• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 2

Viswadevi

✍️
Writer
[BGCOLOR=rgb(255, 255, 255)]அத்தியாயம் - 2[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]மணமேடை முழுவதும் மலர்களால் அலங்கரித்து ஜொலிக்க… [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]கேமாரோவோ மூன்று இடங்களில் இருந்து அந்த அழகிய தருணத்தை படம் பிடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தது. [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] ஐயர் மந்திரத்தை சொல்ல, சொல்ல அம்ருதவர்ஷினியும், அபிநயனும் அவர் சொல்வது போல் செய்துக் கொண்டிருந்தனர்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] அம்ருதவர்ஷினி முகம் எந்த உணர்வுகளையும் காட்டாமல் அமைதியாக இருந்தது. அபிநயனோ,மலர்ந்த முகத்துடன் இருந்தான். அம்ருதாவின் கண்கள் அங்கிருந்த அக்னியை வெறித்துக் கொண்டிருக்க, உள்ளமோ,அதைவிட அனல் அடித்தது.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] அம்ருதாவின் பெற்றோர் இல்லாதால் அந்த இடத்திலிருந்து அவளது அண்ணனும், அண்ணியும் தாரை வார்த்துக் கொடுக்க.. அபியின் பெற்றோர் முகமெல்லாம் புன்னகையுடன் வாங்கிக் கொண்டனர். [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அம்ருதவர்ஷினி பெற்றோரின் நினைவில் கண்கள் கலங்க, கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் கீழே விழ இருந்தது. அழக் கூடாது என வைராக்கியத்துடன் அதை உள்ளிழுத்துக் கொண்டாள்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]கெட்டி மேளம், கெட்டி மேளம் என்ற குரல் ஒலிக்க… அதைத் தொடர்ந்து மேளம் முழங்க, நாதஸ்வரம் இன்னிசைக்க… பெற்றோர், மற்றும் உறவினர்களின் ஆசியுடன், அம்ருதவர்ஷினியின் கழுத்தில் தாலி கட்டினான் அபிநயன். இரு முடிச்சிட, மூன்றாவது முடிச்சு இடுவதற்காக காத்திருந்த ஆராதனா தனது நாத்தனார் பதவியை, மூன்றாவது முடிச்சிட்டு நிறைவேற்றினாள்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] அதற்குப் பிறகு எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு நல்ல நேரத்தில் அவர்களது இல்லத்திற்கு புறப்பட்டார்கள்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அபிநயனின் ரோல்ஸ் ராய்ஸ் கார் அவர்கள் இருவரையும் ஏற்றிச் செல்ல தயாராக காத்து இருந்தது. [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அருண் தங்கையை பிரிய மனமில்லாமல் அவள் கையை பிடித்து ஆறுதல் சொல்ல முயல, அவளோ கைகளை விடுவித்துக் கொண்டாள். அண்ணன், அண்ணியை பார்க்காமல் பொதுவாக நான் போயிட்டு வருகிறேன் என்றவள், நிர்மலாவின் அருகில் சென்று நின்று கொண்டாள். [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]கவலையோடு பார்த்த அருணை அபிநயன் பார்வையாலே சமாதனப்படுத்தி நான் பார்த்துக் கொள்கிறேன், என கண்களை மூடித் திறந்தான்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]" சரி விடு மச்சான்… ஈவினிங் தான் ரிசப்ஷன்ல பார்க்கப் போறீயே, அப்புறம் என்னடா? " என கௌதம் கூற…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]கலங்கிய கண்களை சமாளித்துக் கொண்டு புன்னகைத்தான் அருண்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]யாழினி,நிர்மலாவிடம் சென்று," மா… அவ சின்னப் பொண்ணு. ஏதாவது சொன்னால் பெரிசா எடுத்துக்காதீங்க. அவங்க அம்மா இறந்த சோகத்துல இருந்து இன்னும் வெளிவரலை." எனக் கூறும் போதே அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]நிர்மலா, யாழினியின் கைகளைப் பிடித்து கொண்டு, " என்னம்மா… நீயே இப்படி அழுதா… அவளுக்கு யாரு ஆறுதல் சொல்றது. நல்ல நாள் அதுவுமா எதுக்கு கண் கலங்கிட்டு இருக்க. கண்ணைத் துடை. அம்ருதா எனக்கு மருமகள் கிடையாது. இன்னொரு மகள் தான். நீயும் எனக்கு பொண்ணு தான். உன் நாத்தனாரை நினைத்து கவலைப்படாதே. அவ அம்மா இடத்துலே இருந்து நான் பார்த்துக் கொள்கிறேன்." [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]நிர்மலாவின் பேச்சைக் கேட்டதற்கு பிறகு தான் யாழினிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. [/BGCOLOR]
[BGCOLOR=rgb(255, 255, 255)]அரை மனசாக தலையசைக்க..[/BGCOLOR]
[BGCOLOR=rgb(255, 255, 255)] [/BGCOLOR]
[BGCOLOR=rgb(255, 255, 255)]அவளைப் பார்த்த நிர்மலாவிற்கு சிரிப்பு வந்தது. "இதுக்குத் தான் நான் உங்கள் இருவரையும் எங்களோடு வீட்டுக்கு வர சொன்னேன். ஒருதாக ரிசப்ஷன் முடிச்சிட்டு உங்க வீட்டுக்கு போகலாம் என்றாலும் கேட்க மாட்டேங்குறீங்க… "[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"அதெல்லாம் சரி வராது மா… அம்ருதாவோட லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணனும். நெக்ஸ்ட் வீக் நாங்க யூ.எஸ் போறதுக்கு உள்ளதெல்லாம் பேக் பண்ணிவிட்டு, வீட்டில் உள்ள திங்ஸ்ஸெல்லாம் பத்திரப்படுத்தி வைக்கணும் மா… அந்த வேலையே சரியாக இருக்கும். நீங்க பாத்துக்கோங்க… நான் நாளைக்கு வந்து கூட்டிட்டு போறேன் பொண்ணு மாப்பிள்ளையை " என…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]" சரிதான்." என நிர்மலா கூறும் போதே, அங்கு வந்த ராஜன், " புறப்படலாமா?" என வினவ..[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"சரி" என தலையசைத்த நிர்மலா, தன் கணவர் மற்றும் மகளுடன் ஒரு காரில் புறப்பட…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அபிநயன், அம்ருதவர்ஷினி அவர்களது காரில் புறப்பட்டனர்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அவர்கள் செல்வதையே, கண்கள் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்த யாழினியை ஆதரவாக அழைத்துச் சென்றான் அருண்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]காரில் ஏறியதும் கண்களை மூடிய, அம்ருதவர்ஷினிக்கு கலங்கிய அண்ணியின் முகமே வந்து இம்சித்தது.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] அண்ணியிடம், அவ்வாறுப் பேசி இருக்கக் கூடாது என இப்போது நினைத்தாள்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக தன் அண்ணன் அண்ணியிடம் பேசியதை நினைத்து பார்த்தாள். [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]'அண்ணா… எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமில்லை. ப்ளீஸ்ணா… நிறுத்துங்க…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"அம்முக்குட்டி சொன்னா புரிஞ்சுக்கோ உன் நல்லதுக்கு தான் சொல்லிட்டு இருக்கேன்… அபிநயன் ரொம்ப நல்லவன்… எனக்கு நல்லா தெரியும் அப்படி நான் விசாரிக்காம உன்னை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் புரிஞ்சுக்கோடா"[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] தன் அண்ணனிடம் தன் பேச்சு எடுபடவில்லை என அண்ணியிடம் திரும்பினாள், "அண்ணி…நீங்களாவது அண்ணன் கிட்ட சொல்லுங்க...அம்மா, அம்மா இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதுக்குள்ள, அதுவும் அம்மா சாவுக்கு காரணமான அவனையே கட்டிக்க சொல்றீங்களே" என கண் கலங்க…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] "இங்க பாருடா குற்றவாளி யாருன்னு தெரியாம எதுவும் சொல்லக்கூடாது." என அருண் கூற...[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"அதைத்தான் நானும் சொல்றேன்ணா... உண்மை தெரியாமல் அதுக்குள்ள ஏன் அவசரமாக கல்யாணம் செய்யுறீங்க… அன்னைக்கு நானும், அம்மாவும் பேசிட்டு இருக்கும்போது என். ஆர் டிரான்ஸ்போர்ட் லாரி தான் வந்து மோதுச்சு… எனக்கு நல்லா தெரியும். அதுவுமில்லாமல், அவன் என்னை பார்க்கும் போதெல்லாம், தொலைச்சிடுவேன் என்று மிரட்டுவான். அவனைத் தவிர எனக்கு வேற யாரும் எதிரி கிடையாது. என்னை கொல்லத் தான் வேகமாக அந்த லாரி வந்துச்சு. என்னைக் காப்பாற்ற போய் அம்மா, இப்ப நம்ம எல்லோரையும் விட்டுட்டு போய்ட்டாங்க" எனக் கதறி அழ... [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அவளை அணைத்துக் கொண்ட அருண், "இங்க பாருடா என். ஆர் டிரான்ஸ்போர்ட் சிட்டி முழுக்க ஓடுது.லாரி, டாக்சி, பேருந்து,சிற்றுந்து என எல்லாவற்றிலும் ஓடுது… நிறைய ஆக்சிடன்ட் நடக்கும். எல்லாத்துக்கும் அவர்கள் காரணம் ஆகிட முடியாது."[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"ஐயோ! அண்ணா… எனக்கு வேற யாருண்ணா எதிரி?" எனப் பரிதாபமாகப் பார்க்க…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"அதற்கு தான் அபி மூலமாக விசாரிக்க சொல்லியிருக்கிறேன். அவன் ரொம்ப, ரொம்ப நல்லவன். என் நெருங்கிய நண்பன்டா. அது மட்டுமல்லாமல் என்று ஏதோ கூற வந்தவன், பிறகு உனக்கு பொருத்தமானவன்" என…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]சொன்னதையே, திரும்பத் திரும்ப சொல்லும் அண்ணனை நினைத்து எரிச்சல் வர… உன் ஃப்ரண்டு ஃப்ரண்டு என்று சொல்றியே… இதுக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்து இருக்கிறாரா... [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]இல்ல நான் அவர் மேல க்ரேசா இருக்கும் போது நீ சொன்னியா? எனக்கு அவர் மியூசிக் என்றால் எவ்வளவு பிடிக்கும். அவரோட மியூசிக்ல நான் பாட வேண்டும் என்பது தான் லட்சியம் என்று எத்தனை முறை உன்னிடம் சொல்லி இருக்கேன். அவரைப் பற்றி பேசாத நாள் இருக்கா... அப்போதெல்லாம் உன் நண்பன் என்று சொன்னீயா? இல்லை.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] இப்ப மட்டும் வந்து சொன்னால் என்னை நம்ப சொல்றியா? பொய் தான சொல்லுற... [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]குட்டிமா... நான், அபி, கௌதம் மூன்று பேரும் ப்ளஸ்டூ வரை க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். காலேஜ் லைஃப்ல நாங்க வேற வேற லைன்ல போயிட்டு, டச் விட்டுப் போயிடுச்சு.அதுவுமில்லாமல் அப்பா இறந்து, கடனால நம்ம வீட்டை வித்தது, எனக்கு மனசுல ரொம்ப காம்ப்ளக்ஸா இருந்ததால யாரோடும் கான்டாக்ட் வச்சுக்கல்ல… அப்புறம் நீ மியூசிக் சைட்ல போறதில் எனக்கு விருப்பமில்லை. நம்ம அப்பா அந்தத் துறையில் போய் கஷ்டப்பட்டதே எனக்கு போதும் தோணுச்சு.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] அதுவுமில்லாமல் உன்னோட மார்க்ஸ்க்கு டாக்டர் சீட் கிடைச்சது. நீ என்னவென்றால், ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் சேருவேன் என்று சொல்லிட்ட… உன் கேரியரை வீணாக்குற என்று, அது வேற எனக்கு கோபம். [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] அம்மாவுக்கு உன் விருப்பம் தான் முக்கியம், என்று சொல்லி சேர்த்து விட்டுட்டாங்க… அப்படி இருக்கும் போது அபிநயன் என் ஃப்ரண்டுனு சொன்னா நீ சான்ஸ் கேட்க சொல்லி என்னையே அனுப்புவே, எனக்கு அதில் விருப்பமில்லை. அதனால தான் அவன், என் ஃப்ரெண்ட் என்பதை நான் உன்னிடம் இருந்து மறைத்து விட்டேன்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அம்மா என்றவுடன், தனது ஆசைகளை நிறைவேற்ற எவ்வளவு போராடினார்கள் என்று நினைத்து அழுக ஆரம்பித்தாள்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"அழாதே டா… " என அம்ருதாவின் கண்களை யாழினித் துடைக்க…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]அண்ணி… என அவளிடம் சாய…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]"சொன்னால் கேளுடா… நீ இப்படி அழுவதைப் பார்த்தால் அத்தை மனசு தாங்குமா… அவர்கள் எங்கேயாவது இருந்து பார்த்துக் கொண்டே தான் இருப்பார்கள். முதலில் கண்ணை துடை… "[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்த அம்ருதாவைப் பார்த்து," இங்க பாருடா அம்மு… எங்க இரண்டு பேருக்கும் லீவு முடிஞ்சிருச்சு. இதுக்கு மேல லீவு போட முடியாதுடா...அதற்குள் உன்னை ஒரு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்கணும் என்று நினைக்கிறார். உன்னை எப்படி தனியா விட்டுட்டு நாங்க போவது சொல்லு…" [/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]நீங்க வெளிநாட்டுக்கு போகணும்ணா, போங்க… அதற்காக எனக்கு சீக்கிரம் திருமணம் பண்ணுவீங்களா… எனக்கு என்று தனிப்பட்ட விருப்பம் கிடையாதா? அம்மா இருந்தா இப்படி பண்ணுவாங்களா... உங்களுக்கு நான் என்றும் தொந்தரவா இருக்க மாட்டேன்‌. என்னை ஏதாவது ஒரு ஆசிரமத்துல சேர்த்து விடுங்க… ஓ படிப்பு முடித்துவிட்டேனா, என்னை சேர்த்துக்க மாட்டாங்களா… இல்ல ஏதாவது ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டுட்டுங்க… சீக்கிரமா ஏதாவது வேலை தேடிக்கிறேன்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] நீங்க உங்கள் வாழ்க்கையை பாருங்க... பாவம் நீங்களும் எவ்வளவு நாள் தான் அடுத்தவர்களுக்காக பார்க்கிறது" என…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)]யாழினி அடிப்பபட்ட பார்வைப் பார்க்க...[/BGCOLOR]
[BGCOLOR=rgb(255, 255, 255)] அது வரை அம்ருதா பேசுவதை கைக்கட்டிக் கொண்டுப் பார்த்துக் கொண்டிருந்த அருணோ, ருத்ரமூர்த்தியாக அவளிடம் வந்தவன், "ஏய் என்ன விட்டா ஓவராப் பேசிட்டு இருக்க… அடிச்சேன்னா பார்த்துக்கோ... ஒன்னு உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ... அப்படி இல்லன்னா நான் வெளிநாட்டுக்கு வரலைன்னு சொல்லிடுறேன். இரண்டு பேரும் காண்ட்ராக்ட்ல சைன் பண்ணியிருக்கிறதால, கம்பெனிக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிருக்கும். அதை நம்ம வீட்டை வித்து கொடுத்துவிட வேண்டியதுதான்… " என முடிவாகக் கூற…[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] அம்ருதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இந்த வீடு அம்மா கஷ்டப்பட்டு லோன்ல வாங்கிய அப்பார்ட்மெண்ட் அது… இப்பத் தான் லோனே கட்டி முடிச்சது. அதுவும் அண்ணன் வேலைக்கு போய் தான் சீக்கிரமாக முடிந்தது. லோன் கட்டி முடித்த அன்னைக்கு எவ்வளவு சந்தோஷமாக கோவிலுக்கு போய்விட்டு ஹோட்டலுக்கு போய் எப்படி என்ஜாய் பண்ணோம், அதெல்லாம் மறந்துட்டு, விற்கலாம் என்று சொல்ல இந்த அண்ணனுக்கு எப்படி மனசு வருது… அதற்கு பிறகு அம்ருதா எதுவும் சொல்லாமல் தலையை ஆட்டினாள். யாழினி பேச வந்தப் போதும் எதுவும் பேசாமல் தனது அறையிலே ஒதுங்கிப் போனாள்.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] ஒதுங்கி போவோம், என்று நினைத்தால் தனது அருகில் இருக்கிறவன் விட்டானா… எப்படி வந்து மிரட்டினான். இந்த அண்ணன் இவனைப் போய் நல்லவன் என்று நினைக்கிறார். என்னை பழிவாங்கத்தான் கல்யாணம் பண்ணியிருக்கான். ஆனால் என்னைப் பற்றி அவனுக்கு சரியாகத் தெரியவில்லை. ஏன்டா இவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டோம் என நினைக்க வைக்கவில்லை, என் பெயர் அம்ருதவர்ஷினி இல்லை.' என மனதிற்குள் நினைத்தவள் கண்களை மெல்லத் திறந்து அபிநயனைப் பார்க்க... அவனோ,அவளைப் பார்த்து கண்ணை சிமிட்டினான்… அவனை முறைத்து விட்டு பார்வையை திருப்பினாள் பாவை.[/BGCOLOR]

[BGCOLOR=rgb(255, 255, 255)] தொடரும்…..[/BGCOLOR]
 
Last edited by a moderator:

Baby

Active member
Member
வாவ்...சூப்பர்.. ஹா ஹாஇவங்களோட வாழ்க்கையின் ஆரம்பம் சண்டையாவே இருக்கும்போலயே...செம்ம செம்ம
 

Viswadevi

✍️
Writer
வாவ்...சூப்பர்.. ஹா ஹாஇவங்களோட வாழ்க்கையின் ஆரம்பம் சண்டையாவே இருக்கும்போலயே...செம்ம செம்ம
Thanks sis
 

amirthababu

Active member
Member
நான் படிச்சு இருக்கேன் இந்த கதையை.. நல்லா இருக்கும்
 

பிரிய நிலா

Well-known member
Member
ஒரு காலத்தில் அபி மியூசிக் மேல உயிரா இருந்து இப்போ அவனை வெறுக்க காரணமாக இருந்த அந்த ஆக்சிடென்ட் மர்மம் என்ன...
இசைக்குடும்பமாக இருக்கிறார்கள்.. சூப்பர் சிஸ்..
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom