• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 11

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 11


ஹாஸ்பிடல் உள்ளே செல்ல செல்ல ரிதுவின் கால்கள் பின்னியது. அவள் நிலை புரிந்து ஆனந்த் அவள் கைகளை இருக பற்றியிருந்தான்.


ராஜ்குமார் அறைக்குள் நுழைந்ததும் "அப்பா" என்று கத்த போக அவளை தடுத்தவன் அவள் கூடவே இருந்து அவளை தைரியப்படுத்தி அவருக்கு நம்பிக்கை கொடுக்குமாறு பேச சொல்லி கண் அசைத்தான்.


இருவரும் கைகோர்த்து உள்ளே நுழைந்ததையும் கண்களால் பேசியதையும் அங்கிருந்து பார்த்து கொண்டிருந்தார் ரகு.


அப்பாவிற்கும் மகளிற்கும் தனிமை கொடுத்து வெளியே வந்தான் ஆனந்த்.


"அப்பா" என்றதும் இமை திறந்தவர் மகளை கண்டதும் தன்னை அறியாமல் நீர் வடிந்தது கண்களில்.


"அழாதீங்க பா உங்களுக்கு ஒன்னும் ஆகாது. இப்போது தான் டாக்டர் சொன்னாங்க. நீங்க நூறு வருஷம் நல்லாருப்பிங்க" என்றாள் தன் கண்ணீரை மறைத்து.


"ரிது, அப்பாக்கு உன்னை தவிர வேறெந்த கவலையும் இல்லை டா. நான் இல்லையென்றால் கூட நீ வாழ பழகிக்கனும்..." இன்னும் ஏதோ கூற போக அவர் வாயை மூடியிருந்தாள்.


"உங்களுக்கு எதுவும் ஆகாது அப்பா".


ஆனந்த் கூறியது நினைவு வர பொறுமையாய் கண்ணீரை உள்ளிழுத்து ஆபரேஷன் செய்துகொள்ளலாம் என்று ரிது கூற, இப்போது வேண்டாம் என்று முடித்தார் ராஜ்குமார்.


ஆனந்த் ரகுவிடம், "நீங்க வீட்டுக்கு போங்கப்பா நான் பார்த்துக்குறேன்" என்றான்.


"கஷ்டமா இருக்கு டா. அவன் எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா?. நான் இருக்கிறது அவனோட இடம் டா. எல்லாத்தையும் இழந்து பொண்ணு மட்டுமே போதும்னு இருக்கான். கடவுள் அவனை ஏன் இவ்வளவு சோதிக்கிறானோ" என்று புலம்பினார்.


"அப்பா என்ன சொன்னிங்க?" ஆனந்த்.


"ஆமா ஆனந்த்! அவன் இல்லனா நான் இந்த இடத்துல இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எனக்காக எல்லாத்தையும் தந்திட்டு பொண்ண வளர்க்க பாடுபட்டவன்டா அவன்!" என்றார் கரகரக்கும் குரலில் .


"உனக்கு எல்லாம் தெளிவா சொல்றேன் ஆனந்த். அதற்கு முன் நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். இல்லை செய்தே ஆகணும்" என்றார் ரகு.


என்ன சொல்ல வருகிறார் என அவன் அப்பாவை பார்க்க, அவரோ மின்னாமல் முழங்காமல் அவனுள் இடியை உருவாக்கினார்.


"நீ ராஜ்குமார் பொண்ண கல்யாணம் செய்துக்கனும்" என்று.


தான் காதலித்த பெண்ணை தான் சொல்லாமலே திருமணம் செய்துகொள் என தந்தை சொல்கிறார். ஆனால் என் விதி???.


என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த கேள்விகளுக்கும் விடையே இல்லை. கேட்க வேண்டிய நேரத்தில் கேட்கமுடியவில்லை.


'நான் என்ன பாவம் செய்தேன் கடவுளே!' என உள்ளுக்குள் மருகி போனான் ஆனந்த்.


ஆனந்த் இன்னோரு பெண்ணை விரும்புவதால் தான் தன் நண்பன் மகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறான் என்று நினைத்த ரகு,


"ஆனந்த் எனக்கு வேற வழி தெரியல டா. அவனுக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கேன். என்கிட்ட இதுவரை உதவினு அவன் எதுமே கேட்டதில்லை"


"இப்ப கூட அவன் கேட்கமாட்டான். ஆனால் அந்த பொண்ண நீ ஏத்துகிட்டனா அவன் புது மனுஷனா திரும்பி வருவான். இல்லைனா கூட பொண்ண கரை சேர்த்திட்டோம் என்ற சந்தோசத்திலாவது போய் சேர்வான் பா" என்று கலங்கிய கண்களுடன் கூறினார் ரகு.


ஆனந்திற்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாத நிலை. தான் காதலித்த பெண் என்று திருமணம் செய்து கொள்ளவும் முடியவில்லை,
தன் நண்பனை ஏமாற்றியவள் என்ற எண்ணத்தை மறக்கவும் முடியவில்லை. காதல் மனம் அவனை சுனாமியாய புரட்டிக் கொண்டிருந்தது.


தொடர்ந்து ரகுவே பேசினார், "ஆனந்த் நீ ஒரு பொண்ண லவ் பண்றனு எனக்கும் தெரியும். உங்கள் அம்மா எனக்கும் எல்லாத்தையும் சொல்லிட்டா. ஆனால் அதுல நீ காயப்பட்ருக்கன்னும் தெரியும் "என்றார். ஏற்கனவே ஆனந்த் எதிர்பார்த்தது தான்.


"உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கனு எனக்கு தெரியல பா. நானும் ராஜ்குமாரும் ஒரே ஊர்ல ஒண்ணாவே படிச்சு ஒன்னாவே தான் சுத்துனோம். ஒருநாள் ராஜ்குமார் வேலைக்கு பட்டினம் போறேன்னு கிளம்பி போய்ட்டான்"


"என்னோட தாத்தா தான் ஊர்லயே பெரிய ஆளு. அவரு சேர்த்து வச்ச சொத்த எல்லாம் என்னோட அப்பா அதான் உன்னோட தாத்தா மொத்தமா பிசினஸ்ல போடுறேன்னு கடைசில எங்கள தெருவுல விட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு. இருந்த ஒரே ஒரு நிலத்த வித்து நான் ஒரு பிசினஸ் தொடங்கினேன். அப்பவும் என்னோட பிசினஸ்ல என்னால கால்ஊன்றி நிற்க முடியல. இந்த நிலமைல தான் உன் அம்மாவை எனக்கு கட்டிவச்சாங்க"


"நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சேன். ஆனாலும் என்னோட பிசினஸ் வளர இன்னும் பணம் தேவைப்பட்டுச்சு. உன் அம்மாவும் படிச்சிருக்கதால அவளும் வேலைக்கு போறேன்னு சொன்னா. அதை என்னால மறுக்க முடியல, என்னோட சூழ்நிலை அவ்ளோ மோசமா இருந்துச்சி"


"திரும்ப ஒருநாள் ராஜ்குமார் வந்தான். அவன் கிராமத்துல இருந்த வீட்டை விற்க போறதா சொன்னவன் நான் கஷ்டப்படுறத பார்த்து அவனோட சொந்த உழைப்புல வாங்கின வீட்ட வித்து எனக்கு பணம் கொடுத்தான். அப்புறம் அவனும் கல்யாணம் ஆகி பட்டினத்துலேயே இருந்துட்டான்"


"கொஞ்ச நாள்லேயே நம்ம பிசினஸ்ல நல்ல வளர்ச்சி இருந்தது. நானும் இங்க வந்து ராப்பகலா உழைச்சு ஏற்கனவே இருந்த பிஸ்னஸ் இங்க வந்து ரெண்டு மடங்காக உயர்த்தினேன். அப்போ தான் என்கிட்ட வேலைக்கேட்டு என் கம்பெனினு தெரியாமலே வந்தான் ராஜ்குமார். அப்போ கூட அவன் தந்த பணத்தை பல மடங்கு அதிகமா குடுத்தும் அவன் அதை வாங்கிக்கல"


"அவன் மனைவியும், பொண்ணு பிறந்த கொஞ்ச நாள்ல இறந்து போய்ட்டாங்க. எனக்கு வேலை மட்டும் குடு போதும்னு சொல்லிட்டான். அப்போ இருந்து என்னோட கூடவே இருக்கணும், அவன் எதுக்காகவும் கஷ்டப்பட கூடாதுனு தான் பக்கத்துலேயே வச்சிக்கிட்டேன்"


"இப்போ வரைக்கும் ரிதுவ உனக்கு செகிரேட்டரியா வச்சது அவனுக்காக தான். ஏற்கனவே நான் அந்த பொண்ண உனக்கு கட்டி வைக்கணும்னு தான் அவன்கிட்ட பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீ....." என்று சொல்ல வந்தவர் அதை சொல்லாமல் விட்டு தனக்குள் வைத்திருந்த மன பாரங்களை கொட்டினார்.


"நண்பன்னு எல்லாரும் சொல்வாங்க தான் ஆனால் என் நண்பன் மாதிரி ஒருத்தன் கிடைக்க புண்ணியம் செய்திருக்கனும் டா. நான் நல்ல நிலைமைக்கு வந்த அப்புறம் எவ்வளவோ முறை பணத்தை திருப்பி கொடுத்தும் வாங்க மறுத்து நம்ம கம்பெனிலேயே என்கூடவே இருக்கேனு சொல்லி எனக்காகவே என்கூட இருந்தவன்" என்று கண்ணீருடன் கூறினார் ரகு.


உள்ளுக்குள் சொல்ல முடியாத பாரம் மனதை அழுத்தியது ஆனந்திற்கு. இப்போது அவனால் ரிதுவை பற்றி மட்டும் யோசிக்க முடியவில்லை.


தனக்கு தந்தை முக்கியம். அவரின் வார்த்தைகள் முக்கியம். அது இனி எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற முடிவுக்கு அவனை வர வைத்திருந்தது.


"நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் அப்பா" என்றும் சொல்ல வைத்திருந்தது. (ஆனால் ரிதுவின் மேல் உள்ள காதலும் தான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்க காரணம் என்பதை அவன் அப்போது உணரவில்லை).


ரகுவிற்கு ஆனந்தின் பதிலில் மகிழ்ச்சி இருந்தாலும் அவனை கட்டாயப்படுத்துவதாகவும் இருக்க அவர் விரும்பவில்லை.


"உனக்கு நான் எப்பவும் நல்லது தான் நினைப்பேன் ஆனந்த். கண்டிப்பா ராஜ்குமார் பொண்ணு உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஏத்த மாதிரி தான் இருப்பா. எனக்கு ராஜ்குமார் வளர்ப்புல நம்பிக்கை இருக்கு பா. உனக்கு சம்மதம் தானே" என்றார்.


அப்பாவின் கூற்றை ஏற்க இயலவில்லை. ஆனாலும் அவரின் கூற்றை பொய்யாக்கவும் மனமில்லாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தான்.


உடனே சுகன்யாவிற்கு போன் செய்து ஹாஸ்பிடல் வரும்படி பணித்தார் ரகு.
அவரின் எண்ணம் 'இன்று திருமணம் நடந்தால் நாளையே ராஜ்குமார்க்கு ஆபரேஷன் செய்ய சம்மதம் வாங்கிவிடலாம். இது நடந்தால் ராஜ்குமார் தைரியமாக இந்த ஆபரேஷனை எதிர்கொள்வான்' என்ற நம்பிக்கையே.


அப்போது ஆனந்த் மொபைல் அலற அதனை பார்த்தவன் அழைப்பது விக்ரம் என்று தெரிந்ததும் அப்போது இருந்த மனநிலையில் அவனிடம் பேச முடியாமல் அதை தவிர்த்தான்.


விக்ரம் தன் அன்னையிடம் லாவண்யாவை திருமணம் செய்ய சம்மதம் சொன்னவன் அடுத்ததாக ஆனந்த்தை தான் அழைத்தான். அவன் அழைப்பை ஏற்காததும் மாலை நேரில் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று அமைதியடைந்தான்.


அடுத்ததாக யூஎஸ்ஸில் இருக்கும் நண்பன் சுரேஷை அழைத்து விவரம் கூறி திருமணத்திற்கு வரவேற்றான்.


சுகன்யா ஹாஸ்பிடல் அடைந்ததும் முதலில் கணவனை ஆராய்ந்து அவருக்கு ஏதுமில்லை என்று தெரிந்த பின்னே தான் மூச்சே வந்தது.


ஆனந்த் அப்போது அங்கே வர பயத்தில் அவனருகில் சென்றவள் அவனிடம் விபரம் கேட்க, அவன் நடந்ததை கூறினான். தன் தந்தை தன்னிடம் திருமணம் குறித்து பேசியதை தவிர.


அவர் ஆரம்பித்ததை அவரே பார்த்து கொள்ளட்டும் என அவன் விட்டுவிட்டான்.


தனது கணவன், மகனுக்கு எதுவுமில்லை என்று நிம்மதி அடைந்தவர் ராஜ்குமார்க்காக வருந்தினார்.


ராஜ்குமார் கணவரின் நண்பர் என்றும், ஒரே மகளை தவிர அவருக்கு யாரும் இல்லாததாலும் தான் கணவர் தன்னையும் இங்கே வர வைத்திருக்கிறார் என்று நினைத்து கொண்டார்.


ரிதுவை பார்த்ததும் இவ்வளவு அழகான பெண்ணுக்கு இப்படி ஒரு கஷ்டமா என்றும் நொந்து போனார்.


சுகன்யாவை தனியே அழைத்த ரகுவிடம் "என்னங்க வந்ததில் இருந்து பார்க்கிறேன் ஏதோ போல இருக்கிங்க?. டாக்டர் என்னை சொன்னாங்க? அண்ணாக்கு ஒன்னும் ஆகாது கவலைப்படாதீங்க !". என்று அவர் கவலை இதுவாக தான் இருக்கும் என்று முடிவு செய்து ஆறுதல் கூறினார் மனைவியாக.


முதலில் தயங்கிய ரகு, பின் நல்லது நடக்க நினைக்க தயக்கம் எதற்கு என்று அனைத்தையும் கூறினார்.


தங்களின் நட்பு முதல் இந்த நிமிடம் வரை நடந்த அனைத்தையும் கூறியவர் அவளின் பதிலை கொண்டு ஆனந்த் திருமணம் பற்றி பேசலாம் என அவர் கூறுவதை கேட்க தயாராகினார்.


சுகன்யாவிற்கும் அதிர்ச்சி தான். ராஜ்குமாருடன் நட்பு அவர் அறிந்ததே. ஆனால் அது சிறுவயது முதல் என்று தெரியாதே.


தான் அவரிடம் எதுவும் மறைத்ததில்லை என்றாலும் அவருக்கு கோபம் வரவில்லை. தன் கணவர் ஒன்று செய்தால் அது சரியாக தான் இருக்கும் என்று நம்பினார்.


அவர் கேட்டது "இப்போது எப்படி அண்ணாவை ஆபரேஷனிற்கு ஒத்துகொள்ள செய்வது?" என்று தான்.


ரகுவிற்கு மனைவியை நினைத்து பெருமையாக இருந்தது. பின் எத்தனை பேருக்கு இப்படி புரிந்து கொள்ளும் உறவு கிடைக்கும்?.


சுகன்யா பதிலுக்காக காத்திருக்க, முதலில் ராஜ்குமார் முன் பேசலாம் என்று நினைத்தவர் மனைவியின் எண்ணம்? அதற்கு மரியாதை கொடுத்தவர் சுகன்யாவிடம் ஆனந்த் ரிது திருமணம் குறித்து பேசினார்.


சுகன்யா என்ன பேசுவதென்று குழம்பியவர் டாக்டருடன் பேசிக் கொண்டு வந்த ஆனந்தை பார்த்துக் கொண்டிருந்தார்.


பேசிவிட்டு நேரே அன்னையிடம் வந்தவனிடம், "அப்பா சொல்ற மாதிரி உனக்கு அந்த பொண்ண கல்யாணம் செய்துக்க முழு சம்மதமா ஆனந்த்?" என்றார்.


எந்த அன்னையும் எந்தவொரு சூழ்நிலையிலும் தன் மகனை விட்டுக்கொடுக்க மாட்டார். சுகன்யாவும் விதிவிலக்கு அல்லவே.


அவருக்கு தெரியுமே அந்த பெண்ணை மறக்க முடியாமல் அன்று அவன் அழுத அழுகை, அவனின் செயல், கைகளை அறுத்து கொண்டது எல்லாம். அதனால் வற்புறுத்தி வரும் திருமணம் அவனுக்கு வேண்டாம் என்ற எண்ணம் அவருடையது.


ஆனந்த் தெளிவாகவே, "அப்பா முடிவெடுத்தா சரியா தான் இருக்கும் மா. அப்புறம் உங்களுக்கு ஒகேனா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று விட்டேற்றியாக கூறினான்.


தொலைவில் அன்று பார்த்த கணமாய்
அருகில் இன்று நேரும் ரணமாய்
கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய்


வாய்விட்டு அதைக் கூறாயோ
சொல்லாமல் என்னைவிட்டு நீயும் போனால்
என்னாவேன் என்று பாராயோ…….


சில மேகங்கள் பொழியாமலே
கடந்தேவிடும் உன் வானிலே
எந்தன் நெஞ்சமும் ஒரு மேகமே
அதை சிந்தும் முன்னே வானும் தீர்ந்ததே..



ஆனந்த், ரிதுவை சந்திக்கும் முன் வரை திருமணம் பற்றி யோசித்ததில்லை.


இப்போது தன்னுடைய தனி விருப்பமும் தவறானது என்று அறிந்த பின் இனி பெற்றோரின் எந்த முடிவுக்கும் தடை சொல்லும் தகுதி தனக்கு இல்லை என்றே எண்ணினான்.


பெற்றோரின் விருப்பம் ரிதுவாகவே இருந்தாலும் அதற்கு ஆட்சேபனை சொல்ல தன்னால் இயலாது என்று எண்ணிக் கொண்டான்.
.
காதல் தொடரும்...
 

Rajam

Well-known member
Member
யார் என்ன நினைத்திருந்தாலும்
கல்யாணம் நடக்கப் பேகுது.பின்னர் உண்மை அறிந்து மகிழப் போகிறான்.
ஆழ்மனதின் ஆசை நிறைவேறுவது
ஆண்டவன் தீரப்பு.
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆனந்த் ஒண்ணு புருஞ்சுக்கல... இவன் நினைக்கறது எல்லாம் ரிதுக்கு தெரியும் போது பெரிய புயலே வரப்போகுது...

விக்ரம் காலை அட்டண்ட் பண்ணி இருக்கலாம். அப்போவாச்சும் விக்ரம் கல்யாணம் பத்தி கேள்விப்பட்டு ரிதுவை பத்தி ஆனந்த் சொல்லி இருப்பானோ என்னவோ..

அப்படி சொல்லி இருந்தால் ரிது தனக்கு யாரென்று விக்ரம் ஆனந்திடம் சொல்லியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்...

விதி வலியதா இல்லை எங்கள் ஆத்தர் ஜியின் சதியா தெரியவில்லை. ..

பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும்னு.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

ரித்தி

Active member
Member
யார் என்ன நினைத்திருந்தாலும்
கல்யாணம் நடக்கப் பேகுது.பின்னர் உண்மை அறிந்து மகிழப் போகிறான்.
ஆழ்மனதின் ஆசை நிறைவேறுவது
ஆண்டவன் தீரப்பு.
சரியா சொல்லிட்டீங்க pa
 

ரித்தி

Active member
Member
ஆனந்த் ஒண்ணு புருஞ்சுக்கல... இவன் நினைக்கறது எல்லாம் ரிதுக்கு தெரியும் போது பெரிய புயலே வரப்போகுது...

விக்ரம் காலை அட்டண்ட் பண்ணி இருக்கலாம். அப்போவாச்சும் விக்ரம் கல்யாணம் பத்தி கேள்விப்பட்டு ரிதுவை பத்தி ஆனந்த் சொல்லி இருப்பானோ என்னவோ..

அப்படி சொல்லி இருந்தால் ரிது தனக்கு யாரென்று விக்ரம் ஆனந்திடம் சொல்லியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்...

விதி வலியதா இல்லை எங்கள் ஆத்தர் ஜியின் சதியா தெரியவில்லை. ..

பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும்னு.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
Friday paklam sis
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom