“ராஜா குட்டியும் நானும் இப்ப பிரண்ட் ஆகிட்டோம் தெரியுமா? இப்ப ரொம்ப நேரம் என்கிட்டதான் இருப்பான். அத்தைதான் அவன் என் வயித்துல உதைச்சுட போறான்னு ரொம்ப நேரம் கையில் வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க…” என்று வீட்டில் நடப்பதை எல்லாம் அவள் சொல்ல, சன்ன சிரிப்புடன் அவன் கேட்டுக் கொண்டான்.
பேசி முடித்துவிட்டு, “சரி தனா, நான் வைக்கிறேன்…” என்று சொல்ல,
“அடுத்து எப்ப பேசுவீங்க மாம்ஸ்?” என்று அவள் கேட்டதிற்குப் பதில் சொல்லாதவன், “உடம்பை பார்த்துக்கோ தனா, மிஸ் யூ!” என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன், முதல் முறையாக அலைபேசியின் வழியே அழுத்தமாக ஒரு முத்தத்தை அனுப்பி வைத்தான்.
அவனின் எதிர்பாராத முத்தத்தில் சிலிர்த்து போனவளுக்கு உடல் நடுங்கியது. எப்போதும் போனில் பேசும் அவன் முத்தம் எல்லாம் கொடுப்பதே இல்லை. அவள் கொடுப்பதை வாங்கிக் கொள்வானே தவிர, அவளே கேட்டால் கூடச் செல்லமாகக் கடிந்து கொண்டு, அழைப்பை முடித்துக் கொள்பவன், இன்று மட்டும் என்ன? என்று அவளுக்குத் தோன்றாமல் இல்லை.
(நாளை மாலை எபியோடு வர்றேன்)