• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாழல் பூ அவர்கள் எழுதிய "நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே"

அன்புள்ள ஞாழல் பூவே,

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்களையும், கதாபாத்திரங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்கிறேன் சகி.

இரத்த பந்தத்தின் மகத்துவத்தை உணர்த்தும் அழகான எளிமையான கதை தந்த ஞாழல் மலருக்கு அன்பு கலந்த பாராட்டுக்கள்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில், பிரிந்து போன உறவுகள், மீண்டும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம்; அதில் யாரால் யாருக்கு ஆதாயம் என்பது கதையின் நகர்வு. அடுத்து என்ன என்பதை எளிதில் யூகிக்க கூடிய கதைக்கருவாக இருந்தாலும், கதாபாத்திரங்களை நீங்கள் சித்தரித்த விதம் தனித்துவமாக இருந்தது.

யாழ்வளவன் அறிமுகம் படித்ததும் இது ஒரு ஆன்ட்டி ஹீரோ கதையா என்று யோசிக்கத் தோன்றியது. ஆனால் அவன் திமிர் பேச்சுக்கும், செயல்களுக்கும் பின்னால் இப்படியும் காரணங்கள் இருக்கலாம் என்று வித்தியாசமாக சித்தரித்த உங்கள் கற்பனை அருமை. அதே போல, கமழி வந்த உண்மையான காரணம் அறிந்தபின், அவன் செயல்பட்ட விதமும் பாராட்ட வேண்டிய ஒன்று.

கமழி கதாபாத்திரம் அழகாக இருந்தது. வயசுக்கு மீறின பொறுப்புகளும், அதில் அவளுக்கு வந்த பக்குவமும் கதை முழுவதும் காண முடிந்தது. நேர்காணலில் கமழியின் நிமிர்வான பேச்சு அற்புதம். அலட்டல் இல்லாத பெண் அவள்.

துணை கதாபாத்திரமாக விஸ்வாவின் பங்கு அழகாக இருந்தது. அவர்கள் தோழமை, கலகலப்பான பேச்சு எல்லாம் எதார்த்தமாக இருந்தது. 'பாஸ் பாஸ்' என்று அழைத்தே பயப்புள்ள மாப்பிள்ளையாக பாஸ் ஆகிட்டான்.
😄
😄
😄
😄

வளர் மாறன் நாட்குறிப்பு பகுதிகளில், பருவமடைந்த வளருக்கு கிடைத்த சன்மானங்களும், அது ஏன் எதற்கு என்று புரியாமல் கேள்விகளை தொடுத்த மாறனின் வெகுளியான குணமும் ரசிக்கும் வண்ணமாக இருந்தது.

கதாபாத்திரங்களுக்கு அழகான தமிழ் பெயர்கள் சூட்டிய ஆசிரியர், உரையாடல்களிலும் ஆங்கிலம் கலக்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

யாழினி சந்தித்த பிரச்சனையில், கமழி காலம் தாழ்த்தாமல் செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தோன்றுகிறது. ஏனென்றால், எல்லா விஷயத்திலும் துணிந்து செயல்படுபவள், அதன் பின்விளைவுகள் என்னவென்று தெரிந்த பின்னும், கயவனை கையும் களவுமாக பிடிக்காமல், நிதானம் காத்தது, அவள் குணத்திற்கு மாறாக இருந்தது.

ஆர்ப்பாட்டம் இல்லாத மென்மையான குடும்ப கதை தந்த ஆசிரியர் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
💐
💐

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்

@Njaazal poo
 
Njaazal poo

✍️
Writer

Ethirparkave ilanga kathirunthu kedaitha gift pola iruku thank you
 
இந்தக் கதை படிக்கச் சொல்லி, எனக்கு அன்புக்கட்டளை இட்டார் வேறொரு வாசகி. My dear friend.🤗🤗🤗 அவங்க யாருன்னு சொல்லமாட்டேன்; சஸ்பென்ஸ்.;););)

மென்மையான கதை மா! மேன்மேலும் நிறைய கதைகள் எழுதுங்க!🥰🥰
 
En mA ipadi yaaru antha good heart person therinchuka venamaa pls competition mudinchathum kooda solunha
 
அது அவ்வளவு பெரிய ரகசியம் எல்லாம் இல்லை நட்பே! என் Posting activity பார்த்தாலே கண்டுபிடிச்சிடுவீங்க.:p:p:p:p

நம்ம கவிக்குயில் @Apsareezbeena loganathan அவர்கள் தான்.:love::love:
 
ஹாஹா சரி தான் நன்றி மா
 
New Episodes Thread

Top Bottom