• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யுத்தம் செய்தாய் என்னுள்ளே - டீசர்(18)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
“அப்போ என் உடம்பில் தழும்பு இருந்தால் உனக்குப் பிடிக்கலையா?” என்று அவன் இறுக்கமாகக் கேட்க,

“நான் எப்ப அப்படிச் சொன்னேன்? உங்களுக்கு இன்னும் எங்கெங்கே அடிப்பட்டுச்சோ… பாவம் அப்ப எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டீங்களோன்னு நினைச்சேன். அதோட என்னோட மிலிட்டரி மாம்ஸ் உடம்பில் எங்கெங்கே தழும்பு இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு உரிமை இருக்கு…” என்று நொடித்துக் கொண்டு சொன்ன மனைவியை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன், அவளை இழுத்துப் படுக்கையில் போட்டு, தான் மேலே வந்தான்.

“ஹேய், என்ன பண்றீங்க?” என்றவளின் மிச்சமிருந்த ஆடையில் கை வைத்தவன், “நீ மாம்ஸ் சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு. அதுக்குப் பிறகு இப்பத்தான் சொல்லிருக்க. எங்கே திரும்ப மாம்ஸ் சொல்லு…” என்றான்.

“சொல்றேன். அதுக்கு எதுக்கு இந்த வேலை பார்க்கிறீங்க?” என்று அவன் கையைத் தடுக்க முயன்றாள்.

“இது என்ன அநியாயமா இருக்கு? என் உடம்பில் எங்கெங்கே தழும்பு இருக்குன்னு நீ பார்க்கும் போது, என் பொண்டாட்டி உடம்பில் எங்கெங்கே என்னென்ன இருக்குன்னு நான் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டவன், அவள் தன் உடலில் தடவியது போலவே தடவ ஆரம்பிக்க,

“அச்சோ மாம்ஸ், வேண்டாம். விடிய போகுது…” என்று அவள் சிணுங்கி அலறியது எல்லாம் அவன் செவிகளைத் தீண்டவே இல்லை. அவளைத் தீண்டிவிட்டுதான் விட்டான் என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமோ?

(இந்த டீசர் fb குரூப்பில் போட்ட போது சிலர் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்களுக்கு இது...

நாளை மாலை எபி வரும்)
 

Thani

Well-known member
Member
அச்சோ 🙈🙈🙈🙈🙈
கேட்டீகளா!சங்கதியை .....இந்த மாம்ஸ் அவள புடிக்காம முகத்தை இறுக்கமா வைத்துக்கொண்டு வலம் வந்தான் ....😀இப்போ.....😜🙈ஹாஹா.....
எங்கேப்பா அந்த மிலிட்டரிக்காரன் ....யாராவது பாத்தீகளா.....தெரிந்தா வந்து சொல்லிட்டு போங்கப்பா ..😁
சூப்பர் ❤️
 

New Episodes Thread

Top Bottom