• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

எழிலன்பு அவர்கள் எழுதிய "ஜதியோடு சதிராடு"

ஓம் ஸ்ரீ சாயிராம்

🕺💃எழிலன்பு அவர்கள் எழுதிய "ஜதியோடு சதிராடு"🕺💃

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.

“இரவு வானம்!” என்றதும், நம் மனக்கண்ணில் தன்னிச்சையாகத் தோன்றும் நிலவின் பிம்பம் போல, நடனம் என்று சொன்னவுடன், பிரபலமான நடனக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே நினைவூட்டிக்கொள்வது நம் இயல்பு.

அந்த வானத்தின் ஒரு ஓரத்தில் மின்னும் நட்சத்திரமும் அழகு என்று உணர்த்தும் வகையில், நடனக் குழுவில் ஆடும் கலைஞர்களின் திறமைகளையும், உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஏக்கங்களையும் என அனைத்து உணர்வுகளையும் செதுக்கிய உங்கள் தனித்துவமான எண்ணம் அருமையிலும் அருமை.

உங்களுடைய படைப்புகளில் இதுவரை ஐந்து கதைகள் படித்திருக்கிறேன் எழில். அவை அனைத்திலும், வெளித்தோற்றம், செல்வம் என்பதைத் தாண்டி, கதபாத்திரங்களின் திறமைகளையும், நற்குணங்களையும் மையமாக வைத்து எழுதிய உங்கள் பாங்கு அற்புதம். இக்கதையும் அதற்கு விதிவிலக்கில்லை.

வாழ்வது ஓர் வாழ்க்கைத்தான் என்ற நிதர்சனத்தை உணர்ந்து, தனக்குப் பிடித்த நடனக்கலையில் சாதிக்க நினைக்கும் நிருபனின் உறுதியும் விடாமுயற்சியும் அழகு என்றால், அதில் முன்னேற காட்டும் அக்கறைக்கு இணையாக, தன் தன்மானத்தையும் இழக்கக்கூடாது என்று எண்ணி அவன் விட்டுக்கொடுத்த இடங்கள் கொள்ளை அழகு.

போட்டி, பொறாமை நிறைந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், வேகத்திற்கும் விவேகத்திற்கும் வித்தியாசம் புரியவைக்கும் விதமாக, நிருபனின் கதாபாத்திரம் இருந்தது.

மகனாக, காதலனாக, கணவனாக, தனிமனிதனாக என அனைத்து இடங்களிலும் நிருபன் எடுத்த முடிவுகள் அசத்தல்.

என்னவொன்று ஆத்தரே! அவன் மனவலிக்கு கேட்ட மருந்துதான் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிப்போச்சு.

வாழ்க்கை நாம் நினைப்பதுபோல அமைவதில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து, பெற்றவளின் பணத்தாசையைச் சகித்துக்கொண்டு, அன்றாடம் கிடைத்த சின்ன சின்ன சந்தோஷங்களை மனநிறைவுடன் ஏற்ற மதனாவின் குணமும் சூப்பர்.

மனத்திற்கு நிறைந்தவனின் கனவுகளைத் தனதாக்கி வாழ்ந்தும், தள்ளி நின்றும், ஏக்கத்தில் கரைந்தும், தவமிருந்த மதனாவின் காதலும் நிறைவாக இருந்தது.

இருவரின் காதலைக் காட்டிலும், அவர்களுக்குள் நிலவிய தோழமைதான் மனத்தைக் கொள்ளைக்கொண்டது.

இருவரும் பிரிந்திருந்த அந்த ஐந்தாண்டு காலத்தில், அவர்கள் சந்தித்த சவால்களை ஓரிரு பிரத்யேக காட்சிகளில் காட்டி இருந்தால், அவர்கள் கடந்து வந்த வலி மிகுந்த பாதைக்கு வலுவூட்டுவதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பெற்றவர்களுக்கு இலக்கணமாக, மகனின் கனவுகளுக்குத் தோள்கொடுத்த பத்மா மற்றும் சதாசிவத்தின் கதாபாத்திரங்களும் பிரமாதம்.

இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் நிருபனின் அம்மாதான். மகனின் எதிர்காலத்தை எண்ணி அவள் கவலைக்கொள்வதும், மனவாழ்க்கை குறித்த அவள் எதிர்பார்புகளும் மிகவும் இயல்பாக இருந்தது.

பத்மாவைப் போல பிள்ளைகளின் நலனில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் உலகத்தில்தான், தன் காரியமே கண்ணென்று சுயநலம் படைத்த அம்மாக்களும் வாழ்கிறார்கள் என்று உணர்த்தும் வகையில் அனிதாவைச் சித்தரித்துவிட்டீர்கள்.

திரைப்படங்களில், ஹீரோ ஹீரோக்களின் நடனத்தை மட்டுமே வியந்து பார்த்துப் பழிகிய கண்களும் மனமும், இப்போது குழுவில் ஆடும் கலைஞர்களில் நிருபனையும், மதனாவையும் தன்னிச்சையாகத் தேடுகிறது என்றால் அது உங்களின் இந்தக் கதை படித்ததில் ஏற்பட்ட தாக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது.

மனம் இருந்தால் கனவுகளும் மெய்ப்படும்;
புரிதல் இருந்தால் பிரிவிலும் காதல் நிலைத்து நிற்கும்;

என்றும் சொல்லும் விதமாக, அழகிய கதை தந்த எழிலன்பு அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்!

சிகரம் தொடட்டும் உங்கள் படைப்புகள்!

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்.

@Ezhilanbu
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer

மகிழ்ச்சி சிஸ்
மிக்க நன்றிகள் 💕 💕
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom