• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சுயம்-வரம்

Kokila Balraj

Active member
Member
பஞ்சப்பாண்டவிகளின் நட்பு அழகு
ஒரே எண்ணம் கொண்ட தோழிகள் பகிரும் விசயங்கள் எல்லாமே உயரிய நோக்கம் கொண்டவை, நேர்கொண்ட சிந்தனை உடையவை என் மனம் கவர்ந்தது
அவர்கள் வாழ்வில் திருமணத்திற்கான முயற்சியில் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் குழப்பங்கள்
இக்காலக் கட்டத்தில் பெரும்பாலோர் எதிர்கொள்வது ஆனால் அதை அவர்கள் கையாண்ட விதம்
"சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்
சவுரி யங்கள் பலபல செய்வராம்
மூத்த
பொய்ம்மைகள்
யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள்
யாவுந் தகர்ப்பராம்..."
பாரதியின் இந்த வரிகள் தான் கண் முன் வந்தது
எவ்வளவு தைரியம், மன முதிர்ச்சி உடைய பெண்ணும் சோர்ந்து போனால் எடுக்கும் முடிவு அவள் கையில் இல்லை சரணும் இதுக்கு விதிவிலக்கல்ல
நல்ல கதை எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை வார்த்தையும் வரவில்லை
மனதைத் தொட்டக்கதை
ஒரு நாள் முழுதும் யோசித்தும் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்
நல்ல கதை கொடுத்தமைக்கு நன்றியும்
எனக்கு தெரிந்த எழுத்தாளர் பட் சில பிழைகள் பார்க்கும் போது அவர் இல்லையோ என்ற எண்ணம்
பொறுத்திருந்து பார்ப்போம்
 
தங்களுடைய கருத்துகளுக்கு என் உள்ளம் கனிந்த நன்றி. இது போட்டியில் பங்கேற்க எடுத்து வைத்த தீம் இல்லை. கட்டுரையாக எழுதலாம் என்ற கோணத்தில் சில விஷயங்களை சேர்த்து வைத்திருந்தேன். இந்தப் போட்டியைப் பார்க்கும் போது ஏன் நாவலாய் எழுதலாம் என்று தோன்றியது. ஒரு தெளிவான பிளாட் கிடையாது. கணினியில் டைப் செய்யும் போது மனதில் உதித்ததை அப்படியே அடித்தேன். இதுதான் கதை. நிச்சயம் பிழைகள் இருக்கும். ஏனென்றால் சில நாட்கள் கண் வீங்கி சுற்றிக் கொண்டிருந்தேன். குடும்பத்தின் இன்னொரு பக்கத்தையும் வெளிப்படுத்த விரும்பினேன். அதுதான் இந்த கதை. 💜💜💜💜💜💜💜💜💜💜 Lot of love for your review. நல்ல கதைனு சொன்னது என் மனதை மிகவும் தொட்டு விட்டது. 💗💗
 

New Episodes Thread

Top Bottom