• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 10

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 10


விக்ரம், ஆனந்த் இருவருமே மனம் சரி இல்லாத போது அந்த பார்க்கில் தான் இருப்பார்கள்.


அவனுக்கு முன்பே இன்று லாவண்யா வந்துவிட்டிருக்க வந்தவன் சிறியதாய் சிரித்து வைத்தான்.


இவளே "ஹாய்" என்றாள் முதலில். அவனும் "ஹாய்" என்று விட்டு அங்கிருந்த கல் பென்ச்சில் அமர்ந்தான்.


அவனே ஆரம்பிக்கட்டும் என அமைதியாகினாள் லாவண்யா. சிறிது நேரத்தில் அவனே ஆரம்பித்தான்.


"ஏன் லாவண்யா! என் மேல் இருக்கும் இரக்கத்தை என்னை கல்யாணம் செய்து தான் காட்டணுமா?".


சிரித்து விட்டாள் அவள். "நான் எப்போ உங்ககிட்ட இரக்கம் காட்டுறதா சொன்னேன்?".


"சொன்னால் தான்னு இல்லையே! என்னை ஹாஸ்பிடல்ல அந்த நிலைமையில பார்த்த அப்புறமும் நீங்க காதலித்து தான் என்னை ஏத்துக்குறதா சொன்னா.... உங்கள் அளவுக்கு எதிலுமே நான் தகுதியில்லாதவன்" என்று விக்ரம் இழுக்க.


"விக்ரம் உயிருக்கு போராடுறவங்கல காப்பாத்துறது என்னோட கடமை. அது மட்டும் இல்ல, இன்னொரு பெண்ணை காதலித்து ஏமாறுறது.. அதுல வர்ற வலி... அதை இரக்கம்னு நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க".


"அப்றம் தகுதியா? நான் டாக்டர் அதை தானே சொல்றிங்க. அது என் அப்பாவினால வந்தது. நானும் சாதாரண பொண்ணு தான்".


"இல்ல லாவண்யா! உங்களுக்கு புரியல. நான் வேற... நீங்க வேற.. உங்கள் அளவுக்கு வசதியோ, நீங்க நினைக்கிற வாழ்க்கையோ என்னால வாழ வைக்க முடியாது!" விக்ரம்.


"விக்ரம் ப்ளீஸ்! உங்கள ஒரு பொண்ணு பணத்துக்காக ஏமாத்தியிருக்கலாம். அதுக்காக நானும் அப்டியே இருப்பேனு நினைக்கிறது எந்த விதத்தில நியாயம்? எனக்கு மாளிகை வீடோ, ஆடம்பர வாழ்க்கையோ தேவை இல்ல. உங்களோட எந்த இடத்துல இருந்தாலும் நான் அங்க சந்தோசமா இருப்பேன்" கோபமாக ஆரம்பித்தவள் உணர்ச்சி வசத்திலே பேசி முடித்தாள்.


விக்ரம்"என்ன மாதிரியான பெண் இவள்?" என்று பார்த்திருந்தான்.


"இதை இப்போ சொல்ல வேண்டாம்னு தான் நினச்சேன். சொல்லாம விட்டால் தவறாகிடும்னு சொல்றேன்" என்றாள் லாவண்யா.


அவள் கூறுவதை கேட்க எந்த முகபாவனையும் காட்டாது அமர்ந்திருந்தான் விக்ரம்.


"நான் முதல்ல உங்கள மீட் பண்ணினது ஹாஸ்பிடல்ல இல்ல. மூணு வருஷம் முன்ன கொடைக்கானலில்" என்றாள். சத்தியமாய் அவன் முகத்தில் அதிர்ச்சி.


"ஒரே ஒருநாள் தான். அதுவும் 1 மணி நேரம் பார்த்திருப்பேனா? அதுவும் சந்தேகம் தான்! ஆனால் ஒரு நாளைக்கு 100 முறையாவது உங்களை நினைக்காத நாள் இல்லை" என்று கூற அவளின் காதலை அவள் கண்களில் கண்ணீராய் கண்டான்.


அவனால் நினைவுகூற முடியவில்லை! கொடைக்கானல் சென்றது சரிதான். ஆனால் இவள் எப்போது? என்று என்ன யோசித்தும் அவனுக்கு விளங்கவில்லை.


"என்னை பார்த்தது கூட உங்களுக்கு ஞாபகம் இல்லனு ஹாஸ்பிடல்ல நீங்க சாதாரணமா பேசும் போதே தெரிஞ்சுகிட்டேன்" அவள் கண்களில் வலி. அவனுக்கோ உறுத்தியது.


அதற்கு மேல் ஏதும் பேச தோன்றவில்லை.


"நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன் விக்ரம். அப்புறம் உங்கள் இஷ்டம்" என்றவள் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்தாள்.


"உமா உங்க வாழ்க்கைல எவ்ளோ முக்கியமா இருந்தாங்கனு எனக்கு புரிஞ்சிக்க முடியுது. பட் இனியும் அது மாறாதுனு நீங்கள் நினைச்சிங்கனா..... நான் உங்களை வற்புறுத்த மாட்டேன் விக்ரம்" அவள் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்க, பேச்சு குளறலாகவே வந்தது.


உமா என்றதும் அதிர்ச்சியானான் விக்ரம்!.


"எனக்கு உங்களை உங்களுக்காகவே புடிக்கும் விக்ரம். நீங்க இப்போ இருக்கும் மனநிலைக்கு ஜஸ்ட் இந்த சூழ்நிலை மட்டுமே தான் காரணம்னு எனக்கு தெரியும். இதை மட்டும் வச்சு என்னை தள்ளி வைக்கலாம்னு நினைக்காதீங்க விக்ரம் ப்ளீஸ்" என்றவள் உணர்வுகள் புரிந்தாலும், ஏதும் செய்ய வழி தெரியாதவனாய் தவித்து நின்றான் விக்ரம்.


அவளே தொடர்ந்தாள், "என்னோடான உங்களுடைய வாழ்வு உங்களுக்கு எவ்வளவு புடிக்கும்னு சொல்றத விட, உங்ககூட வாழ்ந்து உங்களுக்கு உணர்த்தனும்னு ஆசைப்படுகிறேன் விக்ரம். உங்களுக்கும் என்ன புடிக்கும்னு தோணினா மட்டும் கல்யாணம் பத்தி பேசலாம். இல்லனா கூட நான் உங்களுக்கு நல்ல தோழியா இருப்பேன்" என்று கூறி சிரித்தாள்.


'என்ன மாதிரியான பெண் இவள்!' என்று யோசித்து கொண்டிருந்தவனின் எண்ணமே இப்போது 'தான் அவளுக்கு தகுதியானவன் தானா?' என்று யோசிக்க ஆரம்பித்தது.


தன்னை பற்றி ஏதும் தெரியாமல் காதல் என்று உளறுகிறாள் என்று நினைத்தான்.


ஆனால் தான் காதலித்த பெண் தெரியும் என்கிறாள். தன்னை பற்றி அனைத்தும் தெரிந்து இருக்கிறாள்.


யோசிக்க யோசிக்க அவனுக்கு அனைத்தும் புதிதாகவும் புதிராகவும் இருந்தது.


ஏன் அவனுக்குமே இன்னும் தெரியவில்லை தானே எப்போது கொடைக்கானலில் அவளை பார்த்தோம் என்று.


அவள் கண்களில் தெரிந்த வலி அவனை மிகவும் இம்சித்தது.


மேலும் அவள் கூறிய "வாழ்ந்து உணர்த்துவேன்" என்ற வார்த்தை அவனையும் அதை கற்பனை செய்து பார்க்க தூண்டியது.


அவள் தன் பதிலுக்காக காத்திருப்பது கண்டு அவள் அருகே சென்றான்.


மிக அருகே நெருங்கியவனின் விழிகளை கண் இமைக்காமல் பார்த்தாள் பெண் அவள்.


அவள் கன்னங்களை கைகளில் ஏந்தியவன் கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்திருக்க,


"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்றான்.


சந்தோசமும் அதிர்ச்சியும் ஆன கலவையில் கண்ணீருடன் தலையை மட்டுமே ஆட்ட முடித்தது லாவண்யாவிற்கு.

"எனக்கு... நான் உன்ன காதலிக்கிறேனானு எல்லாம் தெரியல லாவி. உன்னோட அன்பும், காதலும் எனக்கு வேணும் தோணுது. நான் உன்னை சந்தோஷமா பாத்துப்பேன்னு மனசு சொல்லுது. உன்னோட காதலுக்கு என்னைக்கும் நான் உண்மையா இருப்பேன் லாவி"


என்று கூறி அவள் நெற்றியில் லேசாய் முட்டி கண்ணீருடன் சிரித்தான் விக்ரம். அவனின் 'லாவி' என்ற அழைப்பே அவன் காதலை பறைசாற்ற மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள் லாவண்யா.


விழியில் வழிந்த நீரை துடைத்தவாறே இருவரும் மனநிறைவுடன் திருமணம் குறித்து பேச வீட்டிற்கு சென்றனர்.


"நீ இல்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை!
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை!


தேய் நிலா ஆகிறேன்
தூரம் நீயும் போகையில்!
வா உலா போகலாம்
கூடல் கூடும் வேலையில்!


என் கண்ணின் சாரத்தில்
உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை
தோற்பிக்க தானோ?


கண்ணாடி நெஞ்சம் மேல்
உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை
சில்லாக்க தானோ?


ஏன் இனி தாமதம்
வா உடன் வாழ்ந்திட
நாட்களும் தீரும்முன்
சேர்வோம் வாழ்ந்திட".....



ரிது தன் வேலைகளை முடித்து இன்னொருவனின் ப்ராஜெக்ட் ஏரோர் (error) சரி செய்து கொண்டிருந்தாள்.


அவளிடம் எப்படி சொல்வதென தயங்கியபடி ஆபீஸ் உள்ளே நுழைந்தான் ஆனந்த்.


அவன் வருவதும் அறியாமல் அவள் வேலையில் மூழ்கியிருக்க, நேராக அவளிடம் வந்தவன், " ரிது" என்றான்.


தனக்கு பின்னே கேட்ட அவனது குரலில் தூக்கி வாரி போட எழுந்து தடுமாறி நின்றாள்.


"கொஞ்சம் வெளில போகணும் வாங்க" என்றான்.


பல நாட்களுக்கு பிறகு அவனின் "ரிது" என்ற அழைப்பு சந்தோசத்தை கொடுக்க மகிழ்ச்சியுடன் கிளம்பினாள்.


அஃபிஸியல் மீட்டிங் என்றால் அவன் செல்ப் டிரைவ் செய்ய மாட்டான். இது அவள் அறிந்ததே.


ஆனால் இன்று அவனே டிரைவ் செய்தான். இவளும் ஏதும் கேள்வி கேட்காமல் அருகில் அமர்ந்திருந்தாள்.


"ரொம்ப எமோஷனல் ஆகாதே ரிது. எல்லாம் நல்லதே நடக்கும்".


திடீரென ஆனந்த் கூற ஏதும் புரியாமல் விழித்தாள்.


அவனே தொடர்ந்தான், "நீ எவ்ளோ அக்டிவா பேசுறியோ அதே அளவு சீக்கிரம் நிலைமை மாறும். எல்லாம் உன் கையில் தான் இருக்கு".


காரில் ஏறும் போது இருந்த மனநிலை இப்போது முற்றிலும் மாறியிருந்தது ரிதுவிற்கு.


இதயம் அடித்து கொள்ள, "அப்பா... அப்பாக்கு என்ன ஆனந்த்? அப்பா எங்கே?" கண்ணீர் விழவா என காத்திருக்க அவள் அவனை ஏறிட்டாள்.


அந்த நிலையில் இதற்கு முன் நடந்த அனைத்தும் மறந்து போக, அவள் கைகளை ஆதரவாக பிடித்திருந்தான் ஆனந்த்.


அவளுடைய 'ஆனந்த்' என்ற அழைப்பு காதுகளில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை. ஏனோ அவள் கவலையை அவனால் தாங்க இயலவில்லை.


"ஒன்னும் இல்லை ரிது. மார்க்கெட்ல மயங்கி விழுந்துட்டாங்க. இப்ப ஹாஸ்பிடல்ல இருக்காங்க. டாக்டர் சின்னதா ஒரு ஆபரேஷன் பண்ணனும் சொல்றாங்க. அதுக்கு அங்கிள் மனதளவில் தைரியமா இருக்கனும். அது உன் கையில் தான் இருக்கு. நீ பாசிட்டிவா பேசினா தான் அங்கிள் தைரியமா இருப்பாங்க சோ நீ அழக்கூடாது ஒகேவா "


சிறு குழந்தைக்கு சொல்வதை போல அவன் அவளை தைரியப்படுத்திக் கொண்டு வந்தான்.


ஆனால் அவள் குழந்தை இல்லையே! அவளுக்கும் தந்தை பற்றி தெரியுமே! அப்பா, அப்பா என்று அழ ஆரம்பிக்க, ஆனந்திற்கும் கண்கள் பனிந்தது.


"மறு வார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு...
இமை போல நான்காக்க
கனவாய் நீ மாறிடு!


மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்...
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்!


விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென,
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண்ணானதே!


மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே....
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே!"



காதல் தொடரும்..
 

பிரிய நிலா

Well-known member
Member
இப்போ தான் ஆனந்த் காதலி சாரி சாரி முன்னாள் காதலியின் பெயரை கூறியிருக்கிறீர்கள்...

லாவண்யா செம க்ரேட்... கண்டிப்பா விக்ரம் வாழ்க்கை சூப்பரா இருக்கும்...

அடுத்து நம்ம ஆளுங்க தான்... என்ன நடக்குமோ.. பார்க்கலாம்..

இப்போ தானே ஹாஸ்பிட்டல் போறாங்க. ஆல்ரெடி அப்பா நிலைமை ஒரு அதிர்ச்சி என்றால் அடுத்து ஆனந்த் கொடுக்கும் அதிர்ச்சியை தாங்குவாளா பெண்மகள்...?
 

ரித்தி

Active member
Member
இப்போ தான் ஆனந்த் காதலி சாரி சாரி முன்னாள் காதலியின் பெயரை கூறியிருக்கிறீர்கள்...

லாவண்யா செம க்ரேட்... கண்டிப்பா விக்ரம் வாழ்க்கை சூப்பரா இருக்கும்...

அடுத்து நம்ம ஆளுங்க தான்... என்ன நடக்குமோ.. பார்க்கலாம்..

இப்போ தானே ஹாஸ்பிட்டல் போறாங்க. ஆல்ரெடி அப்பா நிலைமை ஒரு அதிர்ச்சி என்றால் அடுத்து ஆனந்த் கொடுக்கும் அதிர்ச்சியை தாங்குவாளா பெண்மகள்...?
ஏம்மா அது ஆனந்த் காதலி இல்ல நம்ம விக்ரம் காதலி 🙄🙄🙄..

Keep reading ma thank u💐💐
 

Baby

Active member
Member
இப்போ தான் ஆனந்த் காதலி சாரி சாரி முன்னாள் காதலியின் பெயரை கூறியிருக்கிறீர்கள்...

லாவண்யா செம க்ரேட்... கண்டிப்பா விக்ரம் வாழ்க்கை சூப்பரா இருக்கும்...

அடுத்து நம்ம ஆளுங்க தான்... என்ன நடக்குமோ.. பார்க்கலாம்..

இப்போ தானே ஹாஸ்பிட்டல் போறாங்க. ஆல்ரெடி அப்பா நிலைமை ஒரு அதிர்ச்சி என்றால் அடுத்து ஆனந்த் கொடுக்கும் அதிர்ச்சியை தாங்குவாளா பெண்மகள்...?
ஆனந்த் காதலியா......அவ விக்ரம் காதலி... ஆனந்தோட அவசரக்குடுக்கை தனத்துக்கு அவனுக்கு காதலி ஒன்னு தான் முக்கியம்
 

Baby

Active member
Member
பார்றா.... அடேய் ஆனந்த் நீ அவளை நெருங்கின அடுத்த செகண்ட் அவளோட விலகல் ஆரம்பிக்கும்டா...

வெயிட் அண்ட் வாட்ச்
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆனந்த் காதலியா......அவ விக்ரம் காதலி... ஆனந்தோட அவசரக்குடுக்கை தனத்துக்கு அவனுக்கு காதலி ஒன்னு தான் முக்கியம்
நல்லா சொன்னீங்க சிஸ்.. தெரியாமல் ஆன்ந்த்னு போட்டுட்டேன்...
ஒரு நம்பிக்கை இருக்கனும். இல்ல பொறுமையா விசாரிக்கனும். இல்ல யார்கிட்டயாச்சும் ஷேர் பண்ணனும். எதுவும் இல்ல...
 

பிரிய நிலா

Well-known member
Member
பார்றா.... அடேய் ஆனந்த் நீ அவளை நெருங்கின அடுத்த செகண்ட் அவளோட விலகல் ஆரம்பிக்கும்டா...

வெயிட் அண்ட் வாட்ச்
அதான்.. ரிதுவை எம்.டியா மிரட்டற மாதிரி கல்யாணம் பண்ணிட்டு மிரட்டலாம்னு நினைச்சா சங்கு தான்..
 

Baby

Active member
Member
எஸ்..... என்னனு கூட விசாரிக்காத இவன் பேசாம துறவறம் போனாலும் நல்லது
அதான்.. ரிதுவை எம்.டியா மிரட்டற மாதிரி கல்யாணம் பண்ணிட்டு மிரட்டலாம்னு நினைச்சா சங்கு தான்..

நல்லா சொன்னீங்க சிஸ்.. தெரியாமல் ஆன்ந்த்னு போட்டுட்டேன்...
ஒரு நம்பிக்கை இருக்கனும். இல்ல பொறுமையா விசாரிக்கனும். இல்ல யார்கிட்டயாச்சும் ஷேர் பண்ணனும். எதுவும் இல்ல...
அதே தான்
 

பிரிய நிலா

Well-known member
Member
எஸ்..... என்னனு கூட விசாரிக்காத இவன் பேசாம துறவறம் போனாலும் நல்லது



அதே தான்
ரித்தி சிஸ் வந்து பார்த்துட்டு தான் என்ன சொல்லப் போறாங்களோ.. வழக்கம் போல நம்ம ஹீரோ பாவம்னு சொல்வாங்க...
 

பிரிய நிலா

Well-known member
Member
ஏம்மா அது ஆனந்த் காதலி இல்ல நம்ம விக்ரம் காதலி 🙄🙄🙄..

Keep reading ma thank u💐💐
சாரி சாரி ஆத்தர்ஜி... டங்க் ஸ்லிப் ஆயிருச்சு... ஆனந்த் இல்ல ஆனந்த் இல்ல... விக்ரம் தான்..

கண்டிப்பா மீ கீப் ரீடிங் சிஸ்... நீங்க எப்போ எபி போடுவீங்கனு தான் வெயிட்டிங்...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom