நன்றிஅம்மாவின் பொ(ரி)றியல்....
அம்மாவின் பேச்சு
அடுப்பில் சட்டி காயவது போல்
அவளைக் காய்ந்து விட்டார் ....
அம்மாவின் எண்ணங்கள்
எண்ணெய் சூடாகுவது போல்
அவரின் வார்த்தைகளும்
சூடாய் விழுந்தன
கடுகு வெடிப்பது போல்
அவளின் மனம் வெடித்தது
காய்கறி நறுக்குவது போல் நறுக்கென்று பேச்சு
காய்கறிகளை வதக்குவது போல
அவளை வாட்டி எடுத்தார்
தேங்காய் துருவல் போல்
அவளை துருவிக் கொண்டும்
சந்தேக கேள்விகளை
தூவிக் கொண்டிருந்தார்....
அன்று இனிதே முடிந்தது
டைனிங் டேபிளில்
அம்மாவின் பொரியல்......