• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

புதிய சின்டெரெல்லா!!

மனோஜா

✍️
Writer
புதிய சிண்டெரெல்லா:
ரொம்ப நாள் எந்த ஒரு ஆங்கிலப்படமும் பார்க்கவில்லை. இந்த வருடம் வெளியான சிண்டெரெல்லா படத்தின் டிரைலர் பார்த்தவுடனே ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. ஓகே பார்க்கலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் இன்றுதான் பார்க்க முடிந்தது.
என்னால் நம்ப முடியவில்லை. சிண்டெரெல்லாவையே தலைகீழாக மாற்றிவைத்திருந்தனர்.

நம்ம ஊர் பாணியில் சொன்னால் சித்திகொடுமையுடன் வளர்க்கப்படும் ஏழைப்பெண் மந்திரம் மூலம் புதிய உடைகள் , காலணிகளுடன் அடுத்த ராணியை தேர்ந்தெடுக்கும் விழாவில் கலந்துகொள்கிறாள். இளவரசனுக்கும் அவளைப் பிடித்துவிடுகிறது. ஆனால் பன்னிரெண்டு மணியானால் மந்திரம் சக்தியிழந்து விடும். அதனால் அங்கிருந்து தப்பிவரும் ஒரு கண்ணாடிக் காலணியை தவறவிட்டுவிடுவாள் சிண்டெரெல்லா.

பிறகு பல்வேறு தடைகளுக்குப் பிறகு அந்த ஒற்றைச் செருப்பை வைத்து கண்டுபிடிப்பார்கள். இளவரசனும் , இளவரசியும் சேர என்றும் சுபம் . இதுதான் பழைய சின்டெரெல்லாவின் கதை.
இந்த வருடத்தில் இந்த நூற்றாண்டில் சிண்டெரெல்லா வேறுபடுகிறாள். அவள் கனவு காணும் பெண். தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயலுகிறாள். நீ பெண் உனக்கு வியாபாரம் அடையாளம் இருக்கக் கூடாது , ஒருவனின் மனைவியாக மட்டும் இருக்கத் தகுந்தவள் என்ற பாலின வேறுபாடுகளை , பாத்திரங்களை உடைத்தெறிகிறாள் சிண்டெரெல்லா.

இந்த சிண்டெரெல்லாவுக்கு இளவரசன் தேவையில்லை. அவன் மீது காதலிருந்தும் பிற்காலத்தில் ராணியாகக் கண்டுண்டு கிடக்கவிரும்பவில்லை. அவள் சிந்திக்கிறாள். சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கிறாள்.


இளவரசன் ராபர்ட் அவனுக்கு நாட்டின் மீது நாட்டமில்லை. அவனும் அவனுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்ய முடிவெடுத்து சிண்டெரெல்லாவைத் தேர்ந்தெடுத்து அவள் கனவுகளை நிறைவேற்ற உதவுகிறான்.
இந்த சிண்டெரெல்லாவுக்கு வசதியாகவும் , நாட்டின் ராணியாகவும் இருக்க வாய்ப்பு இருந்தது. சுலபமான வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவள் தன்னைத் தானே நம்பி உழைத்து முன்னேறும் வாய்ப்பைப் தேர்ந்தெடுக்கிறாள். தன் கனவை நிறைவேற்றினால் காதல் கிடைக்காது என்று தெரிந்தும் மறுக்கிறாள்.

கனவை நோக்கி அவள் முன்னேற காதலும் அவளைத் தேடி வருகிறது. பழைய சிண்டெரெல்லாவுக்கு காதல் மட்டும் போதும். சிண்டெரெல்லாக்களை ஒப்பீடு செய்வதைவிட ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஆணோ பெண்ணோ தனக்கு இதுதான் வாழ்க்கையில் தேவை என்ற முடிவெடுக்கும் திறன் வேண்டும். அதற்கான வாய்ப்பு அளிக்கப்படல் வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கூட அளிக்க முடியாத சமுதாயம் ஆரோக்கியமான சமூதாயமா? என்ற கேள்வி எழுகிறது.


நான் இவர்களுக்காகச் செய்தேன். அவர்களுக்காகச் செய்தேன் என்று கூற நன்றாக இருக்கும். முக்கால்வாசி பேர் இப்படித்தான் கூறிக்கொண்டு தான் நினைத்ததை செய்ய முடியவில்லை என்ற விரக்தியில் பிற்காலத்தில் தன்னுடன் இருக்கும் நபரை மனதளவில் துன்புறுத்துவர்.
அசெர்ட்டிவ்னெஸ் ( ASSERTIVENESS) என்ற ஒரு சொல் இருக்கிறது. உளவியல் கலைச்சொல். தன் மனதில் இருப்பதை எதிராளியின் மனதைப் புண்படுத்தாமல் எடுத்துச் சொல்லும் திறன். தனக்கு இதுதான் தேவை என்று எடுத்துக் கூறுவது. சிண்டெரெல்லா அப்படிப்பட்ட பெண்தான்.

இளவரசன் ராபர்ட்டும் அருமையான கதாபாத்திரம். அவன் சிண்டெரெல்லாவை அவளது விருப்பத்திற்கேற்ப அனுப்பிவைக்கிறான். மதிப்பு கொடுக்கிறான். அவள் உறுதியான பெண் , தான் கூறியதை கேட்கவில்லை என்று அடக்க முயற்சிக்கவில்லை. அவளுக்குத் தான் கீழே என்ற தாழ்வுமனப்பான்மை அவனுக்கு ஏற்படவில்லை. அவனும் ஒரு உறுதியான ஆண் , பெண் யோசிக்கிறாள் , முடிவெடுக்கிறாள் என்று உறுத்தல் கொள்ளாதவன்.

ஒருவகையில் இந்தப் படம் தெலுங்குப்படம் பிஃடாவை நினைவூட்டியது.
உலகம் மாறிவிட்டது. பேஃரி டெய்ல்கள் மாற வேண்டிய நிலையில் இருக்கிறது என்ற அருமையான இந்தப்படம் உதாரணம்.

அன்புடன் மனோஜா.
 

Attachments

  • eiBPA7I13390.jpg
    eiBPA7I13390.jpg
    778.6 KB · Views: 93

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom