• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 3

Viswadevi

✍️
Writer
IMG-20210430-WA0029.jpg




அத்தியாயம் 3

பார்வைத் திருப்பிய பாவையவளின், அழகிய விழியில் விழுந்தது அந்த கம்பீரமான மாளிகை. வெளியே இருந்து பார்க்கும் போதே பகட்டாக தெரிந்த அந்த மாளிகையைப் பார்த்து அம்ருதவர்ஷினி மிரண்டு போனாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த அபிநயன், அடுத்த நொடி அவள் கைகளை இறுகப் பற்றினான்.

திகைத்து திரும்பி அவன் முகத்தைப் பார்க்க, கண்களை மூடித் திறந்தான் அபி. அவன் கண்ணசைவில் இவள் சற்று அமைதி அடைந்தாள்.

'சற்று முன் அவர் மேல் இருந்த கோபம் என்ன, ஆனால் அவரது ஒரு செய்கையில் அமைதி அடைக்கிறோமே, அவரது விழியசைவில் பாதுகாப்பை உணர்கிறோமே' என குழம்பிப் போனாள் அம்ருதா. எப்படி மிரட்டி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவர் மேல எவ்வளவு வெறுப்பு, கோபத்தோட இருக்கிறேன்… பட் அந்த ஐஸ்ஸைப் பார்த்தவுடன் ஐயம் மெஸ்மரைஸ்டு… இனி மேல் அவர் கண்ணைப் பார்க்கக் கூடாது என தனக்குள் உறுதியெடுத்தவள், அந்தப் பரந்து விரிந்தத் தோட்டத்தை ரசிக்கலானாள்.

வீட்டு வாசலில் போய் கார் நிற்க… அவளது தோளைத் தட்டி உலுக்கினான் அபிநயன். ஆங் என விழித்தவளை கீழே இறங்குமாறு சைகை செய்தவன், தனது பக்க கதவைத் திறந்துக் கொண்டு இறங்கினான்.

இவர்கள் வருவதற்கு சற்று முன்பு வந்திருந்த நிர்மலா, தயாராக ஆரத்தி கரைத்து வைத்திருக்க… இவர்கள் கீழே இறங்கவும், ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தாள்.

மருண்டு, மருண்டு விழித்த அம்ருதாவை, மென்மையாக அனைத்து, " வாம்மா… வந்து விளக்கேற்று." என்று சாமியறைக்கு அழைத்து வந்தார்.

அம்ருதவர்ஷினி விளக்கு ஏற்ற.. பிறகு இருவரையும் சாமி கும்பிடச் சொல்லி, உடன் பால்,பழம் அருந்த வைத்து அழைத்து வந்து ஹாலில் அமர வைத்தார்.

அதற்குள் ராஜன் அபியிடம், " தம்பி... உனக்கு களைப்பா இருக்கா... இல்லை என்றால் ஒரு அரைமணி நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பேச வேண்டும்." என அழைத்தார் ராஜன். ஈவினிங் ரிசப்ஷனுக்கு சினிமா துறையில் உள்ள பிரபலங்களை அழைத்திருக்கிறார்.அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருக்க வேண்டும். அதற்கு தான் மகனிடம் டிஸ்கஸ் பண்ண காத்திருக்கிறார்.

பார்ப்பதற்குத் தான் கரடுமுரடாக இருப்பார். செய்யும் தொழிலான டிரான்ஸ்போர்ட், மற்றும் பைனான்ஸ் தொழிக்கு ஏற்ற உடல்வாகு. ஆனால் அவரது குணமோ, அமைதி.

" இதோ வருகிறேன் டாட்." என கூறிய அபி, தன் தாயைப் பார்த்து அம்ருதாவைப் பார்த்துக் கொள்ளும்மாறு கண்ணசைத்தவன், அவர் பார்த்துக் கொள்வதாக தலையசைக்கவும் தன் தந்தையோடு அலுவலக அறைக்கு சென்றான்.

மதிய உணவு மண்டபத்திலே முடிந்ததால், " ஜூஸ் குடிக்கிறீயாமா? " என அம்ருதாவிடம் நிர்மலா வினவ…

" வேண்டாம்." என தலையசைத்தாள்.

"சரிடா... நீ சற்று நேரம் ஓய்வு எடு… நான்கு மணிக்கு ப்யூட்டி பார்லரிலிருந்து ஆள் வந்துடுவாங்க... " என்றவர் தனது மகள் ஆராதனாவிடம் திரும்பி, " அம்மு... அண்ணியை அழைச்சுட்டுப் போய் அவளோட அறையை காட்டு… அப்படியே மேக்கப் கலைப்பதற்கு ஹெல்ப் பண்ணு…"

" மா… எனக்கு பசிக்குது‌‌… மண்டபத்துல சரியாகவே சாப்பிடவில்லை. எனக்கு ஜுஸ் தாங்க… அப்புறமா அழைச்சிட்டு போறேன்." என தவிர்க்க பார்க்க.

அதுவரை பயந்தில் இருந்த அம்ருதா, ஆராதனாவின் பதிலில் சிலிர்த்துக் கொண்டு "நானே போய் கொள்வேன்.ஐ டோன்ட் நீட் எனி ஹெல்ஃப்" என…

" மாடியிலிருக்குற அபியோட அறை உனக்கு தெரியுமா? "என நிர்மலா ஆரம்பிக்கும் போதே, எனக்கு தெரியும் அத்தை… இடதுபுறம் உள்ள விங் தானே என்றவள், தனது தயக்கத்தை விட்டு மாடியேறத் தொடங்கினாள்.

தனது ஃபோனை மறந்து வைத்த அபி, அதை எடுப்பதற்காக வந்தவன், தங்கையின் மறுப்பையும் அம்ருதாவின் பதிலையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் அவளுக்கு விரல் நுனியில் தெரியும் என்பதை அறிந்தவன் தன் தாய், மற்றும் தங்கையின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தான். சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆராதனாவிடம் வந்தவன், " ஏய் வாண்டு, அண்ணி என்ற மரியாதை இருக்கா... இதுதான் உங்க அண்ணனுக்கு நீ குடுக்குற மரியாதையா…" என தலையில் குட்ட‌..

" அண்ணா…" என சிணுங்கினாள்."நான் காலையில் இருந்து அண்ணி என்று எத்தனை முறை பேசினேன் தெரியுமா?. நானே உனக்காகத் தான் பழைய கோபத்தையெல்லாம் விட்டுவிட்டு பேச போனேன்… அவங்க சரியாவே பேசவே இல்லை. அது தான் சரி இங்க அவங்களை வச்சு செய்யணும் என்று பார்த்தா… எனக்கு தான் பெரிய பல்பா குடுத்துட்டு போறாங்க…"

"கொஞ்ச நாள் ஆனால் சரியாயிடுவா… இப்போ, நீ அண்ணனுக்காக போய் பார்த்துக்கடா."

தன் அண்ணனைப் பார்த்தவள், தனக்காகத் தான் அண்ணன், அவளோடு சண்டைக்குப் போய் கொண்டிருப்பார், என்பதை நினைத்தவள்,அவருக்காக அவங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள். " சரிணா நான் போறேன்… பேசி பேசி ரொம்ப டயர்டாயிட்டேன்… அந்த ஜூஸை குடிச்சிட்டு போறேன். எங்கம்மா ஜுஸ்." என தன் அன்னையிடம் வினவ…

"இருடி… லதா போட்டுட்டு இருக்கிறா…"

"குட்டிமா நீ போ… அண்ணி அழுதுக் கொண்டு இருந்தாலும் இருப்பா… லதாக்காவிடம் கொடுத்து விட சொல்லுறேன்." என்றவன், தன் அம்மாவைப் பார்த்து," மா…" என…

"நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் வேலையை பாரு அபி …"

" சரி." என தலையாட்டியவன், தந்தையை நோக்கிச் சென்றான்.

அதற்கு பிறகு,வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் தீவிரமாக தந்தையுடன் ஆலோசனை நடத்தினான். கௌதமுக்கும் அவ்வப்போது கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். கௌதம் மண்டபத்தில் இருந்து நேராக, விழா நடக்க இருந்த ஹோட்டலுக்கு செல்வதாக ஏற்பாடு.

" சரிப்பா… நீங்களும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க." என்றவன் அங்கிருந்த விருந்தினர் அறையில் சென்று அவனும் ஓய்வெடுத்தான்.

****************
அண்ணன் அம்ருதா மேல் வைத்த காதலை நினைத்து சிரித்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள் ஆராதனா.

அம்ருதா சரியாக அண்ணனின் அறை இருக்கும் பகுதிக்கு தான் சென்று இருந்தாள். மாடியில் விங் அமைப்பு. இடப்புறம் அண்ணனுக்கும் வலப்புறம் தங்கைக்குமான பகுதி.

இடப்பகுதியில் நுழைந்தவுடன் ஒரு ஹால் இருக்கும். அதைத் தாண்டியவுடன் இரு அறைகள். ஒன்று அபிநயனோட ஜிம். மற்றொன்று அவனது பெட்ரூம். பெட்ரூமில் நான்கு ஆட்கள் படுத்து உறங்கும் அளவிலான பெரிய கட்டில்… படுத்தவுடன் இரண்டு அடி அமுங்கும் அளவிலான ஃபோம் மெத்தை. அலங்காரமான மர டீபாய். அதைத் தவிர அந்த அறையில் வேறு எந்த ஆடம்பரப் பொருட்களும் கிடையாது. அது போக இரு அறைகள் உண்டு. ஒன்று பால்கனி, அப்படியே இறங்கி தோட்டத்தின் பின் பகுதிக்கு செல்ல படிக்கட்டுகள். அபிநயன் நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக இந்த ஏற்பாடு. மற்றொன்று குளியலறை, உடைமாற்றும் அறையுடன் உள்ளது.

அந்த பிரம்மாண்டத்தைப் பார்த்து பயந்து இருப்பாளோ என்று நினைத்திருக்க… அவளோ முன்னிருந்த ஹாலில் உள்ள சோபாவில் தலை சாய்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

வழக்கம் போலவே தனது அண்ணனின் கணிப்பு சரியாக இருப்பதை எண்ணி வியந்தாள் ஆராதனா. அவளது கவனத்தை களைப்பதற்காக, "அம்ரு." என சத்தமாக அழைத்தவள், பிறகு நாக்கை கடித்துக் கொண்டு, " அண்ணி " என அழைக்க…

அவள் "அம்ரு." என அழைக்கவும் தன் தாய் அழைப்பதுப் போல் இருக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அங்கு நின்றிருந்த ஆராதனாவைப் பார்த்தவுடன் கண்களை வேகமாக துடைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்து என்ன என்பது போல் பார்க்க…

ஆராதனா அவளது செய்கையில் அயர்ந்து தான் நின்றாள்.மனதிற்குள், 'வாவ்! அண்ணனுக்கு ஏத்த ஜோடி தான்' என நினைத்தாள்.

"அண்ணா ஹெல்ப் பண்ண சொன்னாங்க" என.‌..

" ஓ... நான் தான் எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று சொன்னேனே " என்றவள் அவளை சட்டை செய்யாமல் இருக்க…

"ஹலோ… உங்களுக்காக ஒன்னும் நான் வரல… எங்க அண்ணனுக்காகத் தான் வந்தேன்‌. நீங்க இப்படியே உட்கார்ந்து இருந்தா, ஈவினிங் பார்ட்டியிலே டல்லா இருப்பீங்க… பெரிய பெரிய செலிப்பிரிட்டிஸ்ஸெல்லாம் வருவாங்க… பார்க்கிறவங்க எல்லாம் எங்க அண்ணன தான் கேள்வி கேட்பாங்க... எங்க அண்ணன் கௌரவம் எனக்கு முக்கியம்.உங்களுக்கு பிடிக்குதோ, இல்லையோ என்னோட உதவியை ஏற்றுத் தான் ஆக வேண்டும். அங்க இருக்கிறது தான் பெட்ரூம். அதற்குள் இருக்கிற டிரெஸ்ஸிங் ரூம்ல உங்களுக்கான ட்ரெஸ் இருக்கு... நீங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க நான் வெயிட் பண்றேன். " என…

அம்ருதாவோ, இன்னும் அந்த அறைக்குள் போகாமல் தயங்கி நிற்க இன்னும் என்ன என்பது போல் அவளைப் பார்த்தாள் ஆராதனா.

" இல்ல உங்க அண்ணா வருவாரா... என தயங்கி, தயங்கி கேட்க…"ம்

"இல்லை அண்ணா கீழே விருந்தினர் அறையில் இருக்கிறேன் என்று ஏற்கனவே அவங்க திங்ஸ்ஸ எடுத்துட்டு போய்ட்டாங்க."

ஓ… என்றவள் அதற்குப் பிறகு அந்த அறைக்குள் சென்று மறைந்தாள்.

" ஊப்." என பெருமூச்சு விட்டுக் கொண்டாள். ' ரொம்ப கஷ்டம்… ஏன் தான் இந்த அண்ணன் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொண்டார்களோ… '
அவளது சிந்தனையை களைப்பது போல கதவு தட்டும் சத்தத்தில்,வெளியே சென்றவள், அங்கு நின்றிருந்த லதாவிடமிருந்து ஜூஸ் ட்ரேயை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

அங்கோ, ட்ரஸிங் ரூமில் அமர்ந்து, நகைகளை கழட்டி வைத்துக் கொண்டிருந்த அம்ருதாவைப் பார்த்தவள், "ஜாடிக்கேத்த மூடி தான்," அண்ணனைப் போலவே எல்லாவற்றிலும் பர்ஃபெக்ட் தான் போல… அண்ணாவிற்கு பெட்ரூமில் எந்த வேலையும் செய்யப் பிடிக்காது, அவ்வளவு சுத்தம்… அதற்கு தகுந்தாற் போலவே இருக்கிறார்கள் என நினைத்தவள், " இந்தாங்க ‌." என ஜுஸ் க்ளாஸை அம்ருத்தாவிடம் கொடுத்தவள், மற்றொன்றை எடுத்து அருந்தத் தொடங்கினாள்.

அதற்கு பிறகு இருவருக்கும் இடையில் எந்தப் பேச்சு வார்த்தை இல்லையென்றாலும் வேலை இலகுவாக நடந்தது.

" நீ படுத்து தூங்கு. பியூட்டிசன் வரவும் வந்து உங்களை கூப்பிடுறேன் அண்ணி." எனத் தடுமாறி, ஒருமையுலும், பண்மையுமாகக் கூற…

" அவளை நிமிர்ந்து பார்த்த அம்ருதா, எப்பொழுதும் போல என்னை நீ, வா, போ என்றே நீ கூப்பிடலாம்… "என

"முகம் இறுக என்ன இருந்தாலும் நீ எங்க அண்ணன் மனைவி.. அது என்றைக்கும் மாறாது… நீயும் அதை மனசுல நன்றாக பதிய வைத்துக் கொள். அப்புறம் எங்க அண்ணனை விட்டு செல்ல வேண்டும் என்று மட்டும் ஒரு போதும் நினைக்காதே… எங்களுக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு... கௌரவம் இருக்கு… அதற்கு குறைவில்லாமல் நடந்துக் கொள் " என கோபமாக கூறிவிட்டு வெளியே சென்றாள் ஆராதனா.

'லூசு... படிக்கும் போது எப்படி இருந்தாளோ, அப்படியே இருக்கிறா... நான் என்ன சொன்னேன், ஒரே வயசு… ஒன்னா படிச்சவங்க... எப்பவும் போல கூப்பிட்டா பரவாயில்லை என்று சொன்னேன். இவ என்னவென்றால் எதுக்கு எதை முடிச்சு போடுறா… எப்ப பார்த்தாலும் ஸ்டேட்டஸ், கௌரவம் என்று என்னவோ, கௌரவத்துக்கு பிறந்தவங்க மாதிரி சொல்லுறா…

ம்...பிரிவை எடுக்கும் உரிமை மட்டும் எனக்கு இருந்தால், நான் ஏன் இவங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறேன்? என்னை மீறிய விஷயம், கடவுள் எனக்கு விதிச்சது இவ்வளவு தான்… ஆனால், என்னால் இந்த பந்தத்தில் இருந்து பிரிய முடியாவிட்டாலும் அவங்க அண்ணன் வாயாலே டைவர்ஸ் கேட்க வைப்பேன் என உறுதி எடுத்தவள், ' உறக்கம் வராமல் பால்கனிக்கு சென்றாள். அங்கிருந்த அழகிய ஊஞ்சலைப் பார்த்து வாவ் என அதிசயத்தவள், அதில் அமர்ந்து ஆடினாள்.

தொடரும்…..
 

Rajam

Well-known member
Member
என்ன நடந்தது னு அமிர்தா
இப்படி நடந்துக்கனும்.ஆராவும் இவளும்
காலேஜ் friends ah.
 

Baby

Active member
Member
ஓஹோ... கல்லூரி சிட்டுகளா இது...சூப்பர்.... அப்ப அங்கையே இரண்டு பேருக்கும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா...

அம்ரூ இதுவரை இங்க வந்திருக்க வாய்ப்பே இல்ல. அப்புறம் எப்டி. அவனோட வீட்ல இருக்க அவன் ரூமைக் கரெக்டா சொல்றா
 

Viswadevi

✍️
Writer
ஓஹோ... கல்லூரி சிட்டுகளா இது...சூப்பர்.... அப்ப அங்கையே இரண்டு பேருக்கும் டிஷ்யூம் டிஷ்யூம் தானா...

அம்ரூ இதுவரை இங்க வந்திருக்க வாய்ப்பே இல்ல. அப்புறம் எப்டி. அவனோட வீட்ல இருக்க அவன் ரூமைக் கரெக்டா சொல்றா
Thanks sis ♥️
 

பிரிய நிலா

Well-known member
Member
அபி எப்பவும் திட்டிட்டு இருக்கான்னு தான் அவன் மேல அம்ருக்கு கோபம் போல. அவன் தங்கச்சிக்காகத் தான் அப்படி நடந்திருப்பான் போல.. பார்க்கலாம் என்ன நடக்கும்னு
 

Viswadevi

✍️
Writer
அபி எப்பவும் திட்டிட்டு இருக்கான்னு தான் அவன் மேல அம்ருக்கு கோபம் போல. அவன் தங்கச்சிக்காகத் தான் அப்படி நடந்திருப்பான் போல.. பார்க்கலாம் என்ன நடக்கும்னு
Thanks sis♥️
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom