• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பாகி லக்ஷ்மணமூர்த்தி அவர்கள் எழுதிய "பூ போல் இதயத்தை பறித்தவளே"

ஓம் சாயிராம்.

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, என் மனத்திற்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்கிறேன் தோழி.

“இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற பாடலுக்கு இணங்க, முதல் அத்தியாயத்தில் இருந்து தேவா என்னும் தேவசேனா ஏதோ ஒரு எதிர்பாராத இன்னலில் சிக்கிக்கொள்வதும், எதிர்காலத்தில் அவளுடைய வாழ்க்கைத்துணையாக மாறும் விசாகன் தக்க சமயத்தில் வந்து அவளைக் காப்பாற்றுவதும் என கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

விசாகனின் நற்குணத்தில் கவரப்பட்டவளாய் தேவசேனா அவன் மேல் ஒரு தலை காதல் கொள்கிறாள். அவள் காதலுக்குத் தூபம் போடுவது போல அப்பா சௌந்தரலிங்கமும், தனக்குப் பணி நிமித்தமாக அறிமுகமான விசாகன் பற்றி மெச்சுதலாய்ப் பேச பெண்ணின் காதல் போதை தலைக்கேறுகிறது.

மருந்துக்கும் சிரிக்காத விசாகன் அவள் காதலை உதாசீனம் செய்கிறான். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் அவளைத் தானே முன்வந்து திருமணம் செய்துகொள்கிறான். உருகி உருகி காதலிக்கவும் செய்கிறான். அது ஏன் எப்படி என்பது தான் கதையின் சஸ்பென்ஸ்.

எத்தனைமுறை அவமானப்பட்டாலும் தேவசேனா அவள் காதலில் உறுதியாக இருந்தது அருமை ஆத்தரே. தன்னை ஒத்துக்கியவர்களிடம் அவள் காட்டிய வைராக்கியமும் அட்டகாசம்.

எப்போதும் உர்ரென்று இருந்த விசாகன், தாலி கட்டிய மறுநொடியே “சனா! சனா!” என்று காதல் மன்னனாக, குறும்புகளின் சொந்தக்காரனாக மாறியது நம்பவே முடியவில்லை. ஆனால் அவன் மனம்திறந்து பேசியதும் அனைத்தும் விளங்கியது.

குறிப்பாக திருவிழாவில் அவனுக்குக் கோபம் வந்ததாகச் சொன்ன காரணம், மற்றும் குச்சி வைத்து “பேய் படம்” ரேஞ்சுக்குப் பயமுறுத்தி மனைவியை ஓட்டியது எல்லாம் ரசித்து படித்தேன். அதுவும் மனைவின் படிப்பில் அவன் காட்டிய அக்கறை வேற லெவெல்.

பாசமோ, கோபமோ எல்லாம் அளவில்லாமல் கொட்டும் அண்ணன் சந்திரன், நட்பிற்கு இலக்கணமாம் சுந்தரன் இருவரின் கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. அமைதிக்கு அமுதாவும், மாஸ் என்றால் மேகலாவும் கதையின் நகர்வில் பாந்தமாகப் பொருந்தினார்கள்.

என்னவொன்று, இந்த ஜோடிகளை(யார் யாருடன் சேர்ந்தார்கள் என்பதும் சஸ்பென்ஸ்) மின்னல் வேகத்தில் சேர்த்து வைத்து ஏமாத்திட்டீங்க ஆத்தரே. படிக்க படிக்க சலிக்காத கதாபாத்திரங்கள் இவர்கள்.

இவர்கள் அனைவரையும் விட எனக்குத் தில்லை பாட்டி கேரக்டர் ரொம்ப ரொம்பப் பிடித்தது. அவர் வரும் காட்சிகளைப் படிக்கும் போது, தன்னிச்சையாக ஒரு நேர்மறை உணர்வு தோன்றும். சூப்பர் பாட்டி அவங்க.

கதையில் உங்கள் வர்ணனைகள் அழகாக இருந்தது. குறிப்பாக சூரியன் உதயமாகும் நேரத்தைப் பல கோணங்களில் வர்ணித்து எழுதிய உங்கள் பாங்கு சூப்பர். கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எழுதிருக்கீங்கன்னு கவனிச்சேன். ரியலி கிரேட். அதே போல, காட்சி நிகழும் இடங்களான பேருந்து நிலையம், திருவிழா, ஒற்றை அடி பாதை, தோப்பு வீடு, ரைஸ் மில் என அனைத்தும் உங்கள் எழுத்தின் மாயாஜாலத்தால் கண்முன்னே தோன்றியது.

மொத்தத்தில் ஒரு அழகிய எதார்த்தமான குடும்ப கதை விரும்பும் வாசகர்கள் நிச்சயம் இக்கதை வாசிக்க முயற்சி செய்யலாம்.

கதைக்கான லிங்க்:

நல்லதொரு கதை தந்த ஆத்தருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@Bhagi lakshmanamoorthy @மௌவல் மலர்
 
Last edited:

Wow.... Wow... Azhagana review... Thanks dear 😍😍😍😍😍😍 thank you so much da....
 
விசாகன்-சனா காதல் செய்த மாயம் அது தோழி.

விமர்சனத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டேன். முடிந்தால் அருண் மையமாக வைத்து ஒரு தனி கதை எழுதுங்கள் தோழி.
 
கண்டிப்பா டியர் அருணுக்காகவே ஒரு கதை எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...
 
New Episodes Thread

Top Bottom