• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 5

Viswadevi

✍️
Writer
ஃப்ரெண்ட்ஸ் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.



IMG-20210430-WA0029.jpg




அத்தியாயம் - 5

"கல்யாணம் பண்ணிப்பார் …
வீட்டைக் கட்டிப்பார்" என்று சும்மாவா சொன்னார்கள், எவ்வளவு ஆட்கள் வீட்டு வேலைக்கு என இருந்தாலும், கல்யாண வேலைகளுக்கு என அபிநயன் மேலும் சிலரை நியமித்து இருந்தாலும் நிர்மலாவிற்கென சில வேலைகள் செய்ய வேண்டியிருந்தது. அதனால் சிறிது நேரம் மட்டுமே ஓய்வெடுத்து விட்டு, அந்தக் குடும்பத் தலைவி மாலை வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

விருந்தினர் அறையில் இருந்து வெளியே வந்த அபிநயனைப் பார்த்தவுடன், " தம்பி பியூட்டிஷியன் வந்துட்டாங்க… அம்ருதாவை கொஞ்சம் வரச் சொல்றியா? இன்டர்காம்ல அழைத்தேன் பதில் இல்லை.நல்லா அசந்து தூங்குறா போல..."

சரி என்ன தலையசைத்த அபிநயன், "ஆராதனா எங்கே?" என வினவ.

" அது வந்து பா… அவ பிரெண்ட்ஸ் கூட பியூட்டி பார்லர் போயிருக்கா…" என அபியின் முகத்தைப் பார்த்து தயங்கிக் கொண்டே கூறினார்.

" மா… ஐ டோண்ட் லைக் ஆல் திஸ். நம்ம வீட்டுக்கு பியூட்டிஷியன் வர சொல்லி இருக்கும் போது இவ எதுக்கு வெளியில போறா… செக்யூரிட்டிக் கிட்ட சொன்னாளா, இல்லையா?" என கோபமாக வினவ…

"செக்யூரிட்டியோட தான் போயிருக்கா பா… அவளும், அவ தோழியும் ஒரே மாதிரி ட்ரெஸ், மேக்கப் எல்லாம் போடப் போறோம் என்று சொன்னாப்பா…"

"என் கிட்ட சொல்லியிருந்தால், நான் வேண்டாம் என்று தடுத்து இருப்பேன். தோழியாக இருந்தாலும், ஒரு எல்லைக்குள் நிறுத்தியிருக்க வேண்டும். நம்ம வீட்டு விஷேத்தில் அவள் தனித்து தெரிய வேண்டாமா? அதுவும் இல்லாமல் நீங்க ஒரே ஆளா எவ்வளவு வேலை பார்ப்பீங்க… " என்று கடிந்து கொண்டான், சரி நான் போய் அம்ருதாவை அனுப்புகிறேன், நீங்க முதலில் ஏதாவது குடிங்க களைப்பாக தெரியுறீங்க என்றவன் மாடியை நோக்கி சென்றான்.

மாடியில் அவனது பகுதியில் ஒவ்வொரு அறையாகத் தேட அவளைக் காணவில்லை. திடீரென யோசனை வந்தவனாக பால்கனிக் கதவைத் திறக்க… அங்கிருந்த அழகிய ஊஞ்சலில் அம்ருதா சிறு குழந்தை என உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த குறும்புத்தனம் தலைதூக்க, அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்தவன், ஒரு கையை தலைக்கு முட்டுக் கொடுத்து அவளை பார்த்தவாறு படுத்துக் கொண்டிருந்தான். அவன் தூக்கியதில், உறக்கம் களைய மெல்ல கண் விழித்தாள்.

தன் அருகில் மூச்சுக் காற்று படும்படி படுத்துக் கொண்டிருந்த அபிநயனைப் பார்த்து அதிர்ந்தவள், "நீங்க கீழே தானே இருந்தீங்க… இங்க வரமாட்டீங்க என்று ஆராதனா சொன்னாளே, என உளறி கொட்ட…"

அவளைப் பார்த்து சிரித்தவன்," இங்கே பாரு டார்லிங் … என்னோட அறைக்கு எப்போது வேண்டுமென்றாலும் நான் வருவேன் இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை காட் இட்."

ஒன்றும் கூறாமல் பேந்த பேந்த விழித்தாள் அம்ருதா…

போதும் விளையாடியது என எண்ணியவன்," டார்லிங்... அம்மா கீழே வரச் சொன்னாங்க… ஃப்ரெஷ்ஷப் ஆகிவிட்டு வா… நீ என்ன குடிப்ப என்று சொன்னால் எடுத்து வரச் சொல்லுவேன். காஃபி ஆர் டீ?" என்று வினவியபடியே நகர்ந்துக் கொண்டான்…

" டீ பிடிக்கும்" என்று மெல்லிய குரலில் கூற…

"ஓ, என்ன டீ பிடிக்கும்… லெமன் டீ, க்ரீன் டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, மசாலா டீ " என வம்பிழுக்கும் நோக்கத்துடன் வினவ...

அவனது கேள்வியைக் கேட்டு ஜெர்க்கானவள், ' இவர் ரொம்ப பாலிமர் டிவி நாடகம் பார்ப்பாரோ, 'என மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெளியேவோ, " ஐயோ! எனக்கு எதுவும் வேண்டாம்." என்றுக் கூறி விட்டு பயந்து குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவள் சென்ற வேகத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த அபிநயன், கீழே போனால் அம்மா கவனித்துக் கொள்வார்கள் என்று தனக்குள் கூறிக் கொண்டு பால்கனிக்கு சென்றான். அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் இருந்தான்.

அம்ருதாவோ, நான் பால்கனியில் தானே படுத்து இருந்தேன். எப்படி இங்கே வந்தேன் என்று குழம்பியவள், யோசனையுடனே அவன் சொன்னதை செய்தாள்.

அவள் குளித்துவிட்டு வெளியே வரும் போது, அந்த அறைக்குள் இல்லாமல் இருந்த அபிநயனின் குணத்தை அவளால் கணிக்கவே முடியவில்லை. இவன் எப்ப என்ன செய்வான் என்றே தெரியவில்லை என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவளது சிந்தனை அதற்கு பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. கீழே வந்தவளைப் பார்த்த நிர்மலா, அங்கிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள். சமையல் அறைக்கு அழைத்து குடிப்பதற்கு டீ எடுத்து வருமாறு கூறியவர், அம்ருதாவிடம் திரும்பி உனக்கு டீ தான் பிடிக்கும் என்று யாழினி சொன்னாடா…

இப்பொழுதே, தனக்கு என்னப் பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தவரின் பாசத்தை நினைத்து கண் கலங்கினாள் அம்ருதா… 'இவ்வளவு அன்பா இருக்கும் இவருக்கு போய், இப்படி திமிர் பிடித்த பொண்ணும்,பையனும் பிறந்து இருக்கிறார்களே' என்று மனதிற்குள் எண்ணி வருந்தினாள்.

அதற்குப் பிறகு பியூட்டிஷியனிடம், அவளை ஒப்படைத்து விட்டு, மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.

பியூட்டிஷனின் கை வண்ணத்தில், அழகிய கரு நீல வெல்வெட் கவுனில், ஆங்காங்கே கற்கள் ஜொலிக்க... அதற்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்து கழுத்தை ஒட்டி வைர நெக்லஸ், தோடு, ப்ரேஸ்லேட் அவ்வளவு தான் மேக்கப். அதற்கே பேரழகியாக திகழ்ந்தாள்.

தயாராகி நின்ற தன் மருமகளைப் பார்த்த நிர்மலா, கைகளால் நெட்டி முறித்தாள்.

**************

இவர்களுடைய கார் அந்த பிரபல செவன் ஸ்டார் ஹோட்டலில் வழுக்கிக் கொண்டு நின்றது. கீழே இறங்கிய அபிநயன் ஸ்டைலாக நின்று, அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

கௌதமும், அருணும் ஏற்கனவே வந்து அங்கிருந்து ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்தவன் உற்சாகமாக கையை அசைத்தான். அவர்களிடம் அழைத்து சென்றவன், அவன் பிடித்த கையை விடவே இல்லை அவர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடு பற்றி சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

அருண் தன் தங்கையைப் பார்த்து கனிவோடு சிரித்தான்.

அவளோ, அண்ணி எங்கே என்பதைப் போல பார்த்தாள்.
"உங்க அண்ணி உள்ளே இருக்கிறா…" என்ற அருண், அதன் பிறகு அபிநயனின் பேச்சில் கவனத்தைச் செலுத்தினான்.


அபிநயனோடு உள்ளே சென்றவளோ, கண்களால் யாழினியைத் தேட…அவள் ஆராதனாவோடு பேசிக் கொண்டிருந்தாள். ஆராதனாவோடு, அவளைப் போலவே ஆடை உடுத்தி சுற்றிக் கொண்டிருந்தவளைப் பார்த்து முகத்தை சுளித்தாள். அவள் ஆராதனாவின் உயிர்தோழி தர்ஷனா… ஆனால் அம்ருதாவுக்கோ, தீராத தலைவலி…

அபிநயன் திட்டமிட்டபடி, வரவேற்பு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விருந்தினர்கள் அனைவரும், பத்திரிக்கையைக் காட்டி உள்ளே வந்து கொண்டிருந்தனர். வந்தவர்களை வரவேற்று, இருக்கையில் அமர வைக்கவென்று இருந்த ஹோஸ்டஸ் அவர்களின் வேலையை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மெல்லிய இசை இசைத்துக் கொண்டிருந்தது. அபிநயன் அழைத்திருந்த இசை பிரபலங்களும், சினிமா திரை பிரபலங்களும், ஆராதனாவின் தோழிகளும், மீடியாவை சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

ஒவ்வொருவராக வந்து இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை வியந்து பாராட்டியும் சென்றனர். அவர்களை உணவருந்த அழைத்துச் செல்லும் பொறுப்பை கௌதம் பார்த்துக் கொண்டிருந்தான். அருண் மற்றும் யாழினியை, நிர்மலாவும், ராஜனும் தங்களுடேனே அழைத்துக் கொண்டு எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்து மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தனர்.

இயல்பாகவே சென்றுக் கொண்டிருந்த ரிசப்ஷனில் ஆராதனாவும். அவளது தோழிகளும் மேடையேறினர்‌.

அதுவரை இலகுவாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்த அம்ருதா, சற்று நெர்வஸ்ஸாக இருந்தாள். ஏற்கனவே பல மேடைகளில் ஏறி பாடி இருந்ததாலும், நிறைய பிரபலங்களுடன் பேசி இருப்பதாலும் இலகுவாகவே இருந்தாள். எல்லாம் அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் வரை தான்… ஆராதனா அவளது தோழிகளை, அண்ணனிடம் அறிமுகப் படுத்தினாள்.

அம்ருதாவிற்கு ஏற்கனவே அவர்கள் தெரிந்தவர்கள் என்பதால் மெல்ல புன்னகைத்தாள். எல்லோருமே ஹைக்ளாஸ் பீப்புள். அபிநயனுக்காக அவளிடம் சகஜமாக பேசினார்கள். ஆனால் தர்ஷனா அவளை சும்மா இருக்க விடவில்லை. அபிநயனுக்கு கை கொடுத்தவள் என்ன தான் சொல்லுங்க, அபி சார் உங்க பக்கத்துல அம்ருதா கொஞ்சம் சுமார் தான்... இன்னும் கொஞ்சம் நீங்க உங்க ஸ்டேட்டஸ் தகுந்த மாதிரி பார்த்து இருக்கலாம்.

"மிஸ்.தர்ஷனா… காதல் தகுதிப் பார்த்து வருவதில்லை" என்ற அபி, அம்ருதாவை மெல்ல அணைத்து, அவளை காதலாகப் பார்த்தான்.

அவளிடம் ஒன்றும் கூறாமல், அபிநயனைப் பார்த்து புன்னகைத்தவள், அவன் தோளில் சாய்ந்து கிண்டலாக சிரித்தாள்.

அவள் திடீரென்று தன் மேல் சாய்ந்ததை பார்த்தவன், இன்னும் தர்ஷனா கீழே இறங்காததை கவனித்தான். ' எப்பொழுதெல்லாம் அம்ருதா தன்னிடம் இருந்து விலகுகிறாளோ, அப்போதெல்லாம் தர்ஷனா வந்து இருவரையும் நெருக்கமாக்கிறாள்.' என்று மனதிற்குள் நினைத்தவன் புன்னகைத்துக் கொண்டான்.

"ஆராதனா, உன் ஃப்ரண்டை சாப்பிட கூட்டிட்டு போ."எனக் கூற…

இவளை எப்படி இங்கிருந்து அழைத்துச் செல்வது என்று தவித்துக் கொண்டிருந்த ஆராதனா, இதோ அண்ணா என்றவள் தன் தோழி கையை பிடித்து இழுத்து சென்று தர்ஷனா," ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற… நீ என்னுடைய தோழி என்று தான் என்னுடைய கவலைகளை உன்னிடம் ஷேர் செய்தேன், அதற்காக நீ, இப்படி அவங்களை பேசியிருக்கக் கூடாது. என்ன தான் இருந்தாலும் அவர்கள் என் அண்ணன் மனைவி. " என்று கண்டிப்புடன் பேச…

"என்னடி இப்படி பேசுற உனக்காகவும் சேர்த்து தான் நான் பேசினேன்." என கண் கலங்கினாள்

" சரி சரி விடு தர்ஷி… நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்றாங்க வா, நாம சாப்பிட போவோம்." என்று அழைத்துச் சென்றவள், 'இனி மேல் அண்ணியை பற்றி யாரிடமும் எதுவும் கூற கூடாது.' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

விழா முடியும் நேரம் நெருங்க, பத்திரிக்கையாளர்கள் இருவரிடமும் கேள்விக் கணையை வீச ஆரம்பித்திருந்தனர்.

சார் நீங்க சொன்ன மாதிரி லவ் மேரேஜ் தானா… இல்ல அரேஞ்ச் மேரேஜா…

"லவ் மேரேஜ் தான்." என வெட்கப் புன்னகையுடன் அபிநயன் கூற…

வாவ், சூப்பர் என குரல்கள் ஒலிக்க… 'அடப்பாவி… என்னை எப்படி மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு லவ் மேரேஜா…'என மனதிற்குள் நினைத்து கண்களை விரித்து அம்ருதா அவனைப் பார்க்க… அவனோ,வெட்கப் புன்னகையுடன் இருந்தான். அந்த அழகிய காட்சியை எல்லோருடைய கேமராக்களும் படம் பிடித்தது.

"அபி சார்… உங்கள் மனைவியைப் பற்றி சொல்லுங்க... அப்புறம் உங்க லவ் ஸ்டோரி பற்றி சொல்லுங்க?" என சிரித்தபடியே நிருபர்கள் வினவ...

அபியோ மெல்லிய புன்னகையை சிந்தி, "என் காதல் மனைவி அம்ருதவர்ஷினியைப் பற்றி எதுவும் சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை. உங்களுக்கு நல்லாவே தெரியும். அவங்க பாடுவதில் விருப்பம் உள்ளவர்கள். ஏற்கனவே சூப்பர் சிங்கரில் மூன்றாம் பரிசு வாங்கி இருக்காங்க… பின்னணி பாடகியாக வேண்டும் என்பது அவரோட லட்சியம். அப்புறம் என் சிஸ்டரும், அவங்களும் ஒரே காலேஜ். அங்கு ஒரு ப்ரோக்ராமிற்காக போகும் போது தான் முதன்முதலாகப் பார்த்தேன்‌. மேடம் என்னோட தீவிர ரசிகை. அவங்க விருப்பப் பட்ட பாடலை என்னை பாட சொன்னார்கள். அதில் எங்க இருவருக்கும் சின்ன மோதல்… சோ அவங்களுக்கு ரொம்ப ஏமாற்றம். அன்னைக்கு அவங்களுடைய முகம் என் மனசுல ஆழமா பதிஞ்சுருச்சு‌. அதுக்கப்புறம் அடிக்கடி சந்தித்து, மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்தது."அவ்வளவு தான் என…

மீண்டும், மீண்டும் கேள்விகளைக் கேட்க அதற்கெல்லாம் அம்ருதாவை பதில் சொல்ல விடாமல், அபிநயன் சமாளித்துக் கொண்டிருந்தான். அம்ருதாவும் வலுக்கட்டாயமாக முகத்தில் புன்னகையோடு இருந்தாள்.

" சரி நீங்க ரெண்டு பேரும் இப்ப எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க… நாங்க உங்களோட பாட்டு கேட்க ரொம்ப ஆவலாக இருக்கிறோம்...
என்றுக் கூறி எல்லோரும் அபிநயன்,அம்ருதவர்ஷினியைப் பார்க்க…

அம்ருதாவோ, " சாரி… ஐயம் நாட் இன் த மூட் டூ சிங்." என பட்டென்று கூறிவிட...

அபிநயன் ஒரு நிமிடம் இறுக நின்றவன், பிறகு சமாளித்துக் கொண்டு புன்னகைத்தான். "நோ ப்ராப்ளம் டார்லிங்" என்று அம்ருதாவிடம் கூறியவன், நிருபர்களிடம் திரும்பி புன்னகை சிந்தியவன், "நாங்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் பாடுகிறோம். இன்னும் அவங்க அம்மா இழப்பில் இருந்து வெளிவரவில்லை. சாரி கைஸ். பட் என்னுடைய சகிக்குப் பிடித்த பாடலை நான் பாடுகிறேன்."
என்றவன் கண்களில் இருந்த கூலர்ஸை கழட்டி கோர்ட் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு, மைக்கை வாங்கி அம்ருதாவைப் பார்த்துக் கொண்டே பாட ஆரம்பித்தான்.

"என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி.
உன் கார்குழலும் அந்த மழைத்துளியும்
என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே!" என அந்த பிரபல இசையமைப்பாளர், எந்த இசையும் ஒலிக்காமல் தன் காந்தக் குரலால், உயிர் கரைய பாடி எல்லோரையும் அசையாமல் கட்டி வைத்தார்.

அங்கிருந்த அனைவரும் அபிநயனையேப் பார்க்க… அவனோ கண்களை மூடிக் கொண்டு பாடிக் கொண்டிருந்தார்.

" விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏன் மறைகிறாய்" எனக் கூறி விழி திறந்தவன், அம்ருதாவைப் பார்க்க, அவன் கண்களில் வழிந்த காதலில், அவள் திகைத்துப் போனாள். எந்த கண்களில் உணர்வுகளை பார்க்க வேண்டும், என நினைத்தாளோ இன்று அதைப் பார்த்து அயர்ந்து நின்றாள்.

அவன் தனது ஒட்டு மொத்த காதலையும் கொட்டிப் பாட… எல்லோரும் கைகளை தட்டி அவனைப் பாராட்டினர்.

இரு கண்கள் மட்டும் குரோதத்துடன் பார்க்க… அந்த பார்வையைக் கண்டு கொண்ட அபிநயன் யோசனையாக ஒரு கணம் புருவத்தை நெறித்தவன், பிறகு தனது முகத்தை மாற்றிக் கொண்டு புன்னகைத்தான்.


தொடரும்…
 

Rajam

Well-known member
Member
இவர்களுக்கு இடையேஇடையூறு
செய்ய நினைப்பது யார் ஶ்ரீ
 

Baby

Active member
Member
யார்றா அது குரோதத்தோடபாக்குறது... பாக்றது தான் பாக்ற..அபி பாக்காத நேரம் பாக்க வேண்டியது தான🤣🤣🤣🤣
 

Viswadevi

✍️
Writer
யார்றா அது குரோதத்தோடபாக்குறது... பாக்றது தான் பாக்ற..அபி பாக்காத நேரம் பாக்க வேண்டியது தான🤣🤣🤣🤣
அதானே... 🤪🤪🤪
 

பிரிய நிலா

Well-known member
Member
அபி பயங்கரம்.. இரண்டு பேரும் இவ்வளவு லவ் பண்றாங்க. செம க்யூட். சீக்கிரமா இதை அம்ரு உணரனும்
 

Lakshmi

Well-known member
Member
குரோதத்துடன் பார்ப்பது யார் அந்த தர்ஷினியா.?
 

New Episodes Thread

Top Bottom