• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கடம்ப மலர் அவர்கள் எழுதிய "உறவாக அன்பில் வாழ"

அன்புள்ள கடம்ப மலரே!

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்களையும், கதாபாத்திரங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்கிறேன் சகி.

சுயதொழில் செய்து வரும் பெற்றோர்கள், அந்தத் தொழில் தங்களுடைய கனவு, உழைப்பு என்று காரணம் சொல்லி, அதில் துளியும் நாட்டமே இல்லாத தங்கள் பிள்ளைகள் மேல் திணிப்பதும், அதனால் அவர்களுக்கு இடையில் ஏற்படும் மனசஞ்சலங்கள் பற்றிய அழகான கதை தந்த கடம்ப மலர் அவர்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்கள்.

Preconceived notion என்பார்களே, அதைத் தத்ரூபமாக எடுத்துச்சொல்லும் வகையில் கதாபாத்திரங்களைச்செதுக்கிய விதம் அருமை. இவன்/இவள் இப்படித்தான் என்ற அனுமானங்களோடு பழகும் கிருஷ்ணமூர்த்தி முதல், பிறர் பேச்சில் உள்ள உண்மையும் பொய்மையும் பிரித்துப் பார்க்க தெரியாத செந்தூரன் வரை மிகவும் எதார்த்தமாக இருந்தது.

முத்துலட்சுமி-சித்ரா புரிதல் ஆகட்டும், சரண்-ஷிவானி பாசம் ஆகட்டும், இரண்டுமே அழகாக இருந்தது. அவர்கள் வலம் வந்த காட்சிகள் அத்தனையும் நேர்மறையான உணர்வை தந்தது.

ஷான்வி காதலும் அழகு. அதை அவள் ஆக்ரோஷமாக சரணிடம் கூறிய விதம் சூப்பரோ சூப்பர். அதைவிட அற்புதம் என்னவென்றால், கண்ணில் தென்படும் ஆதாரங்கள் அவனைக் கெட்டவன் என்று பறைசாற்றினாலும், காதல் நிறைந்த அவள் நெஞ்சம் அதை ஏற்க மறுத்து, தனக்குத்தானே சொல்லிக்கொண்ட பதில்கள் மெய்சிலிர்க்க வைத்தது.

ஷிவானியின் குழந்தையை கையில் ஏந்தியபோது, ஷான்வியின் உள்ளம் சரணை ஆத்மார்த்தமாக நம்பிய தருணம் மிகவும் ரசித்து படித்தேன். நம்பிக்கையின் ஆழத்தை அது உணர்த்தியது.

அப்பா மனம்மாறி வந்த போதிலும் அதில் புரிதல் இல்லை என்று சரண் விளக்கிய விதமும் நான் ரசித்து படித்த மற்றொரு இடம்.

அம்மா-மகன் பிள்ளையார் கோவில் ரகசிய சந்திப்புகளும் வாவ் என்று நினைக்க தோன்றியது.

கதாபாத்திரங்களின் கல்வி, தொழில் பற்றி மேலோட்டமாகக் கூறாமல், அவற்றை சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு இடத்திலும் விளக்கமாகவும், அதே சமயத்தில் கதையின் நகர்வுக்கு ஒப்ப சுவாரசியமாகவும் கொடுத்த உங்கள் பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Automobile Engineering முதல், மருத்துவத்தின் பல கிளைகளைப் பற்றி நீங்கள் கதையில் இணைத்த தகவல் கலந்த காட்சிகள் சூப்பர்.

இரு தலைமுறையினரின் மனஸ்தாபங்களை(முத்து-விநாயகம் மற்றும் சரண்-ஷான்வி) மிகவும் அருமையாகக் கையாண்டீர்கள் ஆசிரியரே! ஆனால் ஷிவானி காதலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதைத் தீர்த்த விதமும், வழக்கமான ஒன்றாக இருந்ததைப் போல தோன்றியது.

உறவுகள் மனம்விட்டு பேசிப்பழக தவறும்போது, கடுகு அளவு பிரச்சனையும் மலை அளவாக உருமாறும் என்பதை உணர்த்தும் வகையில் அழகிய குடும்ப கதை தந்த கடம்ப மலர் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
💐
💐


என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்

@கடம்ப மலர்
 

New Episodes Thread

Top Bottom