• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 15

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்.

IMG-20210430-WA0029.jpg




அன்று காலேஜில் கல்ச்சுரல் ப்ரோக்ராம். அப்ப சொல்லவும் வேண்டுமா… மாணவ, மாணவிகளின் ஆர்ப்பாட்டத்தை… கலர் கலராக ஆடை அணிந்து பட்டாம்பூச்சி என சுற்றித் திரிந்தனர்.

ஆராதனா மற்றும் தர்ஷனா அவர்களது தோழிகளுடன் ஓரிடத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். காலையில் இருந்து பலவிதமான போட்டிகள் நடைப்பெற, ஆராதனாவும், அம்ருதாவும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றி பெற்றிருந்தனர்.மாலையில் இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சியும் மட்டுமே நடைபெற இருக்கிறது. இறுதியாக பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி. அதற்கு தலைமை தாங்க, வித்தியாசமான முயற்சியாக, அதே கல்லூரியில் படித்து, இப்பொழுது பிரபலமாகி, வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அபிநயனை அழைத்து இருக்கிறார்கள். கல்லூரி முழுவதும் இப்போது அதைப் பற்றி தான் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது‌. ஆராதனா கேங்கும் அதற்கு விதிவிலக்கல்ல...

"ஆரு.. இன்னிக்கி உங்க அண்ணன் தான்‌. சீஃப் கெஸ்டாமே." உனக்கு தெரியுமா? என தர்ஷனா வினவ.
" ம் தெரியும் டி."
" ஆரு… ஏன் டி முன்னாடியே சொல்லலை. நேத்தே சொல்லியிருந்தா, நல்லா ட்ரஸ் பண்ணிட்டு வந்திருப்பேன். இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டு இருப்பேன் " என தர்ஷனா கூற…

சுற்றியிருந்த கூட்டம் முழுவதும் கொள்ளென சிரிக்க… ஆராதனா முகத்திலும் புன்னகை மலர, தர்ஷனாவை பார்த்து, " அடியே இப்பவே அப்படி தானடி இருக்கிற… காலையில் ஒரு ட்ரஸ், இப்போ ஒரு ட்ரெஸ். வித் புல் மேக்கப். இதுக்கு மேல நீ ஏதாவது செய்துக் கிட்ட… பார்க்கிற நாங்க தான் தெரிச்சு ஓடணும்" என்றுக் கூறி அருகிலிருந்த மற்ற தோழிகளுக்கு ஹைபைக் கொடுத்தாள்.

தர்ஷனா அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே மனதிற்குள்," நீ என்னயேவே, இவர்களோடு சேர்ந்து கிண்டல் செய்கிறாயா. செய் டி.. செய். இன்னும் எத்தனை நாளைக்கு என்று பார்க்கிறேன். நான் உன் அண்ணனுக்காக பார்த்துட்டு இருக்கேன். உன்னோட ஃபிரண்டா இருந்தா தான், அவர் என்னை திரும்பி பார்ப்பார் என்று பார்க்கிறேன். இல்லையென்றால் உன்னோட எல்லாம் பிரண்ட்ஷிப் வெச்சிக்க எனக்கு என்ன அவசியம்‌ என் ஸ்டேட்டஸ்க்கு, என்னோட அழகுக்கு, உன் கூட நான் பேசுறதே பெரிய விஷயம். நீ என்னை கிண்டல் அடிப்பதையெல்லாம் கேட்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா. நான் அபியை கல்யாணம் பண்ணி அந்த வீட்டுக்கு வந்ததும், உன்னை தெரிச்சு ஓட வைக்கிறேன்.' என மனதிற்குள் வன்மமாகக் கூறிக் கொண்டிருந்தாள்.

தர்ஷனா முறைப்பதைப் பார்த்த ஆராதனா, " ஹேய் தர்ஷி… நான் விளையாட்டுக்கு சொன்னேன். யூ டோண்ட் டேக் டூ சிரியஸ்லி. எனக்கே நேற்று தான் அண்ணன் சொன்னாங்க." என சமாதானப்படுத்தினாள்.

உள்ளே உலைக்களமாகக் கொதித்தாலும் வெளியே புன்னகைத்த தர்ஷனா… "இட்ஸ் ஓகே... ஆரு… அந்த அம்ருதா வேற அபி, அபி என்று ஏற்கனவே சுத்திட்டு இருப்பா… இன்றைக்கு போட்டியில் ஜெயித்து உங்க அண்ணன் கையில பரிசு வாங்கிட்டா அவள கையில வேற பிடிக்க முடியாது. ஏற்கனவே சூப்பர் சிங்கர்ல மூன்றாவது இடம் வந்ததற்கே அவ்வளவு பெருமை. அவளை சுற்றி எப்பப் பாரு ஒரு கூட்டம். இல்லன்னா இந்த காலேஜில் சேருவதற்கு தகுதி உள்ளவளா இந்த அம்ருதா…சரி அதெல்லாம் விடு. நீ பாடுவது உங்கண்ணனுக்கு தெரியும் தானே…" என…

ஆராதனாவோ," ம் எங்க அண்ணன் கிட்ட ஏற்கனவே நான் பாடியும் காண்பித்து இருக்குறேன். எனக்கு நிறைய டிப்ஸும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்."

"அப்புறமென்ன எப்படியும் மியூசிக் சம்பந்தப்பட்ட போட்டி என்று உங்க அண்ணனிடம் தான் சஜஷன் கேட்பாங்க. அவரு உன்ன தான் எப்படியும் செலக்ட் பண்ணுவார். அப்புறம் இருக்கு அந்த அம்ருதாவிற்கு கச்சேரி . எப்போ பார்த்தாலும் உன்னோட போட்டி போடுற அம்ருதாவோட கொட்டத்தை அடக்க வேண்டும்." என்றுக் கூறி ஆராதனாவை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

தர்ஷனா பேசிக்கொண்டிருப்பதை அந்தப் பக்கம் சென்ற அம்ருதா கேட்டு விட்டு, அவர்களை அலட்சியமாகப் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

"ஏன் அம்ரு, அவங்களை ஒன்னும் சொல்லாம வந்துட்ட?" என்று அவளது உயிர்தோழி ஸ்வேதா கேட்க…

" போடி அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருந்தா, நம்ம எனர்ஜி தான் வேஸ்ட்டாகும். இவங்க கிட்ட வாயால் எல்லாம் பேசக்கூடாது. ஜெயித்து செயலில் தான் காண்பிக்கணும்."

" அதில்லைடி… அந்த தர்ஷனா சொன்னதை கேட்டீயா? அபி சார்… அவங்க தங்கச்சிக்கு தான் சப்போர்ட் பண்ணுவார் என்று சொல்லுறா… எனக்கும் கூட கொஞ்சம் சந்தேகம் தான். அவருக்கு அவரோட தங்கை என்றால் அவ்வளவு இஷ்டம்."

" எனக்கு ஆனால் சந்தேகமே கிடையாது. என்னோட டார்லிங் அபு அப்படிபட்டவர் கிடையாது… ஐ நோ வெரி வெல்,ஹீ இஸ் ஹானஸ்ட். எனக்கு அவர் கிட்ட பிடிச்சதே அந்த நேர்மை தான்." என்று கூறியவள் கனவில் மிதக்க…

" ஏய்… போதும் டி. டீரிம்ஸ்ல இருந்து வெளியே வா. கொஞ்ச நேரமாவது ப்ராக்ட்டிஸ் பண்ணு." என்று அம்ருதவை அழைத்துச் சென்றாள் ஸ்வேதா.

"அதெல்லாம் நல்லா ப்ராக்டிஸ் பண்ணிட்டு தான் வந்துருக்கேன். நீ கவலைப்படாதே பட்டு‌.இன்னைக்கு நான் பாடுகிற பாட்டுல அப்படியே என்னுடைய அபு மயங்கி போய்டுவாரு பார்த்துக்கோ…"

" ஏய்… உனக்கு அபி சார் வருவது முன்னாடியே தெரியுமா…"

"தெரியும்.‌.. ப்ரோக்ராம் ஆர்க்கனைஸ் பண்ற ஃபைனல் இயர் அக்கா, என்னோட பஸ்ல வர்றவங்க தான்… அவங்க சொல்லி முன்பே எனக்கு தெரியும். சோ ஐ ப்ரிப்பேர்டு வெல்." எனக் கண்ணடித்துக் கொண்டே அம்ருதா கூற...

"ஓஹோ… மேடம் அப்படி என்ன பாட்டு பாடப் போறீங்க."

"ஓ… அதுவா, அதுவா… நான் சொல்ல மாட்டேனே.நீ அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டேனே…"

"அம்ரு… ப்ளீஸ் டீ…எனக்கு தலையே வெடிச்சிடும்டி. சஸ்பென்ஸ் தாங்க முடியாது." என ஸ்வேதா கெஞ்ச…

"ப்ச் பாவம்டி நீ… சரி உனக்காக ஒரு க்ளூ குடுக்குறேன்‌. நான் பாடப் போற பாடல் வந்து… வந்து ஒரு தமிழ் பாட்டு." என்றுக் கூறி விட்டு அம்ருதா ஓட…

"அடியே... உன்னை அடிக்காமல் விடமாட்டேன்." என்று ஸ்வேதா துரத்த, "அது தான் நான் ஏற்கனவே சொன்னேனே,நீ அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்." என்ற அம்ருதா அவள் கையில் சிக்காமல் ஓட… என இருவரும் உற்சாகமாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் தங்களை மறந்து சுற்றித் திரிய… இவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று ஒரு கூட்டமே காத்திருந்தது‌.

மாலை மயங்கும் நேரத்தில் மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்க, ஆராதனா முதல் ஆளாக பாடினாள்… முதலில் பல்லவியை நன்றாகப் பாடிய ஆராதனா, சரணம் பாடும் போது, லேசாக தடுமாறி விட்டாள்‌. ஆனால் அந்த தடுமாற்றம், இசைஞானம் உள்ளவர்களால் மட்டுமே உணர முடியும். பாட்டு முடிந்ததும், அனைவரும் கைகளைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அடுத்து ஒவ்வொருவராக பாடி செல்ல, அம்ருதாவின் முறை வந்தது. யாரையும் பார்க்காமல் அங்கு அமர்ந்திருந்த அபிநயனை மட்டும் கண்களால் ஃபோகஸ் செய்தவள், அவனை மட்டும் பார்த்துக் கொண்டே பாடினாள்.

"அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ
கண்கள் கவர்ந்து நிற்கும் வின் ஆளும் இந்திரனோ
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ
சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பாண்டியனோ " என தன் தேன்குரலால் எல்லோரையும் மயக்கிக் கொண்டிருந்தாள் அம்ருதவர்ஷனி.

அபிநயனும் அதற்கு விதிவிலக்கல்ல. 'அடிப்பாவி நான் சின்னப்புள்ளையை தொந்தரவு செய்யக்கூடாது என்று இருக்கேன். நீ என்னவென்றால் இவ்வளவு சேட்டை பண்ற‌... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கடி‌‌. என்னால் உன்னுடைய படிப்புக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது என்று அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தால், நீ என்னை சும்மா இருக்க விடமாட்ட போல.. ' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான் அபிநயன். அவளை சூப்பர் சிங்கரில் பார்த்த நொடி முதல் காதலில் விழுந்து விட்டிருந்த அந்த சூப்பர் ஸ்டார்.

ஒரு வழியாக அம்ருதா பாடி முடிக்க..
அரங்கமே பயங்கரமாக கைதட்டி ஆராவாரம் செய்தது. அந்தக் கைத்தட்டலே யாருக்கு முதல் பரிசு என்பதை முடிவு செய்து விட்டது. இந்த ஆராவாரத்தைப் பார்த்த ஆராதனா, மற்றும் தர்ஷனா முகமே மாறி விட்டது. ஒருவழியாக எல்லா புரோகிராமும் முடிந்து பரிசு தர, அபிநயனை அழைத்தனர். முதலில்
மூன்றாம் பரிசு வாங்கிய மாணவனுக்கு கொடுத்து விட்டு, அவனது ஆம்பிஷன் என்னவென்று கேட்க… அவன் அவனது எதிர்கால லட்சியத்தை கூறிவிட்டு இறங்கி சென்றான்.

அடுத்த பரிசு வாங்க ஆராதனாவை அழைக்க‌… தனது மனதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்து, முகம் மாறாமல் சிரிப்புடன் வாங்கியவள், தனது ஆம்பிஷன் சினிமாவில் பாடுவதே என்றுக் கூறியவள்‍, தன் அண்ணனைப் பார்த்து சிரித்துவிட்டு கீழே இறங்கினாள்.

அடுத்ததாக, " ஃப்ரஸ்ட் ப்ரைஸ் கோஸ் டூ அம்ருதவர்ஷினி." என ஸ்டேஜ்க்கு அழைக்க‌‌…

வெள்ளை நிற அம்பர்லா கட்டிங் சுடிதாரில், துள்ளி குதித்து மான் போல் மேடை ஏறியவள், முகமெல்லாம் புன்னகை மலர, அபிநயன் கையால் பரிசு வாங்கினாள்.

"சொல்லுங்க மிஸ்.அம்ருதவர்ஷினி… உங்களுடைய ஆம்பிஷன் பற்றி… நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்" எனக் கூறி அபிநயன் புன்னகைக்க…

" அதெல்லாம் அப்பப்ப என்னோட ஆம்பிஷன் மாறும் அபி சார். இப்போதைக்கு உங்களை இந்த ஸ்டேஜ்ல பாட வைக்கிறது தான்." என்றவள், "ப்ளீஸ் சார்… நாங்க உங்க மியுசிக் அடிக்கடி கேட்டு இருக்கோம். பட் நீங்க பாடி அவ்வளவாக கேட்டதில்லை. எங்களுக்காக ஒரு ப்யூ லைன்ஸ் பாடினால் போதும்.' என கேட்க.

உடனே அங்கு ஆடிட்டோரியத்தில் இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும்… பாடுங்க அபி சார் எனக் கத்த…

" ஓகே… கைஸ் நான் பாடுறேன்" என்று ஆடிட்டோரியம் பார்த்துக் கூறியவன், அம்ருதாவிடம் திரும்பி," சொல்லுங்க மேடம்… என்ன பாட்டு பாட… எப்படியும் எதாவது செலக்ட் பண்ணி தான் வச்சுருப்பீங்க சொல்லுங்க." என…

" அப்சலூட்லி… கரெக்ட் சார். நான் ஏற்கனவே ஒரு பாடல் செலக்ட் பண்ணி வச்சுருக்கேன்" என்று புன்னகைத்தாள் அம்ருதா…

' அடிப்பாவி… ஒரு பேச்சுக்கு கேட்டா… உன்மையிலே ரெடி பண்ணி வச்சுருக்கியா… இதுல என்ன வில்லத்தனம் பண்ணியிருக்கிறாளோ…' என மனதிற்குள் புலம்பிக் கொண்டு, வெளியே அமைதியாக நின்றான்.

"ஆஷிக் -2 படத்துல இருந்து தும் ஹி கோ பாடல்… பட் தமிழ்ல பாடணும்."

" ஏன் மேடம்...உங்களுக்கு ஹிந்தி தெரியாதா?" என கேள்வியாக புருவத்தை உயர்த்த…

"மெயின் தோடா பஹுட் ஜான்டா ஹூன் ஜீ. பட் இந்தியை விட நம் தாய் மொழியில் பாடும் போது உணர்வுகளும் பேசும் சார்." என்றவள் தனது ஃபோனில் இருந்து தமிழ் வெர்ஷனை எடுத்துக் கொடுத்து பாட சொன்னாள்‌.

" ஓஹோ" என்ற அபி, தன் பாக்கெட்டில் இருந்த கூலர்ஸை எடுத்து கண்களில் மாட்டிக் கொண்டு,முழு பாடலையும் அம்ருதாவைப் பார்த்துக் கொண்டே பாடி முடிக்க…

அம்ருதாவோ, அவன் கண்களின் உணர்வுகளை படிக்க முடியாமல் தடுத்த, கூலர்ஸை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது ஏமாற்றத்தைப் பார்த்த அபிநயன், அடக்கப்பட்ட சிரிப்புடன் விடைபெற்று கீழே இறங்கி சென்றான்.

அவன் பின்னேயே கீழே இறங்கிய அம்ருதாவை எல்லோரும் பிடித்துக் கொண்டு பாராட்ட… அவளோ, மகிழ்ச்சியோடு எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.

அங்கு வந்த தர்ஷனா சும்மா இராமல், " ஏய்… முதல்ல வந்துட்ட என்று ரொம்ப ஆடாதே. என்னவோ, தெரியல ஆராதனாவோட அண்ணன், போயும், போயும் உன்னை போய் செலக்ட் பண்ணிட்டாங்க… உன்ன விட ஆராதனா தான் நல்லா பாடினா தெரியுமா? " என…

" லுக் தர்ஷனா... ஒரு போட்டியில் வெற்றியோ, தோல்வியோ அதில் கலந்துகிட்ட எங்களுக்கு அதுவே பெருமை தான். அதில் கலந்துக்காத நீ வந்து எந்த விமர்சனமும் பண்ண தேவையில்லை புரிகிறதா… அப்புறம் தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி. அதனால நான் ஜெயிக்காமல் இருந்திருந்தாலும், நான் சந்தோஷமாகத் தான் இருந்திருப்பேன்." என்று கூறிய அம்ருதா, கண்கள் கலங்கி நின்று கொண்டிருந்த ஆராதனாவை அழுத்தமாக பார்த்து விட்டு சென்றாள்.

ரொம்ப நேரமாக கார் பார்க்கிங்கில் காத்திருந்த அபிநயன், ஆராதனாவை காணாமல் மீண்டும் தேடி வந்தவன், பார்த்தது என்னவோ, கண்கள் கலங்கி இருந்த தங்கையை தான். " ஆருமா… என்னாச்சு?"என்று பதற்றத்துடன் வினவ…

இது தான் சான்ஸ் என்று தர்ஷனா பதில் கூறினாள். அம்ருதா சொல்லாததையெல்லாம் சொன்னதாக ஏற்றி சொல்ல…

அவளை சற்றும் பொருட்படுத்தாமல், தன் தங்கையுடன் திரும்பிய அபிநயன் "ஆரு மா... இதற்கெல்லாமா கண் கலங்குவாங்க... பி ஸ்ட்ராங்க்.அடுத்த போட்டியில் பாத்துக்கலாம்."என்று சமாதானப்படுத்தி விட்டு அம்ருதா எங்கே என்று கண்களால் தேடினான்.

அவளும், அவர்கள் கண் பார்க்கும் தூரத்தில் இருந்து நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

அபிநயன் இரண்டே எட்டில் அம்ருதாவின் முன் நின்று," எனிவே கன்கிராட்ஸ் அம்ருதவர்ஷினி… பட் ஆராதனா இந்தப் போட்டியில் தோற்றாலும் வாழ்க்கையில் ஜெயித்து முன்னேறுவாள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவளுக்கு ஒரு பாடகியாக வருவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது புரிந்ததா… இன்னைக்கு அவ செய்தது ஒரு சின்ன மிஸ்டேக். நீ அதுக்கு அவளை கிண்டல் செய்து இருக்க கூடாது. அப்புறம் அவளிடம் இனி மேல் எந்த வம்பும் வைத்துக் கொள்ளாதே, தொலைத்து விடுவேன் ஜாக்கிரதை." என்று வெளியில் கடிந்துக் கொண்டவன், மனதிற்குள், 'ஆமாம் டா... நீ ஆருவோட சண்டை போட்டுக் கொண்டிருந்தால்,கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கும். அவளுக்கும் சண்டை வரும். நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும்‌ அதுக்கு தான் சொல்றேன்‌. அவக்கிட்ட எதுவும் வச்சுக்காதே டியர்' என்று மனதுக்குள் அவளை கொஞ்சி கொண்டிருந்தான்.

அவன் மட்டும் அன்று வெளியே கடுமையாக பேசாமல் என்னவென்று விசாரித்து இருக்கலாம். அதை செய்யாத அபிநயனிடம், அம்ருதா பயங்கர கோபத்தில் இருந்தாள்‌. அதன் பலனைத் தான் இன்று அனுபவிக்கிறேன்' என்று தன்னையே நொந்துக் கொண்டிருந்தான்.

" அபி… அம்ருதா கண் விழிச்சிட்டா" என கௌதம் உலுக்க‌‌… பெருமூச்சு விட்டுக் கொண்டே பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தான் அபிநயன்.

" எப்படி மா‌… இருக்கிற… இப்போ பரவாயில்லையா" என மேனேஜர் அவளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

"என் கிட்ட அவ்வளவு நேரம் நல்லா பேசிட்டு இருந்த மா‌… திடீரென்று கீழே மயங்கி விழவும் பயந்துட்டேன்மா…" என…

" பரவாயில்லை அங்கிள்… நீங்க தான் அங்க போக வேண்டாம் என்று சொன்னீங்க‌… நான் தான் கேட்கலை. அங்க போய் அந்த லாரியைப் பார்க்கவும் அம்மா ஞாபகம் வந்துடுச்சு. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க அங்கிள்." எனக் கூறி புன்னகைக்க…
ராஜன் தன் மருமகளோட குணத்தை நினைத்து மகிழ்ந்தவர், அவள் தலையை வாஞ்சையாக தடவி, " இனிமே நீ எதுக்கும் கவலைப்படக் கூடாது. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கிறோம்" என.

சரியென தலையாட்டினாள் அம்ருதா‌.

" அம்ரு மா... எனக்கு ஒரு சந்தேகம் அபு யாரு?" என மேனேஜர் கேட்க…

"என்ன அங்கிள் கேட்குறீங்க?" என பதற்றத்துடன் வினவ…

"நீங்க டென்ஷன் ஆகாதீங்க மா… அது ஒன்னும் இல்லமா, நீங்க மயங்கி விழும் போது அம்மான்னு கத்தாமல், அபு என்று கத்திக் கொண்டே விழுந்தீங்க… ஒரு வேளை உங்க அம்மாவ அப்படி கூப்பிடுவிங்களோ. என்று கேட்டேன்." என…

அம்ருதாவோ, ' ஐயோ! ஏதோ உளறிட்டோம் போலிருக்கே…'
என்று நாக்கை கடித்துக் கொண்டவள், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க…

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்ட, அபிநயனும், கௌதமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து அபிநயன் மலர்ந்து சிரித்தான்.

தொடரும்…..
 

Lakshmi

Well-known member
Member
என்ன நடந்தது என்று கேட்காமல் பேசியதன் பலன் தான் இப்போது அம்ரு நடந்து கொள்வது.
 

பிரிய நிலா

Well-known member
Member
அன்று விசாரித்து பேசியிருக்கலாம்.. முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விட்டது..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom