• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 7

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 7


ரிதுவிற்கு வீட்டிற்கு சென்ற பிறகும் கூட மனம் ஆறவில்லை.


'என்னை பற்றி என்ன தெரியும் அவனுக்கு? என்னவெல்லாம் பேசிவிட்டு.. ச்ச..' நினைக்க நினைக்க கோபம் அதிகமானது.


ராஜ்குமார் சமையல் அறையில் நின்று குரல் கொடுக்க உள்ளே சென்றாள் ரிது.


அவர் அவளுக்கு பிடித்த பட்டர் மசாலா செய்து கொண்டிருந்தார். அதை டேஸ்ட் பார்க்க சொல்லி அவளுக்கு கொடுத்தார்.


ஓய்வு வாங்கியதில் இருந்து ரிதுவிற்கும் சமையலில் ஓய்வு கொடுத்துவிட்டார்.


ரிது அதை சாப்பிடாமல் யோசனையில் இருப்பதை பார்த்தவர் அவள் தலை கோதி, "என்ன டா! ஏதோ தீவிர யோசனையில் இருக்குற மாதிரி இருக்கு" என்றார்.


அப்பாவிடம் சொல்லிவிடுவது தான் நல்லது என்று ஆனந்த் பேசிய முறையை கூறினாள்.


ஆனந்த் தன்னை தவறாக நினைத்து பேசியதை தந்தையிடம் கோபமாகவே கூறினாள்.


"என்னை பத்தி தெரியாம எப்படி பா அவர் அப்படி பேசலாம்" என்று வாதிட,
ராஜ்குமார்க்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.


ஆனந்த் அப்படி எல்லாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இதுவரை ஏதும் பேசியதில்லையே! முதலில் அவன் கோபமாக பேசி கூட இவர் பார்த்ததில்லையே! வேலையில் கண்டிப்புடன் இருப்பான் தான்.


ஆனால் எந்த கோபத்தையும் வேலை செய்பவர்களிடம் காட்டுபவன் இல்லையே! அதுவும் ரிது சேர்ந்து ஒருவாரமே ஆகும் நிலையில் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?.


"ஆனந்த் அப்படியெல்லாம் பேசுற ஆள் இல்லையே டா. அதுவும் உன்கிட்ட...."


"அதைதான் பா நானும் சொல்றேன். சும்மா ஆனந்த் சார், ஆனந்த் சார்னு தலையில் தூக்கி வைக்காதிங்க. கொஞ்சம் கூட பொறுமை இல்லை. நாளைக்கு இந்த பிரச்சனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லனு தெரிஞ்சா எங்க போய் முட்டிக்குவாராம்?" என்று பொரிந்து தள்ளினாள்.


ராஜ்குமார்க்கும் குழப்பமே! இடையில் ஏதோ நடந்திருக்கிறது. இல்லையென்றால் இப்படி எல்லாம் பேசுபவனில்லை ஆனந்த்.


இந்த பிரச்னையை மகளே பார்த்து கொள்ளட்டும். அப்படி முடியாத போது நாம் இதில் தலையிடலாம் என முடிவு செய்தார்.


அதையே மக்களிடமும் கூறி இப்போதைக்கு அவளை சமாதானப்படுத்த முயன்றார்.

ரகு தன் மகனை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். சுகன்யா காபி கொடுக்க மறுக்காமல் வாங்கி கொண்டவர் "நீ ஆனந்த் காதலை பற்றி என்ன நினைக்குற?" என்றார்.


சுகன்யாவிற்குமே அது புதிர்க்கொம்பாய் தான் இருந்தது. என்ன சொல்வதென தெரியாமல் தலையாட்டினார்.


"அந்த பொண்ணு யார்னு தெரியுமா?" ரகு.


"இல்லைங்க. அவன் அதை மட்டும் சொல்லல".


"திடிர்னு இப்படி வந்து நிப்பான்னு நான் நினைக்கவே இல்லை சுகன். நாம எங்கேயும் தவறிட்டோமோனு தோணுது" ரகு சொல்ல,


"வார்த்தைக்கு கூட அப்படி சொல்லாதீங்க. பசங்க வளர்ந்த அப்புறம் அவங்களுக்குண்ணு ஆசை வர்றது சகஜம் தானே? அதுவும் நம்ம ஆனந்த்... வீட்டுக்கு தெரியாம எங்கேயாவது சுத்தியிருக்கானா? இல்லை எதாவது தப்பா நடந்து பாத்துருக்கிங்களா? ஒரு வாரமா தான் அவன்கிட்ட சில மாற்றம் தெரிஞ்சது. அது நல்லபடியா நடந்திருந்தா அவனே நம்மகிட்ட வந்து சொல்லியிருப்பான். அதுக்குள்ள விதி!" என்றவர் மகனை ஒரு வார்த்தை சொன்னால் கூட தாங்காமல் பொங்கிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.


"ஹ்ம்ம்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்று மெலிதாய் சிரித்துக் கொண்டார் ரகு.


ரகுவிற்கும் இப்போது சிறிதாய் ஒரு பயம் தான் நினைத்தது நடக்காதா என்று. கடவுளிடம் நல்லதே நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.


அடுத்த மூன்று நாட்கள் கழிந்திருந்தது. விக்ரம் உடலில் சில மாற்றங்கள் தென்படவே தொடர்ந்து ஹாஸ்பிடலில் தான் அனுமதிக்கப் பட்டிருந்தான்.


"எப்படி இருக்கீங்க விக்ரம்" கையில் ஸ்டெத்தஸ்கோப்புடன் சிரித்தவாறு விக்ரம் அறையினுள் நுழைந்தாள் லாவண்யா.


"மச் பெட்டெர் டாக்டர்" அதே சிரிப்புடன் கூறினான் விக்ரம்.


"எப்போ என்னை வீட்டுக்கு அனுப்ப போறீங்க?" விக்ரம் .


"ஹ்ம்ம் அனுப்பலாம் தான். ஆனால் நீங்க இங்க வரும்போது வேற ஏதோ முடிவு எடுத்திருந்ததா ஞாபகம்" என்று அவன் தற்கொலை முயற்சியை அவள் சுட்டிக் காட்டினாள்.


"சாரி டாக்டர்! இந்த ஒரு வாரத்துல தெரிஞ்சுக்கிட்டேன் நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புனு. இனி இப்படி ஒரு முட்டாள்தனம் எப்பவும் செய்யமாட்டேன்"


"வெரி குட்" என்றவள், "ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துட்டு சொல்லுவாங்க. மாக்ஸிமம் நீங்க ஈவினிங் கிளம்பிடலாம் நினைக்கிறேன்".


"தேங்க்ஸ் டாக்டர்" என்றவனிடம்,


"டேக் கேர் ஒப் யுவர் ஹெல்த். நான் ஈவ்னிங் வந்து பாக்கறேன்" என்றுவிட்டு சென்றாள்.


இவர்கள் பேச்சை அங்கிருந்த சேரில் அமர்ந்திருந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆனந்த்.


லாவண்யா சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு "என்ன டா பார்க்ல லவ்வர்ஸ் பேசுற மாறி பேசுறீங்க. ஒரு நிமிஷம் இது ஹாஸ்பிடல் தானா? நீ சூசைட் அட்டம்ட் பண்ணி தான் வந்தாயானு ஏனக்கு டவுட்டே வந்துட்டு!" என்றான் ஆனந்த் கொஞ்சம் சீரியஸ்ஸாகவே.


அவன் பேசிய தொனியில் அடக்க முடியாமல் சிரித்த விக்ரம், சிரிப்பிநூடே


"இவங்க பேரு லாவண்யா டா. டெய்லி இவங்க தான் செக்அப் பண்ண வர்ராங்க. ஒன் வீக்கா நான் இங்க இருக்கிறதால நல்லா பேசுறாங்க. நல்ல பொண்ணு டா" என்றான்.


அவன் பேசியதில் மயக்கம் வராத குறை தான் ஆனந்த்திற்கு.


"டேய்! டேய்! நான் டவுட்னு தான் சொன்னேன். நீ காண்பார்ம் பண்ணிடுவ போல? நல்ல பொண்ணு அப்படி இப்படின்ற?" என்று கத்தியே விட்டான்.


மறுபடி வாய்விட்டு சிரித்த விக்ரம் "டேய் உன் வால் தனத்தை கொஞ்சம் அடக்கு மச்சி. அவங்க டாக்டர். அதுக்கும் மேல நான் இங்க வந்த ரெண்டாவது நாளே நாம இன்னும் ஏன் வாழனும்னு தான் நினச்சேன். லாவண்யா தான் என் புத்திய தெளிய வச்சாங்க".


"அவங்க அதை கௌன்சிலிங்கா தான் பண்ணினாங்க. பட் நான் பண்ண தப்ப அவங்ககிட்ட பேசுன அப்புறம் தான் முழுசா உணர்ந்தேன் டா" என்றான்.


ஒரு பாட்டில் தண்ணீரை அப்படியே தொண்டைக்குள் சரித்தான் ஆனந்த். என்ன இவன் இப்படி பேசுறான் என்று குழம்பி போனான்.


"வேணாம் டா! இப்ப தான் தப்பிச்சு வந்திருக்க மறுபடியும் எதிலும் மாட்டிக்காதே!" நல்ல நண்பனாய் அறிவுரை கூறினான் ஆனந்த்.


அதற்கும் சிரித்த விக்ரம் "நீயா ஏதும் கற்பனை பண்ணாத மச்சி. ஷி ஸ்பீக்ஸ் லைக் அ ப்ரண்ட் ஒன்லி" என்று கூறினான் தெளிவாக.


நண்பனை பற்றி தெரிந்தவன் என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டான் ஆனந்த்.


தந்தை சொன்னது சரி தான். என் பிரச்சனைகளை நான் தான் பார்த்துக்கணும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ரிது.


அவன் பழி கூறி நான்கு நாட்கள் கடந்திருந்தது. இந்த நாட்களில் அவசிய பேச்சுக்கள் மட்டுமே அந்த ஆபீஸ் உள்ளே கேட்டது.


இன்று கேட்டுவிட வேண்டும். வீண்பழி சுமந்து கொண்டு வேலை செய்ய முடியாது என எண்ணிக் கொண்டிருந்தாள்.


ஆனால் ரிதுவின் சந்தேகமே வேறு. அவன் அந்த ப்ராஜெக்ட்டிற்காக மட்டும் கோபப்படவில்லையோ என்று தோன்றியது.


ஆமாம் ஏதோ சொன்னானே! இப்போது பிடித்திருக்கும் பணக்காரன் விஜயன் என்று. அதற்கு என்ன அர்த்தமாம்?.


ரிதுவின் ஆராயும் மூளை விழித்துக் கொள்ள இன்று கேட்டே தீருவேன் என்றிருந்தாள்.


ரிதுவை இனி நினைக்கவே கூடாது என ஆனந்த் எண்ணியிருந்தான். என்ன தான் விஜயன் விஷயத்தில் அவன் தவறாக கணித்திருந்தாலும் விக்ரமிற்கு துரோகம் செய்தவளாயிற்றே! என்று அவன் மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தான்.


எவ்வளவு முயன்றும் ஆபீஸ்ஸில் அவளை காணும் போது அவன் மனம் அவள் பின்னே தான் செல்வேன் என அடம்பிடிக்க வெகுவாக கலங்கி போனான்.


ஆபீஸ்ஸில் இருந்து அவளை நீக்குவது சுலபமில்லை. அவளுடைய வேலையில் மிகச் சரியாகவே இருந்தாள். அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தான் வேதனையாக இருந்தது.


நண்பர்களுடன் இருக்கும் போதும், பெற்றோருடன் இருக்கும் போதும் அவன் அவனாக இருக்க, ஆபீஸ்ஸில் அவனால் தன்னிலையில் இருக்க முடியவில்லை.


அனைத்தயும் யோசித்தபடி அவன் அறை டேபிள்மேல் தலைகவிழ்த்து கண்மூடி இருந்தான்.


ரிது பர்ணா பலமுறை கதவை தட்டியும் குரல் வராததால் அவன் அறை உள்ளே நுழைந்தாள்.


அவன் டேபிள் மேல் கவிழ்ந்திருந்த நிலையில் அவனை தொந்தரவு செய்வது சரி இல்லை என்று திரும்பி விடவும் அவன் எழுந்திருந்தான்.


அவளை பார்த்ததும் "உள்ளே வரும்போது கதவை தட்ட தெரியாதா?" என உறும,


"இவனுக்கு வேறு வேலையே இல்லையா? கத்துவதே வேலை போல" என்று எரிச்சலாகியது.


அவளுக்கு என்ன தெரியும்! அவள் அவன் முன்னே வரும் போதெல்லாம் அவன் மனம் படும் பாட்டை!.


கதவை தட்டியும் குரல் வராததால் உள்ளே வந்ததாக கூற என்ன விஷயம் என்று அவளை பார்த்தான்.


அவளும் எப்படி ஆரம்பிப்பது என தயங்கி, "அந்த ப்ராஜெக்ட் பற்றி... டாக்குமெண்ட் எடுத்துட்டு போனவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நீங்க நம்பலைனா அன்னைக்கு சொன்னா மாதிரி நானே வேலையை விட்டு போறேன் சார் " என்று முடித்தாள்.


அப்போது தான் அவள் மீது தவறு இல்லை என்பதையும், ஒரு சாரி கூட சொல்லாமல் இருக்கிறோம் என்பதும் ஞாபகம் வர,


"சாரி மிஸ் ரிது பர்ணா! உங்க மேல எந்த தப்பும் இல்லைனு அன்னைக்கு ஈவினிங்கே க்ளியர் ஆகிட்டு. நான் தான் உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டேன். அன்னைக்கு நான் பேசினது ரொம்ப தவறு தான். ஐ அம் ரியல்லி சாரி " என்று உணர்ந்தே கூறினான்.


அவன் கோபப்படுவான் பதிலுக்கு நன்கு பேச வேண்டும் என்று வந்தவளோ வாயடைத்து நின்றாள்.


'என்ன இவன் மாறி மாறி பேசுறான்? என்ன தான் பிரச்சனை இவனுக்கு?' என்று அவள் ஆராய்ச்சி மூளை வேலை செய்ய ஆரம்பிக்க,


அப்போது தான் 'மிஸ் ரிது பர்ணா' என்று அவன் அழைத்தது ஞாபகம் வந்தது.


மிஸ் ரிதுவை, ரிதுவாக மாற்றி, இப்ப அதையும் 'மிஸ் ரிது பர்ணா'வா என்று கோபம் வந்தது.


இந்த கோபம் ஏன் என்று அவள் ஆராயும் மூளை வேலை செய்திருக்கலாம். ஏதும் செய்ய இயலாமல் தன் மேலேயே வெறுப்பாகிவிட தனது கேபினுக்கு சென்றாள்.


ஆனந்த்தும் ஒரு பெருமூச்சுடன் அமர்ந்துவிட்டான்.


அடுத்தநாள் காலையிலேயே விக்ரம் வீட்டு வாசலில் நின்றிருந்தாள் நம் ரிது.


காதல் தொடரும்..
 

பிரிய நிலா

Well-known member
Member
முதல்ல விக்ரமை எப்படி ரிதுக்கு தெரியும்னு சொல்லுங்க சிஸ்.
விக்ரம் அவனோட பர்ஸ்ல அவளோட போட்டே வச்சிட்டு இருக்க அளவுக்கு க்ளேஸ்.
ஆனால் விக்ரமோட க்ளோஸ் பிரண்ட்டடா இருக்க ஆனந்திற்கு ஏன் அவளைப் பற்றி தெரியவில்லை. ஏன் விக்ரம் அவளைப்பற்றி ஆனந்திடம் சொல்லவே இல்ல..
சஸ்பென்ஸ் தாங்கல சிஸ்..
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
 

ரித்தி

Active member
Member
நெஸ்ட் எபில தெரிஞ்சிடும் sis
முதல்ல விக்ரமை எப்படி ரிதுக்கு தெரியும்னு சொல்லுங்க சிஸ்.
விக்ரம் அவனோட பர்ஸ்ல அவளோட போட்டே வச்சிட்டு இருக்க அளவுக்கு க்ளேஸ்.
ஆனால் விக்ரமோட க்ளோஸ் பிரண்ட்டடா இருக்க ஆனந்திற்கு ஏன் அவளைப் பற்றி தெரியவில்லை. ஏன் விக்ரம் அவளைப்பற்றி ஆனந்திடம் சொல்லவே இல்ல..
சஸ்பென்ஸ் தாங்கல சிஸ்..
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
 

Baby

Active member
Member
இந்த லூசு விக்ரம் காதலிச்சது ரிதுவை இல்ல.. அதும் ஒன்சைடா கூட அவன் காதலிக்கல.. ஆனந்த் இவனுக்கு நண்மனபன்ன ரிது விக்கி தங்கச்சி தோழியா.. ஜோதி மாதிரி தான் ரிதுவோ...
 

Rajam

Well-known member
Member
விக்கிரமுக்கும ரிதுவுக்கும் என்ன தொடர்பு.
விக்ரம் ஏன் நணபனிடம் அவளைப் பற்றி
சொல்லாது மறைக்கனும்.
 

ரித்தி

Active member
Member
ச்ச என்ன ஒரு மூளை பேபி உங்களுக்கு 🥰🥰🥰
இந்த லூசு விக்ரம் காதலிச்சது ரிதுவை இல்ல.. அதும் ஒன்சைடா கூட அவன் காதலிக்கல.. ஆனந்த் இவனுக்கு நண்மனபன்ன ரிது விக்கி தங்கச்சி தோழியா.. ஜோதி மாதிரி தான் ரிதுவோ...
 

ரித்தி

Active member
Member
அவன் மறைக்கல sis.. அவன் பேசுறதுகுள்ள ஆனந்த் சார் அதிர்ச்சி மோடுக்கு போயிட்டார் 🙈🙈
விக்கிரமுக்கும ரிதுவுக்கும் என்ன தொடர்பு.
விக்ரம் ஏன் நணபனிடம் அவளைப் பற்றி
சொல்லாது மறைக்கனும்
 

பிரிய நிலா

Well-known member
Member
அவன் மறைக்கல sis.. அவன் பேசுறதுகுள்ள ஆனந்த் சார் அதிர்ச்சி மோடுக்கு போயிட்டார் 🙈🙈
ஹாஸ்பிட்டல்ல விக்ரம் சொல்ல வரதுக்குள்ள ஆனந்த் அதிர்ச்சி ஆகி அவனே ஏதோ புருஞ்சுக்கிட்டான்..
ஆனா சூசைட் பண்றதுக்கு முன்னாடியே ஏன் ரிது பத்தியும் அவளை எப்படி தெரியும்னு விக்ரம் ஆனந்த் கிட்ட சொல்லல.

ரிதுக்கும் விக்ரம் ப்ரண்ட் ஆனந்த்னு தெரியாதா. .?

ஏன் இன்னும் விக்ரமை பார்க்க ரிது வரவே இல்ல...

கன்ப்யூசன் ஆப் தி கான்ஸ்டியூசன் சிஸ்...

சீக்கிரமா ப்ளாஸ்பேக் சொல்லுங்க. அப்போ தான் க்ளியர் ஆகும். இல்ல விக்ரம் வாயை திறந்து உண்மை சொல்லனும்...
 

ரித்தி

Active member
Member
வாட் அ confusion😂😂😂.. தெளிவா தெரிய இன்னும் சில எபிக்களை கடக்கணும் sis.. சீக்கிரம் சொல்லிடுறேன் 💗😍😍
ஹாஸ்பிட்டல்ல விக்ரம் சொல்ல வரதுக்குள்ள ஆனந்த் அதிர்ச்சி ஆகி அவனே ஏதோ புருஞ்சுக்கிட்டான்..
ஆனா சூசைட் பண்றதுக்கு முன்னாடியே ஏன் ரிது பத்தியும் அவளை எப்படி தெரியும்னு விக்ரம் ஆனந்த் கிட்ட சொல்லல.

ரிதுக்கும் விக்ரம் ப்ரண்ட் ஆனந்த்னு தெரியாதா. .?

ஏன் இன்னும் விக்ரமை பார்க்க ரிது வரவே இல்ல...

கன்ப்யூசன் ஆப் தி கான்ஸ்டியூசன் சிஸ்...

சீக்கிரமா ப்ளாஸ்பேக் சொல்லுங்க. அப்போ தான் க்ளியர் ஆகும். இல்ல விக்ரம் வாயை திறந்து உண்மை சொல்லனும்...
 

பிரிய நிலா

Well-known member
Member
இந்த லூசு விக்ரம் காதலிச்சது ரிதுவை இல்ல.. அதும் ஒன்சைடா கூட அவன் காதலிக்கல.. ஆனந்த் இவனுக்கு நண்மனபன்ன ரிது விக்கி தங்கச்சி தோழியா.. ஜோதி மாதிரி தான் ரிதுவோ...
ஏன் சிஸ் இந்த கொலவெறி..
அப்படி பார்த்தாலும் தங்கச்சி ப்ரண்ட்ட இருந்தாலும்..
தங்கச்சி ப்ரண்டை அண்ணன் சைட் அடிக்கறது இல்லையா.. காதலிக்கறது இல்லையா.. கல்யாணம் தான் பண்றது இல்லையா.. எப்படி நம்ம லாஜிக்..
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom