• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சித்ரா வெங்கடேசன் அவர்கள் எழுதிய “முரண் நயமே மனம் நெய்தாயோ”

ஓம் ஸ்ரீ சாய்ராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, என் மனத்திற்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்கிறேன்.

உள்ளூர் பெண் நிவிக்கும், வெளியூர் பையன் ஷிவ்வுக்கும் இடையில் காதலும் மோதலும் என்ற கதைக்கரு தான் இக்கதையைப் படிக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

அதற்கு இரண்டு காரணங்கள்.

1.ஐ.டி துறையில் பணிபுரிந்து, ஆன்சைட் வேலைகளுக்காக அமெரிக்கா வரும் கணவன்மார்களோடு "டிபென்டென்ட் விசாவில்" வரும் பெரும்பாலான மனைவிகளில் நானும் ஒருத்தி.

கணவரின் லட்சியங்களுக்காக விட்டுக்கொடுக்கிறோம் என மனத்தைத் தேற்றிக்கொண்டாலும், நினைத்த நேரத்தில் சொந்தபந்தங்களை காணமுடியாமல் போகும்போதும், பிடித்த வேலையைச் செய்யமுடியமால் கிடைத்த வேலையில் சேரும்போதும் ஏக்கமாகத் தான் இருக்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே ஆத்தர், சிவாவின் எதிர்கால திட்டங்கள், அவனுடைய வெளிநாட்டு மோகம் என்று அனைத்தையும் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார்.

கதாநாயகியின் வைராக்கியமும் அதற்கு இணையாக இருந்தது என்றாலும், மென்மையான மனம் படைத்தவள் சிவாவின் காதலில் விழுந்து, அவனுக்காக அனுசரித்துப் போவாளோ என்று தோன்றியது.

ஆனால் அவர்கள் விருப்பு வெறுப்புகளை மனம்விட்டு பேசி சமரசம் செய்த விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. 👌🏽👌🏽👌🏽

அதே மாதிரி ‘காதல் கண்ணை மறைக்காமல்’ நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட்ட இளையவர்களும் சரி, அவர்களை வழிநடத்திய பெற்றோரும் சரி…பிரச்சனைகளைக் கையாண்ட அனைவரின் கண்ணோட்டமும் “வாவ்!!!” என்று தான் சொல்ல வேண்டும்.🤩🤩

Special Credit to Siva’s parents.🥰🥰

இளையத் தலைமுறையினருக்கு நல்வழி காட்டும் ஒரு கதை என்று சொன்னால் அது மிகையாகாது.👌🏽👌🏽

“மாப்பிள்ளை இவர் தான்; ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!” என்ற பிரபலமான நகைச்சுவை காட்சிதான் நரேன் சாகித்யா விஷயத்திலும். அவர்கள் திருமண வைபவத்திற்கு வந்த சிவாவும் நிவியும் காதல் வையப்பட்டு, கண்ணாலேயே பேசிக்கொண்டும், சண்டைக் கோழிகளாய் சிலிர்த்துக் கொண்டு குளிர்காய்ந்த தருணங்களும் தான் அதிகம்.🤭🤭🤭🤭

ஜோடியே இல்லாமல் ஆல் ரவுண்டராக கலக்கிய “லொடலொடா ஆதியா” வேற லெவெல். அவள் வந்த காட்சிகள் அனைத்தும் அதிரடி சரவெடி தான். 💃🏻💃🏻💃🏻

2. சிவா நியூஜெர்சி வாசி என்று சொன்னதும், நிறைய காட்சி அமைப்புகள் எங்க ஊரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படித்தேன். ஆனால் ஆத்தர் கதை முழுக்க இந்தியாவிலேயே நகர்வது போல அமைத்துவிட்டார். 😇😇😇

ஆனால் அவரும்தான் என்ன செய்யமுடியும்; காதலில் விழுந்த இந்த சிவா பையன் நடையைக் கட்டினால் தானே!!! ‘நிவி’ ‘நிவி’ என்று நித்தியம் அவள் காலையே சுற்றி சுற்றி வந்தால்...🤪🤪🤪

எத்தனைக்கு எத்தனை குறும்பும் கும்மாளமுமாக இளையவர்கள் கதை முழுக்க உலா வந்தார்களோ, அத்தனைக்கு அத்தனை பொறுப்பானவர்கள் என்று ஆத்தர் ஒரே காட்சியில் நிரூபித்துவிட்டார். அது என்னவென்று நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் வாசக தோழமைகளே.💖💖💖

எந்தவொரு உறவிலும் விட்டுக்கொடுப்பது அழகு என்றாலும், அதற்கும் ஒரு எல்லை உண்டு என்றும், அதைப் புரிந்து செயல்படும் போது உறவில் உண்மையான அன்பும், பாசமும் நீடித்து நிலைக்கும் என்று உணர்த்தும் வகையில் அழகான கதை தந்த ஆத்தருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.💖💖💖

மொத்தத்தில் கலகலப்பான அதே சமயத்தில் எதார்த்தமான குட் ஃபீல் கதை. கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள் வாசக தோழமைகளே!

கதைக்கான லிங்க்:

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@சித்ரா.வெ
 

New Episodes Thread

Top Bottom