• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கரங்கள் சேர்ந்தால் அச்சமில்லையே

Balaji

✍️
Writer
புலர்ந்தும் புலராத விடியல் அது, மழைக்காலம் என்பதால் மேகங்கள் சூழ்ந்த வானில் இருந்து பகலவனின் வெளிச்சம் வையமதை முழுவதுமாக அடையவில்லை.

ஆதவன் வழக்கம் போல் தான் கவனித்துக்கொண்டிருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டுக்கு செல்ல பரப்பப்பாக காலையில் எழுந்து தயாராகி கொண்டிருந்தான்.

இங்கோ அவன் மனையாள் மேகலா,ஆதவன் அணிவதற்கான உடையை அயர்ன் செய்து , ஆதவனிற்கு தேவையான மதிய சாப்பாட்டையும் தயார் செய்து,அவன் கிளம்பும் நேரத்திலேயே அவன் நினைவிற்கு வந்து பொறுப்புணர்வை கொடுக்கும் அவனது காரின் சாவி அவனின் கோப்புகளை சரியாக எடுத்து வைத்து, அவன் கிளம்புவதற்கு உரிய அனைத்து ஆயத்த பணிகளையும் இனிதே நிறைவேற்றி விட்டவளாக பெருமூச்சை விட்டாள்.
இங்கு தன் முதல் குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்து முடித்தவள்,அடுத்து தன் வயிற்றில் சுமந்து பெற்ற உண்மை குழந்தை ரோஹனை தயார் செய்ய களத்தில் இறங்கினாள்.

இதற்கு நடுவில் தன் அத்தை மாமா என வீட்டில் உள்ள அனைவருக்கும் காபி காலை உணவு, வேலைக்கு செல்லும் ஆதவனுக்கும் பள்ளிக்கு செல்லும் ரோஹனுக்கும் மதிய உணவும் கொடுக்க வேண்டிய கடமை வேறு இவளது காலை நேர போர்க்களத்தில் சவால்களாய் அமைந்தன.

அனைத்தையும் சரி வர செய்து முடித்தவளிடம் இருந்து கணவனும் மகனும் விடைப்பெற,தன் மகனின் முத்தம் ஒன்றே அவள் இத்தனை நேரம் நில்லாமல் ஓடியதற்கு கிடைத்த இதமான பரிசாக இருந்தது.
ஆதவன் அவளிடமும் தாய் தந்தையிடமும் சொல்லிவிட்டு,தன் பையனின் பேகை தூக்கிக்கொண்ட படி அவனுடன் கிளம்ப,இங்கே மூவரும் அவர்களுக்கு கைகளை அசைத்து விடை கொடுத்தனர்.
ஆதவன் தன் பையனையும் பையையும் காரில் வைத்த ஆதவன்,
அவர்கள் இருவரின் மதிய உணவு ,இவன் சரி பார்க்க வைத்திருக்கும் கோப்புகள் அனைத்தையும் கொண்டு வந்த மேகலாவிடம் இருந்து அவைகளை வாங்கி அதையும் காரில் வைத்தான்.

ஆதவன் "போயிட்டு வரேன் மேகா குட்டி.. பாய்"என்று மேகலாவிடம் கூற அவளும் அவனிடம் "சரி.. பத்திரமா போயிட்டு வா ஆது.. ஈவ்னிங் நான் கொஞ்சம் திங்ஸ் ஷாப்பிங் பண்ண வேண்டியது இருக்கு.. அதனால நீ என்ன திருப்பி வரப்போ பிக் அப் பண்ணிக்கோ.."என்று அவனிடம் சொல்ல அவனும் அதற்கு இசைவு தெரிவித்தான்.

பின்னர் அவளின் செல்ல மகனும் தன் அம்மாவிற்கு டாட்டா காட்ட அவளும் பதிலுக்கு அவனிடம் "சீ யூ செல்லம்.. "என்று கூறியவாறே ஃப்ளெயிங் கிஸ் கொடுத்து அனுப்பினாள்.
அதை அவனிடம் செல்ல விடாது காற்றிலே திருடிய ஆதவனை கண்டு இருவரும் செல்லமாக முறைக்க அவனோ சிரித்த படியே காரை இயக்கலானான்.

வண்டி நேராக ரோஹனின் பள்ளியை அடைய,அங்கே அவனது வகுப்பு ஆசிரியரும் அப்போது தான் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.அவரை சந்தித்த ஆதவன் ரோஹன் இருவரும் அவருக்கு காலை வணக்கத்தை கூற அவரும் அதை புன்னகையோடு ஏற்றார்.

ரோஹன் முன்னை விட படிப்பில் இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு நன்றி கூறிய ஆதவன்,அவரிடம் அவனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி கூறி ஒப்படைத்து விட்டு கிளம்ப,மறக்காமல் தன் மகனிடமும் போய் வருவதாக சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

தன் சைட் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டிய சாலையை அடைந்தவன் வண்டியை சைட்டை நோக்கி செலுத்தினான்.
அவன் செல்லும் வழியில் ஓர் இடத்தில் கூட்டம் கூடி நிற்க,அருகிலேயே கண்ணாடி உடைப்பட்ட நிலையில் ஒரு லாரியும்,முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்த காரும் இருந்தது.இவனும் வேகமாக இறங்கி சென்று என்னவென்று பார்க்க,அங்கே ஒரு பெண் ரத்தம் வழிந்தோடும் நிலையில் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடிய நிலையில் மூச்சை கஷ்டப்பட்டு சுவாசித்து கொண்டிருக்க ,சிறிது தூரம் தள்ளி, ஒரு சிறுமியோ மயக்கமுற்ற நிலையில் கிடந்தாள்.
இந்த சாலையில் பெரிதாக போக்குவரத்து இல்லை என்பதால்,இன்னும் இந்த தகவல் காவல் துறையினருக்கோ மருத்துவமனைக்கோ தெரிய வர வில்லை.

அங்கே ஒரு பத்து பேரே இருக்க,அவர்கள் நிலையை எண்ணி பதறிப்போன ஆதவனோ அருகில் உள்ளவர்களிடம் அவர்களுக்கு என்ன ஆனது?ஏன் இன்னும் ஆம்புலன்ஸ் வர வில்லை?என்று அவர்களை பார்த்து கேட்க,அவன் அருகில் இருந்த வயதான ஒருவரோ "இந்த லாரி தான் தம்பி பின்னாடி வந்த காரை தாண்டி போகணும்னு வேகமா இந்த சைட் யாரு வரா பார்க்காம ஓவர் டேக் பண்ணுச்சு.. இவங்க மூணு பேரும் வந்த காரும் வேகமா வந்ததால இவங்களால வேகத்தை கண்ட்ரோல் பண்ண முடியல.. அதான் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு.. அந்த கார் ஓட்டிட்டு வந்த தம்பி உயிரோட இருக்கிற மாதிரி தெரியல இவங்க ரெண்டு பேருக்கும் தான் இன்னும் உயிர் இருக்கு.. ஆனா நாம என்ன செய்ய முடியும்.. "என்று நடந்தவற்றை என்னவோ கதை போல கூறிவிட்டு நொந்து போனவரை கண்டு எரிச்சலுற்றான் ஆதவன்
அவரிடம் ஆதவனோ" அப்போ ஏன் சார் இன்னும் ஆம்புலேன்சுக்கு போன் பண்ணாம இருக்கீங்க.. இந்த ஆக்சிடெண்ட் நடந்து எவ்வளவு நேரம் ஆகுது சார்.."என்று இழுத்து பிடித்த பொறுமையோடும் குறையாத பதட்டத்தோடும் கேட்டான்.
அவரோ"தெரியல தம்பி.. ஒரு பதினஞ்சு நிமிஷத்துல இருந்து இருபது நிமிஷத்துக்குள்ள இருக்கும் தம்பி.. ஆம்புலென்சுக்கு போன் பண்ணணுமா.. ஏன் யா எங்க யாருக்கும் அடுத்த பொழப்ப பார்க்க வேணாமாயா? இவங்களுக்காக இப்போ ஆம்புலன்ஸ் வர சொன்னா நாம இவங்களுக்கு என்ன ஆச்சு சொல்லுற வரைக்கும் கூட இருக்கணும்,அப்புறம் போலீஸ் வந்தா அவங்க கேக்குறதுக்கு லாம் பதில் சொல்லணும்,எதுக்குயா எங்களுக்கு இந்த வம்பு.. " என்று அவர் கேட்க அவனோ இதற்கு மேல் கோபத்தை கட்டு படுத்த முடியாதவன் அவரை பார்த்து "மனுஷனாய்யா நீ.. ஒருத்தவங்க உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்க அவங்கள காப்பாத்த நினைக்காம, ஏதோ இந்த ஒரு நாள் இவங்களுக்காக ஒதுக்குனா உலகமே அழிஞ்சிடுற மாதிரி பேசுற..ஏன் யா நீ ஒரு நாள் கூட ஒதுக்க வேணாம்யா அட்லீஸ்ட் தோ இருக்கு டெலிபோன் பூத் அட்லீஸ்ட் அதுல இருந்து ஒரு அன்நோன் மேம்பராவாச்சு பேசியிருக்கலாம்ல யா.. இதெல்லாம் நமக்கு நடந்தா என்ன ஆகும் யோசிச்சு பார்த்து முடிவெடுக்கணும் யா அவன் தான் மனுஷன்.. நீ நீ எல்லாம் ச்சீ தள்ளி போய்யா.." என்றவன் தனக்கு வந்த கண்ணீரை அடக்க முடியாமல் கதறினான்.தன் தங்கையும் போன மாதம் இவ்வாறு தானே சாலையில் நிற்கதியாக இருந்திருப்பாள்.அவள் துடித்துடித்து இறக்கும் வரை இவ்வாறு தானே எல்லோரும் உதவி செய்யாமல் பார்த்து விட்டு கடந்து சென்றிருப்பர் என்று எண்ண எண்ண அவனுக்கு மேலும் அழுகையே வந்தது.

அதனை கட்டுப்படுத்தியவன் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, இதற்கு மேல் ஆம்புலேன்சிற்கு அழைத்து, அதற்காக காத்திருக்க நேரமில்லை என்று நினைத்தவன்,அவர்களை தன் காரிலேயே அழைத்து செல்லலாம் என்று நினைத்து அங்கே இருப்பவர்களை உதவிக்கு பார்க்க, ஒரேயொரு இளைஞன் மட்டும் முன்வந்து, அவர்களை காரில் ஏற்ற ஆதவனுக்கு உதவி செய்தான்.
ஆதவன் வேகமாக சென்று காரை ஸ்டார்ட் செய்ய,அந்த இளைஞனோ எதற்கும் உதவிக்கு தானும் உடன் வருவதாக கூற,அவனை தன்னோடு முன் இருக்கையில் அமர சொன்னான் ஆதவன்.அவன் வண்டியை வேகமாக மருத்துவமனை நோக்கி செலுத்த இந்த இளைஞனோ அவனை பார்த்து "அண்ணா.. சாரி அண்ட் தான்க்ஸ் அண்ணா.. இளைய சமுதாயமா நாட்டுல இருக்குற அனைவருக்கும் முன்மாதிரியா இருக்க வேண்டிய நான் கூட வேடிக்கை பார்த்துட்டு இருந்துட்டேன்.. நீங்க சொன்னதை யோசிச்சு பார்த்தேன் னா.. நமக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா ஏன் என்ன கஷ்டம் வந்தாலும், நாம ஏதோ ஒரு வகையில சக மனிதர்கள் உதவியை எதிர்பார்த்து தான் வாழுறோம்.. நமக்கு ஒண்ணுனா எப்போவா இருந்தாலும் எங்கேயா இருந்தாலும் கை கொடுத்து காப்பாத்த ஒரு உயிர் இருக்குங்கிற தைரியம் இருந்தா நாம எதை பார்த்ததுமே பயப்பட தேவை இல்லல்ல.. நமக்கு அப்படி ஒருத்தவங்கல பிரச்சனை வரப்போ நம்ம வாழ்க்கையில வரணும் மாதிரி தானே எல்லாரும் நினைப்பாங்க.. அதுனால முடிஞ்ச அளவுக்கு நம்மலாள முடியும் தெரியும் போது அடுத்தவங்க பிரச்சனை ல உதவனும் அண்ணா.. அப்போ தான் நாம அதை எதிர்பார்க்கவே தகுதியானவங்க.. இதை நான் இன்னைக்கு புரிஞ்சிக்கிட்டேன் அண்ணா எப்பவும் மறக்க மாட்டேன்.. அதை இத்தனை நாள் நான் புரிஞ்சிக்காம இருந்ததுக்கு சாரி.. இப்போ எனக்கு நீங்க அதை புரிய வைச்சதுக்கு தான்க்ஸ்.. "என்று கூற அவனுக்கு புன்னகையை பதிலாக தந்தான் ஆதவன்.

கார் மருத்துவமனையை அடைய, ஆதவன் வேகமாக சென்று மருத்துவரை அழைக்க,அந்த இளைஞன் மோகன் அவர்களை செவிலியர் உதவியோடு அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்றான்.

இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை பார்த்தனர்.குழந்தை நலமாக உள்ளதாகவும்,அந்த பெண்ணை காப்பாற்ற ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றும்,அதற்கு O -ve ரத்தம் தேவைப்படுவதாகவும் கூற மோகனும் அதே ரத்த வகையை சேர்ந்தவன் என்பதால் அவனே அந்த பெண்ணிற்கு வேண்டிய ரத்தத்தை கொடுத்தான்.அவனை அழைத்து வந்ததும் நல்லது தான் என எண்ணி ஆதவன் பெருமூச்சு விட ,அந்த பெண் ஆப்ரேஷன் முடிந்து நலமாக இருப்பதாக கூறிய பின்னரே அவர்கள் இருவருக்கும் முகத்தில் புன்னகை வந்தது.

"அச்சமென்பதில்லையோ..என்றும் உயிர்களுக்கு உயிர் தந்து வாழ வைக்க என்றும் ஒளியாய் வந்த
கதிரவன்
இருக்கும் பூமியிற்கு ..

அச்சமென்பதில்லையோ..தன் எண்ணங்கள் அனைத்தையும் சொல்லாமல் உணர்ந்த
மனையாள்
இருக்கும் கணவனுக்கு ..

அச்சமென்பதில்லையோ..தன் எதிரே எந்த இடர் வந்தாலும் அதை தடுத்து தனை காத்திடும்
தாய்
இருக்கும் மகனு(ளு)க்கு..

அச்சமென்பதில்லையோ..என்றும் பரிவும் பாசமும் கலந்த ஒற்றுமையோடு விட்டு கொடுக்கும்
எண்ணம்
இருக்கும் குடும்பத்திற்கு ..

அச்சமென்பதில்லையோ..தன் தாய் தந்தையரின் அரவனைப்பை காட்டி பார்த்துக்கொள்ளும்
ஆசிரியர்
இருக்கும் மாணவனுக்கு ..

அச்சமென்பதில்லையோ..தன் துன்பத்தில் துயர் துடைக்க தனக்கென்று கரங்கள் கொடுக்க மனங்கள்
இருக்கும் மனிதனுக்கு.."
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom