• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வாகைப் பூ அவர்கள் எழுதிய "காதல் சதுரங்க ஆட்டம்"

அன்புள்ள வாகைப் பூவே!

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவரந்த விஷயங்கள், கதாபாத்திரங்கள் பற்றி உங்களுடன் பகிர்கிறேன் சகி!

பேராசையாக மாறிய சிலரின் பணத்தாசை, பதவி ஆசை, அதனால் நிலைகுலைந்த ஒரு அன்பின் கூடு, அதை சரிசெய்ய மெனக்கெடும் ஒரு தாரகை என்று சூப்பர் சஸ்பென்ஸுடன் அழகிய கதை தந்த வாகைப் பூ அவர்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்கள்.

ஒரு கதையில், ஒரு ஹீரோ, ஒரு வில்லன், ஒரு Comedian, ஒரு துணை நடிகர் என்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் இருப்பது இயல்பான விஷயம். ஆனால் இந்த ஆத்தரோ, ஒருவனையே அனைத்து வேடமும் ஏற்று நடிக்க வைத்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை! ஆல்-இன்-ஆல் கார்த்திக் அவர்களே!!!!:cool::cool::cool:

"அடேய் கார்த்திக்! நீ நல்லவனா! கெட்டவனா!" என்று கணிக்கவே முடியாத அளவிற்கு நன்றாகக் குழப்பிவிட்டீர் ஆத்தரே! 😇😇

இவனும் சராசரி ஆன்ட்டி ஹீரோவாக உள்ளானே என்று ஒரு கட்டத்தில், கதையைத் தொடர்ந்து படிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ஆனால், கிருத்திக்கா எதற்காக இத்தனையும் செய்கிறாள் என்று அறியவும் ஆவலாக இருந்தது! அதனால் தொடர்ந்து படித்தேன்.

முதல் சந்திப்பில், மிஸ்டர் ரோமியா, கிருத்திக்காவிடம் செய்த லூட்டிகளைப் படித்து, அடப்பாவி என்றானது. ஆனால் அவன் கிருத்திக்காவிடம் மனம்விட்டு பேசிய அந்தக் காட்சியில், ஒரு ஆண்மகன் இத்தனை வெளிப்படையாக, உண்மை உணர்வுகளை, மனைவியிடம் ஒப்புக்கொள்ள முடியுமா என்று வியக்கும் அளவிற்கு ஆத்மார்த்தமாக மாறியது.🤗🤗

(இதனால் ஹீரோயின் ஆர்மி வாசகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்...கார்த்திக் செயல்களைக் கண்டு திடுக்கிட்டு, கதையை பாதியில் விட்டுவிடாதீர்கள். நம்பி முழுக்கதையும் படியுங்கள்! ஆத்தர் அவன் செயல்களை நன்றாகவே நியாயப்படுத்தி இருக்கிறார்!!!)

ஆன்ட்டி ஹீரோ கார்த்திக், காதல் மன்னனாக...இல்லை...இல்லை....முழுசாக மாறிய காதல் கணவனாக மாறி, மனைவியின் அழகை மூச்சுவிடாமல் வர்ணிப்பாரே...அம்மாடியோ முடியல ஆத்தரே....S.P.B's மண்ணில் இந்தக் காதல்.....பாடல் மெட்டில் படித்தேன்!:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:உங்கள் கற்பனை வளம் அதில் பிரதிபலித்தது. 👌👌

அண்ணி-நாத்தனார் புரிதல் மிகவும் அழகு.🥰🥰

அண்ணை-தங்கை உரையாடல்கள்(குறிப்பாக கொலு பொம்மை காட்சி) சற்று பொறாமை படும் அளவிற்கு இருந்தது என்று கூட சொல்லலாம். சூப்பர் ஜி!🥰🥰

அகல்யா-சாம்பவி இருவரின் பேச்சிலும், செயலிலும் தன்னலம் அப்பட்டமாகத் தெரிந்தாலும், சஸ்பென்ஸ் உடையும் போது, அவர்களின் குணங்களை பெரிதாகக் கொச்சை படுத்தாமல், எழுதிய உங்கள் கற்பனைக்குச் சிறப்பு பாராட்டுக்கள்.

காதலுக்கும்-ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை, ஹரிசந்திரன் மகனுக்கும் புரியவைக்கும் இடம் அருமை. அதை உணர்ந்து கார்த்திக் தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் இடங்களும் செம்ம சூப்பர்.

உண்மை அன்பு என்றுமே தோற்காது என்று உணர்த்தும் வகையில் அழகிய குடும்ப கதை தந்த வாகைப் பூ இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

பின்குறிப்பு:
முடிந்தவரை சஸ்பென்ஸ் உடைக்காமல், கதையில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன் சகி! சஸ்பென்ஸ் உடைக்கும் வகையில் ஏதாவது எழுதியிருந்தால், சொல்லுங்கள் சகி! திருத்தி பதிவிடுகிறேன்!

@வாகைப் பூ
 
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு உங்களது விமர்சனத்தை பார்த்ததும் உள்ளம் பூரித்துப் போயிற்று.

சிலர் விமர்சனம் அளிக்கிறேன் என்று கஷ்டப்பட்டு எழுதிய டுவிஸ்ட் அனைத்தையும் பொதுவெளியில் இறக்கிடுவதால் கவனமாக விமர்சனத்தை கையாளக் கூறி இருந்தேன். அதனால் என்னுடைய கதைக்கு சிறிய அளவு விமர்சனம் மட்டுமே இதுவரையில் கிடைத்தது. அதற்காக நான் வருந்தவே இல்லை.

நீங்கள் சொன்னது சரிதான் ஹீரோயின் ஆர்மி காரங்க ரெண்டாவது எபிசோட்டை பார்த்தும் கதை வாசிப்பதை நிறுத்திட்டாங்க. மற்ற கதைகளுக்கு விமர்சனம் அளித்தவர்கள் இதுவொரு ஆன்டி ஹீரோ கதை என்று நினைத்து தூக்கி போட்டுட்டாங்க

தனியாக போஸ்ட் போட்டு சொன்ன பிறகும் வாசிக்க விரும்பலை. ஆனால் நீங்க கிருத்திகாவை காரணமாக வைத்து வாசித்து, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக உள் வாங்கி அட்டகாசமாக விமர்சனம் கொடுத்திருக்கிறீர்கள்.

மனமார்ந்த நன்றிகள் சகோதரி🙏🙏🙏

நன்றிகள் பல....
 
காலதாமதமானாலும் நல்ல கதை வாசகர்களிடம் கட்டாயம் போய் சேரும்🥰🥰
வாழ்த்துக்கள் மா!
 
Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom