• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 6

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 6


ஆபீஸ் சென்ற ஆனந்த் முதலில் தேடியது ரிதுவை தான்.


வரும் வழி எங்கும் அவன் மனம் முழுதும் அத்தனை கேள்விகள். அதன் முடிவில் அத்தனை கோபங்கள்.


அன்னையின் அழுகை அவனை சற்றே நிதானித்து செயல்பட வைத்திருந்தது.


விக்ரம் பிரச்சனையை விட ஆபீஸ் பிரச்சனையை முதலில் சரி செய்ய நினைத்தான்.


தான் இல்லாத போது இன்னொரு பெண் வந்தால் தூக்கி கொடுத்து விடுவாளா?


நிச்சயம் இது விஜயனின் வேலை தான் என்பதில் ஆனந்த்துக்கு எந்த சந்தேகமும் இல்லை.


ஆனால் அதில் ரிதுவின் பங்கும் இருப்பதாக தான் இப்போது அவனுக்கு தோன்றியது.


முதலில் அவளை விசாரித்தால் எல்லா உண்மையும் வெளிவரும் என்று நினைத்தான்.


ஆனால் அவன் ஆபீஸ் சென்றடைந்த போது ரிது அவள் தந்தை முன் அழும் நிலையில் நிற்க, ராஜ்குமார் ரகுவுடன் பேசிக் கொண்டிருநதார்.


அவளை பார்த்தவுடன் உருக ஆரம்பித்த மனம் அவன் கண்முன் விக்ரம் ஞாபகம் வர முகம் இறுக ஆரம்பித்தது.

ரிது பெரும் பரிதவிப்பில் நின்றிருந்தாள்.

ஆனந்திடமாவது நடந்ததை கூறலாம். இதுவரை பழகி இராத ரகு சாரிடம் எப்படி, என்னவென்று சொல்வதென அவளுக்கு புரியவில்லை.


கைகளை பிசைந்து பயத்தில் நின்று கொண்டிருக்க அப்போது அங்கே வந்தான் ஆனந்த்.


ரகுவும் சுகன்யா கூறியதையே திரும்ப அவனிடம் கூறவும் ரிதுவை விரல்நீட்டி "கம் டு மை ரூம்" என்று விட்டு சென்றான்.


ராஜ்குமாரின் மேல் நல்ல அபிப்பிராயம் இருப்பதால் அவர் முன் பேச அவனுக்கு விருப்பம் இல்லை.


ரிது உள்ளே நுழைந்தது தான் தாமதம் "சோ எவ்வளோ டீல் பேசுனீங்க?" என்றான்.


புரியாமல் விழித்தவளிடம், "புரியலையா ஆல்ரைட்! அந்த ப்ராஜெக்ட்காக விஜயன் எவ்வளவு காசு குடுத்தான்னு கேட்டேன்" என்று தெளிவாகவே கூறினான்.


பேரதிர்ச்சி தான் ரிதுவிற்கு. நிச்சயமாக இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்க்கவே இல்லை.


"சார் என்ன சொல்றிங்க? எனக்கு எல்லாம் இப்ப தான் அப்பா சொல்லி தெரியும். நேத்து அந்த பொண்ணு...." என்றவளை குறுக்கிட்டவன்.


"பேசாத! உன்ன பத்தி எல்லாம் தெரியும். இப்போ புடிச்சிருக்க அந்த பணக்காரன் விஜயன் தானே. அப்புறம் ஏன் இங்க வந்த? என் உயிர வாங்கவா?" என்று ஆத்திரத்துடன் கூற, அவளுக்கு எதுவும் புரியவில்லை.


ஆனால் தன்னை தவறாக புரிந்து பேசுவது மட்டும் நன்றாக தெரிந்தது.


நேற்று வரை அவன் இவளிடம் நடந்து கொண்ட விதம் என்ன? இன்று பேசுவதென்ன? என்று குழம்பிப்போனாள்.


அவனோ அவளை விடுவதில்லை என்ற முடிவோடு இருந்திருப்பான் போல.


"வெறும் பணத்துக்காக இவ்வளவு கேவலமான வேலை எல்லாம் பார்க்குறீங்க இல்ல!" என்றதும், ரிதுவிற்கும் கோபம் பொங்கியது.


அவளுக்கு முழுதாய் புரியாவிட்டாலும் பணத்துக்காக நடிப்பதாக கூறுகிறான் என்று நினைத்தவள்,


"போதும் சார் உங்க உளறல். நான் தப்பு பண்ணது உண்மை தான் ஒத்துக்றேன். யார் என்னனு கேட்காம உங்க சீட்ல உரிமையா இருந்ததும், உங்க மனைவினு சொன்னதும் ஏதும் கேள்வி கேட்கல" என்று படபடத்தவளை,


"மனைவியா? குட்! வெரி குட்! ஆபீஸ்குள்ள வந்து யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவிங்க? ஒரு பாஸ்ஸா என்னை பத்தி எதுவும் தெரியாதா யூ ஃபூல்?" என்றான் கோபமாக.


"என் இடத்தில் இருந்து யோசிச்சு பாருங்க சார் உண்மை புரியும். எல்லாம் தெரிஞ்சி பக்கவா பிளான் பண்ணி வந்தவகிட்ட பொய் இருக்கும்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? அப்புறம் என்ன சொன்னிங்க? பணக்காரனா புடிச்சிட்டேனா? நீங்க சொல்ற அந்த விஜயன் யாருனு கூட தெரியாது! எப்படி சார் முன்ன பின்ன தெரியாத பொண்ண தப்பா பேசுறீங்க?"


"நான் பண்ணின தப்புக்கு என்ன தண்டனை வேணாலும் குடுங்க. பட் பணத்துக்காக நடிக்கிற கீழ்தரமான ஆள் நான் இல்ல. அப்படி நினச்சீங்கனா இப்பவே ரிசைன் பண்ணிக்கறேன்!" என்று கோபத்துடன் பேசி முடித்தாள்.


அவளது பேச்சில் உண்மை இருப்பது தெளிவாக தெரிந்தது. பல பிசினஸ்மேன்களையும் பலதரப்பட்ட மனிதர்களையும் பார்த்து பழக்கப்பட்டவனுக்கு அவள் கண்களில் உண்மை தெரிவது போல தான் இருந்தது.


விக்ரம் சொன்ன பணக்காரன் விஜயன் தான் எனவும் அவனுக்கு உளவு பார்க்கவே ரிது இங்கு வந்ததாகவும் ஆனந்த் அவனே முடிவு செய்தான்.


ஆனால் ராஜ்குமார் சொல்லியே அவள் இங்கு இன்டெர்வியூ அட்டன் செய்தாள் என்பதையும், தான் முடிவு சொன்னதும்தான் அவள் இங்கு வேலைக்கு வந்தாள் என்பதையும் அழகாய் மறந்தான்(மறைத்தான்).


எப்போது பேசுவாள்? எப்போது பார்க்கலாம்? என்று தேடி தேடி காரணம் கண்டுபிடித்து எதிர்பார்த்து இருந்தேனே! ஆனால் நீ இன்னொருவனுக்கு உளவு பார்க்க வந்தாயே! என்ற கோபத்தில் தான் அவன் கேட்ட கேள்விகள்.

அவள் பேச பேச கோபம் இருந்தாலும் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது.


ஆனாலும் அந்த நேரத்தில் அதை காட்ட விருப்பம் இல்லை.


"அது சரிதான்! நீங்க சொன்ன அனைத்தும் பொய்யாகும் பட்சத்தில் கண்டிப்பா நீங்க சொன்னா மாதிரி ரிசைன் செய்ய நேரிடும். சோ பீ அலெர்ட் ஃபார் எவேர்ய்திங். இப்ப நீங்க போகலாம்" என்றான்.


அவள் சென்ற பின் முதலில் தந்தையிடம் பேசினான். இனி விஜயனை சும்மா விடக்கூடாது என்றும் முடிவு செய்தான்.

ரகு அனைத்தையும் தெரிந்து கொண்டு வீட்டுக்கு வர மாலை ஆனது. வந்ததும் சுகன்யா வீட்டில் நடந்த அனைத்தையும் கூறினார். இருவருக்கும் எந்த மறைவும் இருக்க கூடாது என்பது அவரின் விருப்பம்.


இதுகூட ரகு எதிர்பாராத ஒன்று தான். தான் ஒன்று நினைத்திருக்க இங்கு வேறொன்று நடக்கிறதே என யோசித்தவரை ஆனந்த்திடம் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்றுவிட்டார் சுகன்யா.


ரகுவும் எதுவும் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்த ஆனந்திடம் "விஜயனை நான் பார்த்துக்கறேன். நீ விக்ரம்க்கு ஹெல்ப்பா ஹாஸ்பிடல் போய்ட்டு வா. ஜோதி மட்டுமே ஹாஸ்பிடல்ல இருக்கா"என்றதும் சுகன்யாவை ஒருமுறை பார்த்துவிட்டு சரி என்று ஹாஸ்பிடல் கிளம்பினான்.

விக்ரம் அப்போது தான் எழுந்து அமர்ந்திருந்தான். அவனால் நடக்கவும் முடிந்தது. இறுதியாக நாளை ஒரு ஸ்கேன் மட்டும் பார்த்து விட்டு கிளம்பலாம் என டாக்டர் சொன்னதால் ஹாஸ்பிடலில் இருந்தான்.


ஆனந்தை பார்த்தவுடன் விக்ரமிற்கு பேச்சு வரவில்லை. ஆனந்த் அவனே பேச ஆரம்பித்தான்.


"இப்போ எப்படி இருக்கு டா? டாக்டர் என்ன சொன்னாங்க? சாரி டா ஆபீஸ்ல ஒரு பிரச்சனை அதான் இங்க வர முடியல. ஜோதி மட்டும் இருந்ததா அப்பா சொன்னாங்க. ரொம்ப கஷ்டமா இருந்துச்சா? இன்னிக்கு நைட் நான் பார்த்துக்கறேன்" என்று விடாமல் பேச ஆவென்று வாயை பிளந்து ஆனந்தை பார்த்தான் விக்ரம்.


"உனக்கு என் மேல் கோபம் இல்லையா மச்சி" விக்ரம்.


"ஹ்ம்ம் இருந்துச்சு! பட் நீ அந்த பொண்ண எவ்ளோ லவ் பண்ணியிருந்தா இப்படி முடிவு எடுத்திருப்பனு நினச்சேன்! அதான் பொழச்சு போனு விட்டுட்டேன்" என்றான் ஆனந்த்.


விக்ரம் முகம் நொடியில் வாடிவிட அதை கண்ட ஆனந்த், "டேய் அந்த பொண்ணு உண்மையாவே பணத்துக்காக தான் உன்ன விட்டு போனாளா?" இப்போது ஆனந்திற்கு இருக்கும் மிக பெரிய கேள்வி இதுவே.


ஏனோ அவளிடம் பேசியதில் இருந்து அவளை தவறாக நினைக்க முடியவில்லை. என்ன சொல்ல போகிறான் என அவனையே பார்த்திருந்தான் ஆனந்த் .

விக்ரம் இப்போது இருந்த மனநிலையில் காலையில் ரிதுவை பற்றி ஆனந்த் விசாரித்ததை மறந்திருந்தான்.


அவளை மனதில் வைத்து தான் ஆனந்த் கேள்வி கேட்கிறான் என்பதையும் மறந்திருந்தான்.


விக்ரம் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறான். எத்தனையோ முறை ஆனந்த் அவன் ஆபீஸிற்கு அழைத்தும் நட்பு வேறு, வேலை வேறு என்று மறுத்து சுயமாக முன்னேற பல வழிகளை மேற்கொள்கிறான்.


3 வருடமாக அவளை பின் தொடர்ந்ததாகவும் பின் அவளும் அவன் காதலை ஏற்றுக் கொண்டதாகவும் கூறியவன், கடந்த 6 மாதமாக அவள் சரியாக பேசவில்லை என்றும், அடுத்து வந்த ஒரு நாள் வீட்டில் கல்யாணம் பற்றி பேசுவதாகவும் கூறினான்.


"அதையெல்லாம் கூட ஏத்துக்குவேன்டா. வீட்ல பார்த்த மாப்பிள்ளை பணக்காரனாம்! ஃபியூச்சர்ல அவன் பாத்துகிற மாதிரி என்னால பார்த்துக்க முடியாதுனு சொல்லிட்டு போய்ட்டா டா" என்று கண் கலங்கினான்.

ஆனந்திற்கு குழப்பமாக இருந்தது. 'அவளுக்கு கல்யாணமா? ராஜ்குமார் சார் இதுவரை அதை பற்றி ஏதும் சொல்லவில்லையே. அப்படியே இருந்தாலும் கல்யாணம் செய்ய போவதாக இருந்தால் ஏன் வேலைக்கு இப்போது வந்து சேர வேண்டும்? ஒருவேளை இவனை விட்டு செல்வதற்காக அப்படி கூறியிருப்பாளோ?'


ஐய்யோ! தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு. முதலில் விக்ரமை சமாதானப்படுத்தியவன், இறுதியாக அவனே ஒரு முடிவுக்கு வந்தான்.

'அவள் சொன்னது போல் அவள் விஜயன் அனுப்பி வரவில்லைதான். ஆனால் திருமணத்திற்கு பின் வளமான பணக்கார வீட்டில் செல்வ செழிப்போடு வாழ வேண்டும். அது விக்ரமை திருமணம் செய்தால் நடக்காது! அதனால் அவனை ஏமாற்றி விட்டாள்'. என்று மீண்டும் தவறாக எண்ணினான்.

ஜோதி "எப்போ வந்திங்க அண்ணா, விக்ரம் அண்ணாக்கு சாப்பாடு வாங்க போயிருந்தேன்"என்றாள்.


"இப்ப தான் வந்தேன்டா. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் வா.நான் இன்னைக்கு இங்கு தங்கிக்குறேன்" என்றான்.


"பரவாயில்லை அண்ணா! நான் பார்த்துகிறேன்" என்றவளிடம்


"அப்போ நான் உனக்கு அண்ணன் இல்லையா மா?" என்றான்.


"ஐயோ! அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணா. நீங்க இல்லைனா இந்த தடிமாடு எப்பவோ உருப்படாம போயிருப்பான்" என்று விக்ரம் மேல் உள்ள கோபத்தை காட்டினாள்.


இருவரும் சிரிப்பதை பார்த்தவள், "நீங்களாவது அவனை திட்டி தீர்ப்பிங்கனு பார்த்தேன் நீங்களும் அவனோடு சேர்ந்துட்டிங்களா" என்று முறைத்தவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.

"டேய்! அண்ணா அண்ணானு உன்னையே சுத்தி வர்றவ டா ஜோ. உன்னை விட அவளுக்கு எதுவும் முக்கியம் இல்லனு உனக்கே தெரியும். இவளுக்காகவாவது நீ மீண்டு வா டா. காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. உன்ன நம்பி இருக்கிறவங்களையும் விட்டுவிடாதே" என்று கூறிய ஆனந்த் இறுதி வார்த்தைகள் தனக்கும் பொருந்தும் என நினைத்து கொண்டான்.


ஜோதி உள்ளே வரும்போதே அவள் கையில் விக்ரம் பர்ஸ் இருப்பதை கண்டான் ஆனந்த்..


சாப்பாடு வாங்கும் செலவுக்கு அதை கொண்டு சென்றிருப்பாள் என அவன் நினைக்க, அவள் வீட்டிற்கு செல்லும் போதும் அதை கொண்டு சென்றாள்.


அதை யோசனையோடு பார்த்தான் ஆனந்த். அப்பவாவது அதை பற்றி விக்ரமிடம் கேட்டிருக்கலாம். விதி வலியது அல்லவா நடப்பது நடந்தே தீரும் தானே!.


காதல் தொடரும்..
 

Rajam

Well-known member
Member
ஆனந்த ் விக்ரமிடம் வெளிப்படையாக கேட்கலாமே.
தானாகவே தவறாக நினைத்து ரிதுவ சந்தேகப்படறானே.
 

ரித்தி

Active member
Member
ஆனந்த ் விக்ரமிடம் வெளிப்படையாக கேட்கலாமே.
தானாகவே தவறாக நினைத்து ரிதுவ சந்தேகப்படறானே.
சந்தேகம் கொண்ட மனம் ஆட்டி படைக்குது..
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆனந்த் மனசில இருக்க தவறான அனுமானம் உண்மையை தெளிவுபடுத்தாமல் தடுக்குது..
உண்மை தெரியும் போது ரிது அவனது கைதொடும் தூரத்தில் இருந்து விலகி விடுவாளோ.. பார்க்கலாம்..
 

ரித்தி

Active member
Member
ஆனந்த் மனசில இருக்க தவறான அனுமானம் உண்மையை தெளிவுபடுத்தாமல் தடுக்குது..
உண்மை தெரியும் போது ரிது அவனது கைதொடும் தூரத்தில் இருந்து விலகி விடுவாளோ.. பார்க்கலாம்..
அதைவிட இணைந்து விலகும் நிலை வந்தால்??
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom