• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,264

Profile posts Latest activity Postings About

  • உன்னில் இதயம் அளாவுதே - 3

    “மதினி!”
    பற்பசையோடு இருந்த ப்ரஷை கையில் பிடித்தபடி அவள் சிலையாய் நிற்க சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த சாந்தியோ
    “என்னடி இது? இன்னைக்கே கடைக்குப் போறியா?” என்று கேட்க
    “இங்க இருந்து என்ன செய்யப்போறேன் அத்தை? உன் மகன் எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கான்னு தெரியல... இந்த லெட்சணத்துல மறுவீட்டு விருந்து ஒன்னு தான் குறைச்சல்... கடைக்குப் போனா மாசம் முடிஞ்சதும் சம்பளமாச்சும் வரும்... நீ ஒன்னு பண்ணு, இடியாப்பத்தையே மதியானத்துக்கும் டிபன் பாக்ஸ்ல போட்டு குடுத்துடு... வெளிய சாப்பிட்டா என் சம்பளத்துக்குக் கட்டுப்படி ஆகாது அத்தை... நாளையில இருந்து நான் சீக்கிரம் எந்திரிச்சு சமைச்சுக்கிறேன்” என்றாள் அவள்.
    அவளது பேச்சு மூவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் பிரபல ஜவுளி நிறுவனமொன்றில் விற்பனைப்பெண்ணாக பணிபுரிகிறாள் ஆனந்தி. நாள் முழுக்க கால் கடுக்க நிற்கும் வேலை தான். பதினொன்றாம் வகுப்பு கூட தாண்டாதவளுக்கு வேறென்ன வேலை கிடைக்கும்?
    அந்நேரம் பார்த்து வீட்டுக்குள் வந்த சரவணன் தங்கை வேலை பார்க்கும் கடைக்குக் கிளம்பி நிற்பதைக் கண்டதும் பற்களை கடித்தவன்
    “நீ வீட்டு மானத்தை வாங்கணும்னு கங்கணம் கட்டிருக்கியா? நேத்து தான் கல்யாணம் ஆகிருக்கு... இன்னைக்கு நீ வேலைக்குப் போனா தெருவுல உள்ளவங்க என்ன பேசுவாங்க?” என கத்தினான்.
    ஆனந்தி காதை சுண்டுவிரலால் நிமிண்டிவிட்டு “எவன் என்ன பேசுனா எனக்கு என்ன? நான் வேலைக்குத் தானே போறேன், எவன் கூடவும் ஓடிப்போகலையே... நீ என்ன புதுசா குடும்பமானத்தைப் பத்தி கவலைப்படுற? உனக்குத் தான் நாங்க எக்கேடு கெட்டாலும் கவலை இல்லையே... அப்பா ஆக்சிடெண்ட்ல காலை இழந்து வேலைக்குப் போகமுடியாம ஆனப்ப கூட அண்ணி முந்தானைய பிடிச்சுட்டுப் போனவன் தானே நீ... அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் எங்களை நாங்க தானே பாத்துக்குறோம்... உன் பொண்டாட்டி மகராசி மட்டும் கல்யாணம் கருமாதினு எங்க வீட்டுப்படி ஏறலைனா இப்பவும் எதுவும் மாறிருக்காது... சும்மா இங்க வந்து சாமியாடாம வழிய விடு... இல்லனா அண்ணன்னு கூட பாக்க மாட்டேன்” என்று சொல்ல சரவணன் குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்து விலகி நின்றான்.
    ஆவுடையப்பனையும் சாந்தியையும் பார்த்தவள் “நான் கிளம்புறேன்... உங்க மகன் வந்தா அடுத்து அவன் என்ன பண்ணலாம்னு இருக்கான்னு கேட்டு வைங்க... காலம் முழுக்க டாஸ்மாக் கடையே கதினு கிடப்பானா இல்ல வீடு குடும்பம் தங்கச்சிய பத்தி யோசிச்சு முடிவெடுப்பானானு எனக்குத் தெரியணும்... அவன் குடிச்சி கட்டமண்ணா போவேன்னு சொன்னான்னு வச்சுக்கோங்க, இந்த ஆனந்தியோட சுயரூபத்தைப் பாப்பான்... மறுபடியும் சொல்லுறேன், நான் அவனை என்ன செஞ்சாலும் நீங்க கேள்வி கேக்கக்கூடாது....................

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-3.4844/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே - 2

    அகிலனும் மறுபேச்சு பேசாமல் அன்னையிடம் சென்றான்.
    அவரோ அன்று நடந்தேற வேண்டிய சாந்தி முகூர்த்தத்தைப் பற்றி கோடிட்டுக் காட்ட அகிலனுக்குச் சங்கடமாக இருந்தது.
    “இதுக்கு என்னம்மா அவசரம்?” என்று தயங்கியவனை சாந்தி பார்த்த பார்வையில் அந்த வீடு பற்றியெரியாதது ஆச்சரியம்.
    “இப்ப தான் நான் அவசரப்படாம யோசிச்சு முடிவெடுத்திருக்கேன் அகிலு... உன் பேச்சைக் கேட்டு அவசர அவசரமா கல்யாணம் ஏற்பாடு பண்ணி அது நின்னு ஊர் முன்னாடி தலை குனிஞ்சது போதும்... கிடைச்ச வாழ்க்கைய ஒழுங்கா வாழ பாரு... மறுபடியும் உன்னால நானோ உன் அப்பாவோ தலைகுனிஞ்சு நிக்க தயாரா இல்ல” என சீறினார் சாந்தி.
    அவரது சீற்றத்தில் அகிலனின் கண்கள் கலங்கியது. பத்து நாட்களுக்கு முன்பு வரை அன்பே உருவாக இருந்த அன்னை. அவரும் தான் எவ்வளவு பழிசொற்களைத் தாங்குவார்?
    “சாந்தி”
    அவன் கண் கலங்குவதைப் பார்த்து மனைவியை அதட்டினார் ஆவுடையப்பன்.
    “என்னை ஏன் அதட்டுறிங்க? எல்லாம் இவன் செஞ்ச தப்பு தானே”
    “அவன் தெரிஞ்சா பண்ணுனான்? உன் அண்ணனும் அவர் மகளும் பண்ணுன காரியத்தை மறந்துட்டியா? பத்து நாள்ல கல்யாணம், ஊர் முழுக்க பத்திரிக்கை குடுத்தாச்சுனு தெரிஞ்சும் துணிச்சலா கல்யாணத்தை நிறுத்துனாங்க... ஏன்? இவன் செய்யாத தப்புக்காக... இவன் அப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணுவானானு சுப்ரஜா யோசிச்சிருக்க வேண்டாமா? சும்மா அகில் கிட்ட குரலை உயர்த்தி பேசாத... இந்த வீட்டுலயும், இதுல இருக்குற ஒவ்வொரு பொருள்லயும் பத்தொன்பது வயசுல இருந்து அவன் தூங்காம கம்பெனில ஷிப்ட் பாத்து உழைச்ச உழைப்பு இருக்கு... அவன் மட்டுமா உன் அண்ணன் மகளை விரும்புனான்? நீயும் வார்த்தைக்கு வார்த்தை அந்த சுப்ரஜாவை மருமகள் மருமகள்னு கொண்டாடுனல்ல... அவளை தலை மேல தூக்கி வச்சு ஆடுனல்ல... அவ காதலிச்சவனையும் நம்பல... பாசம் காட்டுன உன்னையும் மதிக்கல... சும்மா இவனைத் திட்டாத”
    “எனக்கு மட்டும் என் பிள்ளைய திட்டணும்னு ஆசையாங்க?”
    குரல் கமற கண்ணீர் கசிந்த விழிகளை புடவை முந்தானையில் துடைத்துக்கொண்டார் சாந்தி.
    அகிலன் வரவழைத்துக்கொண்ட இயல்பான குரலில் “அழாதம்மா... அப்பா ஏதோ ஆதங்கத்துல பேசிட்டார்... நீ சொன்ன மாதிரி இனிமே ஒழுங்கா நடந்துப்பேன்மா... என்னால இனிமே நீயோ அப்பாவோ வருத்தப்படுற சூழ்நிலை வராது” என்றான்......................
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-2.4826/

    #நித்யாமாரியப்பன் #உன்னில்இதயம்அளாவுதே
    ஹலோ மக்களே உன்னில் இதயம் அளாவுதே முதல் அத்தியாயம் தளத்தில் போட்டாச்சு...

    “கல்யாணப்பொண்ணா முகத்துல சந்தோசத்தோட இரு ஆனந்தி... அகிலன் உனக்குத் தெரியாத ஆளா? சின்ன வயசுல இருந்து ஒன்னா ஓடி பிடிச்சு விளையாடுனவன் தானே? நீங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கடவுளே நினைச்சுட்டார்... அதான் உனக்கு ஏற்பாடு பண்ணுன கல்யாணமும் நின்னுடுச்சு... அவனுக்கு ஏற்பாடு பண்ணுன கல்யாணமும் நின்னுடுச்சு”
    சொன்னது வேறு யாருமில்லை. ஆனந்தியின் அன்னை மங்கை. அவரை உஷ்ணமாக முறைத்தாள் ஆனந்தி. அவரது கண்கள் கலங்கவும் உஷ்ணத்தைக் குறைத்து
    “சும்மா கண்ணைக் கசக்காத... அதான் எல்லாருமா பேசி வச்சு என்னை இங்க உக்கார வச்சிட்டிங்கல்ல... இப்ப எதுக்கு அழுற? கண்ணைத் துடை... உன் புள்ள வர்றான்... அப்புறம் இதுக்கும் அவன் என்னைத் தான் திட்டுவான்” என்றாள்............

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-1.4825/

    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    ஹலோ மக்களே, நாளையில் இருந்து மானிங் 8 மணிக்கு எழிலன்பு நாவல்கள் தளத்தில் என்னுடைய புது கதை வரும். டீசர் படிக்காதவங்க லிங்ல போய் படிச்சிடுங்க. கதை முடிஞ்சதும் நீக்கப்படும். சோ முடிஞ்சவரைக்கும் ஆன்கோயிங்ல படிக்க ட்ரை பண்ணுங்க.
    ********
    “ஒரு குவார்ட்டர் குடுண்ணே” என வாங்கியவன் ப்ளாஸ்டிக் தம்ளரில் ஊற்றி மடமடவென குடிக்க ஆரம்பித்தான்.
    “என்னப்பா புதுமாப்பிள்ளை இங்க வந்து நிக்குற?” என தெரிந்தவர் கேட்க
    “புதுமாப்பிள்ள ஆனதால தான் இங்க வந்து நிக்குறேண்ணே” என்றான் குளறியபடி.
    முழுவதுமாக நான்கு பாட்டில்களைக் காலி செய்துவிட்டு அங்கேயே விழுந்தவனுக்கு போதையில் உறக்கம் வந்துவிட்டது.
    வீட்டிலோ அகிலன் இப்படி கிளம்பிச் சென்றதை அறிந்த சாந்தி கோபாவேசத்தில் கத்திக்கொண்டிருந்தார்.
    “என்னமோ உம்ம மவனுக்கு சப்போர்ட் பண்ணுனீரு... இந்தா டாஸ்மாக்குக்கு ஓடிட்டான்ல... உழைக்காம திரிஞ்ச கழுதையும் டாஸ்மாக் படியேறுன ஆம்பளையும் உருப்பட்டதா சரித்திரமே இல்லவே... உம்ம மவன் வரட்டும், வளர்ந்த வெளக்குமாறால வெஞ்சாமரம் வீசுறேன்”
    திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்கள் கிளம்பி சென்றுவிட்டனர். வீட்டில் ஆனந்தியோடு ஆவுடையப்பன், சாந்தி மற்றும் அனுஷா மட்டுமே இருந்தனர்.
    சாந்திக்கு மருமகளின் முகத்தைப் பார்க்க பார்க்க வயிறெரிந்தது. ஆனந்தியின் அருகே வந்தவர் அவளது கரத்தைப் பற்றி தனது கன்னத்தில் அடிக்க ஆரம்பித்தார்
    “அத்தை என்ன பண்ணுற?” என ஆனந்தி பதற
    “என்னைய அறைஞ்சு கொன்னுடு ஆனந்தி... நீயும் என்னை மாதிரி கத்தி கத்தி பேசி மனசு வலிய மறைக்குறவனு எனக்குத் தெரியும்... கல்யாணம் பண்ணி வச்சா இந்தப் பய திருந்துவான்னு நினைச்சேன்... அவன் உன் வாழ்க்கையையும் சேர்த்து சீரழிக்கானே” என அழ ஆரம்பித்தார்.

    டீசர் லிங்க்

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/உன்னில்-இதயம்-அளாவுதே-டீசர்.4769/

    #நித்யாமாரியப்பன் #உன்னில்இதயம்அளாவுதே
    ஹலோ மக்களே ராகமஞ்சரி இன்னைக்கு ஈவ்னிங் நீக்கப்படும்... சைட் மக்கள் படிக்கலனா ரீட் கரோ... நாளையில இருந்து புது கதை வரப்போகுது.... அதோட முன்னோட்டம் ஆல்ரெடி போட்டாச்சு...

    ஹலோ மக்களே, ராகமஞ்சரி 21 ஓப்பன் ஆகுது...

    ராகவ் இதற்கு மேல் இவளிடம் பிரத்யூத் நல்லவன் என நிரூபிக்க முயல்வது வீண் என்று புரிந்து கொண்டான்.
    “ஓ.கே... பிரதிய மறந்துடு, ரதியையும் மறந்துடு... உன்னையும் என்னையும் பத்தி மட்டும் யோசி”
    “உன்னையும் என்னையும் பத்தி யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? உன்னை என் ஃப்ரெண்டா நினைச்சேன்... ஆனா நீ என் கிட்ட பொய் சொல்லிட்ட... சோ இப்ப இருந்து நீ எனக்கு ஃப்ரெண்ட் இல்ல”
    “நான் உனக்கு வெறும் ஃப்ரெண்ட் மட்டும் தானா?”
    சேஷா அமைதியாய் நின்றாள். பதிலளிக்க விருப்பமில்லை அவளுக்கு.
    “உன் கிட்ட தான் கேக்குறேன்” கடினமாக ஒலித்தது ராகவின் குரல்.
    சேஷா கண்களை மூடிக்கொண்டாள்.
    “ஆமா... வெறும் ஃப்ரெண்ட் மட்டும் தான்... ஆனா இப்ப நீ எனக்கு ஃப்ரெண்ட் கூட இல்ல”
    “ஆனா எனக்கு அப்பிடி இல்ல” என்று கத்தினான் ராகவ்.
    சேஷா அவனது கோபத்தில் அதிர்ந்தாள். இருப்பினும் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு
    “அதை பத்தி எனக்குக் கவலை இல்ல... பொய் சொன்ன ஒருத்தன் எனக்கு ஃப்ரெண்டா மட்டுமில்ல, வேற எந்த உறவாவும் இருக்க தகுதியில்லாதவன்... இதுக்கு மேல ஆர்கியூ பண்ண எனக்குப் பிடிக்கல... உனக்கு என் மேல எந்த மாதிரியான ஃபீலிங் இருந்துச்சுனு ஐ டோண்ட் நோ அண்ட் ஐ டோண்ட் கேர்” என்று தீர்மானமாக மொழிந்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
    சென்றவளின் ஒரு காதிலிருந்து விழுந்த ஹூக் மாடல் மீனாக்காரி ஜிமிக்கியை அவள் கவனிக்கவில்லை. ஆனால் கோபமும் ஆற்றாமையுமாக நின்றவனோ அதை எடுத்துக் கொண்டான். அவனது கரம் அதை ஜீன்ஸ் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியது....
    லிங்
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/ராகம்-21.4727/#post-34890
    #நித்யாமாரியப்பன் #ராகமஞ்சரி
    ஹலோ மக்களே, ராகமஞ்சரி 19 - 21 போட்டாச்சு...

    “என்ன பாக்குற? உனக்கே தெரியும், உன்னை ஃபர்ஸ்ட் டைம் பஸ் ஸ்டாண்ட்ல பாத்தப்ப என் ஹார்ட் கொஞ்சம் தடுமாறுச்சுனு... அதே மாதிரி தான், நேத்து உன்னை ஃபர்ஸ்ட் டைம் ஷாரில பாத்ததும் மை ஹார்ட் மெல்ட்ஸ்”
    “பாத்துடா, உருகி வெளிய வந்துடப்போகுது... அப்புறம் உடம்புக்கு யார் ப்ளட் சப்ளை பண்ணுறது?”
    கேலியாகப் பேசியபடியே அலையை நெருங்கியவள் பிரம்மாண்ட அலை ஒன்று வரவும் “ஐயோ” என்று பதறி அவன் மீது மோதிக்கொள்ள ராகவின் கரங்கள் அவளைச் சுற்றி வளைத்துக்கொண்டது.
    வலிய கரங்களுக்குள் அடங்கி கிடந்தவளுக்கு தன்னை அவன் தூக்கிச் சுழற்றுவது தெரிந்ததும் கண்களைத் திறந்தாள். நொடிப்பொழுதில் கரையைத் தழுவ வந்த அலைக்குப் புறமுதுகு காட்டி சேஷாவை அலையிலிருந்து காத்திருந்தான் ராகவ்.
    அலையின் உப்புநீர்த்துளிகள் அவனது முதுகை நனைத்ததோடு சேஷாவைத் தீண்ட முடியாத தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் சமுத்திர ராஜனிடம் சரணடைந்தது.
    சேஷா பிரமித்து விழிக்கும் போதே “என்ன கண்ணுடா, விட்டா முழுங்கிடுவ போலயே” என்றான் ராகவ் குறும்பாக.
    நாப்பது கிலோ பெண்ணைத் தூக்கிக்கொண்டு நிற்பவனைப் போலன்றி என்னவோ பூங்கொத்தைத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்திருப்பதைப் போன்ற பாவனை அவனது முகத்தில்!
    “ராகவ்”
    திணறலாய் வந்த சேஷாவின் குரலில் இயல்புக்குத் திரும்பி அவளை கீழே இறக்கிவிட்டான்.
    “சோ உன்னை அலையில இருந்து காப்பாத்துனதுக்கு எனக்கு என்ன தருவ?”
    கை நீட்டி குறும்பு மின்ன கேட்டவனின் விழிகளைக் கண்டதும் சேஷா திகைத்துப் போனாள். இதயம் படபடவென இயல்புக்கு மாறான வேகத்துடன் துடிக்க இனம் புரியாத உணர்வு உடலெங்கும் பரவ பேச வார்த்தையின்றி நின்றாள் அவள்...........
    லிங்
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/ராகமஞ்சரி.331/page-3
    ஹலோ மக்களே, ராகமஞ்சரி 1- 18 எபிஸ் சைட்ல போட்டாச்சு...

    ராகவ் அவனை கையமர்த்திவிட்டு சேஷாவின் அழைப்பை ஏற்றான்.
    எடுத்ததும் சேஷா வெடிக்க ஆரம்பித்தாள்.
    “உன் ஃப்ரெண்ட் உருப்படவே மாட்டான்... சும்மா இருந்தவளை சுத்தி சுத்தி வந்து பல்லை காட்டிட்டு இப்ப அவ லவ் பண்ணுறப்ப அவளை அவாய்ட் பண்ணுறான்... அவன் நல்லாவே இருக்கமாட்டான், வீணாப் போனவன்”
    ராகவ் பொறுமையாகப் பேசலாம் என்று காத்திருந்தவன் சேஷா கொடுத்த சாபத்தால் பொறுமையிழந்தான்.
    “ஏய் கொஞ்சம் நிறுத்துறியா? சும்மா ஓனு கத்தக்கூடாது”
    “நான் அப்பிடி தான் கத்துவேன்டா.. ஏன்னா உன் ஃப்ரெண்ட் செஞ்ச காரியம் அப்பிடி”
    “உன் ஃப்ரெண்ட் மட்டும் என்னவாம்? செர்லாக் சாப்புடுற வயசுல அவளுக்கு லவ் ஒன்னு தான் குறைச்சல்”
    கடுப்பில் கத்த ஆரம்பித்தான் ராகவும். சகவாசதோஷம் என்று தனக்குத் தானே சமாதானம் வேறு கூறிக்கொண்டான்.
    ஆனால் சேஷாவோ அவனது பேச்சை அபவாதமாக எண்ணிக்கொண்டாள்.
    “சும்மா என் ஃப்ரெண்டை குத்தம் சொல்லாத ஈபிள் டவர்... அவ பாட்டுக்கு ஸ்டடீஸ், கேமரானு தான் இருந்தா... உன் ஃப்ரெண்ட் தான் அவளோட கள்ளமில்லாத உள்ளத்துல கதக்களி ஆடிட்டு இப்ப ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப்னு வெக்கமே இல்லாம கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறான்... ஒழுங்கா அவன் கிட்ட பேசி என் ஃப்ரெண்டுக்கு நியாயம் வாங்கிக் குடு... இல்லனா அவனை கொல்லுறதுக்கு கூட நான் தயங்க மாட்டேன்”
    இப்போது சேஷாவின் பேச்சில் அவனுக்குச் சலிப்பு தட்டியது. பிரத்யூத் நம்ரதாவைத் தவிர்ப்பதற்கான காரணம் வேறு! இவளோ லபோதிபோ என்கிறாளே தவிர நிலமை என்ன என்று புரிந்துகொள்ள முற்படவில்லை.
    “ஐயோ இந்தப் பொண்ணுக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரிய மாட்டிக்குதே... எம்மா ட்வார்ஃப், கொசு கடிச்சுலாம் மனுசன் சாகமாட்டான்... இன்னுமா நீ உன்னை ஒண்டர் வுமன் ரேஞ்சுக்கு இமேஜின் பண்ணிட்டிருக்க? நான் இருக்குறப்பவே நீ என் ஃப்ரெண்டை கொன்னுடுவியா? நீ அவனைக் கொல்லுறதுக்கு முன்னாடி ஆல் அவுட்டை வச்சு உன்னை நான் கொன்னுடுவேன் பாத்துக்க”
    “ஓ! நல்லா கேட்டுக்க, ஒரு பொண்ணு மனசுல காதலை தூண்டி விட்டுட்டு டைம் பாஸ் பண்ணிட்டு ஒதுங்குறதுலாம் ரொம்ப கேவலம்... நான் ரதிய உடைஞ்சு போகவிடமாட்டேன்... ஆனா உன் ஃப்ரெண்ட் செஞ்சது தப்பு தான், அதை உன்னாலயும் மறுக்க முடியாது... உங்க ரெண்டு பேருக்கும் கூடப்பிறந்த அக்கா தங்கச்சினு யாரும் இருந்திருந்தா இந்த வேதனை உனக்குப் புரிஞ்சிருக்கும் ராகவ்......
    இதுக்கு மேல சைட்ல படிச்சுக்கங்க... லிங்
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/ராகமஞ்சரி.331/

    #நித்யாமாரியப்பன்

    #ராகமஞ்சரி
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    உன்னில் இதயம் அளாவுதே முன்னோட்டம்
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    எத்தனை பேர் ராகமஞ்சரி படிக்கிறிங்க? 13 மார்ச்ல கதை முடிஞ்சிடும் மக்களே... 14 மானிங் கதை நீக்கப்படும்... படிக்கிறவங்க ஆன்கோயிங்கல படிச்சிருங்க... நன்றி!

  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom