறையாத கோபத்துடன் அவனை முறைத்த படி அறையில் இருந்து வெளியேறினாள் ரிது.


என்ன தான் மறக்க முயன்றாலும் ஆனந்த் பேசி சென்றது ரிதுவை வதைத்து கொண்டே இருக்க, தலைவலி என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றாள்.


அங்கு டீப்பாயில் அவள் வைத்திருந்த காபி அவன் உதைத்ததில் கீழே கொட்டியிருக்க, அதை அப்புறப்படுத்தியவள் 'இவனுடன் தன் வாழ்வு தான் என்ன?' என்று யோசித்து கொண்டிருந்தாள்.


'சந்தேகப்படுகிறான், குடிக்கிறான், இதை விட என்ன மோசம் இருக்கிறது உலகில்?'. யோசிக்க யோசிக்க தலைவலி அதிகமாகவே அப்படியே தூங்கியும் போனாள்.


மதியம் எழுந்தவள் சுகன்யாவிற்காக சாப்பிட்டேன் என்று பேர் பண்ணி எழுந்தாள். பின் தோட்டத்தில் அமர்ந்திருக்க ஆனந்த் கார் உள்ளே வருவது தெரிந்தும் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.


அவனும் பார்த்தும் "திமிர் பிடித்தவள்" என்று முறைத்து கொண்டு சென்றான்.


ரகு சொல்லி விட்டதால் வேறு வழி இல்லாமல்தான் வீட்டிற்கு வந்தான் ஆனந்த். அவனுக்கு விக்ரம் ரிசெப்சன் செல்ல மனம் இல்லை.


ஏனோ அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் இவளுடன் வேறு செல்ல வேண்டுமாம் என பொறுமிக் கொண்டு தான் வந்தான்.


எப்படி அங்கு இருப்பவர்களுக்கு விளக்கம் சொல்வது என்று யோசித்து கொண்டே சோஃபாவில் அமர, சுகன்யா காபி கொண்டு வந்து கொடுத்தார்.


"ஏன் மா மகாராணி இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டாங்களா?" என்று ஏற்கனவே இருந்த கோபத்தில் அம்மாவிடம் பேசுகிறோம் என்று மறந்து கூற,


"உனக்கு என்ன தான் ஆனந்த் பிரச்சனை?" என்று கோபமாகவே அவரும் கேட்ட பின் தான் உணர்ந்தான் தன் தவறை.


அவன் ஏதும் பேசாமல் அமைதியாகி விட,


"நான் ஒன்னு சொல்லவா? உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனைனு எனக்கு தெரியும். ஆனால் அந்த பொண்ணு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லல. ஏன் அப்படி எதையும் காமிச்சுக்க கூட இல்லை எங்ககிட்ட. ஆனால் நீ தான் ரொம்ப பண்ற" என குற்றம் சாடினார்.


'அவ மேல தப்பு இருக்கும் போது அவ அப்படி தானே நடந்துக்கனும்' என்று அவன் நினைத்து கொண்டிருக்க,


"எனக்கு என்னவோ பயமா இருக்கு ஆனந்த்"என்ற அன்னையின் குரலில்,


"ம்மா" என்று அவன் சலிப்புடன் கூற.


"இல்ல ஆனந்த்! நீ திறமைசாலி தான். உனக்கு எல்லாம் தெரியும் தான். ஆனால் உங்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம் எதையும் யோசிக்காம அப்படியே அடுத்தவங்க முடிவ ஏத்துக்கிட்டு நீ முடிவு எடுக்கறது தான். அதான் எனக்கு பயமே" என்றார்.


இப்போதும் தன் அன்னையை தனக்கு எதிராக பேச வைத்து விட்டாள் என்ற எண்ணமே கோபத்தை உண்டாக்க,


"ரிசெப்சன் போனும் மா. நான் போய் ரெடியாகுறேன். யார்லாம் வர்ராங்களோ கிளம்பலாம்" என்று சொல்லி அறைக்கு சென்றான்.


"இவன் எப்ப இப்படி ஆனான்?" என்று வருத்தம் கொண்டவர் ரிதுவை அழைத்து ரெடியாகுமாறு கூறினார்.


எங்கு எதற்கு என்று கேட்காமல் அவளும் சரி என்று சென்று விட, ரிதுவிற்காக வருந்தியவர் ரிசப்சன் என்று மட்டுமே சொல்லியிருந்தார்.


ரிது மேலே செல்ல குளித்து விட்டு வந்தவன் அவன் வேலையில் மும்மரமாக, ரிது தன் உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறையில் புகுந்து கொண்டாள்.


குளித்து புடவையுடன் வெளி வந்து கண்ணாடி முன் நிற்க, சுகன்யா வந்து பரம்பரை நகை என்று ஒரு பெட்டியை கொடுத்து இதை அணிந்துதான் வர வேண்டும் என்று சென்றுவிட வேறு வழி இல்லாமல் தலை ஆட்டி வைத்தாள்.


பால்கனியில் போன் பேசிக்கொண்டு இருந்த ஆனந்த் இதை கவனிக்கவும் இல்லை.


அவள் நகைகள் போடவும் இது தனக்கு அதிகப்படியோ என்று அவளுக்கே தோன்றியது.


சரி கீழே சென்று பேசி பார்க்கலாம் என்று திரும்ப, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த்.


அவள் நகை அணியும் முன்னே வந்தவன் ஒரு நிமிடம் அவளை ரசித்தது என்னவோ உண்மை தான்.


அடர் பச்சை நிற பட்டும், தலையிலிட்ட மல்லிகை வாசமும் அறை முழுதும் வீச, ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்தவன் மனநிலை அவள் நகை அணியும் நேரம் அவன் மாறியது.


சரியாக அப்போது அவளும் திரும்ப, ஏளன பார்வையை கண்ணில் கொண்டு வந்தவன், "இதுக்கு தான் இந்த ட்ராமாவா" என்றான்.


அவன் சொல்ல வருவது புரியாமல் அவள் பார்க்க,


"எங்க அம்மா நான் பேசும் முன்னே உனக்காக பேசினாங்க. அப்பவே புரிஞ்சிருக்கனும் நீ ஏதோ பிளான் பண்ணிட்டனு! ஆனால் பாரேன் என் மூளைக்கு இப்போது தான் தெரியுது. இந்த நகைக்காக தான் எங்க அம்மாவை எனக்கு எதிரா பேச வச்சனு?" என்று தேளாய் கொட்டினான்.


'அடப்பாவமே!' என்றே நினைக்க தோன்றியது பெண் அவளுக்கு.


கிளம்பும் நேரத்தில் இவனுடன் வாதம் பண்ண தெம்பில்லை என நினைத்து நகர பார்க்க விடுவேனா என முன் வந்து நின்றான்.


"ப்ச் இப்ப என்ன தான் வேணும்?" என அவளும் கோபத்தை கட்டுப்படுத்தி கேட்க,


அவனோ "நகையோட ஓடுறது தான் உன் திட்டமா" என்றதும் அவள் பொறுமை அனைத்தும் எருமையில் போனது.


"ஷட் அப் மேன். ஆர் யூ நார்மல்?" என்று கேட்க, அவ்வளவு தான் இதுவரை பார்த்திராத, அவன் அன்னை கூட அறிந்திராத ஆனந்த் வெளிவந்தான்.


"யாரை பார்த்து நார்மல்னு கேட்ட" என்றவன் அவன் செயலை அவனே உணரும் முன் அறைந்திருந்தான்.


இப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத ரிதுவும் அதிர்ந்து கன்னம் தாங்கி அப்படியே நின்றிருந்தாள்.


வாக்குவாதத்தில் இருவர் சத்தமும் அதிகமாய் கேட்டிருக்க, கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டதில்,


"ஷிட்" என்று காலை உதறியவன் தலையை அழுந்த கோதி கதவை திறந்து யார் இருக்கிறார் என்று கூட பாராமல் வெளியே பைக் எடுத்து கொண்டு சென்றுவிட்டான்.


இதற்கு இடையில் விஜயனை பாண்டியன் பெயிலில் வெளியே எடுத்திருந்தார்.


இதுவரை தன்னை கண்டு கொள்ளாத ஆனந்த் முதல்முறை ஜெயில் வரை அனுப்பியிருக்க, பழிவாங்கும் வெறியில் வேட்டை நாயாய் அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான் விஜயன்.


அந்த வலையில் விழப் போவது யாரோ???


காதல் தொடரும்...
 

Rajam

Well-known member
Member
ஏற்கனவே ஆனந்த் ரிதுவ தவறா நினைக்கிறான்.
இதுலவிஜயன் வேற பழி வாங்க வந்துட்டான்.
ரிது பாவம்.
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆத்திரத்தையும் கோபத்தையும் ஆனந்த் அடக்க அடக்க அதுவே வெளிவந்து ரிதுவை தேளாய் கொட்டுகிறது..

இப்படி ஆனந்த் மாறுவான் என்று நினைக்கவே இல்லை...

ரொம்ப மோசம் சிஸ்..
 

ரித்தி

Active member
Member
ஏற்கனவே ஆனந்த் ரிதுவ தவறா நினைக்கிறான்.
இதுலவிஜயன் வேற பழி வாங்க வந்துட்டான்.
ரிது பாவம்.
Keep reading sis
 

ரித்தி

Active member
Member
ஆத்திரத்தையும் கோபத்தையும் ஆனந்த் அடக்க அடக்க அதுவே வெளிவந்து ரிதுவை தேளாய் கொட்டுகிறது..

இப்படி ஆனந்த் மாறுவான் என்று நினைக்கவே இல்லை...

ரொம்ப மோசம் சிஸ்..
நிலைமை மோசம் தான்
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom