காயத்திரிக்கு புது வரன்...
புது எண்ணில் இருந்து
புதிய நபர்கள் அழைத்தால்
பேசி பார்த்து விட்டு
பதில் வரவில்லை என்றால்
பிளாக் தான் அடுத்தது....
பெண்பிள்ளை என்றாலே
பிள்ளை பெற்று கொள்ளும் இயந்திரம்.
படித்தாலும்
படிக்கவில்லை என்றாலும்
பிள்ளை குட்டியுடன்
குடும்பம் நடத்த வேண்டும்....
சிந்தித்து விட்டால்
சிதைந்து விடும் சமூகம்
சீரழிந்து போகும் வாழ்க்கை என்று
சமூக அக்கறைவாதிகளின்
சிந்தனை துளிகள்......
பார்த்து பேசிவிட்டு
பிடித்தால் பார்க்கலாம்
பிடிக்கவில்லை என்றால்
பிடித்தம் வரும் வரை
பறப்போம் வானில்
பட்டத்துடன்.....