• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,917

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    ராகமஞ்சரி அத்தியாயம் 2
    #நித்யாமாரியப்பன் #ராகமஞ்சரி #மேகதூதம்

    ஹாய் ஃப்ரென்ட்ஸ்

    ராகமஞ்சரி அத்தியாயம் 1 தளத்தில் பதிவிட்டாச்சு மக்களே!

    வாட்டச்சாட்டமாக ஒரு இளைஞன் அழுத்தமான காலடிகளுடன் ஆட்டோ அருகே வருவதைக் கண்டதும் சுற்றுலா தளங்களில் அரங்கேறும் குற்றங்கள் குறித்து செய்தித்தாளிலும் சேனல்களிலும் பார்த்த தகவல்கள் மனதிற்குள் திரைப்படமாக ஓட ஆரம்பித்தது.

    “இவ்ளோ ஓங்கு தாங்கா வச்ச கண் வாங்காம பாத்துக்கிட்டே வர்றானே... ஒருவேளை திருடனா இருப்பானோ? இல்லனா செயின் ஸ்னாட்சர்?”

    உடனே அவள் கரங்கள் அனிச்சை செயலாய் கழுத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த நிலாவடிவ டாலருடன் கூடிய சிறிய தங்க சங்கிலியைப் பிடித்துக் கொண்டது.

    ராகவ் அவளது செய்கையில் குழம்பி நிற்கையிலேயே துப்பட்டாவால் கழுத்து சங்கிலியை மறைத்தவள் வேகமாக ஆட்டோவில் அமர்ந்தாள்.

    “நீங்க தவுசண்ட் ருபீஸ் கேட்டா கூட குடுக்குறேன்ணா... அந்தத் திருடன் வர்றதுக்குள்ள சீக்கிரம் ஆட்டோவ எடுங்க”

    அவளது செய்கையில் குழம்பியவனுக்கு அவள் பேசிய வார்த்தைகள் காதில் விழவும் “எதே? திருடனா?” என்று வெகுண்டெழ அவனைக் கடந்து விருட்டென்று சென்றது ஆட்டோ.

    ராகவ் திகைத்து நிற்க அவன் பின்னே நின்ற பிரத்யூத்தோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

    “போச்சா? ஊட்டியோட பேரை காப்பாத்த போனவன் உன் பேரை டேமேஜ் பண்ணிட்டு வந்து நிக்குறீயே நண்பா? அதுலயும் அந்தப் பொண்ணு உன்னைப் பாத்ததும் டக்குனு கழுத்து செயினை மறைச்சுது பாரு... அங்க நிக்குற மேன் நீ”

    ராகவ் கடுப்புடன் திரும்பியவன் “அடேய் சிரிச்சு சிரிச்சு செத்துடாத... அந்த நாலணா மூஞ்சிக்கு நான் திருடனா? தரைக்கு தங்கச்சி மாதிரி இருந்துட்டு என்னையவே இன்சல்ட் பண்ணிட்டுப் போகுது... எங்க போக போறா? ஊட்டி ஒரு வட்டம்... இன்னைக்கு பஸ் ஸ்டாண்டுல என்னை திருடன்னு சொல்லிட்டுப் போனவளை நாளைக்கே என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும்... அப்ப வச்சிக்கிறேன்” என்று கறுவ

    “சபதம்லாம் நல்லா இருக்கு மச்சி... அது நிறைவேறுமானு பாப்போம்” என்ற பிரத்யூத் மொபைல் சிணுங்கவும் அதை எடுத்தான்.

    லிங்👇

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💟ராகம்-1💟.4634/
    #நித்யாமாரியப்பன் #ராகமஞ்சரி #மேகதூதம்

    ஹாய் ஃப்ரென்ட்ஸ்

    ஆன்லைனில் வராத கதை ராகமஞ்சரி - முன்னோட்டம் எழிலன்பு நாவல்கள் தளத்தில் போட்டாச்சு... ஒரு நாள் விட்டு ஒரு நாள் யூடி வரும் மக்களே!

    ******
    அவன் பார்வை போன திசையை வைத்தே சேஷாவைப் பார்த்து தான் சிரிக்கிறான் என்பதை கண்டுகொண்டனர் சேஷாவுடன் நின்றிருந்த அவளது வகுப்புத்தோழிகள்.

    “சேஷா கதை அப்பிடி போகுதா?” என்று அவர்கள் கிண்டல் செய்ய

    “ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல... அவன் வேற யாரையாச்சும் பாத்து சிரிச்சிருப்பான்... உடனே கேட்டிருவிங்களே” என்று பொருமித் தீர்த்தாள் அவள்.

    ஆனால் அதோடு நின்றிருந்தால் பரவாயில்லையே!

    சிரித்துக்கொண்டே பந்தைத் துரத்தியவன் அதைக் கைப்பற்றி கூடையில் போடும் போது அவள் புறம் திரும்பி உதட்டைக் குவித்து கண்ணைச் சிமிட்டவும் அவளருகே இருந்த சக மாணவிகள் ஓஹோவென கூச்சலிட சேஷமஞ்சரி வாயைப் பிளந்தாள்.

    “இவன் பெரிய விராட் கோலி... கிரவுண்ட்ல நின்னு தான் கிஸ் பண்ணுவான்... அடேய் நீ மட்டும் மேட்சை முடிச்சிட்டு வாடி, உனக்கு இன்னைக்கு பொங்கல், தீபாவளி, நியூ இயர் எல்லாத்தயும் சேர்த்து கொண்டாடுறேன்” என்று மனதிற்குள் கறுவிக்கொண்டாள் சேஷா.

    வகுப்புத்தோழிகளோடு நம்ரதாவும் ராகவின் செய்கையைச் சுட்டிக்காட்டி சேஷாவை கிண்டலடிக்க ஆரம்பிக்க அவளோ சமாளிக்க முடியாமல் திணறிப்போனாள்.

    மதியவுணவு இறங்கவில்லை. இரவில் தூக்கமில்லை. தூங்கலாம் என்று கண்களை இறுக்கமாக மூடினாலோ அங்கேயும் வந்து உதடு குவித்து கண் சிமிட்டினான் ராகவ்.

    பதறியெழுந்து அமர்ந்தவளை நம்ரதா கேலியாய் நோக்க தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக்கொண்டாள் சேஷா.

    மனதிற்குள்ளே “பெருமாளே! ப்ளீஸ், இவனை ஒரு எய்ட் ஹவர்சுக்கு மறக்க வைங்களேன்” என்று வேண்டிக்கொண்டே தூங்கிப் போனாள்.

    ஆனால் முந்தைய தினக் கடுப்பு அனைத்தையும் மறுநாள் ராகவை தேவாலயம் அருகே சந்தித்த போது காட்டிவிட்டாள் சேஷா.

    புல்தரையில் பேக்கை முதுகுக்கு அண்டை கொடுத்து சாய்ந்தபடி புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான் ராகவ்.

    “ஏன்டா க்ரவுண்ட்ல நின்னு என்னைப் பாத்து கண்ணடிச்ச? உன்னால என் கிளாஸ்மேட்ஸ், ரதி எல்லாரும் என்னைக் கிண்டல் பண்ணுனாங்க தெரியுமா?”

    கடுப்புடன் தனது முட்டைக்கண்களை உருட்டி அவனிடம் மிரட்டலாக கேட்க ஆரம்பித்தாள்.

    தனது உள்ளங்கையை கண்ணருகே வைத்து தூரத்தில் யாரையோ பார்ப்பது போல நடித்த ராகவ் பின்னர் கண்களை தன்னருகே நின்ற சேஷாவிடம் திருப்பினான்.

    பின்னர் அப்போது தான் அவளைக் கண்டுபிடித்ததை போல ஆச்சரியப்பட்டுவிட்டு

    “அட நம்ம ட்வார்ஃப்! யாரோ காதுக்குள்ள கீச்கீச்னு சத்தம் போடுற மாதிரி இருக்கேனு பாத்தேன், ஆனா கண் முன்னாடி யாருமே இல்ல... என்ன பண்ணுறது, மனுசங்கனா கொஞ்சமாச்சும் உயரமா இருக்கணும்... நீயோ ஹைட்ல ஈ, எறும்பு, கொசுக்குலாம் டஃப் காம்படிசன் குடுக்குற ஆளு... கொஞ்சநேரம் இங்க ரிலாக்சா உக்காந்துட்டுப் போகலாம்னு வந்தேன்... டிஸ்டர்ப் பண்ண வந்துட்டியா?” என்று அவளைக் கேலி செய்ய சேஷா மூக்கைச் சுருக்கிக் கொண்டாள்.

    LINK👇

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💟ராகமஞ்சரி-முன்னோட்டம்💟.4618/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா புத்தக அறிவிப்பு... இப்போது புத்தகக் கண்காட்சியில் அருணோதயம் ஸ்டாலில் கிடைக்கும் மக்களே!


    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாவும் நீயாக மாறினாய் அத்தியாயம் 13

    அவள் கிளாராவுக்கு நன்றி சொல்ல சித்தார்த்தும் அவளிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு ஆசையாக மஃபினை விழுங்கும் ஷான்வியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

    “நீ எதுக்கு செஃபா ஒர்க் பண்ண ஆசைப்பட்டேனு இப்போ தான் தெரியுது.. ட்வென்ட்டி ஃபோர் ஹவர்சும் சாப்பிட்டுட்டே இருக்கலாம்” என்று கேலி செய்ய

    “நீ என்ன டிரை பண்ணுனாலும் நான் சாப்பிடறப்போ கோவப்பட மாட்டேன்… சோ டோன்ட் வேஸ்ட் யுவர் எனர்ஜி” என்றபடி சாப்பாட்டில் கண்ணாகிவிட்டாள் அவள்.

    நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அவள் சாப்பிடுவதைப் பார்த்தபடி கோக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தவன் “ஓகே! நீ சாப்பிட்டு முடிச்சிட்டனா நம்ம கிளம்பலாமா?” என்று கேட்க

    ஷான்வியோ “எங்க பேலர் அவென்யூக்கா?” என்று கேட்டுவிட்டுப் புருவத்தை உயர்த்த அவன் பக்கென்று நகைத்துவிட்டான்.

    “உனக்கு அங்க தான் போகணும்னா கூட்டிட்டுப் போக நான் ரெடி” என்று சொல்லித் தோளைக் குலுக்க அவள் முறைத்துவிட்டு

    “எங்க வீட்டுக்கு எப்பிடி போகணும்னு எனக்குத் தெரியும்... நீ ஒன்னும் டிராப் பண்ண வேண்டாம்” என்று சொல்லிவிட்டு எழுந்தவள் கிளாராவுக்கு அங்கிருந்தபடியே டாட்டா காட்டிவிட்டு நகர முற்பட வழியை மறிப்பது போல நின்றான் சித்தார்த்.

    “அந்த வழியா தான் நான் போகணும்... நான் டிராப் பண்ணுறேன் ஷானு”

    “தேவையே இல்லடா... உன் கூட வர்றதுக்கு நான் நடந்தே போய்டுவேன்”

    விருட்டென்று திரும்பியவளின் கரம் அவன் பிடியிலிருக்க “இங்க இருந்து காருக்கு நடந்து வர்றியா? இல்ல தூக்கிட்டுப் போகணுமா?” என்று கேட்கவும் கையை உருவியவள் “வர்றேன்… இது தான் சாக்குனு நீ அடிக்கடி என் கையைப் பிடிக்காத” என்று பல்லைக் கடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/💞அத்தியாயம்-13💞.4300/
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom