• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,228

Profile posts Latest activity Postings About

  • உன்னில் இதயம் அளாவுதே - 13
    “அவன் பண்ணுன முட்டாள்தனம் உன்னைக் காதலிச்சது... உனக்காக சம்சு கிட்ட சண்டை போட்டு செய்யாத தப்புக்குக் கொலைகாரப்பட்டம் வாங்குன கிறுக்கன் அவன்... கடைசில கொலைகாரனைக் கட்டிக்க மாட்டேன்னு நீ சொன்னதும் தான் அவனுக்குப் புத்தி வந்துச்சு... இங்க பாருடி, காதலிச்ச எல்லாரும் காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்குறதில்ல... அதுக்காக அவங்கள்லாம் பிரம்மச்சாரியாவே இருந்துட்டாங்களா என்ன? என் மகன் உன்னை எப்பவோ மறந்துட்டான்டி... ஆனா உனக்குத் தான் அவனை மறக்க முடியல போல... போய் உங்கப்பன் கிட்ட நல்ல மாப்பிள்ளையா கொலை செய்யாத ஒருத்தனா பாக்கச் சொல்லு... அதை விட்டுட்டு என் மருமகள் கிட்ட வந்து சண்டைக்கு நிக்காத... வழி விடு” என்று காரசாரமாக பதிலடி கொடுத்து சுப்ரஜாவின் மூக்கை உடைத்த சாந்தி பூவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாமென மருமகளைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார்.
    சுப்ரஜா பொய் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் சாந்தி ஏன் பொய் கூறப்போகிறார்? அப்படி என்றால் அகிலன் சுப்ரஜாவுக்காகத் தான் சம்சுதீனிடம் தகராறு செய்திருக்கிறான். அதை மறைத்து அனுஷியாவுக்காக நடந்த சண்டை என தன்னிடம் பொய்யுரைத்திருக்கிறான்.
    ஏன் தன்னிடம் பொய் கூறினான்? உண்மையைக் கூறியிருக்கலாமே என்று ஆற்றாமையில் மனம் புழுவாகத் துடித்தது. வீட்டுக்கு வந்ததும் அவள் செய்த முதல் காரியம் மொபைலை சுவிட்ச் ஆப் செய்தது தான்.
    ஆனால் சாந்திக்கு மருமகளின் மனதில் நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றி தெரியாதல்லவா? அவள் போனை சுவிட்ச் ஆப் செய்ததற்கு என்ன காரணமென புரியவில்லை என்று மகனிடம் கூறிவிட்டார் அவர்.
    அகிலன் ஆனந்தியிடம் மொபைலைக் கொடுக்கும்படி கூற சாந்தியும் கொடுத்தார்.
    “ப்ச்! அதான் நீ பேசிட்டல்ல அத்தை... என் கிட்ட ஏன் குடுக்குற?” என்ற சிடுசிடுப்பைத் தொடர்ந்து சாந்தி அவள் கையில் மொபைலைத் திணித்துவிட்டு சென்றிருக்க வேண்டும்.
    சில நொடிகள் இடைவெளியில் ஒரு ஹலோ மெதுவாக கேட்டது மறுமுனையில்.
    “ஏன்டி போனை சுவிட்ச் ஆப் பண்ணுன?”
    “என் போனை நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்... நீ யாரு அதை கேக்க?”
    “ஹான்! இன்னையில இருந்து ஐந்து நாளுக்கு முன்னாடி உன் கழுத்துல தாலி கட்டுன புருசன்”
    “புருசன்னா என்ன பெரிய இதுவா? அதுசரி! ஒரு புல்லை புடுங்கிப் போட்டு புருசன்னு அதுக்குப் பேர் வச்சாலும் அது தங்குதங்குனு ஆடுமாம்... நீ ஐந்தே முக்காலடி மனுசன்... உன் பேச்சுக்கென்ன குறை?”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-13.4919/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே - 12
    வீட்டை நெருங்கிய போது பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி பேசியது இருவரின் காதிலும் விழுந்தது.
    “ஒரு வீட்டுக்கு மருமகள் வர்றானா அவ ராசிக்கு அங்க இருக்குற எல்லாரோட வாழ்க்கையும் ஓஹோனு மாறணும்... ஆனா சில ராசிகெட்டதுங்க வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்குறதுக்கு முன்னாடியே புருசனுக்குக் கொலைகாரப்பட்டம் வாங்கி குடுத்துட்டு தான் நுழையுதுங்க”
    கலாவதியின் அன்னை தான். மகள் தன் பேச்சைக் கேளாமல் ஸ்டான்லியைத் திருமணம் செய்து கொண்ட அதிருப்தி இத்தனை ஆண்டுகள் கழித்தும் மாறாமல் இருந்தது அவரிடம். தன் பிள்ளை வீட்டை எதிர்த்து காதல்திருமணம் செய்திருக்க ஆனந்தி மட்டும் பெற்றோர் பேச்சைத் தட்டாத பெண்ணாய் அகிலனை மணந்து கொண்ட எரிச்சல் அவருக்கு.
    அதை அவ்வபோது ஆனந்தியைத் தெருவில் பார்க்கும் போது ஜாடையாகச் சொல்லிக்காட்டுவார். அன்றும் அவ்வாறே செய்ய ஆனந்தி அதை காதில் போட்டுக்கொள்ளாமல் வீட்டை நோக்கி விரைந்தாள்.
    ஆனால் அனுஷியாவுக்குத் தனது அண்ணியை ஜாடை பேசிய ராஜேஸ்வரியைச் சும்மா விட மனமில்லை. ராஜேஸ்வரிக்குச் சரியான ஆள் தனது அன்னை தான் என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் நுழைந்தவள் நேரே டி.வி பார்த்துக்கொண்டிருந்த அன்னையிடம் வந்தாள்.
    ஆனந்தி கண் காட்டி எதையும் சொல்லாதே என்று எச்சரிக்க அதை கண்டுகொள்ளாமல்
    “ஆனந்தி மதினிய கலாவோட அம்மா ராசிகெட்டவங்கனு சொல்லுறாங்கம்மா... நீ வந்து என்னனு கேளு... இல்ல அவங்க எல்லாருக்கும் குளிர் விட்டுப் போயிடும்” என்றாள்.
    மகள் கூறியதைக் கேட்டதும் சாந்தி தனது சாந்தத்தைத் தொலைத்து கோபக்கார காளியாகிவிட்டார்.
    “அவ மகள் ஓடிப்போன கல்யாணம் பண்ணுன அழகுக்கு அவள்லாம் என் மருமகளை பேசலாமா? இன்னைக்கு அவளா நானானு ஒரு கை பாக்குறேன்” என சீற்றத்தோடு தொலைகாட்சியை ஆப் செய்தார்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-12.4918/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே-11

    ஆனந்தி சட்டென திரும்பியவள் அவனது கண்களை வைத்தே அவன் மனதில் புகுந்த கள்ளத்தை அறிந்துவிட்டாள்.
    “என்ன புதுபொண்டாட்டினு ஆசையா பாக்குறியாக்கும்?”
    சிரிக்காமல் முறைப்போடு மிரட்டலாய் அவள் கேட்ட விதத்தில் அகிலனின் தலை அவசரமாக இல்லையென ஆடியது.
    உடனே முறைப்பில் வீரியத்தைக் கூட்டி “இதுவே சுப்ரஜாவா இருந்தா பாத்திருப்பல்ல?” என அவள் கேட்கவும்
    “அவளா இருந்தா இப்பிடி ஒரு சான்ஸே கிடைக்காது” என்றான் அவன்.
    “என்னடா உளறுற?”
    “அவளா இருந்திருந்தா இந்நேரம் தலைக்குக் குளிச்சிருக்க மாட்டா... ஏன்னா டெய்லி தலைக்குக் குளிச்சா ஹேருக்கு நல்லது இல்லனு பார்லர்ல சொன்னாங்களாம்... சோ வீக்லி ஒன்ஸ் ஹேர்வாஷ் மட்டும் பார்லர்ல பண்ணுவா”
    “ஓ! மேல சொல்லு”
    “அவளா இருந்தா இப்பிடி காட்டன் ஷேரில நாட் வச்ச ப்ளவுஸ்லாம் போட்டுட்டு வந்து நிக்க மாட்டா... ஏன்னா அவளுக்கு ஷேரினா சுத்தமா பிடிக்காது... பின்ன எங்க ஆசையா பாக்குறது?”
    கடைசி வாக்கியத்தை மென்று விழுங்கி வெளியிட்டாலும் அது ஆனந்தியின் செவியில் விழுந்தது.
    அவள் சிரிப்போடு வேறு பக்கம் திரும்ப “இப்ப சொல்லு... இந்த நீளமுடி, அதுல சொட்டுற தண்ணி, இப்பிடி முதுகுத்தண்டுல உருண்டோடுற நீர்த்துளி இதெல்லாம் அவ கிட்ட எப்பிடி ரசிக்க முடியும்?” என்றான் சற்று தைரியமாக.
    ஆனந்தி சட்டென திரும்பி புருவத்தை உயர்த்தி அவனைப் பார்க்கவும் அவனது பேச்சு பாதியில் நின்றது.
    அவள் தன்னை தவறாக எண்ணிவிட்டாளோ என்று பயந்தவன் தலையை உலுக்கிவிட்டு கட்டிலில் மீண்டும் அமர்ந்தான்.
    சட்டென கையை கூப்பியவன் “என்னை மன்னிச்சிடு நந்தி... நானும் சராசரி பையன் தான்... இப்பிடி நீ வந்து நின்னு பேசுறப்ப என் காது உன் பேச்சைக் கேட்டாலும் கண்ணு உன்னை பாக்குதுடி... முன்ன மாதிரி இல்ல... இப்ப வேற மாதிரி திருட்டுத்தனமா பாக்குதுனு வச்சுக்கோயேன்... ஒருவேளை நான் நந்தியோட புருசனா மாறிட்டிருக்குறேனா?” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும் ஆனந்தி சத்தமாகச் சிரித்துவிட்டாள்.
    “சிரிக்காதடி... என் அவஸ்தை எனக்கு... இப்பிடிலாம் பாத்தா நீ திட்டுவியோனு பயமா இருக்கு... பாக்காம இருக்கலாம்னா அவ்ளோ செல்ஃப் கன்ட்ரோல் எனக்கு இல்ல... நீ கேக்கலாம், ஃப்ரெண்ட் ஃப்ரெண்டுனு சொல்லிட்டு இப்ப மாத்தி பேசுறியேனு... இப்ப நீ ஃப்ரெண்ட் மட்டும் இல்லல்ல... என் பொண்டாட்டியும் தானே... அதுவும் என்னைப் பத்தி புரிஞ்சிக்கிட்டு நான் கஷ்டப்படக்கூடாதுனு யோசிக்குற ஃப்ரெண்ட்லி பொண்டாட்டி... நான் பாக்குறதை மனசுல வச்சுக்கிட்டு என் கூட பேசாம இருந்துடாத ப்ளீஸ்”
    நட்புக்கும், புதிதாக துளிர்த்த கணவன் மனைவி உறவுக்குமிடையே அவன் அல்லாடுவதை புரிந்துகொண்டாள் ஆனந்தி.
    ஆதரவாக அவனருகே அமர்ந்து முதுகில் தட்டியவள் “விடு... நான் உன்னைத் தப்பா நினைக்கல... காசு எதுவும் வேணும்னா தயங்காம கேளு அகில்... இனிமே உனக்கு ஒன்னுனா நான் தான் வரணும், என் நல்லது கெட்டதை நீ தான் கவனிச்சிக்கணும்... அப்புறம் ஏன் இந்த தயக்கம்? ...................

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-11.4906/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே - 10
    அப்போது ஆனந்திக்குப் பட்டுப்புடவை செக்சனில் வேலை. வேறு யாரிடமும் செல்லாமல் நேரே அவளிடம் வந்தவர் சுப்ரஜாவையும் அமரச் சொல்லிவிட்டு “என் மருமகளோட கலருக்கு ஏத்த சேலையா எடுத்துப் போடும்மா... குறைஞ்சது இருபதாயிரமாச்சும் இருக்கணும்” என்றார்.
    ஆனந்தியும் மற்ற வாடிக்கையாளர்களை எப்படி கச்சிதமாக கையாளுவாளோ அதே கச்சிதத்துடன் சாந்திக்கும் பட்டுப்புடவைகளைக் காட்டினாள்.
    “இந்தப் புடவைய பாருங்க... இது தான் இப்ப ட்ரெண்ட்... எங்க கடை விளம்பரத்துல திரிஷா கட்டிட்டு வர்ற புடவை இது தான்” என்றபடி அழகான புடவை ஒன்றை காட்டினாள் ஆனந்தி.
    ஆனால் சாந்தி அதை ஏற்கவேண்டுமே!
    “இதை அந்த திரிஷாவே கட்டிக்கட்டும்... என் மருமகள் எதுக்கு அவ கட்டுன சேலைய கட்டணும்? நீ அந்த ரெண்டாவது அடுக்குல இருக்குற அரக்கு கலர் பட்டுச்சேலைய காட்டு” என்றார் அவர் மிடுக்காக.
    ஆனந்திக்கு வந்த கடுப்பில் புடவையை அவர் தலையில் தூக்கிப் போடலாமா என்று கூட யோசித்தாள்.
    ஆனா இது கடை. அவர் அவளது வாடிக்கையாளர். வாடிக்கையாளரைக் கடவுளாக பாவிக்கவேண்டுமென மகாத்மா காந்தி வேறு கூறியிருக்கிறாரே!
    எனவே பொறுமையாக அடுத்த அடுக்கிலிருந்த பட்டுப்புடவையை எடுத்துக் காட்டினாள் ஆனந்தி.
    “இதுவா?”
    ஆனால் சாந்தி என்ற விடாக்கண்டியோ அவளை வைத்து விளையாட ஆரம்பித்தார்.
    “அது குங்குமக்கலர்... நான் கேட்டது அதோ இருக்கு பாரு, அந்தப் புடவை” என வேறோன்றை வேண்டுமென்றே காட்டி எடுக்கச் சொன்னார்.
    “இதுவா?” என ஆனந்தி அதையும் எடுக்க
    “அதுவும் நல்லா இருக்கு... அதையும் எடு... அதுக்கு அடுத்து ரெண்டு சேலை தள்ளி இருக்கு பாரு, அரக்கு கலர் பட்டு, அதையும் எடு” என ஜம்பமாக கூறியவரை மனதுக்குள் வறுத்தெடுத்தபடி புடவையை எடுக்கச் சென்றாள் ஆனந்தி.
    அப்படி இப்படி என அவளை அலைக்கழித்து எப்படியோ முப்பதாயிரம் ரூபாய்க்கு பட்டுப்புடவையை எடுத்தார் சாந்தி.
    செல்லும் முன்னர் சுப்ரஜாவை பில் கவுண்டருக்கு அனுப்பிவிட்டு ஆனந்தியிடம் வந்தவர் அவள் கையில் ஐந்தாயிரம் ரூபாயைத் திணிக்கவும் அவள் திகைத்தாள்.
    “இப்ப எதுக்கு எனக்குக் காசு குடுக்குற? கடையில வச்சு இப்பிடிலாம் குடுக்கக்கூடாது” என அவள் சி.சி.டி.வி கேமராவைப் பார்த்து திணறலாகப் பேச
    “ப்ச்! இதுல உனக்கும் மதினிக்கும் பட்டு எடுத்துக்க... அண்ணனுக்கு வேஷ்டி சட்டை எடுத்துக்க... நம்ம அகிலோட கல்யாணத்துக்கு நீயும் ஜம்முனு வரணும்ல” என சாந்தி கூறவும் ஆனந்தி உதட்டைச் சுழித்தாள்.
    “க்கும்! இப்ப யாரு உன் மகன் கல்யாணத்துக்கு வரப் போறாங்க? எனக்கும் அடுத்த மாசம் கல்யாணம்... ஞாபகம் இருக்குதா?” என கேட்டவளிடம்...........................
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-10.4905/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே-9
    ஆனந்திக்கு ஓரளவுக்கு அகிலனின் மனநிலை புரிந்துவிட்டதால் மாமியாரைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள் அவள்.
    “அகிலை பத்தி எனக்குத் தெரியும் அத்தை... நீ சும்மா சும்மா அவனைத் திட்டாத... ஒரு காலத்துல உன் பிள்ளைய ஒல்லிப்பிச்சான்னு சொன்னதுக்கு நீ என் கூட சண்டைக்கு வந்ததை மறந்துட்டியா? ஏன் இப்பிடி மாறிட்ட?”
    “எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாம மகனை வளர்த்திருக்கோம்னு இறுமாப்பா திரிஞ்ச காலம்டி அது... எப்ப இவன் செட்டு சேர்ந்து தேரிக்காட்டுக்குப் போய் குடிச்சி சண்டை போட்டு கொலைகாரன் பட்டத்தோட வந்து நின்னானோ அப்பவே அந்த இறுமாப்பு உடைஞ்சிடுச்சு... நானும் ஒரு பொண்ணை பெத்திருக்கேன்டி... அவளைக் கல்யாணம் பண்ணுனவன் வேறொருத்திய மனசுல வச்சுக்கிட்டு என் பிள்ளைய தள்ளி வச்சிட்டான்னா என் வயிறு பத்தி எரியாதா? மங்கை மதினிக்கும் அப்பிடி தான இருக்கும்?”
    அன்னை மீண்டும் மீண்டும் பழைய சம்பவத்தைக் குத்திக்காட்டவும் அகிலன் மனதுக்குள் நொறுங்கிப்போனான். கலங்கிய கண்களுடன் தனது அறைக்குப் போய்விட்டான் அவன்.
    ஆனந்தி சாந்தியின் தோளை ஆதுரமாகப் பற்றினாள்.
    “அவன் ஏதோ ஃப்ரெண்டுங்க உசுப்பேத்துனாங்கனு போனான்... கெட்டப்பேர் வாங்குனான்... அந்தச் சம்பவத்தால எவ்ளோ பிரச்சனைய சந்திச்சிருக்கான்... இனிமே கனவுல கூட உன் மகன் தப்பு பண்ணமாட்டான் அத்தை... உனக்கு அகிலை பத்தி நான் சொல்லித் தான் தெரியணுமா? தேவையில்லாம பயப்படாத... இப்ப என்ன, அகில் மட்டும் சென்னைக்குப் போகட்டும்... நான் அவன் கூப்பிடுற வரைக்கும் இங்க இருந்து அவனுக்கு என்னெல்லாம் பிடிக்குமோ அதை சமைக்க கத்துக்குறேன்”
    “உன் கிட்ட பேசி மீள முடியுமா?” என அவர் நொடிக்கும் போது ஆவுடையப்பன் பருப்பு வடைகளுடன் வந்துவிட்டார்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-9.4881/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே - 8
    மருத்துவர் ராஜகோபாலனால் இனி நடக்கவே முடியாது என்று கூறிவிட இனி குடும்பச்சுமை தன் மீது விழுந்துவிடுமே என சரவணன் கவலைப்பட்டான். லலிதாவோ மாமனாருக்குத் தொண்டூழியம் பார்க்க வைத்துவிடுவார்களோ என அஞ்சினாள்.
    இருவரது கவலையும் சுயநலம் என்ற ஒரே புள்ளியைத் தொடவும் அடுத்த நாள் அன்னையிடம் வந்து வெளிப்படையாகவே மனதில் இருப்பதைக் கூறிவிட்டான்.
    “இவ்ளோ நாள் உங்களுக்காக நான் உழைச்சிருக்கேன்... இப்ப எனக்குனு ஒருத்தி வந்துட்டா... நாளைக்கு எங்களுக்குப் பிள்ளைங்க வந்தா அதுங்களை நான் தான் பாத்துக்கணும்... இன்னும் எத்தனை நாளுக்கு உங்களுக்காக நான் ஓட முடியும்?”
    “இப்ப என்ன செய்யப்போற சரவணா? சொல்லிடு... எதுவா இருந்தாலும் நானும் உங்கப்பாவும் உன்னைத் தடுக்கமாட்டோம்” என வேதனையின் உச்சத்தில் இருந்த மங்கை கூறவும் அவனோடு இருந்த லலிதாவுக்குக் குதூகலம்.
    சரவணனோ கொஞ்சம் கூட இரக்கமின்றி “நானும் லலிதாவும் தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கோம்... இனிமே இந்த வீட்டுக்கு என்னால பணம் குடுக்க முடியாது” என்றான்.
    மங்கைக்கு உதவியாக மருத்துவமனைக்கு வந்திருந்த சாந்திக்கே அவனது பேச்சில் கோபம் பொங்கியது. இருப்பினும் மருத்துவமனையில் கத்தக்கூடாதென்பதால் அமைதி காத்தார்.
    ஆனால் மங்கைக்கு அப்படி எதுவும் இல்லை போல.
    “உன் இஷ்டம்பா... வீடு பால் காய்ச்சுறதுக்காச்சும் நாங்க வரலாமா?” என்று கேட்டார். பெற்ற மனம் அல்லவா!
    “உனக்கு எதுக்கும்மா சிரமம்? லலிதாவோட அப்பாவும் அம்மாவும் எங்க வீட்டுப்பக்கத்துல தான் குடியிருக்காங்க... அவங்க வருவாங்க... உதவிக்கு இவ தம்பி தருண் இருக்கான்மா”
    “நல்லதுப்பா”
    இது தான் மங்கை கடைசியாக அவனிடம் பேசியது. பின்னர் அவனும் லலிதாவும் பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு கிளம்பும் போது மைந்தனின் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு (பணமதிப்பிழப்பு வராத காலகட்டம் அது) ஒன்றைக் கொடுத்தார்.
    “நல்லா இருங்க”
    சரவணன் அன்று போனவன் தான். பிறகு தந்தைக்கு கால்களை அகற்றிய போதும் அவன் வரவில்லை. எங்கே செலவு செய்ய வைத்துவிடுவார்களோ என்ற பயம்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-8.4880/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே - 7
    முந்தைய தினம் பள்ளிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ஆனந்தியைத் தன்னோடு கொக்கிரகுளம் அறிவியல் மையத்துக்கு வரும்படி அழைத்திருந்தாள் அவள்.
    ஆனந்தியும் அன்று ஆங்கில ஆசிரியை தேர்வு வைப்பார் என்பதால் பள்ளிக்குச் செல்லாமல் அறிவியல் மையத்துக்கு அவளோடு சென்றுவிட்டாள்.
    “இன்னைக்கு கலர் ட்ரஸ் தான்மா” என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு இருவரும் தீபாவளிக்கு எடுத்த அனார்கலி சுடிதாரை அணிந்து கிளம்பினர்.
    அங்கே சென்றதும் “ஆனந்தி உனக்கு டைனோசர்னா பிடிக்கும்ல... அங்க நிறைய டைனோசர் சிலை இருக்குடி... நீ அது பக்கமா நடந்து போனா உறுமிக்கிட்டே தலைய திருப்பி பாக்கும்” என்று ஜூராசிக் பார்க் விசிறியான ஆனந்தியின் டைனோசர் ஆசையைத் தூண்டிவிட்டு அவளை அந்தப் பக்கம் அனுப்பிவிட்டு அவள் சென்றுவிட்டாளா என்று கவனித்து தனது காதலன் ஸ்டான்லியோடு சுற்றப் போய்விட்டாள்
    ஆனந்தியோ சென்சார் மூலம் இயங்கும் டைனோசர்களின் உறுமலில் மெய் மறந்து நின்றவள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து மாணவர்களோடு மாணவர்களாய் வந்த அகிலனின் பார்வையில் விழுந்தாள்.
    அவளைப் பார்த்ததும் “நந்தி இங்க என்ன பண்ணுது?” என்று நண்பன் குமாரிடம் கேட்டான் அவன்.
    “பாய் ஃப்ரெண்ட் கூட வந்திருப்பாடா அகில்” என்றான் குமார்.
    “சீச்சீ! ஆனந்தி அப்பிடிலாம் வரமாட்டா... அவ ரொம்ப நல்லப்பொண்ணு” என அவசரமாக மறுத்தான் அகிலன்.
    “அப்ப பாய் ஃப்ரெண்டோட வர்றவங்கல்லாம் கெட்டவங்களாடா?” என குமார் சீண்ட
    “அதுல்லாம் எனக்குத் தெரியாது... ஆனா ஆனந்தி அப்பிடிப்பட்ட பொண்ணு இல்ல” என உறுதியாக மறுத்தான் அகிலன்.
    அவனுக்கு ஆனந்தியைப் பற்றி நன்றாகத் தெரியும். அவள் உரிமையோடு சண்டையிடுவதும், பேசிப்பழகுவதும் தன்னிடம் மட்டும் தான். அவளால் ஒரு ஆண்பிள்ளையோடு சண்டையிட வேண்டுமானால் முடியும். ஆனால் காதல் போன்ற மென்மையான உணர்வுகள் அவளுக்கு எந்த ஆண் மீதும் வராதென தீர்க்கமாக நம்பினான் அப்போதிருந்த பதின்வயது அகிலன்.
    அவனது நம்பிக்கையை உண்மையாக்குவது போல ஸ்டான்லியோடு சுற்றிய கலாவதி அவனது பார்வையில் சிக்கினாள்.
    “டேய் நம்ம ஸ்டான்லி... அவன் கூட இருக்குறது நந்தியோட ஃப்ரெண்ட் கலா” என்றான் அகிலன்.
    ஆனந்தியைத் தொடர்ந்து கண்காணித்தவன் கலாவதி தான் ஆனந்தியை அழைத்து வந்திருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டான்.
    இதோ இப்போது அதை வைத்தே ஆனந்தியை மிரட்டிவிட்டு ஓடினான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-7.4863/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளவுதே-6

    காபியை நீட்டிய லலிதாவின் முகத்தில் உவப்பில்லை. தாழ்த்திய பார்வையை நிமிர்த்தவில்லை. நேருக்கு நேராக பார்க்கும் தைரியம் இல்லை போல.
    ஆனந்தி நக்கலாக யோசித்தபடி டபராவை எடுத்துக்கொண்டாள். ஒரு மிடறு காபியை அருந்தியவள் அருகே அமர்ந்து காபியை அருந்த போன அகிலனைத் தடுத்தாள்.
    “என்னடி நந்தி?” என்றவனிடம்
    “சுகர் ஓவரா இருக்கு... உனக்குப் பிடிக்காதுல்ல... உன் காபியையும் குடு, நானே குடிச்சிட்டு உனக்கு வேற காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றவள் அவன் சரியென்று சொல்லும் முன்னர் இரண்டு டம்ளர் காபியையும் மடமடவென காலி செய்துவிட்டு டபரா செட்டோடு சமையலறைக்குள் புகுந்தாள்.
    லலிதா சோகமே உருவாய் மதியவிருந்துக்காக காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள்.
    ஆனந்தியைக் கண்டதும் தலையைக் கவிழ்ந்தவள் அவள் காபி போட்டு முடிக்கும் வரை நிமிரவே இல்லை.
    ஆனந்தி காபியை ஆற்றும் சாக்கில் “மதினி சொதிக்கு தேங்கா துருவுறப்ப அழுது கிழுது வச்சிடாதிங்க... அப்புறம் தேங்கா பால் உப்பு கரிச்சுக் கிடக்கும்... சொதியும் நல்லா இருக்காது” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு வெளியேற லலிதாவோ எதுவும் செய்ய முடியாத தனது நிலையை நொந்துகொண்டாள்.
    அகிலனிடம் காபியை நீட்டியவள் “அம்மா எங்கப்பா?” என்று கேட்க
    “அவ கடைக்குப் போயிருக்காம்மா... அகிலனுக்கு வெஜிடபிள் பிரியாணி பிடிக்கும்ல... அதுக்கு பிரியாணி மசாலா வாங்க போயிருக்கா... வர நேரமாகும்... ஏன் அம்மா கிட்ட தான் பேசுவியா பொன்னுக்குட்டி?” என உருக்கமாக கேட்டார் ராஜகோபாலன்.
    ஆனந்திக்குக் கண்கள் கலங்கிவிட்டது.
    “என்னப்பா இப்பிடி சொல்லுற?” என்றபடி சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் மடியில் தலை வைத்துக்கொண்டாள்.
    “இன்னும் அப்பா மேல இருக்குற கோவம் போகலையா?”
    “இப்ப கொஞ்சம் போயிடுச்சுப்பா... ஆனா மனசு ஆறல... உன்னையும் அம்மாவையும் தனியா விட்டுட்டு நான் எப்பிடி இவன் கூட மெட்ராஸ்ல சந்தோசமா இருப்பேன்?”
    ராஜகோபாலன் சங்கடமாக அகிலனைப் பார்த்து புன்னகைத்தார்.
    அகிலன் புரிந்துகொண்டவனைப் போல “அதான் சரவணன்ண... சரவணன் மாமா இருக்கார்ல... அவர் பாத்துப்பார்டி” என்கவும்
    “யார் இவனா?” என ஆவேசமாக கேட்டபடி எழுந்த ஆனந்தி சரவணனின் புத்திரர்கள் அங்கே நிற்பதைக் கவனித்துவிட்டு அமைதியானாள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-6.4862/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே - 5

    அவளுக்கு வந்த ஆத்திரத்தில் சுற்றும் முற்றும் பார்த்தவள் ஹாலின் மூலையில் கிடத்தி வைக்கப்பட்ட துடைப்பத்தைக் கண்டதும் கையில் எடுத்தவள் ஹாலின் நடுவே அக்மார்க் குடிகாரனாக அமர்ந்திருந்த அகிலனை கண் மண் தெரியாமல் விளாச ஆரம்பித்தாள்.
    “மனுசனாடா நீ? மானரோசம்னு எதாச்சும் ஒன்னு இருக்கா உனக்கு? சாக்கடை கிட்ட போதையில கிடந்து உருளுற... நீயெல்லாம் என்னத்த படிச்சுக் கிழிச்ச? நீ படிச்ச படிப்பு உன்னை இப்பிடி குடிச்சிட்டு உருளச் சொல்லுதோ? இன்னைக்கு உன்னைய பொலி போடாம விடமாட்டேன் அகிலு”
    கோபத்தோடு கத்தியபடி கை ஓயுமட்டும் அடித்தாள் ஆனந்தி.
    அகிலனோ அவள் துடைப்பத்தால் அடிப்பாள் என்றெல்லாம் யோசிக்க கூட இல்லை. எப்போதும் போல கத்துவாள் என்ற அவனது எண்ணத்தை அதே துடைப்பத்தால் பெருக்கி தள்ளியவள் சாரமாரியாக அடிக்க ஒவ்வொரு அடியும் சுரீரென அவனது உடலைத் தாக்கியது.
    என்ன செய்ய அவன் ஒன்றும் கட்டுமஸ்தான தேகம் கொண்ட ஆணழகன் இல்லை. ஒல்லிக்குச்சி உடம்புக்காரன் வகையறா. ஒவ்வொரு அடியும் எலும்பையும் சேர்த்து தாக்க ஒரு கட்டத்தில் “ஏய் அடிக்காதடி... இனிமே குடிக்க மாட்டேன்... இது உன் மேல சத்தியம்” என சொன்னபடி எழுந்து அறைக்குள்ளே ஒளிய இடம் தேடி ஓடினான்.
    அதற்குள் அரவம் கேட்டு வேகமாக வந்த ஆவுடையப்பனும் சாந்தியும் மருமகளின் காளி அவதாரத்தில் அதிர்ந்து உறைந்தனர் என்றால் அனுஷியாவோ “இந்த அண்ணனுக்கு நல்லா வேணும்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
    அகிலன் அன்னையைக் கண்டதும் அவர் பின்னே ஒளிய ஓட ஆனந்தி வழி மறித்தவள் சாந்தியிடம்
    “இங்க பாருத்தை, ஒழுங்கா ஓரமா போய் நில்லு... உன் மகனை இன்னைக்கு வெளுவெளுனு வெளுத்தா தான் என் ஆத்திரம் அடங்கும்” என்றாள் துடைப்பத்தை நீட்டியபடி.
    சாந்தி மருமகளிடம் “ஏன்டி குடிக்குறான்னு விளக்குமாத்தை வச்சா அடிப்ப? பாவம்டி அவன்... வலிக்கப் போகுது” என்க
    “இவனுக்கா வலிக்கும்? அதுல்லாம் உடம்புல சதை இருக்குறவங்களுக்குத் தான் வலிக்கும்... உன் மகன் சாப்பாட்டை பூராவும் எலும்புல சொருவி வச்சிருக்குறான்... இந்த நாக்குப்பூச்சிக்கு என்ன அடி அடிச்சாலும் சுரணை வராது” என்றாள் ஆனந்தி ஆவேசத்துடன்.
    அதற்குள் அகிலனுக்கு ரோசம் வந்துவிட்டது. இவ்வளவு அடி வாங்கியும் அது வராவிட்டால் தான் பிரச்சனை.
    “ஏய் நந்தி! இவ்ளோ தான் உனக்கு மரியாதை... ஒழுங்கா போயிடு... இல்லனா வேற மாதிரி ஆகி போவும்” என்றான் சாந்தியின் பின்னே ஒளிந்தபடி.
    “என்னடா ஆகும்? என்ன ஆகும்? உங்கம்மை பின்னாடி ஒளியாம என் முன்னாடி வந்து பேசு பாப்போம்”
    துடைப்பத்தை ஆட்டியபடி ஆனந்தி கூற அகிலனோ “உன் இஷ்டத்துக்குலாம் வந்து பேச முடியாது... புலி மாதிரி இருந்தவனை இப்பிடி அடிச்சு அடிச்சு வரிக்குதிரை ஆக்கிட்டல்ல... இருடி நீ தூங்குறப்ப உன் முகத்துல கண்மை வச்சு மீசை போட்டுவிடுறேன்” என்றான் அவன்..
    ஆவுடையப்பன் மகனை கண்டிப்பது போல பார்த்தார்.
    “அவ என்ன சொல்லுறா? நீ என்ன பேசுற அகில்? நேத்து என்ன மாதிரி நிலமையில தங்கம் உன்னைத் தூக்கிட்டு வந்தானு தெரியுமாடா?”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-5.4861/
    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
    உன்னில் இதயம் அளாவுதே - 4

    “என்னம்மா புதுப்பொண்ணு உன் வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கு போலயே”
    சரவணன் அழைத்து வந்திருப்பான் போல. அவள் கேட்டவிதமே ஆனந்தி நன்றாக இருக்கக்கூடாதென்ற அவளது தீய எண்ணத்தை வெளிக்காட்டியது.
    ஆனந்தி முறைப்புடன் திரும்பினாள்.
    லலிதா அவளை எள்ளலோடு பார்த்தவள்
    “உன் புருசனை எங்க? ஆளையே பாக்க முடியல” என்கவும்
    “அவரு தூங்கிட்டுருப்பார்” என்றாள் ஆனந்தி.
    “அவரா? ஓ! அவரா? அவ்ளோ மரியாதையா? சரி விடு... எங்க தூங்கிட்டிருக்கார் உன் புருசன்? வீட்டுக்குள்ளவா?” என மீண்டும் நக்கலாக ஒலித்தது அவளது குரல்.
    “இப்ப எதுக்கு இங்க வந்திங்க?”
    காட்டத்துடன் ஆனந்தி எரிந்துவிழவும் லலிதா கோணலாகச் சிரித்தாள்.
    “உன் புருசன் குடிச்சிட்டு தெற்குபஜார் முக்குல விழுந்து கிடக்குறான்... என் தம்பி அதான் உன் குடும்பமே நடத்தை கெட்டவன்னு எகத்தாளமா சொல்லி கல்யாணத்தை நிறுத்தினிங்களே அந்த தருண் தான் அவனைப் பாத்துட்டு வந்து சொன்னான்... சாக்கடை ஓரமா பன்னியும் நாயும் மேயுற இடத்துல உன் புருசனும் அதுங்களோட கிடக்குறானாம்... அவனை தூக்கிட்டு வந்து பாதபூஜை பண்ணுடி பதிவிரதை”
    ஆனந்திக்கு அவமானத்தில் உடல் கூசியது. அகிலனை எண்ணி ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
    லலிதா அவனைப் பார்த்ததாக கூறிய இடத்துக்கு விரைந்தவள் அவள் சொன்னது போலவே மாநகராட்சி குப்பைத்தொட்டியின் அருகே ஓடும் சாக்கடையின் ஓரத்தில் நாய்களுக்கு மத்தியில் விழுந்து கிடந்தான் அகிலன்.
    பார்க்கும் போதே அருவருப்பும் ஆத்திரமும் ஒருங்கே எழுந்தது.
    எவ்வளவு ஆத்திரம் என்றால் அருகில் கிடந்த கல்லை தூக்கி அவன் மண்டையை உடைக்கும் அளவுக்கு ஆத்திரம்!
    பல்லைக் கடித்தவள் புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு அவனை நெருங்கினாள்.
    “அகிலு! ஏய் அகிலு... எழுந்திரிடா”
    அவனைப் புரட்டி எழுப்பியவள் “ஆ... நந்தி... நந்தி” என்று அவன் உளறவும்
    “ஆமாடா! நந்தி தொந்தி பந்தி” என்று கடுப்போடு சொன்னபடி அவனது கரத்தைப் பற்றி தனது தோளில் போட்டுக்கொண்டு எழுப்பிவிட்டாள்..................

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-4.4845/

    #உன்னில்இதயம்அளாவுதே #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom