• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 15 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் - 15

வித்யா தன் அண்ணன், அம்மா என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் நல்ல பெண் தான். தன் அண்ணன் தனக்கு நிச்சயம் நல்லது தான் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளவள். அதனால்தான் தன் அண்ணன் பார்த்த மாப்பிளை என்று அவள் கணவர் மேல் மிகவும் அன்பு வைத்து இருந்தாள்.

வித்யா மாமியார் தனக்கு ஒரே மகன் எனபதால் தன்னோடு அவன் என்றும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த வித்யா கணவர், அவளின் அன்பை பார்த்து அவரும் அவளிடம் மிகுந்த காதல் கொண்டார். அதனால் தான் வித்யா உண்டான போது வெளிநாட்டிற்கு செல்ல கிடைத்த வாய்ப்பை மறுத்து, ஆதியிடம் கூட கோபம் கொண்டார்.

அது வரை வித்யா மாமியார் , தன் மகன் தன் பேச்சை கேட்பான் என்று நம்பிக்கை வைத்திருந்தவர், அதற்கு பின் மகன் இனிமேல் வித்யா பேச்சைத்தான் கேட்பான் என்று உணர்ந்து கொண்டார். மகனின் தன்மை அறிந்த வித்யா மாமியார், வித்யாவிடம் எந்த பிரச்சினையும் வைத்துக் கொள்ளாமல், அவள் பிறந்த வீட்டினரை முக்கியமாக அவள் அண்ணன், அண்ணி இருவரிடமும் பிரச்சினை செய்து கொள்ள வைத்தார்.

அதையும் நாசுக்காக வித்யாவே அவர்களை கேள்வி கேட்குமாறு தூண்டி விடுவார். அதன் விளைவே வித்யா அவள் அண்ணனின் சூழ்நிலை தெரிந்தும் , அவன் தன் கணவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணியது.

ஹாஸ்பிடளில் வித்யாவிடம் பேசிய ஆதி, அதற்கு பின் அவளிடம் பேசுவதில்லை. வித்யா வீட்டிற்கு சென்ற அன்று மீண்டும் தன் வீட்டிற்கு பேசினான் ஆதி,

"ப்ரயு எல்லோரும் வீட்டிற்கு வந்தாச்சா? " என்று வினவினான்.

"ஆமாம். அங்கே எப்படி இருக்கு ? புயல் எல்லாம் ஓய்ந்ததா? வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டீங்களா? "

"ஆமாம்டா. இங்கே ரெண்டு நாளா பரவா இல்லை இன்னிக்குதான் ஆபீஸ் போனேன். "

"சரி. இனிமேல் எப்போ உங்களால் இங்கே வர முடியும்?"

"தெரியலடா இந்த ஒரு வார வேலை எல்லாம் அப்படியே இருக்கு. அதனாலே அதை கொஞ்சம் செட் ரைட் பண்ணிட்டு மறுபடி விசா எல்லாம் ரெடி பண்ணும். நான் ஒரு பத்து நாள் கழிச்சு என்ன பண்ணலாம்ன்னு பார்க்கிறேன் "

ஆதியின் வரவு மற்றும் கல்யாணம் எல்லாவற்றிற்கும் சேர்த்து பதினைந்து நாட்கள் லீவ் எடுத்திருந்த ப்ரயு ஆதியின் நிலையை பார்த்து, அவனிடம் சொல்லி விட்டு லீவை கான்செல் செய்துவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். ஆதி எப்படியும் கூடிய சீக்கிரம் வருவான் அப்போது தேவைப்படும் என்று எண்ணினாள்.

வழக்கம் போல் இரவுகளில் பேசும் ஆதியிடம் பிரயுவும் பேசிக் கொண்டிருந்தாள். அவன் இரவு நேரங்களில் பேசுவான் என்பதால், முடிந்த வரை வேலைகளை முடித்து விட்டு தான் அவனோடு பேச வருவாள்

அன்று இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் அத்தை அழைக்க, அவனிடம் ஒரு கால் மணி நேரம் கழித்து ஆன்லைன் வருவதாக சொல்லி விட்டு சென்றாள். இதை போல் தினமும் நடக்க ஆரம்பித்தது.

சற்று நேரம் கழித்து அவள் வரவும், என்னவென்று வினவினான்

"ஒண்ணுமில்லபா. பகலில் நான் வேலைக்கு போய் விடுவதால், அத்தை தான் வித்யா, குழந்தை இருவரையும் கவனித்து கொள்கிறார்கள். இரவுகளிலும் அவரே முழிக்க முடியுமா? அதனால் இரவுகளில் நான் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு, அத்தையை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறேன். உங்களோடு பேசும்போது , சமயத்தில் குழந்தை அழுதால் , எடுத்து வித்யாவிடம் கொடுத்து வாங்கி விடுவேன் " என்றாள்.

“குழந்தைக்காக அடிக்கடி முழிக்க வேண்டியிருக்கிறதா ப்ரயு?"

"ஆமாம்பா சின்ன குழந்தை அல்லவா? அது பசிக்கு முழுதுமாக சாப்பிட முடியாமல், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு மீண்டும் கொஞ்ச நேரத்தில் அழும் எப்படியும் ஐந்து, ஆறு முறை எழுந்து கொள்ளும்"

உனக்கு மறுநாள் வேலைக்கு போக கஷ்டமாக இல்லையா ?"

"கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் இது நாம் தானே செய்ய வேண்டும்."

மேலும் சற்று நேரம் அவளிடம் பேசி விட்டு வைத்தான்.

மறுநாள் இரவு தன் தாயிடம் முதலில் பேசினான் ப்ரயு

பொதுவான நலம் விசாரித்த ஆதி, "அம்மா உங்களுக்கு உதவியாகவும், வீட்டு வேலைக்கும் சேர்த்து ஒரு ஆளை ஏற்பாடு செய்து கொள்ளுங்களேன் "

"ஏன் ஆதி?"

"இல்லைமா இப்போ வித்யா, குழந்தை கவனிக்கவே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இதில் வீட்டில் சமையல், மற்ற வேலையும் சேர்த்து எப்படி பார்த்துக் கொள்வீர்கள்? அதனால் தான் சொல்கிறேன்."

"காலையில் எல்லா வேலையும் ப்ரத்யா முடித்து விட்டு தானே செல்கிறாள் பின் என்ன?

"அம்மா உங்களுக்கு பகலில் வேலை சரியாக இருப்பதால் இரவுகளில் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறீர்கள் ப்ரத்யா என்ன செய்வாள்? காலையில் எல்லா வேலையும் முடித்து விட்டு, ஆபீஸ்க்கு சென்று , பிறகு இரவுகளில் முழித்தால் அவளுக்கும் ரெஸ்ட் வேண்டாமா? நீங்கள் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டால், சமையல் மற்ற வேலை எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ப்ரத்யா காலையில் நீங்கள் வந்த பின் கொஞ்சம் தூங்கி எழுந்து ஆபீஸ் போவாள் இல்லையா ?" என்றான்.

"ஆக, உன் பொண்டாட்டி கஷ்டப்படக் கூடாது என்பது தான் இந்த யோசனைக்கு காரணம் இல்லையா?"

"ஏன்மா எதை சொன்னாலும் இப்படியே பேசுகிறீர்கள் நீங்கள் கஷ்டபட்டால் மட்டும் நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? அது மாதிரி தானே அவளும். இத்தனைக்கும் அவள் என்னிடம் எதுவும் சொல்லவதில்லை. நானாக கேட்டுத் தெரிந்து கொண்டேன் "

"நீ கல்யாணம் முடித்த பின் மிகவும் மாறி விட்டாய். எதற்கும் பணம் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறாய். நீ சொன்ன மாதிரி ஆள் போட்டால் எப்படியும் மாதம் மூவாயிரம் வரை கொடுக்க வேண்டும் "

"அம்மா நான் யோசிக்காமல் சொல்லவில்லை முன்பு நாம் மூவர்தான் எங்கள் வேலையை நாங்களே செய்து விடுவதால் உங்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால் இப்போது குழந்தை பிறந்த வீட்டில் அதை கவனிக்கவே ஒருவர் தனியாக வேண்டும். அதனால் தான் சொல்கிறேன் "

"என்னவோ போ. நீயே முடிவு செய்து கொள் " என்று வைத்து விட்டார்.

அடுத்து பிரத்யாவிடம் பேசிய ஆதி, முதலில் அவனுடைய ஐடியா என்று வேலைக்கு ஆள் வைப்பது பற்றி கூறினான்.

"நல்ல ஐடியா தான் ஆதிப்பா. அதே போல் ஆள் வைத்துக் கொண்டால் அட்லீஸ்ட் காலையில் நான் கொஞ்சம் தூங்கி எழுந்துக்கலாம். மேலும் பகலில் அத்தைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும். இல்லை என்றால் குழந்தை தூங்கும் நேரம் அவர்கள் மற்ற வேலையெல்லாம் பார்க்க வேண்டி அவர்களுக்கு ரெஸ்ட் இல்லாமல் போய் விடுகிறது, இதை முதலில் அத்தையிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்கள்"

ஆதி ஏற்கனவே தன் அன்னையிடம் பேசியதாக கூறியவுடன், அத்தை ஒத்துக் கொண்டார்களா என்று கேட்டாள்.

அவன் தாயின் அரைகுறை சம்மதம் பற்றி சொன்னவுடன் , "

"இந்த ஐடியா ட்ராப் பண்ணி விடுங்கள்"

"ஏன் ப்ரயு "

"அவர்கள் முழு சம்மதம் இல்லாமல் செய்தால் அது நன்றாக இருக்காது. மேலும் என் மேல் இன்னும் அவர்களுக்கு கசப்பு வரக் கூடும்"

"இதோ பார் நீ எல்லோருக்கும் யோசிக்காதே. உன் உடம்பை பார் நாளைக்கு நீ படுத்துக் கொண்டால் யாருக்கு கஷ்டம் ?"

"நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அவர்கள் இஷ்டம் இல்லாமல் செய்வதால், வருபவர்களை எதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அது சரியாக வராது "

"அப்படியெல்லாம் நடக்காது . ப்ரயு நான் சொல்வதைக் கேள் "

"இல்லை ஆதிப்பா. உங்களுக்கு புரியவில்லை இஷ்டம் இல்லாமல் ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது. ப்ளீஸ் விட்டு விடுங்கள்"

"நான் ஒவ்வொரு விஷயத்திலும் உனக்காக யோசித்து சொல்கிறேன். ஆனால் நீ எதாவது சொல்லி அதை தடுத்து விடு. இனிமேல் உனக்கு நான் எதற்கும் சப்போர்ட் செய்ய போவதில்லை " என்று கோபமாக வைத்து விட்டான்.

கல்யாணமாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கிய இத்தனை நாட்களில் ஆதி பிரயுவிடம் கோபப்படுவது முதல் முறை. முதலில் ஒரு முறை கூட வருத்ததோடுதான் வைத்தானே ஒழிய, கோபப்படவில்லை. இந்த முறை அவனால் கட்டுபடுத்த முடியாமல் திட்டி விட்டான் .

ஏற்கனவே வித்யா டெலிவரிக்குப் பிறகு இருவரும் அதிகமாக பேச முடியவில்லை. வேலை அதிகம் பிரயுவிற்கு. மேலும் ப்ரயு மாமியாருக்கு இரவுகளில் ரெஸ்ட் தேவை என்பதால் , அவர் ப்ரயு ரூமில் படுத்துக் கொண்டார். அதனால் வேறு அவளால் அவனிடம் நெருக்கமாக பேச முடியவில்லை

இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு ஆதி, பிரயுவிடம் போனில் பேசுவதை விட்டு விட்டான். மறுநாள் காலையில் அவளுக்கு இனிமேல் அவனுக்கு வேலை அதிகம் இருப்பதால் இரவுகளில் போன் பேச முடியாதென்றும், நேரம் கிடைக்கும் போது மெசேஜ் செய்வதாகவும் கூறினான்.

அதன் படி தினமும் அவளிடம் whatsup இல் விசாரிப்பவன் அவள் பதில் அனுப்பும் வரை விடாமல் மெசேஜ் செய்வான். அவள் அனுப்பிய பின் வேலையை பார்க்க போய் விடுவான்.

ஆதியை பொறுத்த வரை அவன் கல்யாணம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருக்கும்போது பிரயுவோடு திருமணம் நடந்தது. அவன் அம்மா, தங்கை இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு முகம் இருக்கும் என்பது அவன் எதிர் பாராதது. அவளை விட்டு வரும்போது அவன் மனதில் ப்ரயு அவர்களிடம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தான் இருந்தது. அவளோடு இருந்த பதினைந்து நாட்களில் அவளின் குணம் புரிந்தாலும், ஒரு சிறு பயம் இருந்தது.

ஆனால் இப்போதோ அவனுக்கு பிரயுவை பற்றிய எண்ணமே மேலோங்கி இருந்தது. தன் அம்மா, தங்கை இருவரும் தன் மீது இவ்வளவு பொசெசிவாக இருப்பார்கள் என்று எண்ணவில்லை. இப்போது பிரயுவிற்காக இவன் யோசிக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்கள் பார்க்கும் விதம் குறித்து ஆதிக்கு வருத்தம் மட்டுமில்லாமல் மிகுந்த குற்றவுணர்ச்சியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பிரயுவும் மற்றவர்களை பற்றி யோசிக்கவும், அவனுக்கு அவளிடத்தில் கோபம் ஏற்பட்டது.

பிரயுவிற்கு இது கஷ்டமாக இருந்தாலும், அவன் எப்படியும் விரைவில் நேரில் வரும்போது அவனை சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

இதற்கிடையே ப்ரியாவிற்கு திருமணம் நிச்சயம் ஆகியது அவள் சொன்னவுடன் வாழ்த்து சொல்லியவள் ,

"யாருடி உன்கிட்ட மாட்டின அப்பாவி ?"

"அப்பா பார்த்த மாப்பிள்ளைதான். பெண் பார்த்து விட்டு போக வந்தவர்கள், உடனே நிச்சயம் செய்து விட்டார்கள். "

"மாப்பிள்ளை பேர் என்ன ? என்ன செய்கிறார் ?

"பிரபாகரன் ITயில் தான் வேலை செய்கிறார். "

"நல்ல பேர் . ஆள் எப்படி? போட்டோ வைத்திருக்கிறாயா ?"

"இதோ " என்று காண்பிக்கவும்,

"என்னடி? கையிலே வச்சுக்கிட்டு இருக்க போலே. நல்லா இருக்கார். நீ பிளாட் ஆயிட்டியா ? என்று வினவினாள்

"அது எல்லாம் ஒன்னும் இல்லை. பொண்ணு பார்க்க வந்தப்போ அவங்க பாமிலிலே எல்லாரும் நல்லா பழகுனாங்க. அவர் ரொம்ப பொறுப்பானவர் அப்படி இப்படின்னு எங்கப்பா ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார். நமக்கோ பொறுப்புக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது. பார்த்தேன் சிக்கிட்டாண்டா அடிமைன்னு ஓகே சொல்லிட்டேன் "

"உன்னை என்ன சொல்ல தெரியல போ " என்றவள் , "எப்போ கல்யாணம் "

"அடுத்த மாதம் இருக்கும் டி"

"ஹே சூப்பர் போ ஆதியும் அப்போ வரேன்னு சொல்லியிருக்கார்" என்று சந்தோஷப்படவும்

"ஒஹ் அப்போ கல்யாணத்துலே மீட் பண்ண வைக்கலாம் ஆனால் அவருக்கு ஒரு வருஷம் பெங்களூர் ப்ராஜெக்ட் போகணுமாம்டி. .உன்னை விட்டு போகத்தான் கஷ்டமா இருக்கு"

"சீ லூஸ் நீ அவரோட போ. வேலை கூட முக்கியமில்ல கண்டிப்பா வேலைக்கு போகணும் என்றால், அங்கே போய் தேடிக்கோ. யாருக்காகவும் அவர விட்டு தனியா இருக்கிற தப்ப மட்டும் பண்ணாதே. " என்று சீரியஸ் ஆக சொல்லவும்

"ஏய் என்னடி எதுவும் பிரச்சினையா? நீ இவ்ளோ சீரியசா பேச மாட்டியே ?'

"இல்லடி. சில சமயம் ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு கல்யாணம் ஆகாம அப்பா வீட்டில் இருந்து இருந்தா கூட நிம்மதியா இருந்திருப்பேன். எல்லோருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு என் வருத்தத்தை மறைச்சு வாழ வேண்டி இருந்திருக்காது "

"ப்ரத்யா என்னடா?" என்று அவள் வருத்தமாக கேட்கவும், மெல்ல சுதாரித்த ப்ரயு,

"சாரிடா. இந்த சந்தோஷ நேரத்துலே உன்ன வருத்தபடுத்திட்டேன். நீ பெங்களூர் கிளம்பற வழிய பாரு " என்று ப்ரியாவை ப்ரயு சமாதனம் செய்தாள்.

அதற்கு பிறகு, ப்ரியாவிடம் மனம் விட்டு பேசும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்க வில்லை பிரியா தன் கல்யாண வேளைகளில் பிஸி ஆகி விட , வீட்டிலோ ஆதி அவளிடம் போனில் பேசுவதில்லை. வெறும் மெசேஜ் மட்டுமே

தன் தங்கைகளிடம் பேசிக் கொண்டிருந்தவள், அவர்களும் குடும்ப சூழலில் சிக்கி விட மெதுவாக அதுவும் குறைந்தது. எப்போதுமே தன் பெற்றோர்களிடம் தன் வருத்தம் காண்பிக்க மாட்டாள்.

ஆதி வருவதற்காக காத்திருந்த ப்ரயு, தன் மனதில் உள்ளதை அவனோடு நேரில் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று காத்திருந்தாள்.

- தொடரும் -
 

Rajam

Well-known member
Member
பிரயூவுக்கு மன அழுத்தம் அதிகமாகி
நோய தேடிக்கப் போறா.
மனம் விட்டு பேச முடியாம தவிப்பது
கஷ்டமா இருக்கு.
 

kothaisuresh

Well-known member
Member
அடடா மனசு விட்டு பேச ஆள் இல்லாமல் மன அழுத்தத்தை உருவாக்கிக்க போறா
 

New Episodes Thread

Top Bottom