• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 1

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 1


ஆனந்த் பெயருக்கு ஏற்ற இன்பம் பெற்றவன். வாழ்வை ரசிப்பவன். தந்தை ரகுராஜ் தாய் சுகன்யா அவர்களின் ஒரே மகன். MCA பட்டம் பெற்று எவ்வளவு பெரிய கம்பெனிகளின் அழைப்பையும் மறுத்து தந்தையின் மென்பொருள் நிறுவனத்தை பெரிய அளவிற்கு மாற்றிய பெருமைக்கு உரியவன். நண்பர்கள் உறவுகள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் பேச்சும் அழகிய சிரிப்பும் அவனுடைய தனி சிறப்பு..


ARS நிறுவனத்தின் உள்ளே நுழைந்த ஆனந்த் அனைவரின் வரவேற்பையும் சிறு தலை அசைப்புடனும் அவனுக்கே உரிய சிரிப்புடனும் ஏற்றவாறு தன்னுடைய அறைக்கு சென்றவன் செகிரேட்டரி ராஜ்குமாரை அழைத்து அன்றைய நாட்குறிப்பினை கேட்டு கொண்டான்.


மேலும் அவர் தயங்கி நிற்க, "என்ன ராஜ் சார் ஏதோ சொல்ல வர்றிங்க, ஆனா ரொம்ப யோசிக்கிறீங்களே எதாவது பிரச்சனையா" என்றான்.


"அதெல்லாம் ஏதும் இல்ல சார். உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்..." என்று இழுத்தவரை,


"உங்க கிட்ட எவ்ளோ தடவ சொல்றது என்ன பேர் சொல்லி கூப்பிடுங்கனு. உங்கள விட ரொம்ப சின்ன பையன் தான் நான். ஒருவேள உங்க வயச மறைக்க பாக்குறீங்களா" என்று கூறி சிரித்து கண்ணடித்தான்.


"இல்லை சார் ஆபீஸ்ல நான் அப்டியே கூப்ட்டுகிறேன்" என்றவரை,


"சரி உங்க இஷ்டம்" என்று விஷயத்தைக் கேட்டான்.


தன் ஒரே மகள் கம்ப்யூட்டர் முடித்து வேலைக்கு இங்கே 2 வாரங்களுக்கு முன் ரெஸ்யூம் அனுப்பியதாயும் அடுத்த வாரம் இன்டெர்வியூ அட்டன் செய்ததாயும் ஞாபகப்படுத்தினார்.


"ஓஹ் ஆமா சொல்ல மறந்துட்டேன் சார். அவங்க ப்ரொபைல் பார்த்தேன். அவங்க ப்ராஜெக்ட் கூட இன்டரெஸ்டிங்கா டிஃபிரென்ட்டா இருந்தது. மேனேஜரும் ரொம்ப இண்டெலிஜெண்ட் அண்ட் ஆக்ட்டிவ் பெர்சன்னு சொன்னாங்க. நம்ம ஆபீஸ்ல திறமையானவங்களுக்கு என்னைக்குமே மதிப்பு இருக்கு. சோ அவங்கள மண்டே ஜாயின் பண்ண சொல்லி மெயில் அனுப்பிடுங்க. மத்த பார்மாலிட்டீஸ் கூட நீங்களே பாத்துக்கோங்களேன்" என்றவன் தலையசைத்து ஆபீஸ் ரௌண்ட்ஸ்க்கு சென்றான்.

ரிது பர்னா தனது இடைவரை கூந்தலை காய வைத்து கொண்டிருந்த நேரம் தந்தை கூறியதை நினைத்து பார்த்தாள்.


'ஆனந்த் தம்பி ரொம்ப நல்ல மாதிரி மா. அவங்க அப்பாவ விட தம்பியால தான் இந்த கம்பெனி இவ்வளோ தூரம் வந்துருக்கு. பேச்சும் செயலும் ஒரே மாதிரி எல்லார்க்கும் இருக்காது அந்த விதத்தில் ரொம்ப நல்ல மனுஷன்' என்று புகழும் போது ரிது பர்னாவிற்கு சிரிப்பு தான் வந்தது. தந்தைக்கு பிடித்திருந்தால் எல்லாரையும் இப்படி தானே புகழ்வார் என்று நினைத்து கொண்டாள்.

இயற்கையான அழகு, செயற்கை தனம் இல்லா பேச்சு, எதையும் நீண்ட ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பவள் தான் அவள்.

அம்மா இறந்த பின் அப்பா மட்டுமே உலகு என வாழ்ந்து வருபவள். வேலைக்கு செல்வது அப்பாவை ஓய்வு எடுக்க வைக்க வேண்டும் என்று தான்.


ஆனால் அப்பா அதற்கு மறுத்து அவர் பார்க்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்த்தது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. நாளை ஜாயின் செய்தாக வேண்டும்.

எவ்வளவோ சொல்லியும் அப்பா மறுத்துவிட சரி ஒரே கம்பெனி என்றால் நமக்கும் நல்லது தானே என்று விட்டுவிட்டாள்.

சுகன்யா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்க,


"காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கை தொடும் தேவதை அம்மா!
அன்பென்றாலே அம்மா
என் தாய் போல் ஆகிடுமா? "



என்ற ஆனந்த் பாடலை கேட்டு சிரித்தவாறே,


"என்னடா ஏதாச்சும் காரியம் ஆகணும்னா தானே இப்படி தாஜா பண்ணுவ? இன்னைக்கு என்ன திடிர்னு? சொல்லு என்ன பண்ணனும்" என்றார்.

"அம்மா உங்களுக்கு ஏன்மா நான் ஐஸ் வைக்கணும்? நீங்க தான் என் செல்ல அம்மா ஆச்சே".


"அட போடா! நா கூட ஏதோ லவ் மேட்டர் ஓபன் பண்ண போறியோனு நினச்சுட்டேன்".


"ஹாஹாஹா ம்மா என்ன அம்மா நீங்க? நாட்ல எல்லா அம்மாவும் இப்படி இருந்துட்டா எந்த பையனுக்கும் பிரச்சனை இல்ல. அத விடுங்க! அப்ப நான் எந்த பொண்ண எப்போ கூட்டிட்டு வந்தாலும் க்ரீன் சிக்னல் தானா ம்ம்ம்?" என சிரித்துக்கொண்டே இழுக்க,

"டேய் உதைப்பேன்., உன்ன பத்தி எனக்கு தெரியாதா நீயாவது கூட்டிட்டு வர்றதாவது" என்றவரிடம்,


"இவ்ளோ நம்பிக்கை ஆகாது மா" என்று சிரித்தவாறே கூறி சென்றான்.

'இவனுக்கு எப்போது தான் அதற்கு நேரம் வரும்?' என்று ஏக்க பெருமூச்சுடன் வேலையை தொடர்ந்தார் சுகன்யா.


ஆபீஸ் வேலையில் மூழ்கிஇருந்த ஆனந்த், ராஜ் குமார் வருகையில் நிமிர்ந்தான்.


"சொல்லுங்க ராஜ் சார்! இன்னைக்கு என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல தெரியுதே".


"அதெல்லாம் ஒன்னும் இல்லை சார். இன்னைக்கு என் பொண்ணும் ஆபீஸ்க்கு வர்றால்ல! அதான்"


"ஓஹ் அதான் பொண்ணு ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் போற சந்தோசமா" என்று சிரித்தான்.

பின் நாட்குறிப்பில் கிளைன்ட் மீட்டிங் பற்றிய நேரம் தெரிந்து கொண்டு தான் வெளியில் சென்று விட்டு மீட்டிங்கில் கலந்து கொள்வதாக கூறி சென்றான்.


வீட்டில் இருந்து கிளம்புவது முதல் வேலைக்கு செல்வதில் கொஞ்சம் படபடப்பாகவே உணர்ந்தாள் ரிது.


ஆனால் முதல் நாள் ஒன்றும் தான் நினைத்தது போல் பயப்பட தேவை இல்லை என்று புரிந்தது.


மேனேஜர் சொல்ல சொல்ல தனது வேலை தனக்கு அவ்வளவு கடினம் இல்லை. தனக்கான சவாலான வேலை தான் என்று நிம்மதியாக கூட இருந்தது.


மதிய உணவு முடிந்து அவள் தன்னுடைய கேபின் வந்த போது கதவை திறந்து கொண்டு ஒரு ஆண் வருவதும் அவனுடன் தனது அப்பா பேசி கொண்டு வருவதும் தெரிந்தது.


'ஓஹ்! இவன் தான் அப்பா சொன்ன ஆனந்த் போல' என நினைத்துக் கொண்டவள்,


அப்பா சொன்னது மிகை இல்லை என்று என்னும் அளவிற்கு இவனா இந்த கம்பெனி நிர்வாகி? இவனுக்கு என்ன ஒரு 28 வயது இருக்குமா? அதற்குள் இவ்வளவு பெரிய கம்பெனி ஆள்வது ஒன்றும் சிறிய விஷயம் இல்லையே! என்றும் நினைத்து கொண்டாள்.


தன்னை பார்த்தும் பாராதது போல் சென்ற தந்தையை முறைத்து விட்டு தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.


அதன் பின்னும் மீட்டிங்கில் நேரம் ஆகிவிட்டதால் அன்று முழுவதும் பிஸியாகவே சென்றது.


அதனால் ரிதுவை ஆனந்திடம் அறிமுகப்படுத்த நினைத்த ராஜ்குமார் எண்ணம் அன்று முடியாமல் போனது.


அன்று முழுவதும் ஆபீஸ் பற்றி தெரிந்து கொள்வதும் தன் வேலையை அறிந்து கொள்வதும் என ரிதுவிற்கு நன்றாகவே நேரம் சென்றது.


மதிய உணவு இடைவெளியில் அனைவரிடமும் பழகும் வாய்ப்பு கிடைக்க அன்றே அனைவரிடமும் இணைந்து கொண்டாள் ரிது.


ராஜ்குமார் பற்றிய அனைவரின் அபிப்ராயமும் கேட்ட ரிதுவிற்கு மனதில் தானாக பெருமை வந்து ஒட்டிக் கொண்டது.


அன்றைய நாள் முடிந்து இரவு உணவு எடுத்து வைத்து கொண்டே அப்பாவிடம் அன்றைய நிகழ்வை கூறிக் கொண்டிருந்தாள்.


"அப்பா ஆபீஸ்ல உங்கள எல்லாரும் புகழ்ராங்க. வேலைனு வந்துட்டா சின்ஸ்யரா இருப்பிங்களாம். எல்லார்கிட்டயும் பாசமா தான் இருப்பிங்களாம். ஆனந்த் சார்க்கு லெப்டு ரைட்டு எல்லாமே நீங்க தானமே?" என்று பேசிக் கொண்டிருந்தவள் அப்பா சிந்தனை இங்கு இல்லை என்பதை முதலில் கவனிக்கவில்லை.


மகள் பேசியது எதுவும் அவர் செவிகளில் விழவே இல்லை. ஆனந்த் மாலை கிளம்பும் நேரத்தில் சொன்னதை திரும்ப திரும்ப நினைத்து கொண்டிருந்தார்.


"ராஜ் சார் இந்த வருடத்துடன் உங்கள் பணிக் காலம் முடிவடைகிறது" என்ற ஆனந்தின் வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்தார் அவர்.


"சார் எனக்கு இன்னும் 2 வருட காலம் இருக்கிறதே!" என்றதும்


"அது சரி தான்! எனக்கும் உங்களை மாதிரி திறமையானவரை விட விருப்பம் இல்லை. நீங்க அப்பாகிட்ட வேலை பார்க்கும் போதே அப்பா உங்கள பத்தி நிறைய சொல்லிருக்காங்க"


"அது மட்டும் இல்ல! நானும் நேரிலேயே பாத்திருக்கேன் உங்கள் திறமையை. ஆனால் உங்க ஹெல்த் வச்சு அப்பா சொன்னதினால் தான் இந்த முடிவுக்கு நானும் ஒகே சொன்னேன்" என்றான். இது முழுக்க முழுக்க ரகுவின் முடிவும் கூட.


ரிது வேலைக்கு செல்ல அடம் பண்ணியது கூட தான் வீட்டில் இருக்க வேண்டும் என்று தான். ஆனால் மறுத்தாயிற்று. ஆனால் எங்கு எப்படி சொன்னால் அவர் மறுக்க முடியாது என்பது ரகுவிற்கு தெரியுமே.


தனக்கு ஹார்ட்அட்டாக் இருப்பதும் அதனால் என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என தெரிந்து தனக்காக யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருப்பான் ரகு.

"என்ன அப்பா நான் எவ்ளோ பேசிட்டு இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க" என்றதும் நடப்புக்கு வந்தார்.


தன்னுடைய ரிட்டைர்மென்ட் பற்றி கூறியதும் மகள் சந்தோசப்படுவாள் என அவர் அறிந்ததே.


அதே போலவே ரிதுவின் முகத்தில் சந்தோசத்தை கண்டதும் தனக்கும் புன்னகை வந்து அவரிடம் ஒட்டிக் கொண்டது.


அன்று இரவு ஒருவித நிம்மதியுடனே உறங்க சென்றாள் ரிது.


அதே நேரம் ஒரு ஜீவன் உறக்கம் இன்றி தவித்து கொண்டிருந்தது. ஆம்! ஆனந்த் தான். மதியம் ஆபீஸ் கதவை திறந்ததும் தெரிந்த அந்த முகம் அப்படியே மனதில் பதிந்து விட்டது.


முதலில் யாராக இருக்கும் என்று எண்ணியவனுக்கு அவள் பார்வை தனக்கு பின் வந்த ராஜ் குமாரை கண்டதும் சந்தோசமடைந்ததை பார்த்தவுடன் தான் 'ஓஹ்! இவள் தான் ராஜ் சார் பொண்ணா' என்று நினைத்து கொண்டான்.


அதன் பின் மீட்டிங் சென்றதும் வேலையில் மூழ்கி போனான். கண்டதும் காதலில் எல்லாம் அவனுக்கு நம்பிக்கை இல்லை தான். ஆனால் அவளுக்கும் அவனுக்கும் எதோ பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல் தோன்றியது.


குழந்தையை போல் தந்தையை கண்டதும் சந்தோசமடைந்தாளே! அப்பா என்றால் அவ்வளவு பிடிக்கும் போல என்று நினைத்தவன் பின் ஏதோ நினைத்து சிரித்து கொண்டான்.


பால் போன்ற அந்த முகமும், அழகான அந்த சிரிப்பையும் நினைத்தவன் பின் அந்த நினைப்பில் சிரித்தவாற தூங்கி போனான்.


அன்பு தொடரும்..
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom