• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 14

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசை வெல்லுங்கள்.
IMG-20210430-WA0029.jpg



அத்தியாயம் - 14

யார் முதலில் பேசுவது என்று ராஜனும், அபிநயனும் போட்டி போட்டுக் கொண்டு அமைதியாக இருக்க…

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நிர்மலா பொங்கி எழுந்து, " டேய் அபி… எதுக்குடா எல்லாரையும், ஏதோ பேசணும்னு வரச் சொல்லிட்டு, இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? அமைதியாக இருந்தாலாவது பரவாயில்லை. நீ உங்க அப்பாவை, லவ்வரை பார்ப்பதுப் போல வச்ச கண் வாங்காமல் பார்ப்பதும், உங்க அப்பா, நீ பார்க்காதப்ப உன்னை பார்ப்பதும், நீ பார்த்து விட்டால் தலையை திருப்பிக் கொள்வதுமாக பார்க்க சகிக்கவில்லை டா. பேக்ரவுண்ட் மியூசிக் ஒன்று தான் இல்லை. என்ன விஷயம் என்று முதலில் சொல்லப் போறீயா? இல்லையா?" என பொருமினாள்.

அம்மா பேசியதைக் கேட்ட அபிநயன், பக்கென்று சிரித்து விட்டான். மகன் சிரிப்பதைப் பார்த்த ராஜன் அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார். ஆராதனா இன்னும் பயத்துடனே இருந்தாள்.

" ஐயோ! மா… நான் சொல்லப் போற விஷயத்தை டாட் எப்படி எடுத்துக்கப் போறாருனு தெரியலை. அதான் அவரைப் பார்த்துட்டு இருந்தேன். நீங்க என்னவென்றால் எங்க இருவரையும் வைத்து காமெடி பண்ணிட்டு இருக்கீங்க" என்று சிரித்துக் கொண்டே அபிநயன் கூற…

" டேய் கண்ணா… என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு. அப்பா, என்னைக்கு உங்க இரண்டு பேரையும் கடிந்து பேசியிருக்கிறார். தைரியமாக சொல்லுடா." என நிர்மலாக் கூற...

'அது தானே பயமா இருக்கு' என்று தனக்குள் முனுமுனுத்தவன்,"அது மா... அம்ருதாவுக்கு வீட்டிலேயே இருப்பது ரொம்ப போர் அடிக்குதாம், அதான் அப்பாவோட ஆபீஸ்க்கு போகட்டுமா என்று கேட்குறா…"

ராஜன், 'என்ன சொல்லி அம்ருதா வருவதை சற்று தள்ளிப் போடலாம்.' என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டே மகனைப் பார்த்தவர், "உனக்கு ஒரு வாரத்திற்கு எந்த கமிட்மென்டும் இல்லை தானே. புதுபடத்திற்கு மியூசிக் கம்போஸ் பண்ண இன்னும் நாள் இருக்கு தானே. அதுவரை வீட்டில் தானே இருப்ப‌‌. நீ வீட்ல இருக்கும் போது, அம்ருதா உன்னோடு இருப்பது தான் சரி." என்று மகனிடம் கூறியவர், அம்ருதாவிடம் திரும்பி," நீ என்னம்மா சொல்லுற." என கனிவாக வினவ…

' அம்ருதா என்ன பதில் சொல்லுவா.' என்பதை நன்கு அறிந்த அபிநயன் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான். அதற்காகத் தானே காலையில் அம்ருதாவை ஒரு பயம் காட்டி வைத்திருந்தான். அவள் வாயாலேயே ஆஃபிஸ்க்கு வரேன் என்று சொல்ல வைக்க நினைத்தான்.

அதே மாதிரி அவளும் வேகமாக ஆரம்பித்தாள், "அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. எனக்கு ரொம்ப போரடிக்குது. அவரு இங்க இருந்தாலும் ஃபோனில் எதையாவது பார்த்துக்கிட்டும், இல்லை மியூசிக் கேட்டுட்டு இருப்பார். எனக்கு சும்மாவே இருப்பது ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு மாமா‌‌… நான் உங்களோடவே ஆஃபீஸ் வரேனே… ப்ளீஸ் மாமா." என…

இது வரை எதுவுமே கேட்காத மருமகள்… அதுவும் தன்னிடம் பேசுவதற்கே பயப்படுபவள், இன்று அதையும் மீறி கேட்க… மறுக்க மனமில்லாமல் தலையை ஆட்டினார்.

" இதுக்குத் தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம்." என்று அபிநயனை முறைத்து விட்டு நிர்மலா உள்ளே சென்றாள்.

முதல் ஆளாக ஆராதனா எழுந்து அவளது அறைக்குச் செல்ல முயன்றாள். "ஆராதனா." என முழு பெயரிட்டு அபி அழைக்க…

அவன் அழைத்த விதத்திலே பயந்து தன் அண்ணனைப் பார்த்தாள் ஆராதனா. "உன் கூட கொஞ்சம் பேசணும்."என்றுக் கூறி அவளுடனே சென்றான் அபிநயன்.

மாடிக்குச் செல்லும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அம்ருதா தனது அத்தையைப் பின்பற்றி உள்ளே சென்றாள்.

அங்கு தனியாக அமர்ந்திருந்த ராஜன், இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் அமர்ந்து இருந்தவர், பிறகு, ' சரி எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், நாம் என்ன தப்பா செய்தோம்.' என்று நினைத்துக் கொண்டே தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். ஆனால் அவரும், ஆராதானாவும் ஒன்றை மறந்து விட்டனர். ஒருவரின் தப்பிற்கு துணைப் போவதும் தவறு என்பதை மறந்து விட்டனர்.

நிர்மலா…" அம்ரு… நானும் கொஞ்சம் நேரம் படுக்கப் போறேன். நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா." என.

சரியென தலையாட்டிவள்,' ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்தே டயர்டாயிட்டேன். என மனதிற்குள் நினைத்தாள், 'மாடிக்குப் போனாலும் படுத்துவாரு, போகலைனாலும் படுத்துவாரு, இந்த அபியோட தொல்லை தாங்க முடியலை. எப்படியோ… நாளையிலிருந்து மாமாவோட ஆஃபிஸ்க்கு போய் தப்பிச்சிடலாம்.' என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டே மாடி ஏறினாள்.

ஆராதனாவின் அறையில் கைகளை கட்டிக் கொண்டு, ஒன்றும் கூறாமல் அவளையே ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்‌. ஏதாவது பேசினால் கூட பரவாயில்லை பார்த்துக் கொண்டே இருப்பது அவளுக்கு இன்னும் சற்று பயத்தை தான் கொடுத்தது.

தைரியத்தை கூட்டி, " என்ன அண்ணா?" என ஆராதனா கேட்க…

" அதையே தான் நானும் கேட்குறேன் ஆராதனா… உனக்கு என்ன பிரச்சினை… நம்ம வீட்டு ரூல் உனக்குக் தெரியாதா. உன் ஃப்ரண்டை எதுக்கு ரூமுக்கு அழைச்சிட்டு போன…"

அது என்று ஆராதனா தயங்க...

" ம் சொல்லு… இனி மேல் இந்த அண்ணன் பேச்சைக் கேட்கக் கூடாது என்று முடிவு எடுத்திட்டியாடா…" என தங்கையை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே வினவ...

அபிநயன் கேட்ட விதத்தில் கண்கள் கலங்க,"அப்படி எல்லாம் இல்லை ணா."

"ஓ… இல்ல வெளிநாட்டுக்கு போனவனுக்கு இங்க நடக்கிறது எப்படி தெரியப் போகுது என்று நினைச்சியா?"

"அப்படியெல்லாம் இல்லை அண்ணா. தர்ஷனா ரொம்ப நாளா மியூஸிக் ஸ்டுடியோவுக்கு அழைச்சிட்டு போக சொன்னா… நான் கூட உங்கக் கிட்ட கேட்டுட்டே இருந்தேன். நீங்க கூட அழைச்சிட்டே போகவே இல்லை.அம்ருதாவை மட்டும் கூட்டிட்டு போனீங்க."என்றுக் கூற

அபிநயன் அவளை முறைத்துப் பார்க்க… " சாரிணா... அண்ணியை மட்டும் அழைச்சுட்டுப் போனீங்க, அதை சொல்லி அவள் என்னை கேலி செய்தா. வீட்டுக்கு வந்தவ உன் ரூமுக்கு கூட என்னைக் கூட்டிட்டு போக மாட்டீயா‌? என்று கேட்டா. சரி அவ்வளவு ஆசையா கேட்குறா என்று தான் அழைச்சிட்டு போனேன். அவ பர்சை கீழ மறந்து வச்சுட்டேன் என்று சொன்னா, அதான் நானே போய் எடுத்துட்டு வரலாம் என்று கீழே போனேன். நான் வருவதற்குள் உங்க ரூமுக்கு போக ட்ரை பண்ணுணா, நான் போகக்கூடாது என்ற சொல்லி அழைச்சிட்டு வந்துட்டேன் ணா."என்று அழுதுக் கொண்டே கூற…

"அழாதடா ஆருக் குட்டி நான் சொல்வது எனக்கு மட்டும் இல்ல, உனக்கும் சேர்த்துதான்… நம்முடைய பாதுகாப்பிற்காகத் தான் சொல்றேன்... உன் ஃபிரண்டுக்கும்,இது ஒன்னும் புது விஷயமாக இருந்திருக்காது. அவங்க வீட்டிலேயும் பாதுகாப்புக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுத்து தானே இருப்பாங்க. அப்படி இருக்கும்போது இப்படி பிஹேவ் பண்றது எனக்கு சரியா படலை. அது மட்டுமில்லாமல் என்னுடைய ரூமுக்கு வரும் போது, அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு, அவள் கையில் வைத்திருந்ததை எடுத்தாள். அதைப் பார்த்தால் மைக்ரோ கேமரா மாதிரி தெரிந்தது. கௌதம் அந்த வீடியோவை பார்த்து பயந்து மறுநாளே வந்து அம்மாவிடம் சொல்லிட்டு எல்லா இடத்திலும் செக் பண்ணினான். காட் கிரேஸ் வேற எங்கேயும் வைக்க முயற்சி செய்யவில்லை. அவளுக்கு அம்ருதாவை ஏனோ பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். எதுக்கும் நீ கொஞ்சம் அவளோட விலகி இருக்கிறது தான் நல்லதுன்னு தோணுது. அப்புறம் உன்னோட விருப்பம். யோசிச்சு செய் மா. " என்றவன் அவளை யோசிக்க விட்டுவிட்டு தனது அறைக்குச் சென்றான்.

அங்கு அம்ருதா என்ன செய்வது என்று தெரியாமல், ஏற்கனவே அழகாக அடுக்கி இருந்த அவளது கஃபோர்டை களைத்து மீண்டும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்ற அபிநயன், தன் சட்டையின் காலர் பட்டனை அவிழ்த்து விட்டு, " என்ன மேடம் ரொம்ப பிசியா இருக்கீங்களா? நாளைக்கு ஆபிசுக்கு என்ன போட்டுக் கொண்டு போகலாம் என இப்பவே ரெடி பண்ணிட்டு இருக்கீங்களோ." என்று நக்கலாக கேட்க…

திடீரென்று ஒலித்த அவனது குரலில் ஒரு நிமிடம் தூக்கி போட, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஏய் ரிலாக்ஸ் எதுக்கு இப்படி பயப்படுற நம்ம ரூமுக்குள்ள என்னைத் தவிர யாரும் வரமாட்டாங்க. கூல்…"

அம்ருதா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க…

மனதிற்குள் சிரித்துக் கொண்டே, வெளியே அவளை கடுமையாக பார்த்து, "என்னிடம் இருந்து தப்பிக்க நினைத்து அப்பாவோட ஆபிஸ்க்கு சந்தோஷமாக போகிறாயா டார்லிங்."

'எப்படி மனசுக்குள் புகுந்து பார்த்த மாதிரியே சொல்கிறாரே.' என்று நினைத்த அம்ருதா ஒன்றும் கூறாமல் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

"இங்க பாரு அம்ரு… முதலில் குதிரைக்கு கடிவாளம் இட்ட மாதிரி, ஒரே நேராக பார்க்காதே. உன் அம்மாவின் இறப்பிற்கு நான் தான் காரணம் என்பதை விடுத்து, சற்று தள்ளி நின்று யோசித்துப் பார். உங்க அப்பா சின்ன வயசுல இருந்து உன் கிட்ட என்ன சொல்லிருக்காரு. என்ன பிரச்சனை வந்தாலும் அதை பார்த்து பயப்படாதே. சற்று தள்ளி நின்று யோசித்தால், உனக்கு அதற்கு தீர்வு வரும் என்று கூறி இருக்கிறார் அல்லவா. அதை நினைத்துப் பார். அதே மாதிரி நாளைக்கு நீ ஆபீஸ்க்கு செல்லும் போது, அங்கு நடப்பவற்றை எல்லாவற்றையும் கவனி. புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்து." என்று கூற…

ஒரு வேளை இவன் சொல்வது போல் செய்து பார்ப்போமா என்று நினைத்தவள், அபிநயனுக்கு எப்படி தனது அப்பா கூறியதைப் பற்றி தெரியும் என்று யோசிக்கவில்லை.

மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்து ஒரே பரபரப்பாக இருந்தது அம்ருதாவிற்கு, அவளது வாழ்க்கையில் முக்கியமான நாளாக இருக்கப் போகிறது என்று மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.

' ஒருவேளை தனது அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மம் அங்கு சென்றால் தெரியுமோ, அது தான் நமக்கு இப்படி தோன்றுகிறதோ?' என்று நினைத்தவள், எதுவாக இருந்தாலும் அங்கு போனால் தெரியப்போகிறது என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டு அமைதியானாள்.

ஒருவழியாக கிளம்பி, தன்னையே கேலியாக பார்த்து சிரித்த அபிநயனை, முறைத்து விட்டு கீழே இறங்கினாள்.

அங்கே நிர்மலா இவளுக்கு மேல் பரபரப்போடு இருந்தார். முதன் முதலாக தன் மருமகள் வேலைக்குச் செல்கிறாள், என்று அந்த வீட்டை இரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அவற்றை அமைதியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அம்ருதாவுக்கு பின்னாலேயே வந்த அபிநயன். ஒரு வழியாக அம்ருதாவும்,ராஜனும் அவர்களது டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றனர்.

அந்த கட்டடத்தை நிமிர்ந்து பார்த்த அம்ருதா சற்று மிரண்டு போனாள். அந்த கட்டிடம் முழுமையும் இவர்களுக்கு சொந்தமானது.முதல் தளத்தில் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸ் அடுத்த தளத்தில் பைனான்ஸ் ஆபீஸ் இயங்கிக் கொண்டிருந்தது. அதற்கு மேலே உள்ள தளங்களை வாடகைக்கு விட்டிருந்தனர். வண்டிகள் நிறுத்துவதற்கு தனியாக காரேஜ் பக்கத்தில் இருந்தது. எல்லாவற்றையும் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் அம்ருதா.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராஜன், " வா மா … உள்ளே போகலாம்." என மென்மையாக கூறியவர், அவளை அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் இருவருக்கும் வணக்கம் செலுத்த... ராஜன் தலையை அசைத்துக் கொண்டே சென்றார். அம்ரு மெல்ல புன்னகைத்தாள். ராஜனுடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று, "உட்காருமா." என.

ஒன்றும் கூறாமல் அமைதியாக அமர… "சொல்லுமா… அக்கவுண்ட் செக்ஷனுக்கு போறியா?"

முதலில் சரியென தலையசைத்தவள், பிறகு, " இல்ல மாமா… நான் பொழுது போகவில்லை என்று தான் வந்தேன். ஆனால் நான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். முதல்ல ஆஃபீஸ் முழுவதும் சுற்றி பார்க்கவா…" என்றவள், யோசனையுடன் இருந்த ராஜனைப் பார்த்து நான் எதுவும் தப்பா பேசியிருந்தால் என்னை மன்னிச்சிடுங்க மாமா." என…

அதெல்லாம் ஒன்னும் இல்லை மா… நீ டைம் பாஸிற்காக வருவதால், உனக்கு இலகுவாக இருக்குமே என்று தான் அக்கவுண்ட் செக்ஷனுக்கு போக சொன்னேன். நீ ரெகுலரா ஆஃபிஸ்க்கு வந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் மா… உனக்கு அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றையும் உனக்கு நான் கற்றுத் தரேன் மா. உனக்கு நான் அப்பா மாதிரி தெரியுதா. எதுவாக இருந்தாலும் தைரியமா என் கிட்ட நீ சொல்லலாம்.' என்று சிரித்துக் கொண்டே சொல்ல.

சரி என தலையாட்டினாள் அம்ருதா.

" சரி மா… மேனேஜரை கூப்பிடுறேன். அவரோடு போய் ஆஃபிஸைப் பாரு. அவர் எல்லாமே உனக்கு சொல்லிக் கொடுப்பாரு. " என்றவர் இன்டர்காமில் மேனேஜரை கூப்பிட…

உடனே உள்ள வந்த மேனேஜர். மீண்டும் ராஜனுக்கு வணக்கம் செலுத்த… "குமார்… இவங்க யாருன்னு தெரியுதா? என்னோட மருமகள்." என. அறிமுகப்படுத்த…

" தெரியும் சார் நாங்க எல்லோரும் ரிசப்ஷனுக்கு வந்திருந்தோமே". என்றுக் கூறி புன்னகைக்க…

"ஆமாம்… ஆனால் அன்றிருந்த பரபரப்பில் என் மருமகள் மறந்திருப்பா… " என்றவர், அம்ருதாவிடம் இந்த ஆஃபிஸில் நெடுங்காலமாக வேலைப் பார்ப்பவர். மேனேஜர்… எனக்கு வலதுகை, இடதுகை எல்லாம் இவர்தான்... பெயர் குமார் …" என்று ராஜன் அறிமுகப்படுத்த…

" வணக்கம் அங்கிள்."என்றுக் கூறி புன்னகைத்தாள்.

"இனி மேல் நம்ம ஆபீஸ்க்கு தான் வருவா… எல்லாவற்றையும் கற்றுக் கொடு குமார்." என ராஜன் கூற…

"அதுக்கென்ன சார் நான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன்." என்றவர் "வாம்மா…" என்று அம்ருதாவை வெளியே அழைத்துச் சென்றார்.

ஒவ்வொரு இடமாகச் சுற்றி காட்ட, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தாள் அம்ருதா. காலை நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக இருந்தது. ஒரு கேபினில் போன் கால் வந்துக் கொண்டே இருந்தது. லாரிகளை ஃபோன் மூலம் வாடகைக்கு புக்பண்ணிக் கொண்டிருந்தனர். இன்னொரு இடத்தில் டிரைவர்கள் வந்து சாவியை வாங்கிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் ஃபோனை எடுப்பதும், கம்ப்யூட்டரில் அவ்வப்போது செக் பண்ணி எந்த வண்டி அவைலபிளாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டும் பிஸியாக இருந்தனர்‌.

இவளைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செலுத்த போனவர்களை, நீங்கள் வேலை பாருங்கள் என்று தடுத்து விட்டு எல்லோரையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டே வந்தாள். ஒரு பக்கம் அவளுக்கு ஏற்படும் சந்தேகங்களை மேனேஜரிடம் கேட்க, அவர் பொறுமையாக எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே வந்தார்.

" அங்கிள்… எனக்கு ஒரு டவுட்டு... இப்போ, வந்த டிரைவர் எல்லாரும் சாவி வாங்கிட்டு போனாங்க… ஆனால் வண்டி எங்க இருக்கு." என…

"இங்கே பின்னாடி நம்ம கரேஜ் இருக்கு… பெரிய இடம், அங்க தான் பஸ், கார், லாரி எல்லாம் இருக்கும். புக்கிங் ஆன லாரி, பஸ், கார் எல்லாம் நம்ம டிரைவர் மூலம் அனுப்பி விடுவோம்‌. எத்தனை நாளைக்கு வேண்டும் என்று எல்லாம், ஃபோன்லேயே பேசி முடிவு எடுத்துடுவாங்க." என தனக்கு தெரிந்த தகவல் எல்லாவற்றையும் அம்ருதாவிற்கு சொல்லிக் கொண்டு பின்னாடி இருந்த கரேஜ்க்கு அழைத்துச் சென்றார். எல்லா வண்டிகளும் துடைத்து சுத்தமாக இருந்தது. கார்களும், பஸ்களும் தயாராகி வெளியே சென்றுக் கொண்டிருந்தது‌.

" லாரி மட்டும் அப்படியே நிறைய இருக்கே… ஏன் அங்கிள் ஒன்றும் புக் ஆகவில்லையா…" என்று அம்ருதா வினவ…

" பொதுவாக லாரி எல்லாம் நைட்டு நேரம் தான் சரக்கு எடுத்துட்டுப் போவாங்க."

"ஓ... நைட் ஷிப்டும் உண்டா அங்கிள்."

"ஆமாமா நைட் ஷிஃப்ட்க்கு ஆட்களுண்டு, நைட் ஷிஃப்ட்ல யாரும் புக் பண்ண மாட்டார்கள். பஸ் ,லாரி டிரைவர் வந்து சாவி வாங்கிட்டு போவார்கள். அதுக்கு தகுந்த மாதிரி ஆளுங்க வேலை பார்ப்பாங்க. ".

" ஓ… அந்தப் பக்கம் என்ன அங்கிள்?" என்று சற்று தள்ளி இருந்த கதவை நோக்கி போக…

"அது ஒன்னும் இல்லமா… தேவையில்லாத திங்ஸ் வைக்கிற கோடவூன் அங்கெல்லாம் போக வேண்டாம் மா."என்று தடுக்க…

அவர் தடுதடுக்க… அப்படி என்ன தான் இருக்கு என்று பார்த்து விடுவோம் என்று தோன்ற, பிடிவாதமாக, "அங்கிள்... அந்தக் கதவைத் திறங்க." என அழுத்தமாகக் கூற…

அதற்கு மேலே எதுவும் செய்ய இயலாமல், அந்தக் கதவைத் திறந்து அழைத்துச் சென்றார்‌.

அவர் சொன்னதுப் போல தேவையில்லாத பொருட்கள் இருந்தது. அதற்கு கிடையே நசுங்கிய நிலையில் இருந்த லாரியை பார்த்தாள் அம்ருதா‌. கேள்வியாக மேனேஜரை பார்க்க... "அது மா…" என தயங்கிக் கொண்டே, "ஆக்ஸிடென்ட் ஆன லாரி" என்றார்‌‌.

ஆக்ஸிடென்ட் என்ற வார்த்தையை கேட்டவுடனேயே புரிந்து விட்டது. இந்த வண்டி தான், 'தன் தாயுடன் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, தன் கண் முன்னே வந்து மோதியது. தன் கண் முன்னே, "அம்ருக்குட்டி" என்று கத்தியப்படியே ரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சி தோன்றி, மறைய.'அதை நினைத்துப் பார்த்த அம்ருதா " அபு."எனக் கத்திக் கொண்டே மயங்கி கீழே விழுந்து விட்டாள்.

பயந்து போன மேனேஜர் அவசரமாக அங்கிருந்தவர்களை அழைத்து காரில் ஏற்றி, ராஜனுக்கும் அழைத்துச் சொல்ல அவரும் வந்துவிட்டார். அடுத்த அரைமணி நேரத்தில், இவர்கள் வழக்கமாக செல்லும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

அவள், அபு எனக் கத்தி மயங்கிய நேரம், வீட்டில், ஹோம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த அபிநயன், திடீரென்று மனம் சஞ்சலமடைய, அதை ஆஃப் செய்து விட்டு வெளியே வந்தவன், கீழே இறங்கி தன் அம்மாவை தேடி சென்றான்.

" மா… ஆரு எங்கம்மா" என.
"ஏன் பா… அவ இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லை என்று வீட்டில் தான் இருக்கா…கூப்பிட வா" என…

" வேண்டாம் மா… நான் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வரேன்" என்றுக் கூறி காரை எடுத்தவன், ஏதோ தோன்ற‍, மேனேஜருக்கு அழைத்து விட்டான். "அங்கிள்…" என…
அந்தப் பக்கமோ, " தம்பி…" என பதற்றத்துடன் வினவ…
"என்ன அங்கிள்… எனிதிங் இஸ் ராங். டாட், அம்ரு எங்கே? "என பதற…

"அது தம்பி…" என தயங்கியவர், தைரியத்தை வரவழைத்து கொண்டு, விவரத்தைக் கூற…

ஃபோனை வைத்தவன், ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றான், பிறகு கௌதமிற்கு ஃபோன் செய்து ஹாஸ்பிடலுக்கு நேராக வரச் சொன்னவன், தனது காரை வேகமாக செலுத்தினான்.

ரிஜப்ஷனிஸ்டிடம் சென்று பதற்றத்துடன்,"அம்ருதவர்ஷினி எப்படி இருக்காங்க."என்று வினவ..‌

"சார் நீங்க டாக்டர் கிட்ட தான் கேட்கணும்" என்று அமைதியாக கூற…

" வாட் த ஹெல்… இப்படி இர்ரெஸ்பான்ஸிபல்லா இருக்கீங்க" என்று கத்த…

அப்போது தான் உள்ளே நுழைந்த கௌதம், அபிநயன் கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து, என்னவென்று விசாரித்து ரிசப்ஸனிஸ்டிடம் மன்னிப்புக் கேட்டு, எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டு அபிநயனை அழைத்துச் சென்றான்.

அங்கிருந்தவர்களோ, அபிநயனை விநோதமாக பார்த்தனர்.

அபிநயனோ அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

அவனைக் கைப்பிடியாக இழுத்துச் சென்ற கௌதம் ஐ.சி.யூ முன்புக் கூட்டிச் சென்றான்.

ராஜன்," அபி… அம்ருதா மயக்கமாகி கீழே விழுந்துட்டா… நம்ம குமாரோட ஆஃபிஸை சுத்திப் பார்க்க அனுப்புனேன். காரேஜிக்கு போனா, என்னாச்சு என்று தெரியவில்லை" என தழுதழுக்க…

" அப்பா… " என்றவன் வேறு எதுவும் கூறாமல் அமைதிப்படுத்த…

" தம்பி... நான் சொல்ல சொல்லக் கேட்காமல் அம்ருதா மா, அந்த கோடவூனுக்கு போய் அந்த லாரியை பாத்துட்டாங்க... நான் போக வேணாம்னு எவ்வளவோ சொன்னேன்." என…

" சரி விடுங்க அங்கிள்." என்ற அபிநயன், கௌதமைத் தேட…

அதற்குள் நர்சிடம் சென்று விசாரித்து வந்தவன், " அபி… டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க. அம்ருதா இன்னும் மயக்கத்துல தான் இருக்காங்க."

"ஓ… " என்ற அபிநயன் கண் மூடி அங்கிருந்த நாற்காலியில் சரிந்தான்.

' எப்படி இருந்தவள், துடிப்புடன் தைரியமாக இருந்தவள் இன்று இப்படி பயந்து மயக்கத்துல இருக்கிறாளே.' என்று நினைத்தவன், பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டான்.

தொடரும்…..
 

Rajam

Well-known member
Member
யாரை காப்பாற்ற ராஜன்
முயற்சி செய்றார்.
அமிர்தா பார்த்து விட்டாளே.
 

Baby

Active member
Member
அபு... அப்ப அவளுக்கு அதில அம்னீசியாவா... இப்ப பழசு நியாபகம் வந்திட்டோ
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom