• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 20

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்.
IMG-20210430-WA0029.jpg


இசைக்காதலி என்னைக் காதலி - 20

அபி ஹோட்டலுக்கு திரும்பி வரும் போது, நன்கு களைத்துப் போய் தான் வந்திருந்தான்.

மாலை நேர, சிலுசிலுவென்ற காற்றுக் கூட அவனை இதமாக்கவில்லை. அறைக்குள் நுழைந்தவன், ஃப்ரெஷ்ஷப் ஆகி விட்டு, நன்கு உறங்கிக் கொண்டிருந்த அம்ருவின் அருகில் அமர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் வந்த வேலை முடிந்து விட்டது. அவன் எதிர்பார்த்தது தான் நடந்தது. ஆனால் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. நாகராஜன் அங்கிளை நினைத்து கவலையில் ஆழ்ந்தான். ஆனால் அதற்கு தான் ஒன்றும் செய்ய முடியாது என்பதும் புரிந்தது.

அவன் எதிர்பார்த்து வந்த மேனேஜரை, இரண்டு தட்டு தட்டவும் அனைத்தையும் ஒப்புக் கொண்டு விட்டார். ஏ.சி‌பி சித்தார்த் அவனது நண்பன். அவனுக்கு அழைத்து நடந்த விவரத்தைக் கூற... அவன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி விட்டான்.

இதை அம்ருவிடம் சொல்ல வேண்டும் அதை அவள் எவ்வாறு, ஏற்றுக் கொள்வாள் என்பது புரியவில்லை. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி தன்னிடம் இயல்பாக பேசுகிறாள். இதில் தாங்கள் இருவரும் விரும்பியதை அவளிடம் இப்போது சொன்னால் அதை நம்புவாளா, என்றே தெரியவில்லை.‌.. என்னைக் காதலித்த பாவத்திற்கு தான், இப்போது தாயை இழந்து, தன்னை மறந்து நிற்கிறாள், என்பதை அவளிடம் எப்படி சொல்லுவது என்று குழம்பி போய் தலையில் கை வைத்துக் கொண்டு இருந்தான்.

அந்த மேனேஜர் சொன்னதை நினைத்துப் பார்த்தான். ' தான் போய் அவர் வீட்டிற்குள் சென்று அமைதியாக நின்று அவரைப் பார்க்க…

அவரோ… கைக் காலெல்லாம் வெலவெலக்க…, "அபி சார்… என்ன விஷயம் சார்… " என்று நடுங்கியப் படியே வினவினார்…

" ஒன்னும் இல்லை மேனேஜர் சார்… எனக்கு ஏதாவது புதுப் படத்துல வொர்க் பண்ணனும். அதான் உங்க சிபாரிசு வேண்டி வந்தேன்." என நக்கலடிக்க…

அவரோ, நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்து," சார்… நீங்க சொல்றது புரியவில்லை." என திக்கியபடிக் கூறினார்.

"என்ன புரியவில்லை… நான் என்ன வேலை வெட்டி இல்லாம இருக்கேனா... உங்க கிட்ட சிபாரிசு வாங்கித் தர சொல்லி வந்துருக்கேனா… நான் எதுக்கு வந்துருக்கேன் என்று உங்களுக்கு தெரியாது… இதுவே ரொம்ப லேட்… நான் இவ்வளவு நாள் வராமல் இருந்ததற்கு காரணம், என்னோட அம்ருவோட பாதுகாப்புக்காகத் தான், இல்லை என்றால் சுகந்தி ஆன்ட்டி இறந்த கொஞ்ச நாள்ல எல்லாவற்றையும் கண்டு பிடிச்சிருப்பேன். கொஞ்ச நாள் பொறுமையாக இருந்தால், என்னை என்ன கேனையன் என்று நினைச்சீங்களா... ஒரு ஆளை கொல்றதுக்கு லாரி புக் பண்ணிட்டு, இங்க வந்து ஒளிஞ்சுக்கிட்டா விட்டுடுவேன், என்று நினைச்சிங்களா… அந்த தர்ஷனாவுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்னோட வரவேற்புல, என் மனைவியை அவ்வளவு வன்மமா பார்ப்பா… அதான் அவளை வாட்ச் பண்ண சொன்னேன். ஈசியா வந்து மாட்டிக்கிட்டா… கௌதம் கிட்ட சொன்ன ஒரே வாரத்திலே, அந்த ஆக்சிடென்ட்ட ஆன நாள்ல இருந்து, அவ யாரைப் போய் பார்த்தா… யார் கிட்ட ஃபோன்ல பேசுனா, எல்லா டீடெயில்ஸையும் கலெக்ட் பண்ணி என் கிட்ட குடுத்துட்டான்… நீயா உண்மையை சொல்றீயா‌… இல்லை நானா சொல்ல வைக்கட்டுமா…" என்றுக் கூறியபடியே சட்டை கையை மடித்து விட்டு ஓங்கி ஒரு அறை விட…

" சார்… என்னை விட்டுடுங்க… எனக்கு எதுவும் தெரியாது… தர்ஷனாமா, உங்க ட்ரான்ஸ்போர்ட் ஆஃபிஸ்ல லாரி புக் பண்ண சொன்னாங்க... அப்புறம் அவங்க பேரு வெளியே தெரியக் கூடாது என்று மட்டும் தான் சொன்னாங்க… சரி தான் என்று என் பேரிலே புக் பண்ணேன். எனக்கு வேற எதுவும் தெரியாது. ஆக்ஸிடென்ட் ஆன மறுநாள் வந்து, என்னைய வேலையை விட்டு நிக்க சொன்னாங்க... நிறைய பணம் குடுத்து சொந்த ஊருக்குப் போய்டுங்க, என்று சொனானாங்க… பேப்பரில் அந்த ஆக்சிடென்ட்ட பார்த்துட்டு, "என்ன பாப்பா நடக்குது." என்று கேட்டேன்‌…

"அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் "என்று சொல்லி திட்டுனாங்க… நான் என் பேரில் தான் அந்த லாரிய புக் பண்ணேன் என்று சொன்னேன். அதற்கும் என்னை திட்டிட்டு... "உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. அபியோட தங்கச்சி ஆராதனா, என்னோட ஃப்ரணடு, நான் சொன்னால், உங்க பேரு வெளியே வராமல் பார்த்துப்பா… நீங்க பயப்படாமல் கிளம்பிப் போங்க, "என்று சொன்னாங்க… எனக்கு வேறு எதுவும் தெரியாது சார்…" என்றுக் கூறி அழுதார்…

" உங்க மேல எந்த தப்பும் இல்லை என்றால், எப்ப நான் கூப்பிட்டாலும் சாட்சி சொல்ல வரணும். அப்புறம் இப்போ நீங்க சொன்னது எல்லாமே, வீடியோவா ரெகார்ட் ஆகியிருக்கு… அப்புறம் உங்க விஸ்வாசத்தை காண்பிக்கிறேன் என்று தர்ஷனாவுக்கு ஏதாவது விஷயம் தெரிந்தது, என்னோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க…" என்று அவரிடம் எல்லா விஷயத்தையும் கறந்து விட்டு வந்திருந்தான்.

சென்னைக்குப் போய் தான் அம்ருவிடம் சொல்ல வேண்டும். அதை எப்படித் தாங்கிக் கொள்வாள் என்பது தான் இப்போது அபிநயனின் கவலை… சென்னைக்கு கிளம்ப வேண்டும். கௌதம் அதற்கான ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருக்கிறான். இதோ இவளை எழுப்பி அழைத்துச் செல்ல வேண்டும்‌‌. ம் என்று பெருமூச்சு விட்டவன், மெல்ல அவளை அசைத்து, "அம்ரு… அம்ரு…" என அழைக்க…

தூக்கத்திலிருந்து விழித்த அம்ரு, அவனைப் பார்க்கவும் பாய்ந்துக் கட்டிப் பிடித்து அழுதாள். அழுதுக் கொண்டிருப்பளை அணைத்து சமாதானப்படுத்தினான். எதற்காக அழுகிறாள் என்று தெரியாமலே...

" எதுக்குடா அம்ரு இப்படி அழுகுற…"என…

அப்பொழுதுதான் அவளுக்கு ஒன்று புரிந்தது, அவளின் அபு, "ராகா" என அழைக்காமல், அம்ரு என அழைப்பதை உணர்ந்து, மீண்டும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

" ப்ச் எதுக்கு இப்படி அழுகுற… ஏதாவது சொல்லு… நாம இப்ப கிளம்பணும்… இன்னும் ஒன் ஹவர்ல ஃப்ளைட்."

"அது ஒன்னும் இல்ல‌… உங்களை காணும் என்று பயந்துட்டேன். சரி நான் ரெடி ஆகுறேன்." என்றவள் அதற்கு பிறகு சென்னை வரும் வரை‍, அவனிடம் எதுவும் கேட்கவும் இல்லை… பேசவும் இல்லை… அபியும் யோசனையிலே இருந்தான்.

வீட்டிற்கு வந்த அபிநயனையும், அம்ருதாவையும் பார்த்த நிர்மலா வியந்து, " ஏன் பா… அதுக்குள்ள வந்துட்டீங்க‌… காலையில போயிட்டு நைட்டே திரும்பி வந்திட்டீங்க..‌. வேலை முடிஞ்சிருச்சுண்ணா, சுத்திப் பார்த்துட்டு வர வேண்டியது தானே… இதற்கு ஏன் டா… உடம்பு முடியாதவளை, இழுத்துட்டு போனே…" என கடிய…

"இல்லை மா… போன வேலை முடிஞ்சிருச்சு… அப்புறம் நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு… அதான் வந்துட்டோம்… நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டு போறேன். இப்ப எனக்கு ஒரு வேலை இருக்கு. நான் வெளியே போய்ட்டு வந்துடுறேன். எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்… சாப்பிட்டுட்டு தூங்குங்க.‌.." என்று இருவரிடமும் பொதுவாக கூறியவன், கௌதமை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவர்கள் இருவரும், நேராக அவனது நெருக்கமான நண்பன் சித்தார்த்திடம் சென்றார்கள்.‌‌.. சித்தார்த்திடம் அந்த வீடியோவை ஒப்படைத்து, "அடுத்து என்ன செய்வது?" என்று வினவ…

"நாளைக்கு போய் அரஸ்ட் பண்ண வேண்டியது தான்…" என சித்தார்த் கூற…

"ஓ... நான் இன்னும் நாகராஜன் அங்கிள் கிட்ட சொல்லவே இல்லை… அவர் என்ன நினைப்பார் என்று தெரியவில்லை… " என்று குழம்பித் தவிர்க்க…

" நாகராஜன் சார்க்கு, அவருடைய மகள் செய்தது தெரிந்தால், அவரே மன்னிக்க மாட்டார். அந்த மனுஷர் நேர்மையானவர்… நீ எதையும் போட்டு குழப்பிக்காத… அம்ருதாவிடம் சொல்லிட்டியா…" என்று கௌதம் வினவ...

" சொல்லணும்… நாளைக்கு அவளையும் அழைத்துக் கொண்டு வந்து நேரிலே தர்ஷனா அரஸ்ட் ஆவதை பார்க்க வைத்து, பிறகு எல்லாத்தையும் சொல்ல வேண்டும்." என்றுக் கூறி பெருமூச்சு விட்டுக் கொண்டவன், சித்தார்த்திடம்‍, "நாளைக்கு பார்க்கலாம் டா…" என்றுக் கூறி விட்டு கௌதமை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்.


'நாளைக்கு எப்படி மன்னிப்பு கேட்பது.' என்று யோசித்துக் கொண்டே உறங்கியிருந்தாள் அம்ருதா… வீட்டிற்கு வந்த அபியோ, மெல்ல அவள் தலையை வருடி நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், ' ராகா… நாளைக்கு உன்னை எப்படி சமாளிக்கப் போறேனோ, தெரியவில்லையே.' என மனதிற்குள் குழம்பிக் கொண்டே படுத்து இருந்தான்.

மறுநாள் காலை பரபரப்பாக விடிந்தது… காலையில் வழக்கம் போல எழுந்த அபி, அம்ருதாவிடம்," வெளியே போகணும் ரெடியா இரு..‌." என்று விட்டு அவன் குளிக்க சென்று விட்டான்‌.

எங்கே போகணும் என்று சொல்லாமல் செல்லும் அவனின் முதுகைத் தான் அம்ருவால் முறைக்க
முடிந்தது.

ஒரு வழியாக இருவரும் உணவருந்தி விட்டு கிளம்பினர். அம்ருவுக்கு தான் எங்கே செல்கிறோம் என்று தெரியாது. ஆனால் வீட்டிலுள்ள எல்லோரிடமும் அபி, நடந்த எல்லாவற்றையும் கூறியிருந்தான். நிர்மலா தன் மருமகளுக்காக வருத்தப்பட… ஆராதனாவோ, தர்ஷனாவைப் போய் நல்லவ என்று நம்பி தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்‌. என்று குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தாள். ராஜனோ, நாகராஜை நினைத்து கவலையில் இருந்தார். அதனால் உணவருந்தும் போது யாரும் சரிவர பேசாமல் உணவருந்தினர்.

காரில் செல்லும் போது கண்களை மூடிய அம்ருதா, ' ஏன் இன்னைக்கு உணவருந்தும் போது யாரும் ஒழுங்காக பேசவே இல்லை. ஏதோ சரியில்லையே…எல்லோர் முகமும் கலங்கிப் போய் இருந்ததே…' என யோசித்துக் கொண்டே வந்தாள்.

நாகராஜன் சார் வீட்டிற்கு முன்பு, அபி தன் காரை நிறுத்த… அவர்களுக்கு முன்பே போலீஸ் வாகனம் நின்றிருந்தது. அம்ருதாவோ, 'குழப்பத்துடனே இது யார் வீடாக இருக்கும்…' என யோசித்துக் கொண்டே அபியை கேள்வியாக பார்க்க… அவனோ, அவளை கவனிக்காமல் வீட்டிற்குள் நுழைந்தான். அம்ருவும் தயங்கிய படியே நுழைந்தாள்.

அங்கு தர்ஷனாவோ, காவல் அதிகாரியிடம், " நான் இல்லை... எனக்கும்,இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… எங்க மேனேஜர் பழைய பகையை வச்சிக்கிட்டு என் மேல பழிய சுமத்துறார்." என்று கத்திக் கூச்சல் போட‌…

சித்தார்த்தோ, " இங்க பாருங்க மேடம்… நாங்க உங்க மேனேஜர் தான் வாக்குமூலம் கொடுத்தார், என்று சொல்லவே இல்லையே... நீங்க தான் சுகந்தி என்பவரை லாரி வைத்து கொலை பண்ணி இருக்கீங்க... எங்களுக்கு ஆதாரம் கிடைச்சிருக்கு... அப்படின்னு தானே சொன்னேன்... இப்ப நீங்களா மாட்டிக்கிட்டீங்க… அப்புறம் அந்த லாரி டிரைவரும் அப்ரூவர் ஆகிட்டாரு … ஒழுங்கா வந்தீங்கனா கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணுவோம்... ஏதாவது கலாட்டா பண்ணீங்கண்ணா அப்புறம் எங்க போலீஸ் கவனிப்பை நீங்கப் பார்க்க வேண்டி வரும்… உங்க அப்பாவுக்காக தான் நாங்க இவ்வளவு பொறுமையாக இருக்கிறோம்." என்று சொன்னவர் அங்கிருந்த லேடி கான்ஸ்டபிளை அழைத்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

நாகராஜனும், அவரது மனைவியும் திக் பிரமைப் பிடித்தாற் போல் நின்றுக் கொண்டிருந்தனர்.

" இல்லை… நான் கொலை செய்யலை‌…" என்று கூறிக் கொண்டு இருந்த தர்ஷனா, அங்கு வந்த அபிநயனையும், அம்ருதாவையும் பார்க்கவும் தன்னைப் பிடித்துக்கொண்டிருந்த பெண் அதிகாரியிடமிருந்து திமிறிக் கொண்டு,வேகமாக அம்ருவிடம் வந்தாள். " எல்லாத்துக்கும் நீதான் காரணம்… முதல்ல என் கிட்ட இருந்து என் அபியை பிரிச்ச... இப்ப என்னை ஜெயிலுக்கு அனுப்பப் பார்க்கிறியா…

அப்புறம் உங்க அம்மாவை நான் ஏன் கொல்ல போறேன்? உன்னை தாண்டி கொல்லனும் நினைச்சேன்… ஆனா அவங்க வந்து மாட்டிக் கிட்டாங்க… அப்புறமும் அந்த ஆராதனா லூசோட, ஃப்ரெண்டா இருந்து, உங்க வீடு வரைக்கும் வந்தவ, உங்க ரூம்ல எப்படியாவது கேமரா ஃபிக்ஸ் பண்ணி, ப்ளாக்மெயில் பண்ணலாம் என்று பார்த்தேன், ஆனால் அந்த ஆராதனா கரெக்டா வந்து காரியத்தை கெடுத்துட்டா… ஆனா இப்போ உன்னை விட மாட்டேன்." என்று வெறி பிடித்தவள் போல் கத்திக் கொண்டு வந்து அம்ருவின் கழுத்தை பிடித்து நெறித்தாள்‌‌.

வேகமாக அபி அவளைப் பிடித்து நகர்த்த… இப்பொழுது அம்ரு, அவள் அருகில் வந்து ஓங்கி ஒரு அறை விட்டாள்… " உனக்கு நான் என்னடி பாவம் செய்தேன். எதுக்குடி என்ன கொல்லப் பார்த்த… நீ காதலிச்சவன நான் வந்து காதலிச்சேனா சொல்லுடி? நானும், அபியும் உயிருக்கு உயிராக நேசிச்சோம். இதுல நீ எங்கேயாவது வர்றியா… இல்லை நீ அபியிடம் உன் காதலை சொல்லியிருக்கியா, அதுவும் கிடையாது. இப்போ உன்னால நான் எங்க அம்மாவை இழந்து, என் அபுவை மறந்துட்டு, அவர் மேலே கேஸ் கொடுத்து, ஜெயிலுக்கு அனுப்ப பார்த்தேன். எல்லாம் உன்னால தான்... உன்னை சும்மா விடமாட்டேன்." என்று மீண்டும் மீண்டும் அவளை அடிக்கப் போக...

அபி, ஒரு நிமிடம் அதிர்ந்து பிறகு அவளை தடுத்தான். ஆம் அவனின் அதிர்ச்சிக்கு காரணம், அவளுக்கு நினைவு வந்துவிட்டது என்பதை அறிந்தது தான்… அம்ருவிடம் பேச வேண்டும், ஆனால் இப்பொழுது அதைப் பற்றியெல்லாம் எதுவும் பேச முடியாது, முதலில் நாகராஜன் அங்கிளை பார்க்க வேண்டும். அவர் என்ன நினைப்பார் என்று வேறு தெரியவில்லை.

சித்தார்த்தோ, அபியிடம் சொல்லிக் கொண்டு தர்ஷனாவை அழைத்துச் சென்று விட்டான்.

வேதனையோடு நின்றுக் கொண்டிருந்த நாகராஜனிடம், அம்ருவை அழைத்துச் சென்று, " சாரி அங்கிள் எங்களை மன்னிச்சிடுங்க…"

" நீங்க தான் என்னை மன்னிக்கனும்… எல்லாம் என்னோட தப்பு தான்… என் பொண்ணை ஒழுங்கா வளர்க்கலை. கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவளைக் கெடுத்து வச்சிருக்கேன்… படிப்பு முடிச்ச உடனே கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தப்ப தான், உன்னை தான் கட்டிப்பேன் என்று ஒரே பிடிவாதம் பண்ணினா… அப்புறம் தவிர்க்க முடியாமல் தான் நீயும், அம்ருவும் காதலிப்பதை சொன்னேன். அப்பவாவது அவ மனசை மாத்திப்பா என்று நினைச்சேன்... ஆனால் அவ இப்படி வஞ்சம் வைத்து கொலை வரைக்கும் செல்வாள் என்று நான் நினைக்கவே இல்லை … அதுக்கப்புறம் அவ அமைதியாக இருக்கவும், எல்லாத்தையும் மறந்துட்டா என்று தப்பா நினைச்சிட்டேன்... இல்லை என்றால் உன்னிடம் சொல்லியிருப்பேனே‌… என்றுக் கூறி அபியின் கையை பிடித்து மன்னிப்பு கேட்க…

"ஐயோ சார்… நீங்க என்ன தப்பு செய்தீங்க… உங்களை மன்னிக்கிறதுக்கு… தப்பெல்லாம் செய்தது தர்ஷனா தான். இதுல நான் எதுவும் செய்ய முடியாது அங்கிள், இதில் பாதிக்கப்பட்டது அம்ரு தான்... அவளோட காயங்களும் அதிகம்… அவ கண் முன்னாடியே அவங்க அம்மா லாரியில அடிபட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்திருக்கா‌… அது மட்டுமா… அந்த நேரத்தில் நானும், அவள் பக்கத்தில் இல்லை... அவங்க அண்ணனும் பக்கத்துல இல்லாமல் தோள் சாய்ந்து அழக் கூட ஆள் இல்லாமல் அவள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருப்பாள் தெரியுமா அங்கிள்‌… அதற்கு காரணமான தர்ஷனாவை மன்னிக்கிற அளவுக்கு நாங்க இல்ல அங்கிள்…"

" தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அது என் பொண்ணா இருந்தாலும் சரி தான் பா… என்ன பத்தி உனக்கு தெரியும் தானே… பாவம் என் மனைவி... அவள் தான் எப்போதும் தர்ஷனாவை நினைத்து கவலைப் படுவாள்‌‌. அது எங்கள் தலைவிதி...அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும், நீங்க கிளம்புங்க என்று வழி அனுப்பி வைத்தார்.

திரும்ப காரில் வரும்போது இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை… அம்ருதா கண்களை மூடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து இருந்தாள்.

'முதலில் அம்மா அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்கவும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்து விட்டாள் அம்ருதா… அங்கிருந்தவர்கள் தான் இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர். அம்ருதாவிற்கு மறுநாள் தான் ஞாபகம் வந்தது. எழுந்தவள், அம்மா எங்கே? என்று கத்தி கலாட்டா செய்ய, நர்ஸ் அவளை அமைதிப்படுத்தி ஐசியூவிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கண் மூடி‍, உடம்பெல்லாம் ஓயர் ஓடிக் கொண்டு இருந்த தன் தாயைப் பார்த்து, அழுகையை அடக்க மாட்டாமல் கதறி தீர்த்தாள். அங்கிருந்த நர்ஸ் அவளை, வெளியே அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது… டாக்டர் வந்து அவரது தாயின் உடல் நிலையைப் பற்றிக் கூறவும், இன்னமும் ஓய்ந்து போனாள். ஏதாவது யோசிக்கலாம் என்றால், எதுவும் முழுவதுமாக நினைவுக்கு வரவில்லை.

அவளுக்கு தான் ஃபோன் பேசிக் கொண்டிருந்ததும், அங்கு நின்றிருந்த லாரியும் மட்டுமே வந்து வந்து போனது. லாரியை பார்க்கவும் அது அபியின் தந்தையோடது என்பதும்,காலேஜில் அபி, அவரது தங்கைக்காக தன்னிடம் சண்டை போட்டது மட்டுமே ஞாபகம் வந்தது. தன்னை கொள்வதற்காக அபி தான் அந்த லாரியை ஏற்பாடு செய்தான் என்று எண்ணியவள், அடுத்து அவள் நேராக சென்றது போலீஸ் ஸ்டேஷனுக்கு தான்…

அங்கு அப்போது சித்தார்த் தான் இருந்தான். "சார் ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும். " என்றுக் கூறியவள் நடந்ததைக் கூறி, "மியூசிக் டைரக்டர் அபிநயன் தான் இதற்கு காரணம்… அவரை அரெஸ்ட் பண்ணுங்க சார்... " என‌…

"சரிங்க மிஸ் அம்ருதவர்ஷினி… இதுல நீங்க கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க… நான் பார்த்துக் கொள்கிறேன்." என்றுக் கூறி அவளை அனுப்பி வைத்தவன், அடுத்து உடனே அபிநயனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான்.

அபியோ, அப்பொழுது வெளிநாட்டில் மியூசிக் சம்பந்தமாக ஒரு ப்ரோக்ராமிற்காக சென்று இருந்தான்.அதனால் அவனை காண்டாக்ட் செய்ய முடியவில்லை. பிறகு கௌதமிற்கு கால் பண்ணி சொன்னான்.

ஒரு நிமிடம் திகைத்த கௌதம், பிறகு செய்ய வேண்டிய வேலைகளை மனதிற்குள்ளே யோசித்து, டிடெக்டிவ்க்கு அழைத்து, அம்ருதாவைப் பற்றிய டீடெயில்ஸை கேட்டவன், பிறகு அபிக்கு அழைத்து," ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம்… நம்ம ஆராதனாக் கூட காலேஜ்ல படித்த அம்ருதவர்ஷினி, உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க‌…" என…

அந்தப் பக்கம் அபியோ," வாட்? திரும்ப சொல்லு"

" அது வந்து அம்ருதா, அவங்க அம்மா ஆக்சிடென்டுக்கு நீ தான் காரணம் என்று கம்ப்ளைன்ட் செஞ்சிருக்காங்க… நம்ம சித்தார்த் தான் இருந்திருக்கிறார்‌. உனக்கு, முயற்சி பண்ணிட்டு, முடியலை என்றதும் என்னை கான்ட்டாக்ட் பண்ணினார். அப்புறம் நம்ம கூட டூவெல்த் வரைக்கும் ஒன்னா படிச்சானே அருண், அவனுடைய தங்கை தான் அம்ருதா‌… இப்ப அவன் யூ எஸ்ல தான் இருக்கிறான்." என…

" சரி கௌதம் … நீ கொஞ்சம் அம்ரு கூட இருந்து பாத்துக்கோ‌… அருண் எப்ப கிளம்புறான்."

"அருண் கிளம்பிட்டான் அபி… ஆன் தி வே."

"ஓ…" என்ற அபி, " கௌதம்… டேக் கேர்…வேற எதாவது உதவி வேண்டும் என்றாலும் செய்… அம்ருவின் அம்மாவை நினைத்து ஒரு நிமிடம் தொண்டை அடைக்க நின்றவன், பிறகு மெல்ல செருமிக் கொண்டு, நான் உடனே கிளம்பி வரேன்…" என…


கௌதம் புரிந்தும் புரியாமலும் இருந்தான்‌. அதற்குப் பிறகு அபி வந்து கௌதம், மற்றும் அருணிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினான்.

அம்ருவும், அவனும் விரும்பியதைக் கூற‌, அவர்களால் நம்பவே முடியவில்லை. அபி, அம்ருவோட எடுத்த போட்டோ எல்லாவற்றையும் காட்டவும் தான், இவர்கள் இருவரும் நம்பினார்கள், அம்ருதாவிற்கு பழையது மறந்து விட்டது என்பது அப்பொழுது தான் புரிந்தது. அப்புறம் டாக்டரிடம் சொல்லி அதற்கான ட்ரீட்மெண்டை ஆரம்பித்தனர்.

அதற்கு பிறகு, அம்ருவிற்கு யாரால், எப்போது ஆபத்து வரும் என்பது தெரியாததால், சீக்கிரம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அபிநயன் அருணிடம் பேசி முடிவெடுத்தான். அருண் எவ்வளவோ சொல்லியும் அம்ருதா ஒத்துக் கொள்ள மறுத்ததால், அபிநயன் அவளை மிரட்டி கல்யாணம் பண்ணிக் கொண்டான்.' க்ரீச் என வண்டி நிற்கும் சத்தத்தில் எங்கே இருக்கிறோம் என்று பார்த்த அம்ருதா, வீட்டிற்கு வந்ததை உணர்ந்து கீழே இறங்கினாள்.

வீட்டிற்கு வந்தவுடன் எல்லோரும் இவர்களுக்காக காத்திருந்தனர். ராஜன் முதலில் அம்ருவிடம், " நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை மா… என்னை மன்னித்துவிடு…" என…

"ஐயோ! மாமா என்ன இதெல்லாம்…" என்று கண்கள் கலங்க…

ஆராதனா வந்து, " அண்ணி… சாரி அண்ணி… எங்க அண்ணனை உங்களுக்கு பிடிக்காது... நீங்க யாரையோ லவ் பண்ணீங்க என்று நினைச்சிட்டேன். அதான் உங்க கிட்ட சண்டை போட்டேன் ... தர்ஷி பண்ணதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அண்ணி…" என்றவள் அம்ருவை கட்டிப் பிடித்து அழ‌..

" ஆரு… எனக்கு தெரியும்… அழாதே…" என சமாதானம் செய்தாள் அம்ருதா…

" போதும்… போதும்… எல்லாரும் அழுதது. இப்ப வாங்க சாப்பிட… உங்க எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ் வச்சிருக்கிறேன்." என்று எல்லோரையும் உட்கார வைத்து, கேசரியை பறிமாறியபடியேக் கூறினார் நிர்மலா.

எல்லோரும் என்ன என்பது போல் அவரையேப் பார்க்க‌… அவரோ, அம்ருவிடம் " அம்ரு… நீ, சீக்கிரம் அத்தையாகப் போற… உங்க அம்மா சீக்கிரமாகவே வரப்போறாங்க…" என...

அம்ருதாவால், அதை நம்பவே முடியவில்லை. " என்ன அத்தை சொல்றீங்க… நிஜமாகவா…" சந்தோஷத்தில் தத்தளித்தாள்.

இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து, அந்த வீட்டில் மகிழ்ச்சி மலர்ந்தது. பிறகென்ன எல்லோரும் வீடியோ காலில் யாழினியிடம் பேச… அம்ரு பொறுப்பாக, " அண்ணி… இது எத்தனை மாதம்… டாக்டரிடம் காண்பிச்சாச்சா? " என வினவ…

"அது அம்ரு… அத்தை இறந்ததுல, நாள் தள்ளிப் போனதை கவனிக்கவே இல்லை. என்னோட வெயிட் குறைந்துக் கிட்டே போனதுல, உங்க அண்ணா தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க... டெஸ்ட் எடுத்து பாத்தப்ப நாலு மாதம் ஆகிடுச்சு. பேபி க்ரோத் நல்லா இருக்கு என்று டாக்டர் சொல்லிட்டாங்க…அப்புறம் உனக்கும், அபி அண்ணாவுக்கும் ட்ரை பண்ணோம் எடுக்கலை… அதான் நிர்மலாமாவுக்கு ஃபோன் பண்ணோம்… நடந்தது எல்லாம் சொன்னாங்க…" என்றுக் கூறி கண்கலங்க…

" எதுக்குமா இப்ப கண் கலங்குற... இனி எல்லாம் நல்லது தான் நடக்கும்…" என நிர்மலாவும் ராஜனும் சமாதானம் செய்தனர்.

அபிநயன், " வாழ்த்துக்கள் அருண்… வாழ்த்துக்கள் யாழினி…" என இருவரையும் வாழ்த்தி விட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான். அம்ரு தன் அண்ணனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள், " எப்பண்ணா வருவீங்க... சீக்கிரம் வாங்க‌…" என…

"சீக்கிரம் வந்துடுவோம் குட்டிமா…" என்று சமாதானபடுத்தி ஒரு வழியாக ஃபோனை வைத்தனர்.

ஒவ்வொருவராக உறங்கச் செல்ல... அம்ருவோ, மாடிக்கு செல்ல பயந்து, குட்டிப் போட்ட பூனையாக நிர்மலாவையே சுற்றிக் கொண்டு இருந்தாள்.

நிர்மலா தான், "ஏன் இன்னும் தூங்காமல் இருக்க... போய் படு மா…" என அனுப்பி வைத்தார்.

பயந்துக் கொண்டே மெல்ல அறைக்குள் நுழைய‌… அது தான் தெரியும் அவளுக்கு, அடுத்து அபியின் இறுக்கமான அணைப்புக்குள் தான் இருந்தாள்‌

"அபு " என வார்த்தைகளுக்கு வலிக்குமோ என மென்மையாக அழைக்க…

அபியோ, " அபுனு கூப்பிட உனக்கு இவ்வளவு நாளா ஆச்சாடி…" என்றவன் மீண்டும் அவளை அணைக்க முயல…

" ப்ளீஸ் அபு.." என கண்கள் கலங்க அம்ரு கூற…

" ப்ச்… இப்ப எதுக்கு அழுகுற.‌.."

"உங்களுக்கு என் மேல இன்னும் கோபம் போகலை. அதான் திட்டுறீங்க…"

"அடியே… அப்புறம் நீ செய்ததற்கு திட்டாமல் கொஞ்சவா செய்வாங்க‌… ஐயோ! அதைத் தான செய்யப் போனேன்… என்னை விட்டியாடி…" என புலம்ப…

"பார்த்தீங்களா… நான் பேச்சுக்குப் பேச்சு அபு… அபு என்று சொல்கிறேன். நீங்க ஒரு முறை கூட ராகா என்று கூப்பிடவே இல்லை." என்று குறைக் கூற…

படுத்திருந்த அபி, எழுந்து தலையில் கை வைத்து அவளைப் பார்த்தவன், ராகா டார்லிங்... இது பேசுவதற்கான நேரம் கிடையாது. எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம், என்றவன் அதற்குப் பிறகு அவளைப் பேச விடவே இல்லை.
இவ்வளவு நாள் இழந்த சொர்க்கத்தை மீட்க சென்றனர் இருவரும்...

*********************

அடுத்தது எபிலாக் …..
 

Baby

Active member
Member
வாவ்... அழகான காதல் கதை.... சின்னக்கதையா இருக்கு.. ஆனா ரொம்ப அழுத்தம் இல்லாத அதே சமயம் நார்மலா இல்லாத ஒரு காதல் கதை....
வாழ்த்துகள்....
 

Rajam

Well-known member
Member
சிறியதா இருந்தாலும் சிறப்பாக இருந்தது.இங்கு பெண்ணே கொலை
க்கு காரணமா இருந்தது அதிர்ச்சி தான்.
எப்படியோ இறுதியில் இனிய முடிவு.
 

Viswadevi

✍️
Writer
வாவ்... அழகான காதல் கதை.... சின்னக்கதையா இருக்கு.. ஆனா ரொம்ப அழுத்தம் இல்லாத அதே சமயம் நார்மலா இல்லாத ஒரு காதல் கதை....
வாழ்த்துகள்....
Thank you so much sis 💓💓💓💓💓
 

Viswadevi

✍️
Writer
சிறியதா இருந்தாலும் சிறப்பாக இருந்தது.இங்கு பெண்ணே கொலை
க்கு காரணமா இருந்தது அதிர்ச்சி தான்.
எப்படியோ இறுதியில் இனிய முடிவு.
Thank you so much sis 💝💝💝💝💝
 

பிரிய நிலா

Well-known member
Member
நிறைய சந்தேகம் குழப்பங்களோட கதை நகர்ந்தாலும் விறுவிறுப்பு குறையவில்லை...

ஒரு வழியா பிரச்சனை எல்லாம் ஓவர்... சூப்பர் சிஸ்.
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom