• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 18 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – பதினெட்டு

ஆதியின் திகைத்த முகத்தை பார்த்த ப்ரயுவிற்கு ஒருபக்கம் வருத்தம் இருந்தாலும், இன்னொரு புறம் சிரிப்பும் வந்தது .

வீட்டின் உள்ளே வந்த ஆதியை எல்லோரும் நலம் விசாரிக்கிறேன் என்ற பேரில் ஹாலிலேயே உட்கார வைத்து இருந்தனர். அவனின் சோர்ந்த முகத்தை பார்த்த ப்ரயு உள்ளிருந்து காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

அவன் வித்யா மாமனார், கணவர் இருவரிடமும் ரெப்ரெஷ் செய்து வருவதாக சொல்லி தங்கள் அறைக்கு சென்றவன், அங்கிருந்து பிரயுவை அழைத்தான்.

வந்ததிலிருந்து தன் மகனோடு தனியே பேச அவகாசம் கிடைக்காத ஆதியின் அம்மாவும், பிரயுவோடு உள்ளே வந்தார்.

ஆதி தன் அம்மாவிடம்,

“அம்மா, எப்படி இருக்கீங்க. ? “ என்று நலம் விசாரிக்க, பதில் சொன்னவரிடம்,

“ஏன்மா ? வித்யா வீட்டிற்கு நாம் சென்று அவர்களோடு சேர்ந்து கொள்வதாகதானே சொன்னீர்கள்? ஆனால் எல்லோரும் இங்கே வந்து விட்டார்களே?” என்று அவன் கேட்கும்போதே , ஆதி அம்மாவை யாரோ கூப்பிட,

“ப்ரத்யா. அவனுக்கு எல்லாம் சொல்லு “ என்று விட்டு போய் விட்டார். அவர் வரும்போது ஏசி போட்டு விட்டிருந்ததால், போகும்போது கதவை சாத்திக் கொண்டு போனார்.

அவர் கதவை சாத்தின அடுத்த நிமிஷம், ப்ரத்யா ஆதியின் அணைப்பில் இருந்தாள். அவள் இதை எதிர்பார்க்கதாதால், அனிச்சை செயலாக விலக முற்பட்டாள். அவன் அணைப்பு இறுகவும், அவன் முகத்தை பார்த்தாள்.

பிரயுவின் பார்வையை சந்தித்த ஆதி

“ரதிம்மா, எப்படி இருக்க?”

“ஹ்ம்ம்..” என,

“ஏண்டி. நானே ஒன்றரை வருஷம் கழித்து, உங்கள் எல்லோரரோடும் இருக்க ஆசைபட்டு வந்தால், இப்படி வீட்டில் ஒரு திருவிழா கூட்டத்தை கூட்டி வச்சுருக்கீங்க. “ என்று செல்லமாக கோபப்பட்டான்.

ப்ரயு மனதில் முதல் நாள் நடந்த விவாதங்கள் மனதில் ஓடியது. முதல் நாள் மாலை தன் அம்மா வீட்டிற்கு வந்த வித்யா,

“அம்மா அண்ணா நைட் வந்துராங்களா ?”

“இல்ல. வித்யா. காலையில் தான் வருவான். ஃப்ளைட் அங்கே புறப்பட்டதே லேட் ..”

“அம்மா. நாளைக்கு நம்ம கூட வர்ற சொந்தக்காரங்கள எல்லாம் இங்கேயே வரச் சொல்லிட்டோம். .காலை ஒரு ஒன்பதுலேர்ந்து பத்துக்குள்ள வந்துருவாங்க..”

“ஏன். வித்யா. நாங்க எல்லோரும் உங்க வீட்டுக்கு வந்து அங்கேருந்து புறப்படுவதாக தானே ஏற்பாடு “

“அது. இன்னிக்கு நாங்க இருக்கிற பிளாட்லே ஒரு துக்கம் ஆயிடுச்சு. .அவங்க எப்போ காரியம் எல்லாம் பண்ணுவாங்கன்னு தெரியாது. அங்கிருந்து எல்லோரும் அவங்க எதிரில் புறப்படுறது அவ்ளோ நல்லா இருக்காது. அதான் இப்படி ஏற்பாடு பண்ணிட்டோம்.’

ஏன்மா? எல்லோரையும் எதாவது பொது இடத்துக்கு வர சொல்லி அங்கேர்ந்து கிளம்பலாமே. “

ஏன்மா இங்கேருந்து கிளம்புறதுலே என்ன பிரச்சினை.

இல்லமா. .ஆதி காலையில் தான் வரான். அவன் வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும். நாங்களும் கிளம்பி வரணும்லே. இங்கே எல்லோரும் வந்தா அவங்களுக்கு சாப்பாடு, குடிக்கன்னு ற்பாடு பண்ணிட்டு, அந்த வேலை எல்லாம் முடிச்சுட்டு கிளம்பினா. லேட் ஆகாதா ?”

பிரயுவிற்கு ஆச்சர்யம்மாக இருந்தது. தன் அத்தைக்கு கூட நம்ம கஷ்டம் எல்லாம் தெரியுது என்று.

இது பிரயுவிற்கான கரிசனம் என்று சொல்வதை விட, தன் மகன் இத்தனை நாள் கழித்து வரும்போது அவன் வசதி, அவன் மனைவியை இத்தனை நாள் கழித்து பார்க்கும் போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தார். மேலும் ஆதிக்கு தெரிவிக்கபட்டிருந்தது வித்யா குழந்தை விசேஷம் மட்டுமே. ஆனால் அவர் மேலும் ஒரு பிளான் போட்டிருந்தார். அதை அவனிடம் சொல்லவில்லை. அதெல்லாம் சொல்லி அவனை கூட்டி வரவேண்டும். வீட்டில் இத்தனை பேர் வைத்துக் கொண்டு என்ன பேச முடியும் என்று எண்ணினார்.

ஆனால் வித்யாவோ “அம்மா , சாப்பாடு பத்தி கவலை வேண்டாம். நாம் போகும் வழியில் ஒரு இடத்தில இவர் பேசி வைத்து எல்லோருக்குமே அங்கே மதிய உணவிற்கு ஏற்பாடு செய்து விட்டார். காலை உணவு முடித்துவிட்டு தான் எல்லோரும் வருவார்கள். இது வெயில் காலம் தான் என்பதால் எல்லோருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி வைத்து விடலாம். சும்மா வேன் இங்கே வந்து நம் எல்லோரையும் பிக்கப் செய்ய மட்டும் தான் “ என்றாள்.

அவருக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. சரி என்று தலை ஆட்டி விட்டார்.

பிரயுவிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. இதை எல்லாம் எண்ணியவள், ஆதியிடம் முழுதும் சொல்லாமல், வித்யா வீட்டின் அருகில் நடந்த துக்கம், அதனால் ஏற்பட்ட இட மாற்றம் மட்டும் சொன்னாள்.

“ச்சே. இது இப்பதான் இருக்கனுமா?”

“சரி. நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் டிபன் எடுத்து வைக்கிறேன் “ என்றாள்.

“ஹ்ம்ம். வேற என்ன செய்ய ? சரி நீ போ. நீ உள்ளே வந்து இவ்ளோ நேரம் ஆச்சேன்னு எல்லோரும் கதவையே பார்த்துட்டு இருப்பாங்க” என்றவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு இறுக்கி அணைத்து விடுவித்தான்.

அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டு வந்தாள். ஆதியும் குளித்து விட்டு வந்தவன், சாப்பிட அமர்ந்தான்.

அவனுக்கு பிடித்த பூரி, கிழங்கு மற்றும் தோசை சட்னி சாம்பார் செய்து வைத்தாள். ஒரு டிபன் தான் செய்ய எண்ணியிருந்தாள். ஆதி ஒன்றரை வருடம் கழித்து வீட்டு சாப்பாடு சாப்பிடுகிறான். இன்றைக்கு வேறு ஊருக்கு கிளம்புவதால், போகும் இடங்களில் எப்படி இருக்குமோ, அதனால் இரண்டு விதமாக செய்திருந்தாள்.

அவன் மற்ற எல்லோரையும் விசாரித்து விட்டு, சாப்பிட அமர்ந்தான். பிரயுவிடம் “பிரயு, நீ சாப்பிட்டயா” என்று கேட்க,

“இல்ல. நீங்க சாப்பிட்டவுடன் நான் சாப்பிடுறேன்”

மத்த எல்லோரும் சாப்பிட்டாச்சுல்லே. நீயும் நானும் தானே. வா சேர்ந்து சாப்பிடுவோம்

ப்ரயு கண்களால் மற்றவர்களை காண்பித்து , அவனிடம் ப்ளீஸ் என்று வாயசைத்தாள்.

அவன் அவளை முறைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் அம்மா அருகில் வந்து,

“ஆதி, உன்கிட்ட ஒன்னு பேசணுமே “

“என்னம்மா ?”

“இல்லை. வித்யா வீட்டு விசேஷம் முடிஞ்சு நாம நேர நம்ம சொந்த ஊருக்கு போயிட்டு வரலாம்நு யோசிக்கிறேன்.”

“என்னமா தீடிரென்று?”

“இல்லபா. உன் கல்யாணம் முடிந்து குலதெய்வம் கோவிலுக்கு நாம் போகவே இல்லை. அதோட உங்க பெரியப்பா பொண்ணு கல்யாணம் வேற இந்த வெள்ளி கிழமை வச்சிருக்காங்க. ரெண்டும் அட்டென்ட் பண்ணிட்டு வரலாம். நம்ம வீட்டு ரெண்டு கல்யாணத்துக்கும் அங்கேருந்து எல்லோருமே வந்தாங்க. நீ இப்போ வரலைனா நான் மட்டும் போயிட்டு வரலாம்னு இருந்தேன். ‘

என்னமா ? இந்த வார கடைசிலே ரெண்டு நாள் ஆபீஸ் வேலை வச்சிருக்கேன். நீங்க இப்படி சொல்றீங்களே. நான் அடுத்த தடவை வரும்போது பார்க்கலாமே..

இல்ல ஆதி. நீ இந்த லீவ் முடிஞ்சு கிளம்பினா திரும்பி வர மறுபடியும் ஒரு வருஷமாவது ஆகும். ஏற்கனவே உங்க கல்யாணம் முடிஞ்சு ஒன்றைரை வருஷம் ஆகுது. ரொம்ப நாள் ஆக்க வேண்டாம்பா..

ஆதியின் மனதில் எரிச்சல் ஏற்பட்டது. அவன் பிளான் படி வியாழன் கிழமை திரும்பி வந்து விட்டால் வியாழன், வெள்ளி ஆபீஸ் வேலை பார்த்து விடலாம்., தேவைபட்டால் சனிக்கிழமையும் இருந்து ஆபீஸ் வேலை முடித்து விட்டு ஞாயிறு அன்று பிரயுவை அழைத்துக் கொண்டு மூனாறு சென்று விடலாம் என்று எண்ணியிருந்தான்.

அவன் அன்னையிடம் மறுத்து பார்த்தான். சுற்றி சொந்தங்கள், அதிலும் வித்யா வீட்டு உறவினர்கள் எனும்போது, ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்த முடியவில்லை. சரி போகலாம் என்று தலையாட்டி விட்டான்.

எரிச்சலாக உள்ளே செல்ல எண்ணியவன், பிரயுவின் பெற்றோர் வரவே நின்றான்,

அவர்கள் அவனிடம் “மாப்பிள்ளை. நல்லா இருக்கீங்களா? “ என்றார்கள்.

அவர்களிடம் நலம் விசாரித்தவன், ப்ரயு தங்கை கல்யாணத்தின்போது வர முடியாத கதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரயுவும் சாப்பிட்டு வந்தவள், அவர்களுக்கு குடிக்க கொடுத்து விட்டு ஆதியின் அருகில் நின்று அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள் ப்ரயு.

சற்று நேரத்தில் அவர்கள் ,

“சரி. மாப்பிள்ளை நாங்கள் கிளம்புகிறோம். “ என, அவன் அவர்களை திகைத்து பார்த்தான்.

“ப்ரயு, அத்தை, மாமா நம்மோட வரலையா?” என்று வினவினான்.

“இல்லை .மாப்பிள்ளை. எனக்கு லீவ் போட முடியாத நேரம். அதான். “

“ஏன் மாமா. இந்த ஃபங்சன் பத்திதான் முன்னாடியே சொல்லிருப்பாங்களே “ என்ற படி வித்யா மற்றும் தன் தாயை பார்க்க, இருவரும் முழித்தனர்.

வித்யா கணவர், “இல்ல மச்சான். அது வந்து இது காது குத்தி மொட்டை அடிக்கிற விஷேசம் தானே. முதல் பிறந்த நாள் அன்னிக்கு பர்த்டே பார்ட்டி மாதிரி குடுக்கலாம்னு இருக்கோம். அதனால் ரொம்ப நெருங்கிய சொந்தகாரங்க மட்டும்தான் கூப்பிட்டு இருக்கோம் “ என, வீட்டு மாப்பிள்ளை அவரிடம் என்ன பேச என்று விட்டு விட்டான்.

பின் மீண்டும் தன் அம்மாவிடம் திரும்பியவன் அவரை தன்னோடு தங்கள் அறைக்கு அழைத்து சென்றான். பிரயுவையும் கண்ணால் அழைத்தான்.

உள்ளே சென்றவன்,

“அம்மா, என்ன இது..? ப்ரயு அப்பா, அம்மாவை கூப்பிடாமல் விட்டு இருக்கீங்க?”

“இல்லபா. அது வந்து வித்யா வீட்டு விசேஷத்துக்கு அவங்கதானே கூப்பிடனும்னு விட்டுட்டேன்.

ஏன். அத நீங்க சொல்ல வேண்டியது தானே?

அவர் ஒன்றும் பேசாமல் இருக்கவும், பிரயுவை முறைத்தவன்,

“உனக்கு தெரியாதா அவங்கள கூப்பிடலன்னு”

“தெரியும்”

“அப்ப எங்கிட்ட முன்னாடியே ஏன் சொல்லல? இவனால் என்ன பண்ண முடியும்னு நினச்சுட்ட இல்ல?” இதை சொல்லும்போது அவன் மனதில் ஏற்பட்ட வலி வார்த்தைகளாக வந்தது.

“அப்படியெல்லாம் இல்லபா. நானுமே. இங்க பார்ட்டி இருக்குன்னா அதுக்கு கூப்பிடுவாங்கன்னு விட்டுட்டேன்”

சரி. நாம குலதெய்வம் கோவிலுக்கு போறோமே அதுக்காவது கூப்பிட்டீங்களா?

அது நாம் வித்யா மாப்ளை வீட்டோடு போறோம். அவங்க கிட்ட திடீர்னு இவங்களும் வராங்கன்னு எப்படி சொல்லன்னு விட்டுட்டேன்..

ஏன்மா. நீங்கதானா இது ? ப்ரயு என் மனைவிம்மா. வித்யா சம்பந்தபட்டதுக்கு அவங்கள காரணம் சொல்லிட்டீங்க. இப்போ என் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் அவங்ககிட்ட சொல்லலைன்ன நல்லாவா இருக்கு. ப்ரயு அப்பா, அம்மாவும் உங்களுக்கு சம்பந்தி தானே. நீங்களே அவங்கள மதிக்கலன்னா, எப்படி வித்யா வீட்டுலே மதிப்பாங்க. ? வர வர நீங்க பண்றது எதுவுமே எனக்கு பிடிக்கல “ என்று கூறி விட்டு வெளியில் வந்தான்.

அவன் மாமனாரிடம் வந்தவன், “மாமா, சாரி. ஏதோ தப்பு நடந்து போச்சு. அம்மா திடீர் பிளானா எங்க குலதெய்வம் கோவிலுக்கு போகணும் சொல்றாங்க. நாங்க அங்க ஊருக்கு வியாழக் கிழமை போய்டுவோம் . நீங்களும் நேரா அங்க வாங்க. “

மாப்பிள்ள இதுலே என்ன இருக்கு? அவங்க மனசுலே என்ன தோணிச்சோ. உங்கள கூட்டிட்டு போகணும்ன்னு நினைக்கிறாங்க. தீடிர்னு எனக்கு இப்போ லீவ் எடுக்க முடியாது. அதனாலே நீங்க அடுத்த தடவை போகும்போது உங்களோட வரோம். இத பெரிசா எடுத்துக்காதீங்க..”

“அப்புறம் நீங்க ஊருக்கு கிளம்பற முன்னாடி ஒரு தடவை நம்ம வீட்டுக்கு வந்துட்டு போங்க மாப்பிள்ளை..”

“கண்டிப்பா மாமா. உங்கள மட்டுமில்லை, என் சகலை எல்லோரையும் நேரில் பார்க்கணும் . கண்டிப்பா வரேன்.. “

அவன் சொல்லவும், பிரயுவின் அப்பா எல்லோரிடமும் விடை பெற்று சென்றார்.

ஹாலில் இருந்தவர்களிடம் ஊருக்கு செல்ல வேண்டியதை எடுத்து வைக்க போவதாக சொல்லி விட்டு சென்றான்.

அவன் உள்ளே போகவும், பிரயுவும் உள்ளே வந்தாள்.

அவள் மேல் உள்ள கோபத்தில் எதுவும் பேசாமல் தன்னுடைய பெட்டியை எடுக்க சென்றான்.

அவனை தடுத்தவள், “நான் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். நீங்க ஒரு வாட்டி பாருங்க..” என்று பெட்டியை திறந்து வைத்தாள்.

அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும்,

“என் மேல் கோபமா ? “ என்று அவள் அழு குரலில் கேட்கவும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவளின் கலக்கமான முகத்தை பார்த்தவன், “சாரிடா ப்ரயு. என்னால் உனக்கு நிறைய விஷயங்களில் சரியான நியாயம் செய்ய முடியவில்லை. இது போல் என் கவனத்துக்கு வருவதை நான் சரி செய்யலாம். ஆனால் நான் அங்கே இருக்கும் போது நீ சொன்னால் தானே தெரியும் “

“இல்ல. ஆதிப்பா. உங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள கூட யாருமில்லாமல் தனியாக இருக்கும் உங்களுக்கு இதை போன்ற விஷயங்கள் தெரிந்தால், உங்கள் நிம்மதி போய் விடும். நீங்கள் நிம்மதியாக இருந்தால் தான் என் சந்தோஷம்” என அவன் அவளை இறுக்கி அணைத்தான்.

அவன் மனைவியை எண்ணி பெருமைபட்டவன், இதே போன்ற விஷயங்கள் அவளையும் கஷ்டபடுத்தும், தன்னிடமும் சொல்லாத நிலையில் அவள் இதை எல்லாம் யாரிடம் பகிர்ந்து கொண்டு, தன் மனபாரத்தை இறக்கி கொள்கிறாள் என்று எண்ண மறந்துவிட்டான்.

வித்யா மாமனார் ஊர் போய் சேர, பத்து மணி நேரம் ஆகும் என்பதால், மதியமே கிளம்பி விட எண்ணியிருந்தனர். இரவு உணவிற்கு அவர்கள் கிராமத்திற்கு சென்று விட வேண்டும் என்று ஏற்பாடு. சரியான நேரத்துக்கு வேன் வந்துவிட, எல்லோரும் கிளம்பினர்.

வித்யா வீட்டில் பிடித்து இருந்தது இருபது பேர் செல்லக் கூடிய டெம்போ ட்ராவலர் டைப் வேன் தான். அதில் ஒரு குடும்பம் வர முடியாத நிலை ஏற்பட்டதால், கடைசி நாலு சீட் காலியாக இருந்தது.

ஆதிக்கு ஜெட்லாக் . இருந்ததால் அவன் வேனில் தூங்க எண்ணினான்.. அதனால் கடைசி சீட்டுக்கு சென்று விட்டான். ப்ரயு அதற்கு முந்தின சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

ஆதி அங்கே சென்று வேன் கிளம்பிய சற்று நேரத்தில் தூங்கியே விட்டான். செங்கல்பட்டு தாண்டியவுடன் சற்று நேரத்தில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி எல்லோரும் சாப்பாடு சாப்பிட சென்றனர்.

ப்ரயு ஆதியை எழுப்ப, அவனோ அசைய வில்லை. எல்லோரும் இறங்கி விட, அவன் தனியாக இருப்பதை பார்த்த ப்ரயு தான் வேனிலே இருப்பதாகவும், தங்கள் இருவருக்கும் தயிர் சாதம் மட்டும் போதும் என்று கூறினாள்.

ஆதி தூங்குவதால், வண்டி ஏசியை அணைக்காமல் சென்றிருந்தார் டிரைவர். அதனால் வண்டி பூட்டிருக்க, விண்டோ அனைத்தும் வெயிலுக்காக கர்டைன் போட்டிருந்தது.

கண்ணை திறந்த ஆதி, சிரித்தபடி பிரயுவை தன்னருகில் இழுத்தவன், அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

“ஹேய். ஆதிப்பா. என்ன நீங்க தூங்கலையா?”

“தூங்கிட்டேந்தான்.. நீ எழுப்பின உடனே எழுந்துட்டேன். “

“அப்புறம் ஏன் சாப்பிட போகல?”

“அதுவாடி முக்கியம்.. ? நான் இங்கே வந்தும் உன்கிட்ட உட்கார்ந்து பேசக் கூட முடியாத படி.. நிலைமை. சரி கிடைச்ச டைம்லே. உன்னோட ரொமான்ஸ் பண்ணலாமேன்னு நடிச்சேன். “

ப்ரயு அழகு காட்டவும் , அவளை கொஞ்ச நேரம் சீண்டினான்.

“ரதிம்மா , நான் இந்த வாட்டி வேற பிளான் போட்டேன்.. அது நடக்கும்போது உனக்கே தெரியும். இவங்க, நம்ம ஊருக்கெல்லாம் போனா, தனியா பேசக் கூட முடியுமான்னு தெரியல.. பார்க்கலாம் “ மூனார் செல்வதை மனதில் வைத்துக் கூறினான்.

எல்லோரும் வரவும், ப்ரயு பழைய படி தன் இடத்துக்கு போக,

ஆதி அப்போத்தான் முழிப்பது போல், எல்லோரையும் பார்த்து விட்டு , தன் மச்சான் கையில் பார்சல்கள் இருப்பதை பார்த்தான்.

“மச்சான். எனக்காக நிக்க வேண்டாம். ப்ரயுவும் நானும் அப்படியே வண்டி மூவிங்லேயே சாப்பிட்டுக்கிறோம்.” என்று கூறி அவளை தன் அருகில் வர வைத்தான்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும், பிரயுவிடம்

“ப்ரயு . எனக்கு தலை வலிக்குது . அப்படியே பிடிச்சு விடு. “ என்று படுத்து தூங்க ஆரம்பித்தான்.

இடையில் காபி மற்றும் இயற்கை தேவைகளுக்காக நிறுத்தியதை தவிர , வேறு எங்கும் நிற்காமல் சென்றதால், அவர்கள் எதிர்பார்த்ததை விட சற்று முன்னரே சென்று விட்டனர்.

அங்கே சென்ற பின் , பிரயுவும் பெண்களோடு சேர்ந்து அமர்ந்து எல்லாவற்றையும் எடுத்து போட்டு செய்தாள். ஆதியும் மற்ற ஆண்களோடு அமர்ந்து அரட்டையும், மற்ற வேலைகளுமாக இருந்தான்.

நல்லபடியாக மறுநாள் காலை குழந்தைக்கு மொட்டை போட்டு விட்டு, ஆதி மடியில் வைத்து காது குத்தப்பட்டது.

ஆதி தாய் மாமனாக செய்யும் சீரோடு, வெளிநாட்டில் இருந்து குழந்தைக்கு வாங்கி வந்த டிரஸ், பொம்மை எல்லாம் அங்கே வைத்துக் பிரயுவோடு சேர்ந்து கொடுத்தான்.

ஊருக்கும், உறவுக்கும் விருந்து பரிமாற பட்டது. அங்கே எல்லாம் காண்ட்ராக்ட் முறை கிடையாது . எல்லாமே உறவுக்காரர்கள் சேர்ந்து ஆளுக்கு ஒன்றாக செய்தனர்.

அன்று இரவு அலுப்பில் அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் ஆதியின் சொந்த ஊர்க்கு சென்றனர்.

- தொடரும் -
 

Rajam

Well-known member
Member
இதுக்கு ஆதி வராமலே இருந்திருக்கலாம்.
என்ன அம்மா இவர்.அவர்கள் மனம
புரிந்து நடக்கலையே.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom